குண்டு வெடிப்பில் குளிர்காயும் சண்டாளர்கள்!
July 29, 2006ஜூலை 11 - மும்பையில் வெடித்த 6 அல்லது 7 குண்டுகள் ஒட்டு மொத்த இந்தியாவையும் கிடுகிடுக்க வைத்தன .
அநியாயக்காரர்கள்! அரக்கர்கள்! அப்பாவி மக்களின் உயிரைக் குடித்த கொடூரர்கள்! கோழைகள்!
- எத்தனை குடும்பங்கள் தனது குடும்பத் தலைவனை இழந்தனவோ!
- எத்தனை குழந்தைகள் தம் தாயை இழந்தனவோ!
- கனவுகளைச் சுமந்து சென்ற எத்தனை இளைஞர்களும் யுவதிகளும் மடிந்து போனார்களோ!
- அரும்பும் வயதிலேயே எத்தனை பிஞ்சுக் குழந்தைகள் தம் உயிரைத் தொலைத்தனவோ!
சென்றவர்கள் சென்று விட்டார்களென, இருப்பவர்களுக்கு யார்தான் ஆறுதல் சொல்ல முடியும்?
இத்தகைய கொடூரத்தைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுக் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
பதை பதைக்கச் செய்யும் இந்தக் கொடூர சம்பவத்திலும் ‘வீடு பற்றி எரியும்போது பீடிக்கு நெருப்பு கேட்ட கதையாக’, சிலர் அரசியல் ஆதாயம் தேட முனைந்திருப்பது கேவலமான ஒரு போக்கு.
வெடிப்புகள் நிகழ்ந்த மறுநாள் சம்பவ இடத்தைப் பார்வையிட்ட மத்திய அமைச்சர் சிவ்ராஜ் படீல் இக்கொடூரச் செயலை செய்தவர்கள் யார் என்பதற்கு காவல் துறையினருக்கு இதுவரை துப்பு எதுவும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்தார். அதே நாளில், காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சென்று பார்த்த எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி, குண்டு வெடிப்புகளுடன் பாகிஸ்தானைத் தொடர்புபடுத்தி குற்றம் சாட்டினார். பாகிஸ்தானில் தஞ்சமடைந்திருப்பதாகக் கருதப்படும் தாவூத் இப்றாஹிம் இந்தக் குண்டு வெடிப்பில் சம்பந்தப் பட்டிருக்கலாம் என தான் சந்தேகப்படுவதையும் அவர் தெரிவித்தார். மேலும் , சிமி போன்ற அமைப்புகளின் தடயமே இல்லாத அளவிற்கு அவை இந்திய மண்ணிலிருந்து துடைத்தெறியப்பட வேண்டும் எனவும் கருத்து தெரிவித்தார். உள்துறை அமைச்சரும் காவல்துறையும் ‘இதுவரை எந்தத் துப்பும் கிடைக்கவில்லை’ என்று சொல்லியிருந்த அதே நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவருக்கு எப்படி இந்தத் தகவல் கிடைத்தது என்பது அதிசயமே!
குண்டுவெடிப்பை சிமிதான் செய்திருக்க வேண்டும் என்ற ரீதியில் காவல்துறை விசாரணைகளை முடுக்கிவிட்ட வேளையில் , உத்தரபிரதேச முதல்வரான முலாயம் சிங் யாதவ் , “சிமி இதைச் செய்திருக்க வாய்ப்பில்லை” என்று அறிவித்தார். “நாங்கள் ஆட்சி அமைத்ததிலிருந்து உத்தரபிரதேசத்தில் அயோத்தியிலும், வாரணாசியிலுமாக இரு பயங்கரவாதச் சம்பவங்கள் நிகழ்ந்தன. அவற்றில் சிமி துளியேனும் சம்பந்தப் பட்டிருக்கவில்லை” என அவர் தெரிவித்தார்.
தங்களுக்கும் இந்தக் கொடூர சம்பவத்திற்கும் தொடர்பில்லை என்று சிமி அமைப்பு மறுத்ததோடு, திட்டமிட்டு தம் மீது வீண்பழி சுமத்தப்படுகிறது என்று குற்றஞ் சாட்டியது.
இந்தச் சூழ்நிலையில் ஜூலை 16-ம் தேதி ‘ஆஜ்தக்’ தொலைக்காட்சிக்கு ஜேக் ஸ்மித் என்ற பெயரில் ஒரு இ-மெயில் வந்தது. அதில், லஸ்கர்-இ-தொய்பாவின் துணை அமைப்பான லஸ்கர்-இ-கஹர் என்ற இயக்கம்தான் மும்பை தொடர் குண்டு வெடிப்பை நிகழ்த்தியதாகவும் இச்செயலை 16 பேர் கொண்ட படை நிறைவேற்றியதாகவும் அதில் ஒருவன் இறந்து விட்டதாகவும் கூறப்பட்டு இருந்தது. மேலும், தான் ம. பி. மாநில சிமி இயக்கத்தின் தலைவன் என்றும் மும்பையைப் போல பல்வேறு தாக்குதல்கள் மேலும் நடைபெறும் என்றும் அதில் மிரட்டல் விடப்பட்டு இருந்தது. இது அத்வானியின் கூற்றை உறுதிப் படுத்தியது.
இதைத் தொடர்ந்து பிரச்சாரம் சூடு பிடித்து விட்டது! வலைப்பதிவு எழுத்தாளர்கள் முதல் சோ, குருமூர்த்தி போன்ற அறிவுசீவிகள் வரை வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் குதித்தனர். அல்-காயிதா முதல் பாகிஸ்தான் வரை நார் நாராக கிழிக்கப் பட்டனர். இஸ்ரேலைப் பின்பற்றி இந்தியாவும் பாகிஸ்தான் மீது போர் தொடுத்தே தீர வேண்டும் என சோவும் குருமூர்த்தியும் வாதிட்டனர் . நெஞ்சில் உரமுமில்லாத, நேர்மைத் திறனுமில்லாத கையாலாகாத அரசு இது என கூச்சல் இட்டனர். லஸ்கரீ தொய்பா -தான் இப்போது லஸ்கரீ கஹார் எனப் பெயரை மாற்றிக் கொண்டு செயல்படுவதாக ‘ உளவுத்துறை நிபுணர்கள்’ தெரிவித்துள்ளதாக ஒருவர் திண்ணை டாட் காமில் எழுதினார்.
இவர்களின் ஆர்ப்பாட்டம் அதிக நாள் நீடிக்கவில்லை. ‘ஆஜ்தக் ‘ தொலைக்காட்சிக்கு ஜூலை 16-ம் தேதி இமெயில் அனுப்பிய ‘ தீவிரவாதி‘யை ஜூலை 20-ம் தேதி காவல்துறையினர் கண்டு பிடித்து விட்டார்கள். சிமி மற்றும் லஸ்கர் இ தொய்பா போன்ற அமைப்புகளின் மீது பழி விழக் காரணமாக இருந்த இமெயிலை அனுப்பிய தீவிரவாதி சுமித் தம்ராகார் என்பவன். விளையாட்டாக இந்தக் காரியத்தை செய்தானாம் இவன்.
சுமித் மட்டுமல்ல.. மத்திய பிரதேச மாநிலம் கத்னி நகரைச் சேர்ந்த 11 வயது சிறுவன் ஒருவனும் , தான் லஸ்கரீ ஹக் என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவன் என்று இமெயில் அனுப்பி காவல் துறையினரிடம் மாட்டி இருக்கிறான்.
சில கேள்விகள் நம் மனதில் எழாமலில்லை:
* “நாங்கள் சிமி அமைப்பினர்” என்றும் “லஸ்கர் அமைப்பினர்” என்றும் இமெயில் அனுப்பி விளையாட்டுக் காட்டுபவர்களில் ஒரு ‘விளையாட்டுப் பிள்ளை’ கூட “நாங்கள் ஆர்.எஸ்.எஸ்-ஸை சேர்ந்தவர்கள், பஜ்ரங்தள்ளை சேர்ந்தவர்கள், சிவசேனாவை சேர்ந்தவர்கள்” என்றெல்லாம் இமெயில் அனுப்பி ஏன் விளையாடுவதில்லை?
* இவர்களின் இமெயில்களை துப்பறிவதற்காக காவல்துறையினரின் எவ்வளவு பொன்னான நேரம் வீணாகி இருக்கும்?
* இவர்களின் இமெயிலின் மூலமாக ஒரு பாவமும் அறியாத எத்தனை அப்பாவிகள் அவதிக்குள்ளாக்கப் பட்டிருப்பார்கள்? (உதாரணத்திற்கு ஒன்று: பீஹாரில் கைது செய்யப்பட்ட மதரஸா ஆசிரியர் ஒருவர் இரண்டு நாள் விசாரணைக்கு பிறகு ஆதாரம் எதுவும் இல்லை என்பதால் விடுவிக்கப்பட்டார்.
* இதெல்லாம் உண்மையிலேயே விளையாட்டுத்தானா? அல்லது, ஒரு குறிப்பிட்ட அமைப்பினர் மீது பழி சுமத்த வேண்டும் என்பதற்காக தூண்டி விடப்பட்டு செய்ததா? அல்லது, உண்மைக் குற்றவாளிகள் பதுங்குவதற்கு அவகாசம் தேவைப்பட்டதால் காவல் துறையினரின் கவனம் திசை திருப்பப் பட்டதா?
குண்டு வெடிப்பில் ஈடுபட்ட உண்மைக் குற்றவாளிகளைக் கண்டு பிடித்துக் கடுமையாகத் தண்டிப்பதோடு, எதிர்காலத்தில் இதுபோன்ற விளையாட்டுகளில் யாரும் ஈடுபடாமல் இருக்க, ‘இமெயில் விளையாட்டுப் பிள்ளை’களையும் அவர்களைத் தூண்டி விட்டவர்களையும் தயவு தாட்சண்யம் காட்டாமல் கடுமையாக தண்டிக்க வேண்டும்.
தகுந்த ஆதாரங்கள் இல்லாமல், ‘இந்த அமைப்புதான் செய்திருக்கும்’ ‘அந்த இயக்கத்திற்கு தொடர்பு இருக்கிறது’ என்றெல்லாம் ஊகங்களை பரப்பி காவல்துறையினரை திசைதிருப்ப முயலும் அரசியல்வாதிகளும் ‘கருத்து கந்தசாமி’களும் கண்டிக்கப்பட வேண்டும். ஊடகங்கள் இத்தகைய ஆதாரமற்ற வதந்திகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்.
அப்போதுதான் நம் நாட்டின் இறையாண்மையும் நீதித்துறையின் மாண்பும் காக்கப் படும்.
***
இந்தியாவில் மூன்று முறை தடை செய்யப்பட்ட மதவெறி இயக்கமான ஆர்.எஸ்.எஸ்-ஸில் பயிற்சி பெற்று வந்த அத்வானி, சிமி போன்ற இஸ்லாமிய அமைப்புகள் தடயமே இல்லாத அளவிற்கு இந்திய மண்ணிலிருந்து துடைத்தெறியப்பட வேண்டும் என்று சொல்கிறார். இந்தத் துவேஷத்திற்கு காரணம் என்னவாக இருக்கும்?
விளக்கம் பகுதி - 2ல்
(தொடரும்)

முந்திரிக் கொட்டைகளுக்குச் சரியான மூக்குடைப்பு.
Comment by அழகு — July 29, 2006 @ 6:34 pm
நேற்று Times of India வில் வந்த செய்தி.
MUMBAI/PUNE: Anti-national elements from across the border were using Faisal Shaikh to maim the state financially and politically.
Insisting that Faisal was the “key western India operative” of Lashkar-e-Taiba, police officials told TOI on Friday that he was under orders to gather as much information as possible about the Bombay Stock Exchange, the big business centres, major BPOs and also a Maharashtra minister and a top politician from Gujarat.
The information would have been used for major terror strikes. Faisal and brother Muzammil, picked up from Bangalore where he was working with a top-bracket software firm, were produced in the Mazgaon court on Friday and remanded to police custody till August 9.
Officials also revealed to TOI that Faisal was the first person they picked up after the blasts on July 11. “But we realised how big a catch he was only after the others started talking,” a senior official said.
Faisal’s family, who stayed in Nagpada till 1996, moved to Pune after that, buying a flat in Kondhwa. It was there that he came in touch with Sohail Shaikh, a member of SIMI, who was arrested a few days back.
Faisal later introduced Sohail to his brother, Muzammil. Investigators said Faisal sang about Sohail’s involvement after being picked up but kept mum about Muzammil; it was Sohail who told investigators that Muzammil, too, was very much a part of the terror net.
All three then sang about Tanvir, who was the first person to be arrested from Mumbai, and the doctor led investigators to Worli resident Zameer Shaikh.
“It was a case of verifying and corroborating statements of all the accused that helped us get an idea of the conspiracy,” an investigator said, adding that five to six more LeT operatives were still on the run.
But officials admitted they were yet to establish a link between this module (Faisal, Muzammil, Tanvir, Sohail and Zameer) and the three others arrested (Mumtaz Chaudhri, Kamal Ansari and Khalid Shaikh).
Investigations have revealed that Faisal, who owns a Mira Road flat, also has a rented flat on Perry Cross Road in Bandra West; that flat could have been used by him and his co-conspirators to hatch the Terror Tuesday plot.
Most instructions to the Faisal-led module would come from Azam Chima, ISI operative and militant trainer at the LeT’s Bahawalpur camp in PoK, the officials said.
Faisal, Muzammil and arrested unani physician Tanvir Ansari were trying to spot more boys and increase the number of terror sympathisers, they added.
Officials said Faisal was given the code names of Abu Aamin and Abu Musthaque at the Pakistan terror camp. “Even in Mumbai, they would use the codes whenever they spoke to each other,” an official said.
SIMI தன் வேலையை காட்டியிருக்கிறது இதில்…SIMI’s Involvement is loud and clear. Do not waste time and bytes by putting some Islamist propaganda.
Comment by sankar — July 29, 2006 @ 6:36 pm
//இதெல்லாம் உண்மையிலேயே விளையாட்டுத்தானா? அல்லது, ஒரு குறிப்பிட்ட அமைப்பினர் மீது பழி சுமத்த வேண்டும் என்பதற்காக தூண்டி விடப்பட்டு செய்ததா? அல்லது, உண்மைக் குற்றவாளிகள் பதுங்குவதற்கு அவகாசம் தேவைப்பட்டதால் காவல் துறையினரின் கவனம் திசை திருப்பப்பட்டதா?//
இந்தியக் குடிமகன்கள் ஒவ்வொருவரும் உணர வேண்டிய மிக அழுத்தமான கேள்விகள் இவை.
Comment by அபூ ஸாலிஹா — July 29, 2006 @ 8:34 pm
அழகு, அபூ ஸாலிஹா, தங்கள் கருத்துக்களுக்கு நன்றி!
Comment by இப்னு பஷீர் — July 30, 2006 @ 3:56 am
//SIMI தன் வேலையை காட்டியிருக்கிறது இதில்…SIMI’s Involvement is loud and clear. Do not waste time and bytes by putting some Islamist propaganda.//
‘SIMI’ தான் செய்திருக்கிறது என்று யார் வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம்.. ஆனால் ‘காவல்துறையினர் பல கோணங்களிலும் விசாரணை நடத்த வேண்டும்’ என்று கோருவது Islamist propoganda-வா?
நான் கட்டுரையின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டிருந்தேன். /இத்தகைய கொடூரத்தைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுக் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். / ‘யாராக இருந்தாலும்’ என்றால் ‘சிமியாக இருந்தாலும்’ என்று பொருள் உண்டு.
குற்றவாளிகளை, தகுந்த ஆதாரங்களுடன் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய பொறுப்பு காவல்துறைக்கு இருக்கிறது. அவ்வாறு நிரூபிக்கப்படுமுன், ‘SIMI’தான் செய்தது என்று அத்வானி போன்றவர்கள் சொல்வதுதான் propoganda.
அத்வானி என்ற அரசியல்வாதி சிமியை குற்றம் சாட்டுகிறார். அவர் சொல்வதை நிரூபிக்கும் வகையில் சிலர் போலியாக ‘சிமி’ பெயரில் இமெயில் அனுப்புகிறார்கள். ஆனால், முலாயம் சிங் யாதவ் ‘சிமி’ இதில் சம்பந்தப்பட்டிருக்காது என்கிறார். முலாயம் சிங் சொல்வதை ‘Islamist propoganda’ என்பீர்களா? அத்வானி, முலாயம் சிங் இந்த இருவரில் யாரை நம்புவது? அத்வானிகள் ஏன் தங்கள் கருத்துக்களால் காவல்துறையை ‘செலுத்த’ முயற்சிக்க வேண்டும்?
Comment by இப்னு பஷீர் — July 30, 2006 @ 4:30 am
முலாயம் சிங்காவது பரவாயில்லை. முன்னாள் மத்தியப் பிரதேச முதல்வர் உமாபாரதி கொண்டுவந்து பார்த்தால், அத்வானியே ஆளுங்கட்சியினரைக் குறைசொல்ல திட்டமிட்டு இதைச் செய்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று தோன்றுகிறது.
படைத்தவன்தான் இவர்களைப் போன்ற மத வெறியர்களிடமிருந்து மனித குலத்தைக் காக்கவேண்டும்.
Comment by அபூ ஸாலிஹா — July 30, 2006 @ 6:16 am
இதனை செய்தது யாராக இருந்தாலும் அவர்களை நடுரோட்டில் வைத்து கழுத்தை வெட்ட வேண்டும் அல்லது இதுபோலவே சேர்த்து கட்டி வைத்து அதில் ஒரு குண்டை வெடிக்க வைத்து கொல்ல வேண்டும். அது சிமியாக இருந்தாலும் சரி. ஆர் எஸ் எஸ் ஆக இருந்தாலும் சரி. இது தான் நமது நிலைபாடு. இது இஸ்லாமிக் ப்ரோப்பகண்டாவா?
இங்கே அத்வானிக்கும் வாஜ்பாய்க்கும் மும்பை குண்டு வெடிப்பில் தொடர்பிருப்பதாக பாபர் மசூதியை இடிக்கும் பொழுது கும்மாளமிட்ட இவர்களின் முன்னாள் சகா செல்வி உமாபாரதி கூறியிருக்கிறாரே?
பாம்பின் கால் பாம்பறியும் என்பார்கள்.
சகோதரர் சங்கர் அவர்கள் இதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்.?
உமாபாரதி கூறுவது உண்மையெனில் அத்வானியையும் வாஜ்பாயையும் சேர்த்து கட்டி நடு ரோட்டில் வைத்து தண்டனை நிறைவேற்ற சகோ. சங்கர் சம்மதிப்பாரா?
இறை நேசன்
Comment by இறை நேசன் — July 30, 2006 @ 10:13 am
//இங்கே அத்வானிக்கும் வாஜ்பாய்க்கும் மும்பை குண்டு வெடிப்பில் தொடர்பிருப்பதாக பாபர் மசூதியை இடிக்கும் பொழுது கும்மாளமிட்ட இவர்களின் முன்னாள் சகா செல்வி உமாபாரதி கூறியிருக்கிறாரே?
பாம்பின் கால் பாம்பறியும் என்பார்கள்//
இந்தியாவின் பிரதமராகவும் துணைப்பிரதமராகவும் இருந்தவர்கள், மாஃபியாவுடன் தொடர்புடையவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியான தகவல். இதை உமாபாரதி தவிர வேறு யாராவது சொல்லியிருந்தால் propoganda என்பார்கள். இப்போது உமாபாரதிக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
//அத்வானியே ஆளுங்கட்சியினரைக் குறைசொல்ல திட்டமிட்டு இதைச் செய்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று தோன்றுகிறது.//
அத்வானி முந்திக்கொண்டு பாகிஸ்தான், சிமி, தாவூது இப்ராஹிம் என்றெல்லாம் திசை திருப்ப முயல்வதைப் பார்க்கும்போது ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்பதுபோல தோன்றுகிறது.
Comment by இப்னு பஷீர் — July 30, 2006 @ 10:56 am
Very good. But all tamil media now against muslim. This is purposely doing by americal and western lobby Like Cho….. and some of this kind of fellows around in Tamilnadu and India. All our brothers should take care in future.
thanks: Asalamone
Kingdomofbahrain
Comment by asalamone — July 30, 2006 @ 11:51 am
Whole world knows about the role of pakistan in terrorism.When i was in london, I, Myself noticed the money collection for terrorism in kashmir in places like eastham,manchester etc.During earthquake,millions of pounds were transferred to militants.Pakistan’s primary industry is Terrorism.World knows it.You are supporting that country. You are supporting Dawood.He become the icon.I had balanced view on south indian muslims.But your pathive really shatters my thought.You are living/lived in country called India.You are enjoying good/bad from india.Not from pakistan.Atleast slight sense of nationality should be there.I am strongly against fallacies of BJP/RSS. Majority of tamils are against them.But thoughts like this may change their views.I don’t know in what way pakistan or dawoood will help muslims in India.Everyone knows the fate of POK during earthquake and how quikly peole in kashmir(indian) got relief.Unfortunately, religious fanatism hide the real role of pakistan.
Comment by Sundar — August 18, 2006 @ 6:11 am
//You are supporting that country. You are supporting Dawood.//
Sundar,
Don’t get too emotional. Please read the article again and let me know where I am supporting Pak or Dawood. Thanks.
Comment by இப்னு பஷீர் — August 18, 2006 @ 8:08 am
பாகிஸ்தானில் தஞ்சமடைந்திருப்பதாகக் கருதப்படும் தாவூத் இப்றாஹிம் இந்தக் குண்டு வெடிப்பில் சம்பந்தப் பட்டிருக்கலாம்.
Where he is staying?
What is wrong in crushing that terrorist/evil contry?
இஸ்ரேலைப் பின்பற்றி இந்தியாவும் பாகிஸ்தான் மீது போர் தொடுத்தே தீர வேண்டும் என சோவும் குருமூர்த்தியும் வாதிட்டனர் . நெஞ்சில் உரமுமில்லாத, நேர்மைத் திறனுமில்லாத கையாலாகாத அரசு இது என கூச்சல் இட்டனர். லஸ்கரீ தொய்பா -தான் இப்போது லஸ்கரீ கஹார் எனப் பெயரை மாற்றிக் கொண்டு செயல்படுவதாக ‘ உளவுத்துறை நிபுணர்கள்’ தெரிவித்துள்ளதாக ஒருவர் திண்ணை டாட் காமில் எழுதினார்.
லஸ்கர்-இ-தொய்பாவின் துணை அமைப்பான லஸ்கர்-இ-கஹர் என்ற இயக்கம்தான்
Is Laskar-e-toiba works for world peace?
Comment by Sundar — August 19, 2006 @ 7:22 am
//பாகிஸ்தானில் தஞ்சமடைந்திருப்பதாகக் கருதப்படும் தாவூத் இப்றாஹிம் இந்தக் குண்டு வெடிப்பில் சம்பந்தப் பட்டிருக்கலாம்.
Where he is staying?//
சுந்தர், இப்படி கருதுவது நானில்லை. நான் கொடுத்திருந்த ரெடிஃப்.காம் சுட்டி ஒன்றில் இப்படி சொல்லியிருக்கிறார்கள். //After several claims by India that Dawood was hiding in Pakistan, the neighbouring country has denied reports that he was holed up in the country. // அந்தாள் எங்கிருக்கிறார் என்பது உறுதிப்படுத்தப்படாத சூழ்நிலையில் கருதப்படுவதாக சொன்னால் ஆதரிப்பதாக அர்த்தம் வருமா என்ன?
//What is wrong in crushing that terrorist/evil contry?//
If we are sure about it, nothing wrong in punishing the culprit. Have you not seen my statement..’இத்தகைய கொடூரத்தைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுக் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்’..? ஆனால், அதற்கு முன் குற்றம் நிரூபிக்கப்பட வேண்டும். அதைச் செய்ய வேண்டிய கடமை நம் இந்திய அரசிற்கு இருக்கிறது. நிச்சயம் செய்வார்கள். ஆனால், சோ குருமூர்த்தி போன்ற மு.கொட்டைகள் எந்த ஆதாரத்தை வைத்து பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டும் என்று குதிக்கிறார்கள்?
//லஸ்கர்-இ-தொய்பாவின் துணை அமைப்பான லஸ்கர்-இ-கஹர் என்ற இயக்கம்தான்… Is Laskar-e-toiba works for world peace?//
லஸ்கர்-இ-கஹர் என்பதே சுமித் என்ற ‘எழுத்துத் தீவிரவாதி’யின் சதித்திட்டம் என்பது வெளிப்பட்டு விட்டதே சார்!
Comment by இப்னு பஷீர் — August 19, 2006 @ 9:38 am
I read you articles.I believe that you have somewhat balanced view.Because of that only i am doing post.
Oterwise i will just ignore it.
If we are sure about it, nothing wrong in punishing the culprit. Have you not seen my statement..
Do you have still doubt about it?.It is a well known fact that Government (ISI) of Pakistan as well as Terrorist groups, supporting religious fanatics leaders are reason for the killing 1000’s of people in Kashmir and India,UK train and Flight bombings and all over the countries.It is an well known fact that pakistan(ISI) is using organising terrorists from all over world to destabilise India.They are targeting religious and economic interest places like mumbai to weeken economy.
If you still believe that pakistan is an peace loving nation and it respects humanity and still doubts the role of pakistan in global terrorism, please let me know.
Lots of hindus condemn Hindu religious fanatics strongly.They accepts the fact.But only very few muslims openly condemn muslim religious fanatism,Terrorism and Terrorism perpetuating country PAKISTAN.
I am an hindu.But i believe in secularism.I strongly condomn parties like RSS and BJP(except for leaders like Vajpayee).Destruction of Babar masjid is act of terrorism.Majority of tamil people believe this.That is the reason, BJP couldn’t able to land in TN.None of the terrorist will publish in newspaper that he is from pakistan.You are writting the article to safeguard the terrorist by diverting attention to hindu facist group.Everybody knows that RSS/BJP is doing terrorism not by bomb blast but by using Power.If you write about that kind of terrorism that they are doing,I will appreciate .They did state sponsored terrorism in Gujarat(which is happening daily in Bangladesh and pakistan).They are trying to change the history.They are spreading religious hatreds to youths(which is also happening through madaras in all over the world).
Comment by Sundar — August 19, 2006 @ 5:50 pm
//I read you articles.I believe that you have somewhat balanced view.Because of that only i am doing post. Oterwise i will just ignore it. //
உங்கள் நேரத்தை செலவளித்து இப்பதிவை படித்து, திறந்த மனத்துடன் இங்கு விவாதிப்பதற்கு நன்றி சுந்தர்!
பாகிஸ்தானை ஆதரிக்கும் எண்ணமெல்லாம் எனக்கு இல்லை. என்னைப்போன்ற முஸ்லிம்களின் வருத்தமெல்லாம் பாகிஸ்தானோ, வேறு அமைப்புகளோ செய்யும் தீவிரவாத செயல்களுக்கு இஸ்லாம் மீது பழி போடுவது ஏன் என்பதுதான். உதாரணத்திற்கு, நீங்களே எழுதி இருக்கிறீர்கள், ‘only very few muslims openly condemn muslim religious fanatism..’ என்று. தீவிரவாதத்திற்கும் இஸ்லாம் மார்க்கத்திற்கும் எள்ளளவும் சம்பந்தமே இல்லை என்பதை விளக்கி ‘ஜிஹாது எனும் இஸ்லாமிய கடமை’ என்ற தலைப்பில் ஒரு பதிவே எழுதியிருக்கிறேன். தயவு செய்து அதையும் படித்துப் பாருங்கள். தீவிரவாதத்தை பெரும்பான்மையான முஸ்லிம்களும், மார்க்க அறிஞர்களும் கண்டிக்கிறார்கள் என்பதையும் ஆதாரத்துடன் அந்தப் பதிவில் தெளிவு படுத்தியிருக்கிறேன்.
எல்லாவற்றிற்கும் காரணகர்த்தா பாகிஸ்தான்தான் என்றால் கூட, அவர்களை குற்றம் சொல்லும் தகுதி அத்வானி போன்றவர்களுக்கு கொஞ்சமும் கிடையாது. அரசியல் லாபம் கருதி இப்படி எதையாவது சொல்லும் இவர்கள்தான் தாம் ஆட்சியில் இருந்த காலத்தில் பாகிஸ்தானுக்கு பஸ் விட்டு நட்பு பாராட்டியவர்கள். பாகிஸ்தானியர்களின் உபசரிப்பில் மனம் நெகிழ்ந்து ஜின்னாவை வாய் நிறைய பாராட்டிவிட்டு இங்கு வந்ததும் தன் இயக்கத் தலைமையின் காலில் விழாத குறையாக மன்னிப்பு கேட்டவர்கள். இவர்களைப் போன்ற அரசியல்வாதிகளும் சோ, குருமூர்த்தி போன்ற அரைகுறைவாதிகளும் சொல்வதையெல்லாம் நீங்கள் அப்படியே நம்புகிறீர்கள் என்றால் நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை!
//They are spreading religious hatreds to youths(which is also happening through madaras in all over the world).//
‘மதரஸாக்கள் தீவிரவாதத்தை வளர்க்கின்றன’ என்பது மறைமுகமாக ‘இஸ்லாம் ஒரு தீவிரவாத மதம்’ என்று நிறுவ முயலும் ஒரு துவேஷப் பிரச்சாரம்தான். ஊடகங்களில் வருவதையெல்லாம் அப்படியே நம்பிவிடாதீர்கள் சுந்தர். ஊடகங்களில் வரும் பெரும்பான்மையான செய்திகளுக்கும் உண்மைக்கும் வெகு தூரம்.
Comment by இப்னு பஷீர் — August 22, 2006 @ 3:40 pm
200% i support your view on Advani.I don’t find any difference between RSS and Laksher-e-Toiba.Only difference is that Laksher is doing violence against India and RSS is doing violence in the name of india.In fact RSS/BJP is more dangerous than Terrorist organisations.Because they have the “license” to do attrocity.If they get the power, then Bharathi’s @pai arasatchi seithal pinam thinnum sathirangal@ enre nilai than varum.
Thoughts of Cho and Gurumoorthy are dangerous to humanity.I never cosider them as human beings.Atleast in TN, majority of us ignored them.Thank god.
My real worry is that if majority of muslims don’t show the protest strongly against Terrorim, then these (RSS)extremist will easily brainwash common people who has very little general knowledge.Since Majority of Media is with those kind of people, it will happen easily.
I feel that articles needs to be published about role of muslims in economic development of India,Culture,Language etc. I am seeing very few articles.
I saw ur artices.They are really good. If you write more artices in above subject in positive side, it will open the eyes of younger generation.I couldn’t able to write as i don’t know lots of fact.
I APPOLOGISE for my view on madarasa.As you told, that may be the impact of media(especially british media whesn i was in Uk,i used to read about it ).Without having first hand information, i should not have told like that.
I hope that you will continue to do the positive impact by writting good facts.
But one fact that really worries me a lot is that if those extremists(RSS/BJP) came to power with full majority, then what will happen to Nation.?Let God save India.Really I dont want even in my dream.Because of that only, I request majority of muslim should show strong protest to terrorist so that those(RSS) people can’t brainwash young people and common people.
Comment by Sundar — August 23, 2006 @ 4:38 am
Sorry Ibnu.Just now i saw your article on Role of islam in tamil.REALLY GOOD.I Expect these kinds of articles.
Thanks
Comment by Sundar — August 23, 2006 @ 4:42 am
சுந்தர்,
உங்கள் புரிந்துணர்வுக்கு நன்றி.
//My real worry is that if majority of muslims don’t show the protest strongly against Terrorim, then these (RSS)extremist will easily brainwash common people who has very little general knowledge.Since Majority of Media is with those kind of people, it will happen easily.//
இது நிச்சயமாக ஒரு பிரச்னைதான். தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் கண்டனங்கள் ஊடகங்களில் முக்கியத்துவம் பெறுவதில்லை. அல்ஜஸீரா போன்ற இஸ்லாமிய ஊடகங்கள் பெரும்பான்மை மக்களை சென்றடையும்போது ஒருவேளை இந்த நிலை மாறலாம்.
//But one fact that really worries me a lot is that if those extremists(RSS/BJP) came to power with full majority, then what will happen to Nation.?Let God save India.//
என்ன நடக்கும் என்பதற்கு குஜராத் நிகழ்வுகள் ஒரு சாம்பிள். அப்படி ஒரு கொடூரம் மீண்டும் நிகழாமல் இந்தியாவை கடவுள்தான் காக்க வேண்டும்.!
Comment by இப்னு பஷீர் — August 23, 2006 @ 2:51 pm
முஸ்லீம் தீவிரவாதிகள் என்பவர்கள் வெரும் முஸ்லீம் பெயர் தாங்கிகள் மட்டுமே. இவர்கள் செய்யும் செயல்களால் இஸ்லாத்திற்க்கு ஒரு பிரயோஜனமும் இல்லை மாறாக பிரட்சனைகள்தான் உண்டாகின்றன.. ஒவ்வெரு நாடும் ஏதாவது ஒரு நாட்டுக்குள் பிரட்சனைகளை துாண்டிவிட்டுக்கொண்டுதான் இருக்கின்றன ( இதை அங்கீகரிக்கப்பட்ட ராஜதந்திரமாக ஒவ்வொரு நாடும் எண்னுகிறது)இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல. ஒரு ஜாதியை வைத்து கலவரத்தை தொடஙகும்போது கலவரக்காரர்களின் எண்ணம் எளிதாக நிறைவேறுகிறது. ஆனால் நம் நாட்டில் நிரபராதிகளைகூட முஸ்லீம் என்ற ஒரே காரணத்தினால் தீவிரவாதி என்ற கண்ணேட்டத்தில் பார்க்கிறார்கள் அதனால் சிலர் அவசியமற்ற துன்பத்தையும் அனுபவிக்கிறார்கள். இதனால் பாதிக்கப்பட்டோர் பழிவாங்கும் எண்ணத்தை தேர்ந்தெடுப்பது தவிற்க்கமுடியாததாகிவிடுகிறது (பூனை கூட அடிபடும்போது புலி போல சீறும் ) .ஆக தீவிரவாதிகளை உருவாக்குவதில் கணிசமான பங்கு போலீஸ் இலாக்காவிற்க்கும் இருக்கிறது.
உணருங்கள் உருப்படுவோம்…
வளமான தமிழகம் வலிமையான இந்தியா உருவாக்குவோம் வாரீர்…வாரீர்
உங்கள் அன்புமறவாத அப்துல் அஜீஸ்
Comment by Aziz — August 25, 2006 @ 10:31 am
Coimbatore is just coming out of bomb blasts. Let us make a prosperous கோவை.
Comment by கோவை — March 30, 2007 @ 8:58 pm