மும்பை குண்டுவெடிப்பு!
July 12, 2006அநியாயக்காரர்கள்! அரக்கர்கள்! அப்பாவி மக்களின் உயிரைக் குடித்த கொடூரர்கள்! கோழைகள்!
- எத்தனை குடும்பங்கள் தனது குடும்பத் தலைவனை இழந்தனவோ!
- எத்தனை குழந்தைகள் தம் தாயை இழந்தனவோ!
- கனவுகளை சுமந்து சென்ற எத்தனை இளைஞர்களும் யுவதிகளும் மடிந்து போனார்களோ!
- அரும்பும் வயதிலேயே எத்தனை பிஞ்சுக் குழந்தைகள் தம் உயிரைத் தொலைத்தனவோ!
சென்றவர்கள் சென்று விட்டார்களென, இருப்பவர்களுக்கு யார்தான் ஆறுதல் சொல்ல முடியும்?
மும்பையில் குண்டு வெடித்த செய்தியை அறிந்தபோது என் மனதில் தோன்றிய எண்ணங்கள் இவை. இதைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கப் போவதில்லை.
இக்கொடூர சம்பவத்திற்கும் உடனே மதச்சாயம் பூசி, அனுதாபங்களை கொச்சை படுத்தி, சோகங்களை ஏளனம் செய்ய ஒரு கும்பல் புறப்பட்டிருப்பது வருந்தத் தக்கது.
நேசகுமார் என்பவர் ஒரு பின்னூட்டத்தில் எழுதுகிறார்;
இதில் என்ன கொடுமை என்றால், இதைச் செய்தது இந்திய இராணுவம், ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி, யூதர்கள், அவர்களே குண்டு வைத்துக் கொண்டார்கள், ஆதாரம் இருக்கிறதா என்றெல்லாம் இஸ்லாமிஸ்ட் கும்பல் பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் .
எப்படி அய்யா உங்களால் இதைப் போல சிந்திக்க முடிகிறது? உங்கள் கூற்றுப்படி எந்த ‘இஸ்லாமிஸ்ட் கும்பலும்’ பிரச்சாரத்தை ஆரம்பிக்குமுன்பாகவே அவர்கள் மேல் மறைமுகமாக பழி சுமத்தி சண்டைக்கு இழுக்கும் உங்கள் இழிகுணத்தை மாற்றிக் கொள்ளவே மாட்டீர்களா?
போனமுறை இப்படி நூற்றுக்கணக்கானவர்களைப் பலிகொண்டவர்கள் சுகமாக கராச்சியில் பாகிஸ்தான் இராணுவப் பாதுகாப்புடன் வலம்வந்து கொண்டுள்ளார்கள்.
‘இதற்கெல்லாம் உங்களிடம் ஆதாரம் இருக்கிறதா?’ என்று யாராவது கேட்டால், அவர்களை ‘இஸ்லாமிஸ்ட் கும்பல்’ என குற்றம் சாட்டுவீர்கள். தெரிந்ததுதானே!
கோவையில் குண்டு வைத்தவர்களின் பேட்டியை எடுத்து வலைப்பதியும் மதவெறியர்களும் இங்கே வலம்வந்து கொண்டுள்ளார்கள்.
குற்றம் சாட்டப்பட்டவர்களின் பேட்டியை வலைப்பதிபவர்கள் மத வெறியர்களா? சபாஷ்..! ‘காந்தியை கொன்ற கோட்ஸே குற்றவாளியே அல்ல’ என வெட்கமே இல்லாமல் சப்பைக்கட்டு கட்டுபவர்களையும் அதற்கு ஜால்ரா தட்டுபவர்களுக்கும் என்ன பெயர் வைத்திருக்கிறீர்கள்?
இதையெல்லாம் சொன்னால் பீடி பத்தவைக்கிறார்கள் என்று புகார் சொல்லும் இன்னொரு கும்பல் - முதலைக்கண்ணீர் விட்டுக்கொண்டே.
‘பீடி’ உதாரணம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், ‘சுருட்டு பத்தவைக்கிறார்கள்’ என்று வேண்டுமானால் சொல்லலாமா? துளி கூட மனிதாபிமானம் இல்லாமல், அனுதாபங்களை ஏளனப்படுத்தி, சோகங்களில் கூட சுயலாபம் அடைய முயல்பவர்களை வேறு எப்படி குறிப்பிடுவது?
இதயெல்லாம் உரத்துப் பேசினால் மதங்களுக்கிடையே உரசல் ஏற்படும் என்று பதறி ஓடிவந்து வாய் பொத்தும் திம்மிக் கும்பல் ஒன்று.
உண்மைதான்.. மதங்களுக்கிடையில் உரசலை ஏற்படுத்தி, மூட்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் ஈனத்தனமான கும்பலுக்கு, உரசலை தவிர்க்க யாராவது யோசனை சொன்னால் பிடிக்காதுதான்.
வேடிக்கை மனிதர்கள் நாம். விட்டில் பூச்சிகள் போல தொடர்ந்து 1400 வருடங்களாக வீழ்ந்து கொண்டிருக்கின்றவர்களைப் பார்த்தும் பார்க்காதது போலவே போய்க்கொண்டிருக்கிறோம்….
என்று நிற்கும் இந்த வன்முறையின் ஜியாரத் என்றுதான் தெரியவில்லை .
பூனைக்குட்டி கடைசியாக வெளியில் வந்தே விட்டது! எங்கு எந்தப் பிரச்னை நடந்தாலும் பழியை தூக்கி இஸ்லாத்தின் மேல் போட்டு, ‘எல்லாவற்றிற்கும் இஸ்லாம்தான் காரணம்’ என்ற ஒரு மாயையை உண்டாக்க முயலும் உங்கள் உள்ளக் கிடக்கை, இதோ, வெளிப்பட்டு விட்டது. சிலையில் சேறு பூசினாலும், குண்டுவெடித்தாலும், ஏன்.. வெள்ளப்பெருக்கிற்கு கூட இஸ்லாம்தான் காரணம் என்று சொல்வீர்கள் போலிருக்கிறது. திருடன் தான் தப்பித்துக் கொள்வதற்காக எல்லோருக்கும் முன்பாக ‘திருடன்.. திருடன்..’ என்று கத்திக் கொண்டே ஓடும் கதைதான் நினைவிற்கு வருகிறது.
இஸ்லாத்தை நன்றாக புரிந்து அதைப் பின்பற்றும் எந்த ஒரு உண்மையான முஸ்லிமும் இத்தகைய கொடூரச் செயலை செய்ய மாட்டான்.
குர்ஆன் சொல்கிறது;
“நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” (5:32)
நல்ல வேளையாக, நேசகுமார் போன்றவர்களுக்கு மாற்றுக் கருத்து உடையவர்களும் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள். தெளிந்த சிந்தனையுடனான ஒரு சிறந்த பதிவை வழங்கிய கோவி.கண்ணன் பாராட்டுதலுக்குரியவர்.

//இஸ்லாத்தை நன்றாக புரிந்து அதைப் பின்பற்றும் எந்த ஒரு உண்மையான முஸ்லிமும் இத்தகைய கொடூரச் செயலை செய்ய மாட்டான். //
இப்னு பசீர் அவர்களே,
பேருண்மையை முத்தாய்பாக சொல்லி …. கடைசியில் என்னையும் பாராட்டியிருக்கிறீர்கள்.
நன்றி ஐயா
Comment by GoviKannan — July 12, 2006 @ 7:27 am
மும்பை குண்டு வெடிப்புகளின் மொத்த இறப்புகள் விபரம் வரும் முன்பே இறந்தவர்களெல்லாம் இந்துக்கள் மட்டுமே என்ற முடிவுக்கு எப்படி வந்தார்கள்? அதற்கெல்லாம் காத்திருக்க இவர்களுக்கு எங்கே நேரமிருக்கப் போகிறது! எரியும் வீட்டில் பிடுங்கியவரை இலாபம் என்ற மனப்பான்மைதானே!
சில நாட்கள் முன்பு தமிழ்மணத்தில் ஜோ அவர்களால் கேட்கப்பட்ட இந்து மதம் பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கமளித்து இந்துமதம் குறித்த பிறரின் அறியாமையை நீக்கவும் கோவி. கண்ணன் ஆறு பற்றி எழுத அழைத்ததற்கும் முன்வராமல் வேலைப் பழுவில் உழன்று வருவதாகச் சொன்னார். மும்பை குண்டு வெடிப்பைக் கேள்விப் பட்டதும் எல்லாவற்றையும் உதறித் தள்ளி விட்டு முதலைக் கண்ணீர் வடிக்க வந்திருப்பதன் உள்நோக்கம், கிழவன் எப்ப மண்டையப் போடுவான்; திண்ணை எப்போ காலியாகும்! என்பதைப் போலல்லவா இருக்கிறது.
//இஸ்லாத்தை நன்றாக புரிந்து அதைப் பின்பற்றும் எந்த ஒரு உண்மையான முஸ்லிமும் இத்தகைய கொடூரச் செயலை செய்ய மாட்டான்.//
சரியாகச் சொன்னீர்கள் இப்னு பஷீர்!
குற்றவாளிகள் முஸ்லிமாக இருக்கும்பட்சத்தில் சட்டப்படி அதிகபட்ச தண்டனை கிடைக்க இந்திய முஸ்லிம்கள் தடையாக இருக்க மாட்டார்கள். அதுவரை நேசகுமார் போன்றவர்கள் பீடிபத்த வைக்கும் தொழிலை ஒதுக்கி வைத்து, அநியாயமாக ஏற்பட்ட உயிர் இழப்புகளை ஈடுசெய்ய முடியாவிட்டாலும் தேசிய சோகத்தில் பங்கு கொண்டு அனைத்து தீவிரவாதங்களுக்கும் முடிவு கட்ட உறுதி எடுக்க முன்வரட்டும்.
Comment by நல்லடியார் — July 12, 2006 @ 8:02 am
நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற எண்ணத்தில் மத துவேசத்தில் ஈடுபடாமல் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே நம்மால் நிம்மதியாக வாழ முடியும்.
நண்பர்களே நீங்கள் மனிதர்களாக இருங்கள் என்பதே நான் இங்கு கூறிக்கொள்வது.
Comment by மஞ்சூர் ராசா — July 12, 2006 @ 8:10 am
சகோ. கோவி கண்ணன் அவர்களின் பதிவில் நான் அளித்த பின்னூட்டமே இதற்கும்.
“குண்டு” என்ற சொல்லுடன் என்ன சம்பவம் நடந்திருந்தாலும் அதனை உடனேயே “உளவுத்துறைகளையும்” மிஞ்சிக் கொண்டு “இஸ்லாத்துடன்” தொடர்புபடுத்தி இந்திய நாட்டுடன் தன் இரத்தத்தாலேயே பின்னி பிணைந்திருக்கும் ஒரு சமுதாயத்தையே குற்றவாளிக் கூண்டில் ஏற்றி தன் வக்கிரத்தை தீர்த்துக் கொண்டிருக்கும் “மதத்தீவிரவாதிகளுக்கு” மத்தியில், இங்கு இன்னும் “நாம் எல்லோரும் இந்திய திருநாட்டின் மக்கள்” என்ற 1924க்கு முன்னிருந்த சகோதரத்துவ புரிந்துணர்வு கொண்ட மக்கள் உயிருடன் இருக்கிறோம் என்பதை உரக்க அறிவித்துக் கொண்டு உயர்ந்து நிற்கிறீர்கள்.
உங்களைப் போன்ற சிந்தனையுள்ளவர்கள் இருக்கும் வரைக்கும் இந்தியாவை ஆட்கொள்ள 100 வருட திட்டத்துடன் களமிறங்கிய “சுயசேவை” சங்கங்களின் மறைமுக அஜண்டாக்கள் இங்கு விலைபோகப் போவதில்லை.
இது போன்ற அட்டூளியம் புரியும் கொடூரர்களை அவர்கள் எந்த மதத்தின் பின் ஒளிந்திருந்தாலும் மக்கள் முன்னிலையில் கொண்டு வந்து நிறுத்த இந்த அரசு முயல வேண்டும்.
கடந்த 13 வருட காலமாக ஏற்கெனவே 1993 ல் இங்கு நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
காலம் தாழ்ந்த விசாரணை, குறைந்த தண்டனை இவை இந்த சமூக விரோத சக்திகளுக்கு மேலும் மேலும் உரம் போட்டு வளர்த்த ஏதுவாகின்றன.
உடனடி தண்டனை மிக அவசியம்.
முக்கியமாக சகோதரர் அழகு அவர்கள் சகோ. கோவி கண்ணனின் பதிவில் குறிப்பிட்டது போல் “இந்திய மக்கள்ளின் வரிப்பணத்தில் இந்த கொடியவர்களுக்கு உணவழித்து சிறை என்ற பெயரில் அவர்களுக்கு பாதுகாப்பளித்து போற்றக்கூடாது”
சிலையில் சேறு பூசினாலும், குண்டுவெடித்தாலும், ஏன்.. வெள்ளப்பெருக்கிற்கு கூட இஸ்லாம்தான் காரணம் என்று சொல்வீர்கள் போலிருக்கிறது. திருடன் தான் தப்பித்துக் கொள்வதற்காக எல்லோருக்கும் முன்பாக ‘திருடன்.. திருடன்..’ என்று கத்திக் கொண்டே ஓடும் கதைதான் நினைவிற்கு வருகிறது.
உண்மையே. இதுவே உண்மையாக இருக்கவும் சாத்தியம் இருக்கிறது என்பதை மறுக்கவியலாது.
இல்லையெனில் சிலையில் சேறு பூசிய உலக மகா பிரச்சினையைத் தொடர்ந்து “அக்கிரமசேனா” கும்பல் நிகழ்த்திய வன்முறைகளும் ஏதோ முஸ்லிம்கள் செய்தது போல் திரிக்கவேண்டிய அவசியமென்ன?
இறை நேசன்
இறை நேசன்
Comment by இறை நேசன் — July 12, 2006 @ 8:20 am
தம் குடும்பத்தில் ஒருவரையோ அல்லது பலரையோ இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். இறந்த உயிரை இந்த வார்த்தைகள் மீட்டுக் கொண்டு வரப்போவதில்லை. இந்தக் கொடுமையை செய்த கயவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்.
//இஸ்லாத்தை நன்றாக புரிந்து அதைப் பின்பற்றும் எந்த ஒரு உண்மையான முஸ்லிமும் இத்தகைய கொடூரச் செயலை செய்ய மாட்டான்.//
சரியான வார்த்தைகள் இப்னு பஷீர்!
நல்லடியார்!
நீங்கள் குறிப்பிட்ட நபர் பிசியாக இருப்பது நியாயம் தானே! அவரது முழுநேரத் தொழில் என்னவென்று இன்னுமா புரியவில்லை? இது போன்று ‘பீடி சுருட்டு கேட்டு’ எழுதுவதற்குத் தானே அவருக்குப் படியளக்கிறார்கள்!இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது?
Comment by அட்றா சக்கை — July 12, 2006 @ 8:25 am
குற்றம் சாட்டப்பட்டவர்களின் பேட்டியை வலைப்பதிபவர்கள் மத வெறியர்களா? சபாஷ்..! ‘காந்தியை கொன்ற கோட்ஸே குற்றவாளியே அல்ல’ என வெட்கமே இல்லாமல் சப்பைக்கட்டு கட்டுபவர்களையும் அதற்கு ஜால்ரா தட்டுபவர்களுக்கும் என்ன பெயர் வைத்திருக்கிறீர்கள்?
சாட்டையடி.
ஆனால் உறைக்கும் என்றா நினைக்கிறீர்கள்?
குற்றம் சாட்டப்பட்டவர்களின் பேட்டியை எழுதுவதே தவறெனில்,
போதைப்பொருள் குற்றம் சாட்டப்பட்ட(போதைப்பொருள் உட்கொண்டதும் தடயங்களை அழிக்க முயற்சித்ததும் உண்மை) மறைந்த பிஜேபி பிரமோத்மகாஜன் மகனை சிறையில் சென்று பிஜேபி தலைவர்கள் சந்தித்ததும் அவருக்கு தங்கள் ஆதரவை தெரிவித்ததற்கும் என்ன விளக்கம் வைத்திருக்கின்றனரோ?
Comment by இறை நேசன் — July 12, 2006 @ 8:40 am
முழுதும் உடன்படுகிறேன்.
பயங்கரவாதிகள் கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டும்.
குற்றவாளிகளைத் தண்டிக்காமல் (இந்துவோ, முஸ்லிமோ, மற்றவரோ) அந்த மதங்களின் மீது தாக்குதல் நடத்தவும் அம்மதம் சார்ந்த மக்களை தனிமைப்படுத்த-கேவலமாக இத்தருணத்தை பயன்படுத்த நினைப்பதும் தான் சிந்தனை பயங்கரவாதம்.
Comment by Raaja — July 12, 2006 @ 8:42 am
சந்து முனையில் சிந்து பாடுபவர்களை விட்டுத் தள்ளுங்கள். வருந்த வேண்டிய நேரத்திலும் குரோதம் பாராட்டுபவர்களை, “திருந்தாத உள்ளங்கள் பிறந்தென்ன லாபம்? வருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்?” என்று நினைத்துப் புறந்தள்ளி விடுங்கள்.
“இந்த ஈனப் பிறவிகளை என்ன செய்தால் தகும்?” என்று கேட்டு மும்பை இரயில் குண்டு வெடிப்புக் கோரம் நடந்த (11.7.2006) சில மணிகளில் ‘என்றென்றும் அன்புடன் பாலா‘ பதிந்திருந்தார்.
மிக நடுநிலைக் கண்ணோட்டத்தோடு கோவி கண்ணனும் ஒரு பதிவு போட்டிருந்தார். அவ்விருவருக்கும் நானிட்ட பின்னூத்தை - அரக்க மனம் கொண்டவர்களுக்கத் தண்டனையாக இருக்க வேண்டும் என்ற என் எண்ணத்தை - இங்கு மீண்டும் பதிக்கிறேன்:
1. குற்றவாளிகளை ஒரு வாரத்துக்குள் பிடிக்க வேண்டும்.
2. விசாரணை மூன்று நாட்கள் மட்டும்.
3. ஒரு இரயில் பெட்டியில் குற்றவாளிகளை அடைத்து, அதனடியில் வெடிகுண்டுகளை இணைக்க வேண்டும்.
4. இரயில் பெட்டி வெடிக்க வைக்கப் படும் நாளையும் நேரத்தையும் இடத்தையும் அறிவித்து விடவேண்டும்.
5. பொதுமக்கள் - குறிப்பாக உயிரிழந்தோரின் குடும்பத்தினர் கண்முன்னே இரயில் பெட்டியை வெடிக்க வைக்க வேண்டும்.
6. தொலைக் காட்சியில் திரும்பத் திரும்ப இத்தண்டனை காட்டப் படவேண்டும்.
முக்கியப் பின்குறிப்பு: குற்றவாளிகளைப் பிடித்துச் சிறையிலடைத்து நம் வரிப் பணத்தில் அவர்களுக்குச் சோறு போட்டுக் கொண்டிருக்கக் கூடாது.
Comment by அழகு — July 12, 2006 @ 8:53 am
//நண்பர்களே நீங்கள் மனிதர்களாக இருங்கள் என்பதே நான் இங்கு கூறிக்கொள்வது. //
அவர்கள் 1924 - ல் “சிந்தனைத் தொகுப்புகள்” மூலம் தொலைத்ததை திரும்ப பெற கூறுகிறீர்கள்.
“மதவெறி” என்பது “சிந்தனைத் தொகுப்பு” மூலம் அவர்களின் இரத்தத்தில் நன்றாக உறைய வைக்கப்பட்டு விட்டது. எப்பொழுது இந்த சிந்தனை மனதில் ஏறியதோ அப்பொழுதே மனிதம் என்பது அவர்களை விட்டு மறைந்து விட்டது.
அதனால் தான் அப்பாவி மக்கள் அவர்களாலும் இது போன்ற குண்டு வெடிப்புகளாலும் அழிக்கப்படும் போதெல்லாம் அதற்கு மதச்சாயம் பூசி அதிலும் “பீடிக்கு தீ தேடவோ”, “சுருட்டு விற்கவோ” இவர்களால் முடிக்கிறது.
எனினும் இஸ்லாம் நமக்கு கற்றுத்தந்த சகோதரத்துவ உணர்வு இந்த மனிதம் மறந்து போன “சுருட்டு வியாபாரிகளை கூட”, “மனிதர்களாக மாற மனதில் பிரார்த்தனை புரிய” தூண்டுகிறது.
எதிர்பார்ப்போம் இவர்களும் மனிதர்களாக மாறுவார்கள் என்று.
இறை நேசன்
Comment by இறை நேசன் — July 12, 2006 @ 9:04 am
இந்தச் செயல் எங்கு கொண்ட விடப்போகிறதோ தெரியவில்லை இவைகள் அழிவுக்குத்தான்
Comment by ennar — July 12, 2006 @ 9:16 am
Re-pasting my comments at http://idlyvadai.blogspot.com/2006/07/blog-post_11.html.
இன்று அவர்கள். நாளை உங்களுடைய குழந்தைகள்.
யார் செய்தார் என்று தெரியவில்லை. நேற்று வரை ஏதோ சிலையில், யாரோ மண்ணை வீஸிவிட்டார்கள் என்று பஸ்ஸை எரித்த ஷிவ சேனாவும் இதை செய்திருக்கலாம். அப்படி நடந்திருக்குமானால் அவர்கள் இந்தியர்களை எதிரியாக நினைக்க ஆரம்பித்துவிட்டனர் என்று பொருள். இப்போது இதைச் செய்தது இவர்களில்லாமலிருக்கலாம். ஆனால் இதுவரை இவர்கள் செய்டுவந்த ஹிந்து தீவிரவாதத்திற்கு இவர்களையெல்லாம் தடை செய்யவேண்டும். இல்லாவிட்டால் இதுபோன்ற குண்டு வெடிப்பை இவர்கள் எதிர்காலத்தில் செய்வது நிச்சயம். இஸ்லாமியத் தீவிரவாதம், ஹிந்து மதத் தீவிரவாதம் இரண்டும் தடை செய்யப்பட வேண்டும். அழிக்கப்பட வேண்டும். அரஸாங்கமே இங்கு பலமுள்ளதாகவேண்டும். ஒரு உறையில் ஒரு கத்திதான் இருக்க முடியும். அது மனித நலம் நாடும் அரசாங்கமாகவிருக்கவேண்டும். ஹிந்து மதத் தீவிரவாதம் ஆபிரகாமிய மதங்களின் விளைவு என்பதால் அதை விட்டுவிட முடியாது.
Comment by Muse — July 12, 2006 @ 10:12 am
Repasting my comments at http://idlyvadai.blogspot.com/2006/07/blog-post_11.html:
இன்று அவர்கள். நாளை உங்களுடைய குழந்தைகள்.
யார் செய்தார் என்று தெரியவில்லை. நேற்று வரை ஏதோ சிலையில், யாரோ மண்ணை வீஸிவிட்டார்கள் என்று பஸ்ஸை எரித்த ஷிவ சேனாவும் இதை செய்திருக்கலாம். அப்படி நடந்திருக்குமானால் அவர்கள் இந்தியர்களை எதிரியாக நினைக்க ஆரம்பித்துவிட்டனர் என்று பொருள். இப்போது இதைச் செய்தது இவர்களில்லாமலிருக்கலாம். ஆனால் இதுவரை இவர்கள் செய்டுவந்த ஹிந்து தீவிரவாதத்திற்கு இவர்களையெல்லாம் தடை செய்யவேண்டும். இல்லாவிட்டால் இதுபோன்ற குண்டு வெடிப்பை இவர்கள் எதிர்காலத்தில் செய்வது நிச்சயம். இஸ்லாமியத் தீவிரவாதம், ஹிந்து மதத் தீவிரவாதம் இரண்டும் தடை செய்யப்பட வேண்டும். அழிக்கப்பட வேண்டும். அரஸாங்கமே இங்கு பலமுள்ளதாகவேண்டும். ஒரு உறையில் ஒரு கத்திதான் இருக்க முடியும். அது மனித நலம் நாடும் அரசாங்கமாகவிருக்கவேண்டும். ஹிந்து மதத் தீவிரவாதம் ஆபிரகாமிய மதங்களின் விளைவு என்பதால் அதை விட்டுவிட முடியாது.
Comment by Muse — July 12, 2006 @ 10:14 am
இதற்கு சரியான எதிர்வினை கொடுத்திருக்கிறார்கள் மும்பை மக்கள். அவர்களுக்கிருக்கும் புரிதல் நம்மிடையே இல்லாத்தது வருந்த தக்கது.இது பர்றி என் பதிவு.
Comment by மணியன் — July 12, 2006 @ 10:31 am
மனிதர்களைக் கொன்று குவித்து குருதி ஓட்டுபவனின் இதயத்தில் கருணை - இரக்கம் என்பது துளியும் இருக்காது. கருணை - இரக்கமற்ற எவனும் உண்மை முஸ்லிமாக இருக்க மாட்டான்.
Comment by அபூ முஹை — July 12, 2006 @ 2:32 pm
சகோதரர் மியூஸ் அவர்கள் சிந்தித்த அளவுக்கு கூட மனிதத்தை இழந்துவிட்ட “சுருட்டு விற்பவர்கள்” சிந்திக்க முடியவில்லையே.
//இன்று அவர்கள். நாளை உங்களுடைய குழந்தைகள்.//
“பயங்கரவாதிகளை’ வளர்த்து விட்டு தானும் தன் குடும்பமும் மட்டும் சுகபோகமாக வாழ வேண்டும் என விரும்பும் ஒவ்வொரு அரசியல்வாதியும் ஆழமாக சிந்திக்க வேண்டிய வரிகள்.
//யார் செய்தார் என்று தெரியவில்லை.//
ஒரு செய்தியை அது இன்னார் தான் செய்தார் என நிறுவப்படும் வரை ஒருவர் எப்படி அச்செய்தியை காண வேண்டுமமென்பதற்கு உதாரணம்.
//நேற்று வரை ஏதோ சிலையில், யாரோ மண்ணை வீஸிவிட்டார்கள் என்று பஸ்ஸை எரித்த ஷிவ சேனாவும் இதை செய்திருக்கலாம்.//
இத இதத் தான் எதிர்பார்த்தேன். ஒரு சம்பவத்தை ஒரு கோணத்திலிருந்து மட்டும் பார்த்து முடிவுக்கு வருவதை விடுத்து பல கோணங்களில் ஆய்ந்து தெளிவதே அறிவுடைமை.
மற்றொரு கோணத்தில் கூட இதக் காணலாம்.
இச்சம்பவம் நடப்பதற்கு முந்தைய இரு நாட்களில் உலக நாடுகள் ஆவலுடனும் ஆச்சரியத்துடனும் எதிர்பார்த்திருந்த இந்திய ஏவுகணை அக்னி 3 மற்றும் செயற்கைகோள் இன்சாட் 4c இரண்டும் தோல்வியில் முடிந்தன. இதற்கான காரணம் இன்னும் சரியாக புரிபடாத நிலையில் தொடர்ந்த அடுத்த நாளே இந்தியாவின் முக்கிய வர்த்தக நகரமான மும்பையில் இந்த குண்டு வெடிப்பு நடந்துள்ளது.
இதன் மூலம் இந்தியா பாதுகாப்புத்துறையில் பலவீனமடைந்துள்ளது என்பதை காண்பிக்கவும் இதன் மூலம் இந்தியா எதிர்காலத்தில் அடையப்போகும் இராணுவத்துறை முன்னேற்றத்தை தடுக்கவும் இந்தியாவை வல்லரசு ஆவதை விரும்பாத அந்நிய நாடுகளுக்கு துணைபோகும்(இந்திய முக்கிய துறைகளில் பெரிய பணிகளில் உள்ள) சில காட்டிக்கொடுக்கும் துரோகிகளின் துணையுடன் தேசவிரோத சக்திகள் நடத்தியதாகவும் இருக்கலாம்.
//அப்படி நடந்திருக்குமானால் அவர்கள் இந்தியர்களை எதிரியாக நினைக்க ஆரம்பித்துவிட்டனர் என்று பொருள்.//
சிவசேனாவின் ஆரம்பத்தை முழுமையாக அறிந்தவருக்கு இது நன்றாகவே தெரியும். மஹாராஷ்டிரர்களைத் தவிர மற்றவர்களுக்கு மஹாராஷ்டிராவில் இடமில்லை, அவர்களுக்கு வேலையில்லை என்பன போன்ற சுயராஜ்ய கோரிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்ட சிவசேனா தமிழர்களுக்கு எதிராக பல அக்கிரமங்களை கட்டவிழ்த்து விட்ட சிவசேனா பின்னர் சில அரசியல் காரணங்களுக்காக ஹிந்துத்துவ அஜண்டாவிற்கு தன்னை மாற்றியதை அறிந்தவர்களுக்கு இவர்கள் “இந்தியர்களுக்கு” எதிரானவர்கள் தான் என்பதில் சந்தேகமிருக்காது.
//இப்போது இதைச் செய்தது இவர்களில்லாமலிருக்கலாம்.//
ஆம். இவர்கள் இல்லாமலும் இருக்கலாம்.
//ஆனால் இதுவரை இவர்கள் செய்டுவந்த ஹிந்து தீவிரவாதத்திற்கு இவர்களையெல்லாம் தடை செய்யவேண்டும்.//
இதைத் தான் முன்னர் கூறினேன். முதலில் தங்களை தீவிர சுராஜ்யகாரர்களாகக் காட்டிக் கொண்டு மற்ற மொழி பேசும் மாநிலத்தவர்களுக்கு எதிராக அக்கிரமங்களைக் கட்டவிழ்த்து விட்டவர்கள் பின்னர் தங்களது நிலைநிற்பிற்கு சவால் எழுந்தபொழுது ஹிந்துத்துவ அஜண்டாவில் தங்களை ஐக்கியப்படித்திக் கொண்டார்கள். இதன் பின் இவர்கள் செய்த அக்கிரமங்களுக்கு அளவே கிடையாது. அக்கிரமங்களைக் கட்டவிழ்த்து விட இவர்களுக்கு ஆர் எஸ் எஸ்ஸைப் போன்ற காரணங்கள் ஒன்றும் தேவையில்லை. சமீபத்திய காரணம் பால்தாக்கரே மனைவியின் சிலையில் ஏதோ ஓர் விஷமி சேறு வாரி பூசி விட்டான் என்பது. இதற்காக மற்றொரு அக்கிரமத்தை இவர்கள் மஹாராஷ்டிராவில் நடத்திக் கொண்டிருந்த சமயம் தான் இந்த குண்டு வெடிப்பு நடந்துள்ளது.
//இல்லாவிட்டால் இதுபோன்ற குண்டு வெடிப்பை இவர்கள் எதிர்காலத்தில் செய்வது நிச்சயம்.//
இராணுவத்துக்கு நிகரான பயிற்சியை தனது உறுப்பினர்களுக்கு வழங்கி பரிசீலனை நடத்திக் கொண்டிருக்கும் சங்க்பரிவார் குடும்ப இயக்கங்களுக்கு இது ஒன்றும் பெரிய காரியம் இல்லை.
//இஸ்லாமியத் தீவிரவாதம், ஹிந்து மதத் தீவிரவாதம் இரண்டும் தடை செய்யப்பட வேண்டும். அழிக்கப்பட வேண்டும்.//
அப்பாவி மக்களுக்கு எதிராக வரும் அக்கிரமங்கள் எவ்வழிகளில் வந்தாலும் அந்த தீவிரவாதங்கள் கண்டிப்பாக அழிக்க ஒழிக்கப் படவேண்டியவைகளே.
//அரஸாங்கமே இங்கு பலமுள்ளதாகவேண்டும்//.
கண்டிப்பாக. ஒரு நாட்டின் பாதுகாப்பு, முன்னேற்றம், எதிர்காலம், மக்களின் அமைதியான வாழ்வு இவை அனைத்திற்கும் அநியாயத்துக்கு துணை போகாத அரசாங்கம் மட்டுமே பலமுள்ளதாக இருக்க வேண்டும்.
//ஒரு உறையில் ஒரு கத்திதான் இருக்க முடியும்.//
இலட்சக்கணக்கான ஹிந்துத்துவ தீவிரவாதிகளை முழு இராணுவத்து நிகரான நவீன ஆயுதங்களை கையாளும் திறனுடன் பயிற்சி அழித்து நாட்டில் உலவ விட்டிருப்பது எதற்காக. நிச்சயம் நாட்டை பாதுகாக்க அல்ல. எனில் சுதந்தீரப்போரில் இருந்து கார்கில் யுத்தம் வரை எத்தனை ஆயுத பயிற்சிபெற்ற ஹிந்துத்துவவாதிகள் பங்கு வகித்தனர் என்ற கணக்கை தர வேண்டும்.
நாட்டில் தங்கள் அஜண்டாவிற்கு எதிராக வரும் கிறிஸ்தவ, முஸ்லிம், சீக்கிய, கம்யூனிஸவாதிகளை அழித்தொழிப்பதற்காக வேண்டி மட்டுமே இராணுவத்துக்கு நிகரான ஒரு ஆயுத அமைப்பு இங்கே இயங்கிக் கொண்டிருக்கிறது.
நாட்டின் பாதுகாப்புக்கு அந்நாட்டின் இராணுவம் போதுமானது. ஒரு உறையில் இரண்டு கத்தி இருப்பது நிச்சயம் மிகப்பெரிய கேடையே விளைவிக்கும்.
//அது மனித நலம் நாடும் அரசாங்கமாகவிருக்கவேண்டும்.//
மனித நலம் நாடும் ஓர் அரசாங்கம் நிச்சயம் இது போன்ற மற்றொரு கத்தியினை கூர் தீட்டி வைத்திருக்காது. அதனை முறித்துப் போட அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
//ஹிந்து மதத் தீவிரவாதம் ஆபிரகாமிய மதங்களின் விளைவு என்பதால் அதை விட்டுவிட முடியாது.//
உண்மையே. ஹிந்துமத தீவிரவாதம் ஆபிரகாமிய மதங்களின் விளைவு என்பதால் விட்டு விட முடியாது தான்.
ஆபிரகாமிய மதங்கள் இந்தியாவில் வருவதற்கு முன் கைபர்போலன் கணவாய் வழி மத்திய ஆசியாவிலிருந்து அடித்துவிரட்டப்பட்டு இந்தியாவிற்கு இருப்பிடம் தேடி ஓடி வந்த ஆரிய வந்தேறிகள் இந்நாட்டின் பழங்குடிகளாக வந்தாரை வாழவைக்கும் பரந்த உள்ளம் கொண்ட குழந்தை மனம் கொண்ட அப்பாவி திராவிடர்களை அடக்கி ஒடுக்கி ஒதுக்கி தங்களை தெய்வத்தின் திரு உருவங்களாக காட்டிக் கொண்டு மனித தன்மையே அற்று நன்றி மறந்த ஜென்மங்களாக கொடுங்கோலோச்சிக் கொண்டிருந்தனர்.
ஆபிரகாமிய மதங்களின் வருகைக்குப் பின் இவர்களின் இருப்பு கேள்விக்குள்ளானது.
இவர்களால் எதிரில் தலை நிமிர்ந்து நடந்து வரக் கூட அனுமதி மறுக்கப்பட்டு இந்நாட்டு எம்சகோதரிகளுக்கு மேலாடை போட அனுமதி மறுத்து தங்களது கேடுகெட்ட உணர்வுகளுக்கு வடிகால் தேடிக் கொண்டிருந்தனர்.
தீண்டாமை ஜாதிவெறி போன்ற வேற்றுமைகளை தோற்றுவித்து தங்களின் சுகபோகங்களுக்கு எவ்வித குறைவும் வந்து விடாமல் மேனி அசையாமல் உண்டு கழித்துக் கொண்டிருந்தனர்.
இதற்கு சாவுமணி அடித்தது ஆபிரகாமிய மதங்களின் வரவு. இம்மதக்காரர்கள் காட்டிய சமத்துவம், சகோதரத்துவம், சகிப்புத் தனமை மனிதனை சக மனிதனாக கண்ட மாண்பு போன்றவை திராவிட உடன்பிறப்புகளை சாரை சாரையாக ஆபிரகாமிய மதங்களுக்குள் படையெடுக்க வைத்தது.
விளைவு ஆட்சி அதிகாரம் அனைத்தும் ஆரியர்களின் கைகளை விட்டு போனது. இழந்ததை மீட்டெடுக்க உடலெடுத்தது தான் ஹிந்துத்துவ வாதம். இதன் மூலம் ஆபிரகாமிய மதங்களை தழுவும் ஒடுக்கப்பட்டவர்களை ஒன்றிணைத்து அவர்களுக்கு விடுதலை அளித்த ஆபிரகாமிய மதங்களுக்கு எதிராக திசை திருப்பி ஆபிரகாமிய மதங்களை இந்நாட்டை விட்டு ஓட்டுவது தான் இவர்களின் குறிக்கோள். இதற்காக இவர்கள் எதற்கும் துணிவர்.
ஹிந்துதீவிரவாதத்தின் மூலம் 1924 க்குப் பின் “சுயசேவர்”களின் அக்கிரமங்களால் உலகில் வல்லரசு ஆகியிருக்க வேண்டிய இந்தியா இன்று 50 வருட பின்னில் உள்ளது. தற்போதைய குண்டுவெடிப்புகளின் மூலம் அது இன்னும் பின்னோக்கியே செல்ல வாய்ப்பும் அதிகரித்திருக்கிறது.
இதன் மூலம் இவர்கள் எதிர்பார்ப்பது ஆபிரகாமிய மதங்களின் வெளியேற்றம் அதோடு ஆட்சி அதிகாரம் முன்பு போல் தங்கள் கைகளில் ஆக்குதல். எனவே இதற்கு எதிராக கண்டிப்பாக இந்திய அரசாங்கம் அதிரடி நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும்.
அன்புடன்
இறை நேசன்.
Comment by இறை நேசன் — July 12, 2006 @ 3:14 pm
அபு முஹை,
>>>> மனிதர்களைக் கொன்று குவித்து குருதி ஓட்டுபவனின் இதயத்தில்
கருணை - இரக்கம் என்பது துளியும் இருக்காது. கருணை - இரக்கமற்ற
எவனும் உண்மை முஸ்லிமாக இருக்க மாட்டான்.
Comment by Muse — July 12, 2006 @ 3:57 pm
இப்னு பஷீர், இக்கொடூரம் புரிந்த ஈனர்களை கடுமையாகத்தண்டிக்க வேண்டும் என்பதில் இந்து முஸ்லிம் எல்லோரும் ஒன்றுபட்டே உள்ளோம்.
யாரோ விஷமிகள் செய்த இக்கொடூரத்தை கண்டு சக மனித உணர்வுடன் பதறுகிறீர்கள். ஆனால் நேசகுமார் வகையறாக்கள் இந்த ஈனச்செயலிலும் அரசியல் செய்வதை நிறுத்தவில்லை என்பதற்கு அந்த ஆளின் சமீப பதிவு சாட்சி.
அபு, லபு, இப்னு, கிப்னு என்று நீங்களெல்லாம் வாயில் நுழையாத பெயர் வைத்திருப்பதாக தனிமனிதத் தாக்குதலில் இறங்கிவிட்டார்.
சுவனப்பிரியன் என்பவர் எழுதியதில் தேவையான வார்த்தைகளை எடுத்து ஹைலைட் செய்து தனது உள்ளத்து இருட்டை காண்பிக்கிறார். (அவர் எழுதிய உள்ளப்பூர்வமான கண்டன வரிகளை வழக்கம் போல விட்டுவிட்டார்). சீ, சீ, இதெல்லாம் ஒரு பிழைப்பா என்று கேட்கத்தோன்றுகிறது.
Comment by Raaja — July 12, 2006 @ 4:02 pm
அப்பாவிகளை அநியாயமாகக் கொல்லும் யாராகவிருந்தாலும் சரி, அவர்கள் படைத்தவனின் பகைவர்கள் என்பதில் ஐயமில்லை.
அவனவன் வீட்டில் இழவு விழுந்தால்தான் அவனவனுக்குப் புரியும்.
ஒரு அநியாய இழவுக்குப் பழிவாங்க மற்றொரு இழவு என்பதும் சரியன்று.
தீவிரவாதம் என்பது இருபக்கமும் வெட்டும் கத்தி.
தீவிரவாதிகள் -மதம், இனம், மொழி, நாடு எதன் பேரால் ஆனாலும் சரி- மனிதகுலத்தவரல்லர்.
ஆனால் சில ‘அவசர அறிவுசீவிகள்’ “வக்கிர நேசத்துடன் ஜெயராமசிவா” கோஷமிட்டு, காவல்துறை விசாரணை துவங்குமுன்பே முஸ்லிம்கள் மீது பழிபோட்டு அரிப்பைத் தீர்த்துக் கொள்கின்றனர்.
இவர்களுக்கு இது ஒரு பொழுதுபோக்கு.
Comment by நாஞ்சிலன் — July 12, 2006 @ 4:17 pm
ஸகோதரர் இப்னு,
என்னுடைய கருத்துக்களின் ஆரம்பத்தை மட்டுமே வெளியிட்டுள்ளீர்கள். அதன் முழுப்பகுதியையும் வெளியிடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் என் கருத்தினை முழுமையாக புரிந்துகொள்ளாமல், வேறு ஒரு முடிவிற்கு வர இது வாய்ப்பளித்துவிடும்.
தங்களுக்கு அதன் முழுப்பகுதியும் கிடைக்காவிட்டால், நான் மீண்டும் அனுப்புகிறேன்.
ஒருவேளை நான் பதிந்த கருத்தின் முதல் பகுதி மட்டுமே என்னுடையதாக இருக்க முடியும் என்றும் நீங்கள் நினைத்திருக்கலாம். இல்லை நண்பரே. முழுவதுமே என்னுடையதுதான். தயவுசெய்து முழுக்கருத்தையும் வெளியிடுங்கள்.
Comment by Muse — July 13, 2006 @ 9:21 am
பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. வேலைப்பளுவினால் உடனுக்குடன் பதில் எழுத முடியவில்லை. என் ஆதங்கம் என்னவென்றால், இந்த அக்கிரமத்தை செய்தவர்கள் யார் என்று காவல்துறை கண்டுபிடிக்குமுன்பாக ‘இந்த சமூகத்தினர் தான் செய்தார்கள்’ என்ற முடிவுக்கு வர நேசகுமார் போன்றவர்களால் எப்படி முடிந்தது?
செய்தவர்கள் முஸ்லிம்களாகவே இருந்தாலும், அந்தத் தீவிரவாத கும்பலை ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயமும் கண்டிக்கும். கண்டிக்கிறது! இஸ்லாமிய தமிழ் வலைப்பதிவர்களின் பதிவுகளும், பின்னூட்டங்களுமே இதற்கு சாட்சி. தமிழ்மணத்தில் இல்லாத, இத்தகைய கண்டனக் குரல்களை தாங்கிய மேலும் பல வலைப்பக்கங்களின் சுட்டிகளை என்னால் தர இயலும். மாறாக, தீவிரவாதத்தை ஆதரித்து எழுதிய ஒரு வலைப்பதிவரையாவது அவர்கள் சுட்டிக் காட்டட்டும்.
நேசகுமார் கும்பலைச் சார்ந்தவர்கள் உண்மையிலேயே தீவிரவாதத்தை எதிர்ப்பவர்களாக இருந்தால், தீவிரவாதத்தை எதிர்க்கும் முஸ்லிம்களுடன் இணைந்து குரல் கொடுக்க முன்வர வேண்டும். தீவிரவாதத்தில் எந்த மதத்தை சார்ந்தவர்கள் ஈடுபட்டாலும், பாரபட்சமில்லாது அவர்களை கண்டிக்க வேண்டும். தீவிரவாதத்திற்கெதிராக ஜாதி,மத வித்தியாசம் பாராது மக்கள் ஒன்று திரண்டால்தான் அதை ஒழிக்க இயலும்.
அப்படியல்லாமல் பிரச்னைகள் எழும்போதெல்லாம் எப்படியாவது பழியை இஸ்லாம் மீது திருப்பி அதில் குளிர் காய முற்பட்டார்கள் என்றால், அவர்கள் உள்நோக்கம் கேள்விக்குரியதாகிறது. இஸ்லாம் மீது பழி சொல்ல காரணம் வேண்டும் என்பதற்காக, இது போன்ற தீவிரவாதச் செயல்கள் நடக்க வேண்டும் என்று இவர்கள் உள்ளுர விரும்புகிறார்களோ என்னவோ!
கடவுள்தான் இவர்களுக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டும்!
Comment by இப்னு பஷீர் — July 13, 2006 @ 10:30 am
சகோதரர் Muse,
//என்னுடைய கருத்துக்களின் ஆரம்பத்தை மட்டுமே வெளியிட்டுள்ளீர்கள். அதன் முழுப்பகுதியையும் வெளியிடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.//
உங்களுடைய பின்னூட்டத்தை அப்படியேதான் வெளியிட்டேன். எதுவும் எடிட் பண்ணவில்லை. தயவு செய்து மீண்டும் அனுப்புங்கள். வெளியிடுகிறேன். நன்றி
Comment by இப்னு பஷீர் — July 13, 2006 @ 10:35 am
சில தொழில்நுட்ப கோளாறுகளால் சகோதரர். Muse அவர்களின் பின்னூட்டம் ஒன்று முழுமையாக பதிவாகவில்லை. நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க அதை அவர் எனது மின்னஞ்சலுக்கு அனுப்பி இருந்தார்.
இதோ அந்தப் பின்னூட்டம்:
*****
அபு முஹை,
//மனிதர்களைக் கொன்று குவித்து குருதி ஓட்டுபவனின் இதயத்தில் கருணை - இரக்கம் என்பது துளியும் இருக்காது. கருணை - இரக்கமற்ற எவனும் உண்மை முஸ்லிமாக இருக்க மாட்டான். //
தங்களின் வார்த்தைகள் ஸந்தோஷமளிக்கிறது. இந்தக் கீழ்த்தரமான செயலைச் செய்தவர்கள் முஸ்லீம்கள் இல்லை என்று நீங்கள் கருதுவதாக நான் எடுத்துக்கொள்கிறேன்.
இந்த குண்டுவெடிப்பில் ஈடுபட்டவர்களை போலீஸ் உயிருடன் பிடிக்கும் என்று நம்புவோம். அப்படியில்லாமல், அவர்களைக் கொன்று விட்டாலோ, அல்லது மரண தண்டனை விதித்துவிட்டாலோ அந்த இழிபிறவிகளின் சடலத்தை இஸ்லாமிய ஸமாதியில், இஸ்லாமிய முறையில் புதைக்க அனுமதிக்கக் கூடாது. இதை நீங்களும் ஒத்துக்கொள்கிறீர்களா?
இப்படி இறந்த இந்த மனிதர்களின் உடம்பை பன்றியின் தோலினால் சுற்றிப் புதைக்கவேண்டும்.
இந்த இரண்டும்தான் இந்த இழிபிறவிகளுக்கு சரியான பாடமாக இருக்க முடியும். ஒவ்வொரு நல்ல இஸ்லாமியரும் இவற்றைத்தான் ஆதரிப்பர்.
உங்களது கருத்து என்ன, ஸகோதரரே?
****
Comment by இப்னு பஷீர் — July 15, 2006 @ 11:06 am
மேலே உள்ள சகோ.Muse அவர்களின் பின்னூட்டத்திற்கு அபூமுஹை தந்த விளக்கத்தை இங்கு பதிகிறேன். எனது கருத்தும் இதுதான் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.
அபூமுஹைக்கு நன்றி.
****
மதிப்பிற்குரிய Muse அவர்களே உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!
//இரக்கமற்ற எவனும் உண்மை முஸ்லிமாக இருக்க மாட்டான்.//-
-இஸ்லாத்தை முறையாக விளங்காமல், அரைகுறையாக விளங்கிச் செயல்பட்டு அதனால் இஸ்லாத்தைக் களங்கப்படுத்தி, ஏனைய முஸ்லிம்களுக்கும் தலைகுனிவை ஏற்படுத்தும் பெயர் தாங்கி முஸ்லிம் என்றாலும், ‘’நாம் அறுத்ததை புசித்து நமது கிப்லாவை நோக்குபவன் முஸ்லிம்'’ என்று இஸ்லாம் சொல்வதால் ் இவனை முற்றாக இஸ்லாத்தின் வட்டத்தை விட்டு வெளியேற்றும் அதிகாரம் எவருக்கும் இல்லை.
//உங்களது கருத்து என்ன, ஸகோதரரே?//-
-இரக்கமற்றவனுக்குத் தண்டனையாக, ஆன்மாவை அவனிடமிருந்து பிரித்த பின், சடலத்தை இழிவுபடுத்துவது தேவைதானா? - தண்டனை வழங்கப்பட்ட பின், சடலம் எங்காவது குற்றவாளியாகுமா? - மனித நேயமற்றவனின் சடலத்தின் மீது நாம் கருணை காட்டினால் என்ன?
குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து முடிந்த பின், மதபாகுபாடின்றி எந்த மனித சடலத்தையும் இழிவுபடுத்த வேண்டுமென்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. நன்றி!
அன்புடன்,
அபூ முஹை
****
http://abumuhai.blogspot.com/2006/07/blog-post_12.html#c115282044937329607
Comment by இப்னு பஷீர் — July 15, 2006 @ 11:23 am