லெபனான் விவகாரம்: அமெரிக்க ஊடகங்களின் பாரபட்சம்!

August 2, 2006

லெபனான் மீது இஸ்ரேல் புரிந்து வரும் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. ஹிஸ்புல்லாஹ் படையினருக்கு எதிராக தாக்குதல் நடத்துகிறோம் என்ற பெயரில் இஸ்ரேல், லெபனானின் மக்கள் குடியிருப்புகள் மீது கண்மூடித்தனமாக விமான தாக்குதலை நடத்தி வருகிறது.

இரு தினங்களுக்கு முன் வரலாற்று பிரசித்தி பெற்ற லெபனானின் கானா பிரதேசத்தில் (Qana - உலக கிறிஸ்தவர்கள் புனிதமாக கருதும் இயேசுவின் முதல் அற்புதம் வெளியான திருமண விருந்து நிகழ்ச்சி நடந்த இடம்) இஸ்ரேலின் தாக்குதலால் வீடுகளை இழந்த பெண்களும் குழந்தைகளும் தங்கியிருந்த ஒரு மூன்று மாடிக் கட்டிடத்தின் மீது இஸ்ரேல் அமெரிக்கா தனக்கு வழங்கிக் கொண்டிருக்கும் ஏவுகணைகளை வீசி 37 குழந்தைகள் உட்பட 100 க்கு மேற்பட்ட அப்பாவி பொது மக்களை கொன்றொழித்தது.

Cana Massacre

இவ்வளவு குரூரமான, இரக்கம் உள்ள மனிதர்களால் ஒரு போதும் பொறுத்துக் கொள்ள இயலாத கொடுஞ்செயலை இஸ்ரேல் செய்த பிறகும் இஸ்ரேலின் கொடுஞ்செயலுக்கு எதிராக -அதன் பயங்கரவாத செயலுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் யாரும் மேற்கொள்ள தயாரில்லை. உலக நாடுகளுக்கு என்ன நிகழ்ந்தது? அவைகளுக்கு ஏன் இந்த இழி நிலை? பச்சிளம் குழந்தைகளை கொத்து கொத்தாக கண்முன் கொன்றொழித்துக் கொண்டிருக்கும் இஸ்ரேலின் செயல் பயங்கரவாதமில்லையா? இதற்கு எதிராக போராட யாரும் களமிறங்காததன் காரணம் என்ன?

அரபு-இஸ்ரேலிய பிரச்னைகளில் இஸ்ரேல் புரியும் அட்டூழியத்தைப் பொறுத்தவரை உலக நாடுகள் கடைபிடிக்கும் மவுனத்திற்கும் பாராமுகத்திற்கும் காரணம் அமெரிக்க ஊடகங்களே.

அரபு-இஸ்ரேலிய பிரச்னையில் அவைகள் தந்த உண்மைக்குப் புறம்பான, நியாயமற்ற பாரபட்சமான செய்திகளின் விளைவுகள் தான் இவை.

அல் ஜஸீரா: உலகிற்கு அரபு தொலைக்காட்சிகளின் சவால்’ (Al-Jazeera: How Arab TV News Challenged the World) என்ற நூலை எழுதிய ஹுக் மைல்ஸ் (Hugh Miles), The Straight Times இதழுக்கு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், அமெரிக்க ஊடகங்கள் இஸ்ரேல்-லெபனான் பிரச்னையை எவ்வாறு பாரபட்சமாக சித்தரிக்கின்றன என்பதை விளக்கியுள்ளார். அந்தப் பேட்டியிலிருந்து ஒரு பகுதி:

கேள்வி: லெபனான் நிகழ்வுகளை அரபு ஊடகங்களை விட அமெரிக்க ஊடகங்கள் வித்தியாசமாக சித்தரிக்கின்றன என எவ்வாறு கூறுகிறீர்கள்?

பதில்: இந்தப் போருக்கு முந்திய நிகழ்வுகளை அமெரிக்க ஊடகங்கள் ஒரு தவறான கண்ணோட்டத்தில் புரிந்து வைத்திருக்கின்றன என்று நான் நினைக்கிறேன். இஸ்ரேலின் லெபனான் மீதான தாக்குதலை அவை ‘நியாயமான எதிர்வினை’ என்பது போல குறிப்பிடும் அதே வேளையில், இப்பிரச்னையின் வரலாற்றுப் பிண்ணனியையோ, இஸ்ரேல் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் 9000-க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகளைப் பற்றியோ குறிப்பிடுவதில்லை. இக்கைதிகளுள் பெண்களும், 14 வயது கூட நிரம்பாத சிறுவர்களும் அடங்குவர்.

ஹிஸ்புல்லாஹ் இயக்கத்திற்கு ஈரான் மற்றும் சிரியாவுடன் கொள்கைரீதியில் தொடர்புகள் இருந்த போதிலும், அமெரிக்கப் பத்திரிக்கையாளர்கள் நம்புவது போல, ஹிஸ்புல்லாஹ் இவ்விரு நாடுகளின் தூண்டுதலின் பேரில்தான் செயல்படுகிறது என்பது உண்மையல்ல. பல ஆண்டுகளாகவே ஹிஸ்புல்லாஹ் தலைவர் ஷேக் நஸ்ரல்லா தனது சுய முடிவுகளின்படியே செயல்படுகிறார் என்பதுதான் உண்மை.

இஸ்ரேலிய குழந்தைகள் யாரும் தாக்குதலில் இறந்தால் அச்செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிடும் அமெரிக்க ஊடகங்கள், அரபு குழந்தைகள் யாரும் இறந்தால் அதை பெரும்பாலும் கண்டு கொள்வதில்லை.

காஸா பகுதி குறித்த அமெரிக்க செய்திகள் ‘ஆக்ரமிப்பு’ ‘ஆக்ரமிக்கப்பட்ட பகுதி’ போன்ற சொற்களை பெரும்பாலான நேரங்களில் பயன்படுத்துவதில்லை. அதற்கு மாறாக, மேற்கு கரையும் காஸா பகுதியும் ‘சர்ச்சைக்குரிய பகுதி’ (’contested’ or ‘disputed’) அல்லது வெறுமனே ‘இஸ்ரேல்’ என்றே குறிப்பிடப் படுகின்றன.

இஸ்ரேல் நடத்தும் அரசியல் படுகொலைகளை அமெரிக்க ஊடகங்கள் ‘குறிவைக்கப்பட்ட தாக்குதல்’ (targeted killings) என வர்ணிக்கின்றன. இஸ்ரேலின் ராணுவம் ‘பாதுகாப்புப் படை’ (security forces)யாகிறது. சட்டவிரோதமாக ஆக்ரமிக்கப்பட்ட பிரதேசங்கள் கூட ‘குடியிருப்புப் பகுதிகள்’ (neighbourhood) என அழைக்கப்படுகின்றன.

நன்றி: சத்திய மார்க்கம்.காம்

10 Comments »

The URI to TrackBack this entry is: http://ibnubasheer.blogsome.com/2006/08/02/hughmiles/trackback/

  1. //காஸா பகுதி குறித்த அமெரிக்க செய்திகள் ‘ஆக்ரமிப்பு’ ‘ஆக்ரமிக்கப்பட்ட பகுதி’ போன்ற சொற்களை பெரும்பாலான நேரங்களில் பயன்படுத்துவதில்லை. அதற்கு மாறாக, மேற்கு கரையும் காஸா பகுதியும் ‘சர்ச்சைக்குரிய பகுதி’ (’contested’ or ‘disputed’) அல்லது வெறுமனே ‘இஸ்ரேல்’ என்றே குறிப்பிடப் படுகின்றன.//

    அட இங்கேயும் அப்படித்தேஞ் சொல்றாய்ங்க, பாபர் மசூதி ‘’சர்ச்சைக்குரிய'’ இடமாமே உண்மைதானா..!!??

    Comment by முஸ்லிம் — August 2, 2006 @ 4:56 pm

  2. //அட இங்கேயும் அப்படித்தேஞ் சொல்றாய்ங்க, பாபர் மசூதி ‘’சர்ச்சைக்குரிய’’ இடமாமே உண்மைதானா..!!?? //

    உண்மையாக இருக்க வாய்ப்பிருக்கிறது. அங்கு இஸ்ரேலிய காட்டுமிராண்டிகளுக்கு ஆதரவான அமெரிக்க ஊடகம்.. இங்கு இந்துத்துவ வெறியர்களுக்கு ஆதரவான ஜாதியினரால் dominate செய்யப் பட்டிருக்கும் இந்திய ஊடகம்..

    Comment by இப்னு பஷீர் — August 3, 2006 @ 6:36 am

  3. Yes. I support your article. Ibnu Basheer.

    asalamone

    Comment by asalamone — August 3, 2006 @ 7:59 am

  4. இசுரேல் மற்றும் அமெரிக்காவின் அடாவடி - பயங்கரவாத - ரவுடித்தனத்திற்கு எதிராக உலக உழைப்பாளி மக்களிடைய கடுமையான எதிர்ப்பு மேலாங்கி வருகிறது. இந்த எதிர்ப்பு எதிர்காலத்தில் அமெரிக்க - இசுரேலிய பயங்கரவாத ஆட்சியாளர்களை ஓட, ஓட விரட்டியடிக்கும்.

    Comment by Selvaperumal. K — August 3, 2006 @ 9:59 am

  5. அமெரிக்க மீடியாக்கள் அமெரிக்க அரசாங்கம் எடுத்த முடிவை பிரதிபலிக்கின்றன. இதில் என்ன ஆச்சரியம் வந்தது? இஸ்ரேல் மீது அமெரிக்கர்களுக்கு அனுதாபம் இருக்கிறது என்பது உண்மைதானே? அதனால், மீடியாக்களும் பொது விருப்பம் போலவே தன் எண்ணங்களை பிரதிபலிக்கின்றன. இது சகஜமானதுதானே. இந்த மீடியாக்கள் தனியாரால் நடத்தப்படுபவை. அதனால், அவர்கள் பொது ஜனநாயக எண்ணங்களை பிரதிபலிப்பவையாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

    இதில் நொட்டை சொல்வது வினோதம். ஏதோ ஒரு அரபி பத்திரிக்கையாளரின் பாரபட்சமான ஒரு செய்தியை ஆதாரமாக்கி தாங்கள் கூவுவதுதான் வினோதம்? அமெரிக்கா அல்லாத மேலைநாட்டு மீடியாக்களை பற்றிய தங்கள் எண்ணம் என்ன?

    எங்கேயோ லெபனானில் இடி இடித்தால் இங்கு உங்களுக்கு வேர்ப்பது ஏன்? இதற்கு பதில் தெரிந்தால், அதே பதிலை இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் பொருத்திப்பார்த்துக்கொள்ளுங்கள்.

    பாபர் மசூதி சர்ச்சைக்குறிய இடம்தான். கோர்ட்டில் கேஸ் இருக்கிறது.

    Comment by ஜயராமன் — August 3, 2006 @ 10:25 am

  6. //உண்மையாக இருக்க வாய்ப்பிருக்கிறது. அங்கு இஸ்ரேலிய காட்டுமிராண்டிகளுக்கு ஆதரவான அமெரிக்க ஊடகம்.. இங்கு இந்துத்துவ வெறியர்களுக்கு ஆதரவான ஜாதியினரால் dominate செய்யப் பட்டிருக்கும் இந்திய ஊடகம்.. //
    //இந்துத்துவ வெறியர்களுக்கு//

    உங்களை மட்டும் புனிதராக காட்டிக் கொள்ளுங்கள். இஸ்லாமியர்களை விட நாங்கள் அதிக வெறியுடையவர்கள் இல்லை. (ஏன் பெயர் போடவில்லை என்று கேட்காதீர்கள். பெயர் போட்டால், அதுவும் ஒரு இந்துவாக இருந்தால், உடனே என்னை இந்துத்துவ வெறியன் என்பீர்கள்). Hats Off!!!

    Comment by Anony — August 3, 2006 @ 10:38 am

  7. //அமெரிக்க மீடியாக்கள் அமெரிக்க அரசாங்கம் எடுத்த முடிவை பிரதிபலிக்கின்றன.//
    //மீடியாக்களும் பொது விருப்பம் போலவே தன் எண்ணங்களை பிரதிபலிக்கின்றன//
    //அவர்கள் பொது ஜனநாயக எண்ணங்களை பிரதிபலிப்பவையாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். //

    திரு. ஜயராமன், மேலே உள்ள ஸ்டேட்மெண்ட்கள் மூலம் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது புரியவில்லை. அமெரிக்க அரசாங்கம், அமெரிக்க மக்கள், அமெரிக்க ஊடகங்கள் இம்மூன்று தரப்பினரின் கருத்துக்களும் ஒன்றேதான் என்கிறீர்களா? இந்த வலைப்பக்கத்தைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லையே?
    http://antiwar.com/roberts/?articleid=9381

    //ஏதோ ஒரு அரபி பத்திரிக்கையாளரின் பாரபட்சமான ஒரு செய்தியை ஆதாரமாக்கி தாங்கள் கூவுவதுதான் வினோதம்.//

    Hugh Miles அரபி பத்திரிக்கையாளர் அல்ல.
    http://www2.warwick.ac.uk/fac/arts/ctccs/research/tgn/events/gt/prog/hm/

    //எங்கேயோ லெபனானில் இடி இடித்தால் இங்கு உங்களுக்கு வேர்ப்பது ஏன்? இதற்கு பதில் தெரிந்தால், அதே பதிலை இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் பொருத்திப்பார்த்துக்கொள்ளுங்கள்.//

    லெபனானுக்கு பரிந்து பேச முஸ்லிமாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மனிதாபிமானம் உள்ள எவரும் பாதிக்கப்படும் அம்மக்களுக்காக பரிந்துதான் பேசுவார்கள்.

    இஸ்ரேலையும், அமெரிக்காவையும் பற்றி பேசும்போது, ஒரு இஸ்ரேலியராகவோ அமெரிக்கராகவோ அல்லாத நீங்கள் வந்து கூவுவதுதான் வினோதமாக தெரிகிறது.

    Comment by இப்னு பஷீர் — August 3, 2006 @ 3:22 pm

  8. //இந்துத்துவ வெறியர்களுக்கு//
    உங்களை மட்டும் புனிதராக காட்டிக் கொள்ளுங்கள். இஸ்லாமியர்களை விட நாங்கள் அதிக வெறியுடையவர்கள் இல்லை. //

    திரு. அனானி,
    நான் இந்துத்துவ வெறியர்களைத்தான் குறிப்பிட்டேன். இந்துமத சகோதரர்களை அல்ல. இந்து மதமும் இந்துத்துவமும் வேறுவேறானவை என்ற எனது புரிதல்தான் இதற்கு காரணம்.

    Comment by இப்னு பஷீர் — August 3, 2006 @ 3:43 pm

  9. //இஸ்ரேலிய குழந்தைகள் யாரும் தாக்குதலில் இறந்தால் அச்செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிடும் அமெரிக்க ஊடகங்கள், அரபு குழந்தைகள் யாரும் இறந்தால் அதை பெரும்பாலும் கண்டு கொள்வதில்லை//

    அதே போல்தான் அரபு குழந்தைகள் யாரும் தாக்குதலில் இறந்தால் அச்செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிடும் அரபு/இஸ்லாமிய ஊடகங்கள், இஸ்ரேல் குழந்தைகள் யாரும் இறந்தால் அதை பெரும்பாலும் கண்டு கொள்வதில்லை.

    Comment by ரெங்கா/renga — August 3, 2006 @ 5:34 pm

  10. //பாபர் மசூதி சர்ச்சைக்குறிய இடம்தான். கோர்ட்டில் கேஸ் இருக்கிறது.//

    ஆமா ஜயராமன் இது எங்களுக்கு தெரியாமல் போய்விட்டது 1948லிருந்து பாபர் மசூதி வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது 1992ல் நீதிமன்றத்தின் ஆணையையும் மீறி இந்துத்துவ பயங்கரவாதிகள் பாபர் மசூதி இடித்து நாட்டின் இறையாண்மையை தகர்த்தெறிந்தார்கள் இதுவும் எங்களுக்கு தெரியாது.

    பாபர் மசூதி இடிபடாமல் இருக்க அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கலாம் என்று நீதிமன்றம் ஆணை பிறப்பிருந்தும் ஆட்சிலிருந்த இந்துத்துவ பயங்கரவாதிகளின் ஆசியுடன் பாபர் மசூதி இடிக்கபட்டது இது எங்களுக்கு தெரியவே தெரியாது.

    பழகுங்கள் இப்பயிருந்தே வரலாற்று திரிபுகளை தொடங்கி கொள்ளுங்கள் அதுதான் உங்களுக்கு கைவந்த கலை ஆயிற்றே ஆனால் பாபர் மசூதி இடிப்பின் வரலாறு தெரிந்தவர்கள் முற்றாக இன்னும் அழிந்துவிடவில்லை.

    Comment by முஸ்லிம் — August 5, 2006 @ 8:15 pm

RSS feed for comments on this post.

Leave a comment

Line and paragraph breaks automatic, e-mail address never displayed, HTML allowed: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <code> <em> <i> <strike> <strong>



Anti-spam measure: please retype the above text into the box provided.