இஸ்லாத்திற்கு எதிராக 10,000 இணைய தளங்கள்!
January 7, 2006இஸ்லாத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் இழிவுபடுத்தும் ஆயிரக்கணக்கான இணைய தளங்கள் உள்ளதாக அல் அஸ்ஹர் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சாரங்களுக்கு வருடந்தோறும் மொத்தம் ஒரு பில்லியன் டாலர் செலவழிக்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் கல்வித்துறைப் பேராசிரியர் டாக்டர். ஸைய்யித் மர்இ இந்த அறிக்கையை தயாரித்துள்ளார்.
அதே சமயம் இஸ்லாத்தை அறிமுகப்படுத்துகின்ற இணையதளங்களின் எண்ணிக்கை இருநூறைத்தாண்டவில்லை. பெரும்பாலும் அவை தனி நபர்களால் தொடங்கப்பட்டவை. தேவையான அளவில் முறைமையோ, திட்டங்களோ அதில் இல்லை. பட்ஜெட்டும் மிகக்குறைவு. இஸ்லாத்தை அறிமுகப்படுத்தவும் அதனைப்பற்றிய தவறான எண்ணங்களை நீக்கவும் இத்தகைய இணைய தளங்களுக்கு வருடம் தோறும் ஒரு மில்லியன் டாலரே ஒதுக்கப்படுகிறது.
1980-ல் இருந்தே இணைய தளத்தில் இஸ்லாமிய விரோத தளங்கள் வந்து விட்டன. இதற்குப் பிண்ணனியில் யூத குழுக்களே இருந்தன. இஸ்லாமிய விரோத தளங்கள் ஒரே மாதிரி இருப்பதில்லை. இறைத்தூதரையும் இனிய தோழர்களையும் தரம் தாழ்ந்த முறையில் இழிவு படுத்துவது ஒரு வகை. வேறு சிலவற்றில் அரபி லிபியில் உள்ள குர்ஆன் வசனங்களை பன்றிகள், நாய்கள் உருவத்தில் “காலியோகிராபி” செய்யப்பட்டிருப்பதைக் காணலாம்.
இந்த இணைய தளங்களில் குர்ஆனில் இல்லாத விதவிதமான ‘அத்தியாயங்களை’ காணலாம்.
இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்களின் மீதும் தீவிரவாத சேற்றை வாரித் தூற்றும் வலைகளும் ஏராளம் உள்ளன. எந்தவொரு அடிப்படையும் இல்லாத பல்வேறு வகையான குற்றச்சாட்டுகளை இவற்றில் காணலாம். நிர்வாணமான பெண்களுடன் புனித குர்ஆனின் வாசகங்களை சேர்த்து வைக்கும் கயவர்களும் உள்ளனர். புகழ்பெற்ற கலைஞர்களின் உடைகளிலும் சில நேரங்களில் வசனங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும்.
இது ஒரு மனோரீதியான தாக்குதலும் கூட என்கிறார் ஆய்வை வெளியிட்டுள்ள டாக்டர். ஸைய்யித் மர்இ. -A.R.
நன்றி: ‘சமரசம்’ 1-15 ஜனவரி 2006
என் குறிப்பு: இத்தகைய இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரங்கள் தமிழ் இணயத்திற்கு புதிதல்ல. சமயம் கிடைக்கும்போதெல்லாம் இஸ்லாத்தை தாக்குவதற்காக சிலரும், அதையே முழு நேர கடமையாகக் கொண்டு, அதற்காகவே வலைப்பதிவுகள் நடத்திக் கொண்டிருக்கும் சிலரும் இங்கு இருக்கிறார்கள். இவர்களுக்கு இஸ்லாத்தின் மேல் இந்த அளவுக்கு வெறுப்பு ஏற்பட என்னதான் காரணமோ?
