ஹெச்.ஜி.ரசூலின் அசட்டு வாதம்!

May 17, 2006

திண்ணையில் ஹெச்.ஜி.ரசூல் என்பவர் ‘அல்லாவும் வகாபும்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார்.

(முன் குறிப்பு: ஹெச்.ஜி.ரசூல் வஹாபிசம் பற்றி முன்பு திண்ணையில் எழுதிய ஒரு கட்டுரைக்கு ‘வஹ்ஹாபி’ என்ற பெயரிலேயே ஒருவர் பதில் / விளக்கம் கொடுத்தார். அதிலிருந்து விவாதம் தொடங்கியது.)

ரசூல் தனது கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: ‘இஸ்லாத்தை வகாபிசமாகவும், வகாபை அல்லாவாகவும் உருவகப்படுத்தி எழுதும் திண்ணை எழுத்தாளர் வகாபியின் குரல் அப்பட்டமான ஒரு வரலாற்று மோசடியாகும். வகாபிகளின் தலைவரென முகமது நபியைச் சொல்வதும், வகாபுடைய கருத்துக்களே அல்குர்ஆன் என்று கூறுவதும் வாசகர்களை குழப்பத்தில் ஆழ்த்தும் ஒரு தந்திர உத்தியாகும். தொடர்ந்து கருத்தியல் மோசடி நிகழ்த்தும் அவர் முதலில் இதை நிறுத்திக் கொண்டால் நல்லது. இல்லையெனில் வகாபிய மொழியில் இது மாபெரும் ஷிர்க். (இணை வைத்தல்) ஆகும். இணைவைப்பவர்களுக்கு மறுமையில் கொழுந்துவிட்டெரியும் பாழ்நரகம் தான் கதி.’

இஸ்லாத்தை வஹ்ஹாபிசமாகவும் வஹ்ஹாபை அல்லாஹ்வாகவும் உருவகப்படுத்துவது தவறா? இல்லவே இல்லை! குர்ஆனில் குறிப்பிடப்படும் இறைவனின் பெயர்களுள் ஒன்றே வஹ்ஹாப் என்பது! அத்தியாயம் 3 வசனம் 8 “இன்னக அன்தல் வஹ்ஹாப்” என இறைவனை குறிப்பிடுகிறது. இதன் பொருள் ‘நிச்சயமாக நீயே பெரும் கொடையாளி!’ என்பதாகும்.

மேலும் இறைவசனம் 17:110 இவ்வாறு கூறுகிறது: “நீங்கள் (இறைவனை) அல்லாஹ் என்று அழையுங்கள்; அல்லது அர்ரஹ்மான் என்று அழையுங்கள். எப்பெயரைக் கொண்டு அவனை நீங்கள் அழைத்தாலும், அவனுக்கு(ப் பல) அழகிய திருநாமங்கள் இருக்கின்றன”

குர்ஆனிலேயே குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு பெயரைக் கொண்டு இறைவனை அழைப்பது எப்படி மோசடியாகும் என்பதை ஹெச்.ஜி.ரசூல் தான் விளக்க வேண்டும்.

ஹெச்.ஜி.ரசூல் மேலும் சொல்கிறார், ‘அல்லாவும், வகாபும் எவ்வாறு வேறுபடுகின்றனர் என்பதை இனி கவனிப்போம். அல்லாவிற்கு பிறப்பு கிடையாது. வாப்பா, உம்மா கிடையாது. வகாபி கி.பி.1703-ல் மத்திய அரேபியாவின் நஜ்து பகுதியில் பனுதமீம் குலத்தில் பிறந்தவர். இவரது முழுப்பெயர் முகம்மது இப்ன் அப்துல் வகாப். இவரது வாப்பாவின் பெயர் ஷெய்க் இப்ன் அப்துல் வகாப். ‘

இதைத் தொடர்ந்து, வஹ்ஹாபிசத்தை தோற்றுவித்தவர் என இவர்களால் ‘குற்றம் சுமத்தப்படும்’ முகம்மது இப்ன் அப்துல் வகாப் என்ற மனிதரைப் பற்றி தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார் ரசூல். இங்குதான் அவரது அசட்டு வாதம் வெளிப்படுகிறது.

இறைவனின் பெயர்களுள் ஒன்று வஹ்ஹாப் (பெரும் கொடையாளி) என்பதை முன்பு பார்த்தோம்.
அப்துல் வஹ்ஹாப் என்பது மனிதர்கள் வைத்துக் கொள்ளும் பெயர். இதற்கு ‘வஹ்ஹாபின் அடிமை’ என்பது பொருள். ரசூல் குறிப்பிடும் மனிதரின் பெயரும் அப்துல் வஹ்ஹாப் தான்!

இறைவனின் பெயர்களோடு ‘அப்துல்’ என சேர்த்து ‘இறைவனின் அடிமை’ என பொருள் வரும்படியாக பெயர் வைத்துக்கொள்வது நடைமுறையில் உள்ள பழக்கமே. அப்துல்லா, அப்துர் ரஹ்மான் என இதற்கு பல உதாரணங்களை தரலாம். இது எப்படி ‘ஷிர்க்’ இணைவைத்தலாகும் என்பதையும் ஹெச்.ஜி.ரசூல்தான் விளக்க வேண்டும்.

இவர் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை பக்கம் தப்பித்தவறிகூட போகாமல் இருப்பது நல்லது. அங்கு ‘Chief Minister’ என்றும் ‘PA to Chief Minister’ என்றும் இரு பெயர்ப்பலகைகளை பார்த்தார் என்றால், ‘முதலமைச்சருக்கு கீழே பணிபுரியும் நீ எப்படி Chief Minister என்று பெயர் வைத்துக் கொள்ளலாம்?’ என்று அந்த PA மீது பாய்ந்தாலும் பாய்ந்து விடுவார்!

பின்குறிப்பு:

“இன்றைக்கு தமிழ் இஸ்லாமிய சமூகத்தின் சிறந்த சிந்தனையாளர்களுள் ரசூல் முதன்மையானவர் எனலாம்.” - நேசகுமார்

நல்ல ஜோக்!

8 Comments »

The URI to TrackBack this entry is: http://ibnubasheer.blogsome.com/2006/05/17/hgrasool/trackback/

  1. //இவர் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை பக்கம் தப்பித்தவறிகூட போகாமல் இருப்பது நல்லது. அங்கு ‘Chief Minister’ என்றும் ‘PA to Chief Minister’ என்றும் இரு பெயர்ப்பலகைகளை பார்த்தார் என்றால், ‘முதலமைச்சருக்கு கீழே பணிபுரியும் நீ எப்படி Chief Minister என்று பெயர் வைத்துக் கொள்ளலாம்?’ என்று அந்த PA மீது பாய்ந்தாலும் பாய்ந்து விடுவார்!
    //
    பஞ்ச் பாய்ண்ட்!!!!

    //“இன்றைக்கு தமிழ் இஸ்லாமிய சமூகத்தின் சிறந்த சிந்தனையாளர்களுள் ரசூல் முதன்மையானவர் எனலாம்.” - நேசகுமார்

    //

    நேசகுமாருக்கு நகைச்சுவை உணர்வு இல்லை என்று யார் சொன்னது?

    Comment by அட்றாசக்கை — May 17, 2006 @ 6:54 am

  2. நேசகுமார் புகழ்வதிலிருந்தே ஹெச்.ஜி.ரசூல் எப்படிப்பட்ட எழுத்தாளர் என்பதை உணரலாம்.
    இஸ்லாமிய(?) எழுத்தாளர்களில் நேசகுமாருக்குப் பிடித்தவர்கள் தஸ்லீமா, சல்மா(ருக்கையா), சல்மான் ருஸ்தி போன்றோர்தான். இப்போது ஹெச்.ஜி.ரசூல்!!!

    Comment by sultan — May 17, 2006 @ 12:17 pm

  3. நீங்கள் திண்ணையில் சற்று காலத்திற்கு முன்பு வரை எழுதிக் கொண்டிருந்த இப்னு பஷீரா? தற்போதெல்லாம் தங்கள் எழுத்துக்களைக் காண முடியவில்லையே..

    திண்ணையில் எழுதுபவர் நீங்கள் இல்லையென்றால் சம்பந்தம் இல்லாத இப்பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்

    Comment by திண்ணை வாசகன் — May 17, 2006 @ 12:38 pm

  4. அட்ரா சக்கை, சுல்தான், தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

    திண்ணை வாசகரே! அதே இப்னுபஷீர் தான் அடியேன்! தங்கள் விசாரிப்பிற்கு நன்றி. நேரம் வாய்க்கும்போது தொடர்ந்து எழுதுவேன், இன்ஷா அல்லாஹ்.

    Comment by இப்னு பஷீர் — May 18, 2006 @ 4:27 am

  5. மயிலாஞ்சி எழுதியதால் ஊர்விலக்கப் பட்டு ‘மயிலாஞ்சி ரசூல்’ என அறியப் படும் குலாம் ரஸூல் இப்பொது தர்கா நிர்வாக ஜமா அத்தில் நிவாகியாய் இருப்பதால் வஹ்ஹாபியின் பயத்தில் உளறுகிறார். குலாம் ரஸூல் எப்படி ரஸூலாக முடியாதோ அப்படியே அப்துல் வஹ்ஹாபும் வஹ்ஹாபாக முடியாது என்பதைக் கூடத் தெரிந்து கொள்ளாத இந்த அறிவு ‘சீவி’யை, “இன்றைக்கு தமிழ் இஸ்லாமிய சமூகத்தின் சிறந்த சிந்தனையாளர்களுள் ரசூல் முதன்மையானவர் எனலாம்.” என்று நேசகுமார் கூறுவதில் வியப்பில்லை.

    இனம் இனத்தோடு…

    Comment by நாஞ்சிலன் — May 19, 2006 @ 8:17 pm

  6. //குலாம் ரஸூல் இப்பொது தர்கா நிர்வாக ஜமா அத்தில் நிவாகியாய் இருப்பதால்..//

    தகவலுக்கு நன்றி நாஞ்சிலன்.

    Comment by இப்னு பஷீர் — May 21, 2006 @ 3:24 am

  7. Thanks Ibnubasheer.
    Good response to H.G. Rasool. Now he is getting certificate from Nesa Kumar. Is nesa kumar already appreciated Thasleema nasreen? or Not? Why he is waiting? Let him appreciate.

    Thanks
    asalamone

    Comment by asalamone — May 21, 2006 @ 1:32 pm

  8. நன்றி asalamone,

    மேலே உள்ள பின்னூட்டத்தில் சுல்தான் சொல்லியுள்ளது போல //இஸ்லாமிய(?) எழுத்தாளர்களில் நேசகுமாருக்குப் பிடித்தவர்கள் தஸ்லீமா, சல்மா(ருக்கையா), சல்மான் ருஸ்தி போன்றோர்தான். இப்போது ஹெச்.ஜி.ரசூல்!!! // இவருக்கு ஏன் இவர்களை பிடிக்கிறது என்பதை புரிந்து கொள்ள இந்தப் பதிவையும் பாருங்கள்!

    http://ibnubasheer.blogsome.com/2006/05/18/quick_fame/

    Comment by இப்னு பஷீர் — May 21, 2006 @ 3:29 pm

RSS feed for comments on this post.

Leave a comment

Line and paragraph breaks automatic, e-mail address never displayed, HTML allowed: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <code> <em> <i> <strike> <strong>



Anti-spam measure: please retype the above text into the box provided.