பெண்ணுரிமை என்றால் என்ன?
May 20, 2006ஜாஃபர் அலி என்னும் முஸ்லிம் வலைப்பதிவர் ‘எச்சரிக்கை’ என்ற அவரது வலைப்பதிவில் ‘மக்கள் பார்வையில் சாதாரணமாகி விட்ட தீமைகள்’ என்ற நூலை வெளியீட்டாளர்களின் அனுமதியுடன் பதிவிட்டு வருகிறார். முஸ்லிம்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டிய தீமைகளைப் பற்றி இந்நூல் விளக்கமளிக்கிறது.
இந்நூலின் முன்னுரை இவ்வாறு குறிப்பிடுகிறது: “வாசக நேயர்களே! இச்சிறிய நூலில் ஷரீஅத் தடை செய்துள்ள பல்வேறு காரியங்களை திருக்குர்ஆன் மற்றும் நபிமொழியின் ஆதாரங்களுடன் நாங்கள் குறிப்பிட்டுள்ளதைக் காண்பீர்கள். விலக்கப்பட்ட இக்காரியங்கள் பெரும்பாலான முஸ்லிம்களிடையே பரவலாகக் காணப்படுபவையாகும். பெரும்பாலும் அவர்கள் செய்யக் கூடியவையாகும். இவற்றைக் குறிப்பிடுவதின் நோக்கம் மக்களுக்கு நலம் நாடுவதையும், தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொல்வதையும் தவிர வேறு இல்லை.”
இந்த எச்சரிக்கை இஸ்லாத்தை வாழ்க்கை முறையாக ஏற்றுக் கொண்டு, முடிந்தவரை உண்மை முஸ்லிமாக வாழ முயற்சிக்கும் முஸ்லிம்களுக்கு மட்டும்தான் என்பது மிக தெளிவாக தெரியும் விஷயம். இந்த வலைப்பதிவை ஜாஃபர் அலி தமிழ்மணத்தில் பதிவு செய்யவில்லை என்பதும் கவனிக்க வேண்டியது.
இதை ஒருவாறு மோப்பம் பிடித்த நேசக்குமார் என்னும் மேதாவி, ‘பெண்ணுரிமைவாதிகளை எச்சரிக்கும் வலைப்பதிவர்’ என தலைப்பிட்டு தனது பதிவில் அறிமுகப்படுத்தி உள்ளார். இரண்டு காரணங்களுக்காக நான் நேசக்குமாருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
1. ‘எச்சரிக்கை’ என்ற வலைப்பதிவை அறியாமல் இருந்த என் போன்றவர்களுக்கு அறிமுகம் செய்ததற்காக..
2. முஸ்லிம்களுக்கான எச்சரிக்கையை பெண்ணுரிமைவாதிகளுக்கான எச்சரிக்கை என குறிப்பிட்டதன் மூலம், முஸ்லிம்கள்தான் உண்மையான பெண்ணுரிமைவாதிகள் என பிரகடனப் படுத்தியதற்காக..
(உங்கள் உண்மையான நோக்கம் எதுவாக இருப்பினும்) நன்றி நேசக்குமார்!
மற்றபடி, ‘பெண்ணுரிமை என்றால் என்ன?’ என்று தலைப்பு வைத்ததற்காக நீளமான விளக்கங்கள் கொடுத்து நான் போரடிக்கப் போவதில்லை. தெரிந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் நல்லடியாரின் இந்தப் பதிவை படிக்கலாம்.

//தெரிந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் நல்லடியாரின் இந்தப் பதிவை படிக்கலாம். //
நன்றி! இப்னு பஷீர்!!
Comment by நல்லடியார் — May 20, 2006 @ 8:37 pm