எது மோசடி?

June 2, 2006

‘திண்ணை’ - 1 ஜூன் 06

1. “இஸ்லாத்தை வகாபிசமாகவும், வகாபை அல்லாவாகவும் உருவகப்படுத்தி எழுதும் திண்ணை எழுத்தாளர் வகாபியின் குரல் அப்பட்டமான ஒரு வரலாற்று மோசடியாகும்.” என்று இரண்டு வாரங்களுக்கு முன்பு சொன்ன ஹெச்.ஜி. ரசூல் சென்ற வாரம், ” திருகுரான் பிரதி கூறும் வகாப் என்ற சொல் அல்லாவைக் குறிப்பதாகும்.திண்ணையில் கடந்த சில மாதங்களாக விவாதிக்கப்பட்டு வரும் வகாப் என்ற பெயர் வகாபிச தோற்றமூலவரான முகமது இப்னு அப்துல் வகாபை குறிப்பதாகும். இரண்டும் வேறு வேறானதாகும் .” என ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

இதையேதான் நான் எனது முந்திய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன். வஹ்ஹாப் ஆகிய அல்லாஹ்வும் அப்துல் வஹ்ஹாப் என்ற பெயர் கொண்ட மனிதரும் வேறு வேறு என்பது தெளிவாக தெரியும் நிலையில், உருவகப்படுத்தலும், வரலாற்று மோசடியும் எங்கிருந்து வந்தது? எழுத்தாளர் வஹ்ஹாபி, அப்துல் வஹ்ஹாபை அல்லாஹ்வாக உருவகப்படுத்தி யிருந்தார் என்றால் அதை ஹெச்.ஜி.ரசூல் சுட்டிக் காட்ட முடியுமா?

2. “அல்லாவின் வேதம் அல்குரான். இமாம் வகாபின் வேதத்தின் பெயர் கிதாப் அல் தவ்கீத்.இதன் வழி நடப்பதே வகாபிசம். இது கஷ்புஷ் ஷீபுஹாத்,முக்தஸ்ருல் இஸ்லாம்,நஸீகத்துல் முஸ்லிமீன்,உள்ளிட்ட நூல்களின் சாரத்தையும் கொண்டதாகும்.” என்பது ஹெச்.ஜி.ரசூலின் கூற்று. நான் தெளிவு படுத்திக் கொள்வதற்காக கேட்கிறேன், அல்-குர்ஆனின் கொள்கைகளிலிருந்து இமாம் அப்துல் வஹ்ஹாபின் கிதாப் அல் தவ்ஹீத் எவ்வாறு வேறுபடுகிறது? ஹெச்.ஜி.ரசூல் விளக்குவாரா?

நன்றி: திண்ணை

இனி, ‘திண்ணை’யில் வராத கடைசிப் பகுதி!

3. திண்ணையில் வந்த கடிதம் ஒன்றை படித்ததன் விளைவாக எனக்கு தோன்றிய ஒரு சிறு கவிதை!

ஆடுகள் முட்டிக் கொள்கின்றன,
சில தூண்டி விடப்பட்டு..
சில தூண்டிலில் இடப்பட்டு..

நரிகளும் ஓநாய்களும்
கூட்டணி அமைத்து காத்திருக்கின்றன,
நாக்குகளை தொங்கப் போட்டுக் கொண்டு!

7 Comments »

The URI to TrackBack this entry is: http://ibnubasheer.blogsome.com/2006/06/02/hgrasool2/trackback/

  1. அன்புச் சகோதரர் இபுனு பஷீர்,

    தங்களின் இப்பதிவையும் இதற்கு முன் திண்ணையில் வஹ்ஹாப் பற்றி எழுதியிருந்ததையும் என்னுடைய வலைப்பூவில் மீள்பதிவு செய்து கொள்ள அனுமதி வேண்டுகிறேன்.

    நன்றி!

    Comment by வஹ்ஹாபி — June 2, 2006 @ 7:42 pm

  2. தாராளமாக பதிவு செய்யுங்கள் வஹ்ஹாபி அவர்களே!

    இப்னு பஷீர்

    Comment by இப்னு பஷீர் — June 3, 2006 @ 3:16 pm

  3. சகோதரர் இப்னு பஷீர்,

    தங்கள் பதிவின் கடைசியிலுள்ள சிறுகவிதை ஏன் பிரசிரிக்கப் படவில்லை? ஒரு சமயம் “திண்ணையில்” முட்டிக் கொள்ளும் ஆடுகளுக்கு மட்டும்தான் முன்னுரிமையோ?

    Comment by நல்லடியார் — June 3, 2006 @ 5:39 pm

  4. சகோ. நல்லடியார்,

    எனக்கு மனதில் தோன்றிய கருத்தை ‘திண்ணை’க்கு எழுதினேன். அதை சுருக்கவோ, மறுக்கவோ திண்ணை ஆசிரியருக்கு உரிமை இருக்கிறதே!

    Comment by இப்னு பஷீர் — June 4, 2006 @ 5:45 am

  5. //ஆடுகள் முட்டிக் கொள்கின்றன,
    சில தூண்டி விடப்பட்டு..
    சில தூண்டிலில் இடப்பட்டு..

    நரிகளும் ஓநாய்களும்
    கூட்டணி அமைத்து காத்திருக்கின்றன,
    நாக்குகளை தொங்கப் போட்டுக் கொண்டு!
    //

    மிகச் சரியான வரிகள்.

    திண்ணை இதனை மட்டுறுத்தியதில் வியப்பொன்றும் இல்லை.

    Comment by இறை நேசன் — June 4, 2006 @ 6:03 am

  6. இப்டி இசகு பிசகா கேள்வி கேட்டு மாட்டிக்கிட்டா என்ன பண்ணுறது அதுக்குத் தான் இந்த வாரம் அடிச்சிருக்கார் ஒரு மெகா பல்டி.. யப்பா.. சும்மா சொல்லக் கூடாது

    Comment by அட்றா சக்கை — June 4, 2006 @ 9:24 am

  7. Peace be on you,
    If don;t know or in doubt …better not to write or talk about it.
    the samrt ways seach & get familier with it.
    Thx

    Comment by Aref — June 23, 2006 @ 8:48 am

RSS feed for comments on this post.

Leave a comment

Line and paragraph breaks automatic, e-mail address never displayed, HTML allowed: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <code> <em> <i> <strike> <strong>



Anti-spam measure: please retype the above text into the box provided.