எளிதில் பிரபலமாகலாம்!
May 18, 2006மிக விரைவில் உலகப்புகழ் பெற ஒரு எளிய வழி இருக்கிறது. இஸ்லாத்தை தாக்கி ஓரிரண்டு கட்டுரைகள் எழுதுங்கள். முடிந்தால் அதை புத்தகமாக வெளியிடுங்கள். நீங்கள் ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பிறந்த, முஸ்லிம் பெயரை இன்னும் விடாப்பிடியாக வைத்துக் கொண்டிருப்பவராக இருந்தால் இன்னும் உசிதம். அதிலும் இஸ்லாமிய பெயர் கொண்ட பெண்மணியாக இருந்தால் மிக மிக நல்லது.
நீங்கள் எழுதுவதற்கு ஆதாரம்? - அதைப்பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்! குர்ஆன் வசனங்கள் இணையத்தில் இலவசமாக கிடைக்கின்றன. அவற்றுள் உங்களுக்கு பிடித்த, அல்லது பிடிக்காத ஒரிரண்டு வசனங்களை வெட்டி ஒட்டி ஒப்பேற்றி விடலாம்.
Out of context என்பார்களே? - அதைப்பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்? யாராவது இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அப்படித்தான் சொல்லிக் கொண்டிருப்பார்கள்! நீங்கள் சொல்வதற்கெல்லாம் முழு விளக்கம் கொடுப்பதற்குள் அவர்களுக்கு தாவு தீர்ந்து விடும். அந்த விளக்கங்களெல்லாம் ரொம்ப போரடிக்கும் என்பதால் யாரும் அதை படிக்க மாட்டார்கள்.
உங்களுக்கு இஸ்லாத்தைப் பற்றி அதிகம் தெரியாதா? - ஒன்றுமே தெரியாவிட்டால் கூட பரவாயில்லை. இணையத்தில் தேடினால் இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரத் தளங்கள் ஆயிரக் கணக்கில் இருக்கின்றன. அவற்றிலிருந்து சில கட்டுரைகளை மொழி பெயர்த்து உங்கள் ‘சேவை’யை தொடங்கலாம்.
பலத்த எதிர்ப்பு வருமே? - வரட்டுமே! அதற்காகத்தானே எழுதுகிறீர்கள்? அப்போதுதானே பிரபலமாக முடியும்?
அவதூறு பிரச்சாரம் என்பார்களே? - அதற்கெல்லாம் பார்த்தால் முடியுமா? ‘பேச்சு சுதந்திரம்’, ‘கருத்து சுதந்திரம்’, ‘பெண்ணுரிமை’, ‘அடிப்படைவாதம்’, ‘தீவிரவாதம்’ என நான்கைந்து வார்த்தைகளை போட்டு மிரட்டலாக ஒரு பதில் விளக்கம் கொடுத்து விட்டால் பிரச்னை தீர்ந்தது!
நீங்கள் எழுதுவதையெல்லாம் யாராவது படிப்பார்களா? - கவலையை விடுங்கள்! இது போன்ற ‘புரட்சிக் கருத்து’க்களை மோப்பம் பிடிப்பதற்கென்றே சிலர் இருக்கிறார்கள். இஸ்லாத்தை தாக்கி எழுதும் நீங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உங்களையும் உங்கள் எழுத்துக்களையும் பிரபலமாக்கும் வரை அவர்கள் ஓய மாட்டார்கள். ‘சீர்திருத்தச் செம்மல்’, ‘சமுதாயக் காவலன்’ ‘புரட்சித் தென்றல்’, போன்ற பட்டங்கள் கூட உங்களை தேடி வரும்.
குறுகிய காலத்தில் உங்கள் வளர்ச்சியைக் கண்டு நீங்களே பிரமித்துப் போய்விடுவீர்கள்!
என்ன.. தயாரா?

இதுதாங்க நெத்தியடி என்கிறது.
Comment by சின்னபிள்ளை — May 18, 2006 @ 4:27 am
cent percent correct. now it is one type of fashion to dim brightness(islam)
Comment by Masoud — May 18, 2006 @ 8:30 am
‘நேசத்தை’ பெயரளவில் வைத்துக்கொண்டு வெறுப்பு பரப்ப எழுதும் போலிகள் அவர்களுடைய ரகசியத்தை உடைப்பதற்காக உங்களை ‘தீவிரவாதி’ என்று சொன்னால் நான் ஆச்சரியப்படமாட்டேன். அவர்களுடைய தந்திரத்துள் அதுவும் ஒன்று.
Comment by Abuaadhil — May 20, 2006 @ 11:08 am
சின்ன பிள்ளை, மசூது, அபூஆதில், உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
//அவர்களுடைய ரகசியத்தை உடைப்பதற்காக உங்களை ‘தீவிரவாதி’ என்று சொன்னால் நான் ஆச்சரியப்படமாட்டேன்.//
என்னங்க அபூஆதில்.. நீங்களே சொல்லிக் கொடுப்பீங்க போலிருக்கே! இருந்தாலும் இது நடக்காத விஷயமல்ல. நேரம் கிடைக்கும்போது தமிழோவியத்தில் நல்லடியார் எழுதிய கட்டுரைத் தொடரின் பின்னூட்டப் போரை படித்துப் பாருங்கள்!
இப்னு பஷீர்
Comment by இப்னு பஷீர் — May 20, 2006 @ 11:29 am