ஜிஹாத் எனும் இஸ்லாமிய கடமை!

August 18, 2006

‘இஸ்லாம் என்றாலே பயங்கரவாதம்’ என்ற துவேஷப் பிரச்சாரம் இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரகர்களால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பரப்பப் பட்டு வருகிறது. ஊடகங்களின் துணையோடு இவர்களின் குரல் உரத்து ஒலிக்கிறது. உரக்கச் சொல்வதெல்லாம் உண்மையாகி விடுமா? இவர்கள் சொல்வது போல், இஸ்லாம் வன்முறையை தூண்டும் மார்க்கமா?

குர்ஆன் என்ன சொல்கிறது?

“நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்கு பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரை கொலை செய்கிறானோ, அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும் எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்.” (குர்ஆன் 5:32). அப்பாவி பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வண்ணம் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுபவர்களை இஸ்லாம் கடுமையாக கண்டிக்கிறது என்பதற்கு மேற்கண்ட குர்ஆன் வசனம் ஒரு உதாரணம்.

ஆனால் இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் ‘இஸ்லாம் வன்முறையைத் தூண்டுகிறது’ என்கிற தமது துவேஷப் பிரச்சாரத்திற்கு பலம் சேர்ப்பதற்காக அடிக்கடி எடுத்துக்காட்டும் திருமறை வசனங்களிள் ஒன்று, அத்தியாயம் 9-ன் 5-ம் வசனம். “முஷ்ரிக் (எனப்படும் இறைவனுக்கு இணைவைப்பவர்)களை கண்ட இடங்களில் வெட்டுங்கள்; அவர்களை பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள்” எனும் இந்த வசனத்தை பிரபல பத்திரிக்கையாளர் அருண் ஷோரி கூட தனது ‘ஃபத்வாக்களின் உலகம்’ என்ற நூலில் பக்கம் 572-ல் மேற்கோள் காட்டி இஸ்லாம் மீது அவதூறு சுமத்தியிருக்கிறறர். இவ்வாறு அவதூறு பரப்புபவர்கள், இதே வசனத்திற்கு முன்புள்ள 9:4-ஐயும் பின்புள்ள 9:6-ஐயும் கவனமாக தவிர்த்து விடுவார்கள். அருண் ஷோரியும் அதைத்தான் செய்திருக்கிறார்.

இந்த வசனம் எந்தச் சூழலில் யாரைக் குறித்து சொல்லப் பட்டது என்பதை தெளிவாக அறிந்து கொள்ள வேண்டுமெனில், இந்த அத்தியாயத்தை முதலாம் வசனத்திலிருந்து படிக்க வேண்டியது அவசியம். அதோடு இந்த வசனம் இறங்கியதன் பிண்ணனியைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும். முஸ்லிமல்லாதவர்களில் சில பிரிவினர் இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு எதிராக செயல்பட மாட்டோம் என ஒப்பந்தம் செய்திருந்தனர். இந்த ஒப்பந்தத்திற்கு கட்டுப்பட்டு, அதற்கு மாறு செய்யாமலும், முஸ்லிம்களின் எதிரிகளுக்கு உதவி செய்யாமலும் இருக்கும் கூட்டத்தினருடன் ‘அந்த உடன்படிக்கையை பூரணமாக நிறைவேற்றுங்கள்’ என வசனம் 9:4 மூலம் நபி அவர்களுக்கு இறைவன் கட்டளையிடுகிறான். அந்த ஒப்பந்தத்திற்கு மாறு செய்பவர்களுடன் சண்டையிடும்படி வசனம் 9:5-ல் கூறும் அதே நேரத்தில், அவர்களில் யாரேனும் புகலிடம் தேடி வந்தால் அவர்களுக்கு அபயமளிக்கும்படியும் வசனம் 9:6-ல் இறைவன் அறிவுறுத்துகிறான்.

இந்த உண்மையான விளக்கத்தை மறைத்து, சண்டையிடும்படி சொல்லும் வசனம் 9:5-ஐ மட்டும் out of context-ல் எடுத்துக் காட்டி பிரச்சாரம் செய்வது இஸ்லாமிய எதிர்ப்பாளர்களின் வாடிக்கையாக இருந்து வருகிறது.

ஜிஹாத் என்றால் என்ன?

இன்று மிக அதிகமாக தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட இஸ்லாமிய மரபுச்சொல் ஜிஹாதாகத்தான் இருக்க வேண்டும். ஜிஹாத் என்றாலே மற்ற மதத்தவர்களைக் கொல்லுதல்; தாக்கி அழித்தல்; அவர்கள் மீது போர் தொடுத்தல் என்கிற ரீதியில் ஒரு தவறான கருத்தோட்டம் நிலை பெற்றிருக்கிறது. இந்த தவறான புரிதலுக்கும், கருத்தாக்கத்துக்கும் பல்வேறு காரணங்களும் பின்னணிகளும் இருக்கின்றன. மேற்கத்திய மீடியாக்களின் சளைக்காத பிரச்சாரமும் இதற்கு ஒரு காரணம். இஸ்லாத்தை முஸ்லிம்களே சரியாக விளங்கிக் கொள்ளாமல் இருப்பதும் ஒரு காரணம்.

‘முயற்சித்தல்’ எனப் பொருள்படும் ‘ஜஹத’ எனும் அரபி மூலச்சொல்லிலிருந்து பிறந்ததுதான் ‘ஜிஹாத்’ எனும் பதம். இச்சொல்லுக்கு ‘அயராத போராட்டம்’, ‘விடா முயற்சி’, ‘கடின உழைப்பு’ என்றெல்லாம் பொருள் உண்டு. குர்ஆனில் ‘ஜிஹாத்’ என்ற சொல் பல இடங்களில் நான்கு விதமான அர்த்தங்களில் இடம் பெற்றுள்ளது.

1. இணைவைப்பவர்கள், நயவஞ்சகர்களுடன் போர் புரிதல்.

2. வழிகேட்டில் இருப்பவர்களுடன் போர் புரிதல்.

3. தனது மனோஇச்சையுடன் போர் புரிதல்

4. இறைவன் காட்டிய நேர்வழியில் நடக்க முயற்சித்தல், அல்லது போராடுதல்.

இவற்றுள் முதல் இரண்டு வகை ஜிஹாதையும் முறைப்படி அறிவித்து நடத்தும் அதிகாரம் ஒரு இஸ்லாமிய அரசாங்கத்திற்கு மட்டுமே உண்டு. அதனை தனி நபர்களோ, தனிக்குழுக்களோ தன்னிச்சையாக மேற்கொள்ள முடியாது. அத்தகைய இஸ்லாமிய அரசு கூட தன்னிச்சையாக வேறொரு நாட்டின் மீது ஜிஹாத் என அறிவித்து விட முடியாது. மார்க்க ரீதியான, உலகாதாய ரீதியான, ஒழுக்க ரீதியான என எல்லா அம்சங்களையும் சீர்தூக்கிப் பார்த்தே அது முடிவெடுக்க வேண்டும். அவ்வாறு போரிடும்போது கூட பெண்களை, பொதுமக்களை, குழந்தைகளை, மதகுருக்களைத் தாக்கக்கூடாது. விளை நிலங்களைச் சேதப் படுத்தக் கூடாது. மரங்களையோ வீடுகளையோ கொளுத்தக் கூடாது. நிராயுதபாணி வீரர்களை கொல்லக் கூடாது என்றெல்லாம் இஸ்லாம் நிபந்தனைகளை விதிக்கிறது.

மேலும், இறைவன் இந்த ஆட்சியாளர்களை நீதியை நிலைநாட்டும்படி வலியுறுத்துகிறான்;

‘உங்களுக்கும், அவர்களின் நின்றும் நீங்கள் விரோதித்திருக்கின்றீர்களே அவர்களுக்குமிடையே அல்லாஹ் பிரியத்தை உண்டாக்கி விடக்கூடும்; மேலும் அல்லாஹ் பேராற்றலுடையவன்; அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபை உடையவன்’ (60:7)

‘மார்க்க (விஷயத்)தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே, அவர்களுக்கு நீங்கள் நன்மை செயவதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் விலக்கவில்லை - நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான்’. (60:8)

‘நிச்சயமாக அல்லாஹ் உங்களை விலக்குவதெல்லாம், மார்க்க விஷயத்தில் உங்களிடம் போர் செய்து உங்களை உங்கள் இல்லங்களை விட்டும் வெளியேற்றி, நீங்கள் வெளியேற்றப் படுவதற்கு உதவியும் செய்தார்களே, அத்தகையவர்களை நீங்கள் நேசர்களாக ஆக்கிக் கொள்வதைத்தான் - எனவே, எவர்கள் அவர்களை நேசர்களாக்கிக் கொள்கிறார்களோ அவர்கள்தாம் அநியாயம் செய்பவர்கள்’. (60:9)

அப்பாவி பொதுமக்களை வேட்டையாடுகிற யூத நடைமுறை, இஸ்லாத்துக்கும் இஸ்லாம் காட்டும் அறவழிக்கும் முற்றிலும் மாறுபட்டதாகும். அதே சமயம் தீமைகள் புயலாய் வீசும்போது மூலையில் முடங்கியிருக்க இஸ்லாம் ஊக்குவிக்கவில்லை. தனது தாய்நாடு மாற்றாரால் ஆக்ரமிக்கப்பட்டு அப்பாவி பெண்களும், குழந்தைகளும், முதியவர்களும் ஈவிரக்கமின்றி கொல்லப்படும்போது அவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கவும் பணிக்கவில்லை. மண்ணின் விடுதலைக்காக போராடுபவர்கள் தீவிரவாதிகளல்ல என்பது உலக நாடுகளால் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்றுதான்.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டால், ‘ஜிஹாத்’ என்ற பெயரிடப்பட்டு இஸ்லாம் மீது பழி சுமத்தப்படும் வன்முறைச் சம்பவங்கள் எதுவுமே ஜிஹாத் கிடையாது என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

மேலே குறிப்பிட்ட நான்கு வகை ஜிஹாத்களில் 3-ம் 4-ம் தான் ஒவ்வொரு முஸ்லிமிற்கும் கடமையான ஜிஹாத் ஆகும். ஒரு முஸ்லிம் தன் மனத்துடன் போராடி, மன இச்சைகளை வென்று, உளத்தூய்மையை ஏற்படுத்தப் போராடுவதுதான் அவருக்கு கடமையான ஜிஹாத். மேலும், தமது வாழ்விலும் தாம் வாழும் சமூகத்திலும் நன்மைகளை ஏவுவதற்காகவும், தீமைகளை அழித்தொழிப்பதற்காகவும் ஓயாமல் பாடுபடுவதும், அந்த நோக்கத்திற்காக தம்மிடம் உள்ள அனைத்து வசதிகளையும் வாய்ப்புகளையும் ஆற்றல்களையும் திறமைகளையும் பயன்படுத்துவதும் ஜிஹாத் தான். இறைத் திருப்தியை பெறுவதே ஜிஹாதின் நோக்கமாக இருக்கவேண்டும். இன்னும் சொல்லப்போனால் எதிரிகளுடன் போரிடுவதைவிட மனதுடன் போரிடுவது தான் உயர்ந்தது. அதுவே பெரிய ஜிஹாத் (ஜிஹாதே அக்பர்) என நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தி இருக்கின்றார்கள்.

பெற்றோருக்குப் பணிவிடை செய்வதே சிறந்த ஜிஹாத் என்றும் நபியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஜிஹாதில் கலந்து கொள்ள அனுமதி வேண்டி வந்த ஒரு மனிதரிடம், “உமது பெற்றோர் உயிருடன் இருக்கிறார்களா?” என்றார்கள். அதற்கு அம்மனிதர் “ஆம்!” என்றார். “பெற்றோருக்கு பணிவிட செய்வதற்கு அரும்பாடுபடு” என்று சொல்லி திருப்பி அனுப்பினார்கள்!” (ஆதாரம்: ஸஹீஹ் புகாரி). இன்னொரு சந்தர்ப்பத்தில், பெண்களும் இஸ்லாமிய யுத்தங்களில் பங்கெடுக்க அனுமதி கேட்டபோது ” பரிபூரணமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜே பெண்களுக்கான ஜிஹாத்” எனறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) நவின்றார்கள்: “உங்களில் எவர் ஒரு தீய செயலை காண்கிறாரோ அவர் அதனை தனது கைகளால் தடுக்கட்டும். அவரால் முடியவில்லையெனில் அதை நாவால் தடுக்கட்டும். அவரால் அதையும் செய்ய முடியவில்லையெனில் அதை தம் மனத்தால் வெறுக்கட்டும். இது இறை நம்பிக்கையில் மிகவும் பலவீனமான நிலையாகும்”. (ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்)

ஆக நன்மையை ஏவுவதும், தீமைகளுக்கு எதிராகப் பொங்கி எழுவதும் அறவழியில் போராடுவதுமே ஒவ்வொரு முஸ்லிமிற்கும் கடமையான ஜிஹாத் ஆகும். பொது மக்களுக்குத் தீங்கிழைப்பதும் அப்பாவி மக்களின் உயிரைப் பறிப்பதும் எந்த நிலையிலும் ஜிஹாத் ஆகாது.

பயங்கரவாதத்தைப் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு இவ்வாறு தெளிவாக வரையறுக்கப் பட்டிருக்க, சில முஸ்லிம்கள் சம்பந்தப்படும் வன்முறைச் சம்பவங்களை இஸ்லாத்தின் மீதே குற்றம் சுமத்தி அவதூற்றுப் பிரச்சாரம் செய்வது கடைந்தெடுத்த அயோக்கியத்தனத்தின் வெளிப்பாடு.

( ஜிஹாத் பற்றி மேலும் அறிந்து கொள்ள: சுட்டி1 - சுட்டி2 - சுட்டி3 )

பயங்கரவாதத்தைப் பற்றி இன்றைய பெரும்பான்மை முஸ்லிம்களின் கருத்து என்ன?

‘பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுபவர்களும் தாங்கள் குர்ஆனையே பின்பற்றுவதாக சொல்கிறார்களே!’ என ஒரு சந்தேகம் எழலாம். இஸ்லாத்தின் கொள்கைகளை சில முஸ்லிம்களே சரியாக புரிந்து கொள்ளாமல் இருப்பதுதான் இதற்கு காரணம். தங்களது தவறான புரிதல்களால் தனது மார்க்கத்திற்கு தாமே களங்கம் ஏற்படுத்துவதை இவர்கள் உணர்ந்து கொள்ளவில்லை. அத்தகையோரை இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் கடுமையாக கண்டிக்கிறார்கள். செப்-11 தாக்குதலைக் கண்டித்து மார்க்க அறிஞர்கள், முஸ்லிம் தலைவர்கள், அமைப்புகள் வெளியிட்ட அறிக்கைகளைச் சில வலைத்தளங்களில் தொகுத்து வைத்திருக்கிறார்கள்.

இத்தாக்குதலை கண்டித்து உடனடியாக அறிக்கை வெளியிட்டவர்களில் குறிப்பிடத்தக்க ஒரு மார்க்க அறிஞர் எகிப்து அல்-அஸ்ஹர் பல்கலைக்கழக தலைமை இமாம் ஷேக் முஹம்மது சையது தன்தாவி அவர்கள். ‘தீவிரவாதம் என்பது இஸ்லாத்திற்கு எதிரி ஆகும். தீவிரவாதத்திற்கும், தனது நாட்டை பாதுகாக்க, ஒடுக்குமுறைக்கு எதிராக போன்ற காரணங்களுக்காக இஸ்லாத்தில் அனுமதிக்கப் பட்டிருக்கும் ஜிஹாதிற்கும் இடையில் உள்ள வித்தியாசம், வானுக்கும் பூமிக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தைப் போன்றதாகும்’ என்பது இமாம் தன்தாவி அவர்களின் கருத்து.

இத்தாக்குதலைக் கண்டித்தவர்களில் முக்கியமான மற்றொரு மார்க்க அறிஞர் டாக்டர் யூசுப் அல் கர்ளாவி அவர்கள். ‘இஸ்லாம் நல்லிணக்கப் போக்கை விரும்பும் மார்க்கம். இது மனித உயிர்களுக்கு மிகுந்த மதிப்பளிக்கிறது. அப்பாவி மக்களுக்கு எதிரான தாக்குதல்களை கொடிய பாவமாக இஸ்லாம் கருதுகிறது.’ என இம்மார்க்க அறிஞர் கருத்து தெரிவித்திருக்கிறார். இவர் 1999-லிருந்தே அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப் பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அப்பாவி பொதுமக்களின் உயிருக்கு பாதகம் ஏற்படுத்தும் பயங்கரவாத செயல்களுக்கு இஸ்லாத்தில் இடமில்லை என்பதற்கும் அத்தகைய செயல்களை செய்பவர்கள் யாராக இருப்பினும் அதனை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்வதில்லை என்பதற்கும் இவையே அத்தாட்சிகள்.

****

இஸ்லாத்தை தவறாக விளங்கிக் கொண்ட சில முஸ்லிம்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவது இஸ்லாத்தின் மீதே களங்கம் சுமத்தப் படுவதற்கு காரணமாக அமைகிறது என்பது கசப்பான ஒரு உண்மையே! அவர்களின் செயல்களுக்கு இஸ்லாம் மார்க்கமோ பிற முஸ்லிம்களோ எவ்விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள் என்றாலும், அவ்வாறு தவறான வழியில் செல்பவர்களை நேர்வழிப் படுத்தும் பொறுப்பு முஸ்லிம் சமுதாயத்திற்கு இருக்கிறதா, இல்லையா? இந்தப் பொறுப்பை அவர்கள் எவ்வழியில் நிறைவேற்ற இயலும்?

விளக்கம் பகுதி 4-ல்
(தொடரும்)

நன்றி: திண்ணை August 17, 2006

இக்கட்டுரைத் தொடரின்
பகுதி-1 குண்டு வெடிப்பில் குளிர்காயும் சண்டாளர்கள்!
பகுதி-2 இஸ்லாமியருக்கெதிரான இந்துத்துவ சூழ்ச்சிகள்!

44 Comments »

The URI to TrackBack this entry is: http://ibnubasheer.blogsome.com/2006/08/18/p34/trackback/

  1. Excellent article.

    Comment by ss — August 18, 2006 @ 6:17 am

  2. இணையத்தில் உலவும் இஸ்லாமிய வலைப்பதிவர்கள் அதிகம் விளக்கம் தராத, ஆழமான சிந்தனையைத் தூண்டக்கூடிய பதிவைத் தந்திருக்கிறீர்கள்.

    இஸ்லாம் என்றால் பயங்கரவாதம் என்ற தவறான சிந்தனையைத் தமிழ் இணையத்தில் திணிக்க முற்படும் சில காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களின் வருகையையும், அவ்வாறு செய்வதைத் தங்கள்
    முழுத் தொழிலாகக் கொண்டு இணையத்தில் வேலை செய்பவர்கள், எதிர்க்கேள்விக்காக தங்கள் வலைத்தளத்திற்கு வருகை தருவார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    - அபூ ஸாலிஹா

    Comment by அபூ ஸாலிஹா — August 18, 2006 @ 7:13 pm

  3. முயற்சித்தல் எனும் பொருளுடைய -ஜிஹாத்- என்கிற சொல்லின் மீது பயங்கரவாத வர்ணம் பூசுகிற முஸ்லிம் பெயருடைய மூடர்களையும், அவ்வாறு பூச வைத்தும்,மேலும் பற்பல பூசி மெழுகியும் தங்கள் அரசியல் பிழைப்பை இஸ்லாமை எதிர்ப்பதால் மட்டுமே நடத்த முடிகிற இந்துத்துவ ஆதிக்க நேசர்களையும் இனங்காட்டி - ஒரு சராசரி முஸ்லிமுடைய மனக்குமுறலாக-மார்க்க ஆதாரங்களுடன் தந்த இப்னு பஷீர் பாராட்டிற்குரியவர்.

    Comment by Raaja — August 19, 2006 @ 7:19 am

  4. //‘தீவிரவாதம் என்பது இஸ்லாத்திற்கு எதிரி ஆகும். தீவிரவாதத்திற்கும், தனது நாட்டை பாதுகாக்க, ஒடுக்குமுறைக்கு எதிராக போன்ற காரணங்களுக்காக இஸ்லாத்தில் அனுமதிக்கப் பட்டிருக்கும் ஜிஹாதிற்கும் இடையில் உள்ள வித்தியாசம், வானுக்கும் பூமிக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தைப் போன்றதாகும்’//

    //‘இஸ்லாம் நல்லிணக்கப் போக்கை விரும்பும் மார்க்கம். இது மனித உயிர்களுக்கு மிகுந்த மதிப்பளிக்கிறது. அப்பாவி மக்களுக்கு எதிரான தாக்குதல்களை கொடிய பாவமாக இஸ்லாம் கருதுகிறது.’ //

    இஸ்லாம் வன்முறை மார்க்கம் எனத்தூற்றி பொய்ப் பிரச்சாரத்தில் மூழ்கி இருக்கும் இந்துத்துவ, ஏகாதிபத்திய பயங்கரவாதிகளுக்கு இதனை விட சிறந்த பதில் வேறொன்றுமில்லை.

    காழ்ப்புணர்ச்சியில் வஞ்சம் பாடும் நேச, வக்கிரங்கள் பாடிக் கொண்டே இருக்கட்டும். நாம் கூறுவதை கூறிக் கொண்டே இருப்போம்.

    சத்தியம் எது என்பதை அறிவுடையவர்கள் புரிந்து கொள்வார்கள்.

    தொடர்ந்து இந்துத்துத்துவ புல்லுருவிகளின் கோர முகங்களை தோலுரிக்க மல்லுகட்டும் சகோ. இப்னு பஷீர் அவர்களுக்கு நன்றிகள்.

    அன்புடன்

    இறை நேசன்

    Comment by இறை நேசன் — August 19, 2006 @ 9:02 am

  5. அரேபிய கிருஸ்தவர்கள் கடவுளை குறிப்பிட அரேபிய வார்த்தையான ‘அல்லாஹ்’ என்று தான் அழைப்பார்கள், ஒரு கிருஸ்தவ அரேபியர் யாரையாவது ஒரு ஆளை கொன்று விட்டு ‘அல்லாஹு அக்பர்’ என்று கூறிவிட்டால் (எந்த அரேபிய கிருஸ்தவரையும் குறை காண நான் இவ்வாறு எ௯ழுத வில்லை என் நோக்கமும் அதுவல்ல) உடனே அவர் இஸ்லாத்தை குறை கூற முடியாதது போல் முஸ்லீம்களே கூட அநியாயம் செய்து விட்டு ‘அல்லாஹ்’ பேரை சொல்லி விட்டாலும் இஸ்லாத்தை குறை கூற முடியாது. அலி(ரலி) அவர்களை வெட்டிய காரிஜியாக்கள் கூட அலி(ரலி) அவர்கள் இஸ்லாத்திற்கு துரோகம் செய்து விட்டார் என்று தான் வெட்டிய கொடுமைக்கு காரணம் கூறினார்கள். இப்படி ஆளாளுக்கு இஸ்லாத்தை போட்டி போட்டுக் கொண்டு தப்பும் தவறுமாக புரிந்து கொள்வதில் தான் தோன்றித்தனமான அர்த்தம் கொடுத்துக் கொள்வதில் முனைப்பாகவே உள்ளனர். கொஞ்சம் விட்டால் குமார் பதிப்பகம் நேசமுடன் வெளியிடுகிறோம் ‘அல்குரான்’ என்று கூட வெளியிடுவார்கள் (அது மாதிரி எல்லாம் நடக்காமல் அல்லாஹ் பாதுகாப்பான் என்பது இதில் வேறு விஷயம்)

    Comment by Mohamed Ismail — August 19, 2006 @ 9:17 am

  6. கருத்துக்களை தெரிவித்த ss, அபூஸாலிஹா, Raaja, இறைநேசன் மற்றும் முஹம்மது இஸ்மாயில் ஆகியோருக்கு என் நன்றிகள்!

    Comment by இப்னு பஷீர் — August 19, 2006 @ 9:49 am

  7. இதையெல்லாம் படித்துவிட்டு மீண்டும் அவர்கள் எழுதும்போது ‘இஸ்லாமிய பயங்கரவாதம்’ என்றே எழுதுவார்கள் - மீண்டும் மீண்டும் பொய்யை உரத்துச் சொல்லி மெய்யாக்க நினைக்கும் எத்தர்கள்.
    உங்களின் நல்ல முயற்சி தொடர வாழ்த்துக்கள்.
    அது மாதிரி எழுத்து தென்படும் போதெல்லாம், சகோதரர்கள் இந்தப் பக்கத்தை அங்கு ‘சுட்டி’ எல்லோரும் உண்மையை உணரச் செய்ய வேண்டும்.

    Comment by sultan — August 19, 2006 @ 12:15 pm

  8. மரியாதைக்குரிய இப்னு,

    இந்தியாவில் இரண்டு இஸ்லாம் மார்க்கப் பெரியவர்கள் தீவிரவாதிகளுக்கு எதிராக ஃபத்வா அறிவித்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். அது பற்றி தகவல்கள் கிடைக்குமா?

    Comment by ம்யூஸ் — August 20, 2006 @ 2:45 am

  9. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ. சுல்தான்.

    சகோ. ம்யூஸ்,
    நீங்கள் குறிப்பிடும் இந்திய இஸ்லாமிய மார்க்கப் பெரியவர்கள் யார் என்பது எனக்குத் தெரியவில்லை. முடியுமானால் இது பற்றி இன்னும் கொஞ்சம் தகவல்கள் தாருங்கள். விசாரித்துப் பார்க்கிறேன். இதைப் படிக்கும் இஸ்லாமிய வலைப்பதிவர்கள் யாருக்கேனும் இதுபற்றி தெரிந்திருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    இஸ்லாம் மார்க்கமே தீவிரவாதங்களுக்கு எதிரானது என்பதைத்தான் எனது இந்தக் கட்டுரையில் விளக்கியிருக்கிறேன். நான் உதாரணமாக காட்டியிருந்த இமாம் ஷேக் முஹம்மது சையது தன்தாவி, டாக்டர் யூசுப் அல் கர்ளாவி ஆகிய இருவருமே உலக முஸ்லிம்களின் பெரு மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய மார்க்க அறிஞர்கள். பத்திரிக்கையாளர் ஒருவரின் கேள்விக்கும பதிலளிக்கும்போது இமாம் தன்தாவி அவர்கள், ‘பயங்கரவாதிகள் சுவர்க்கம் செல்ல மாட்டார்கள்’ என்று சொன்னதாக கூட படித்திருக்கிறேன். இதுவே ஒரு ஃபத்வா தான்.

    Comment by இப்னு பஷீர் — August 20, 2006 @ 8:07 am

  10. //மரியாதைக்குரிய இப்னு,

    இந்தியாவில் இரண்டு இஸ்லாம் மார்க்கப் பெரியவர்கள் தீவிரவாதிகளுக்கு எதிராக ஃபத்வா அறிவித்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். அது பற்றி தகவல்கள் கிடைக்குமா? //

    ஃபத்வா என்பது இஸ்லாமிய சட்டம் நடைமுறையில் இல்லாத நாடுகளில் ஒரு அபிப்ராயம் என்கிற அளவில் தான். இந்தியாவில் இருக்கிற —- கோடிக்கும் அதிகமான முஸ்லிம்களும் - அந்த சில நூறு தீவிரவாதிகளைத் தவிர - தீவிரவாதத்திற்கு எதிராகத் தான் அபிப்ராயம் சொல்கிறார்கள். சொல்வார்கள். ஆனால் அந்த சில ‘பேன்களை’ முன்னிறுத்தி ‘இஸ்லாமிய சமூகத்தின் தலையையே கொய்துவிட ‘பேனைப் பெருமாளாக்கும்’ அத்வானி வகையறாக்கள் முனைந்து வருகிறார்கள். அவர்களுடைய அரசியலுக்கு அதைவிட்டால் வேறு வழியுமில்லை. இது தான் யதார்த்தம்.

    Comment by Raaja — August 20, 2006 @ 8:50 am

  11. hope to understand the above things to non-muslim as well. thanks

    asalam

    Comment by asalamone — August 20, 2006 @ 8:53 am

  12. நல்லதொரு கட்டுரைக்கு நன்றி சகோ இப்னு பஷீர்

    ‘இப்னு கிப்னு’ என்று லபோ திபோ எனக் கத்தும் காவிக் கூட்டத்திற்கு இந்தக் கருத்துகள் எல்லாம் மண்டையில் ஏறாது. எங்கேடா பீடி சுருட்டு கேட்போம் என அலையும் ஜென்மங்கள் அவை.

    இஸ்லாத்தில் பயங்கரவாதத்திற்கு இடமே இல்லை என்று நடுநிலையாளர்கள் புரிந்து கொள்வார்கள்

    Comment by அட்றா சக்கை — August 20, 2006 @ 9:27 am

  13. இப்னு பஷீர்,

    காஃபீர்களுக்கு எதிரான உங்களின் ‘இணைய ஜிஹாத்’ தொடரட்டும்.

    அருஞ்சொற்பொருள் விளக்கம்:

    காஃபீர்: அல்லாஹ்வையும் முஹம்மது நபியையும் நிராகரிப்பாளர்கள்.

    ஜிஹாத்:இச்சொல்லுக்கு ‘அயராத போராட்டம்’, ‘விடா முயற்சி’, ‘கடின உழைப்பு’ என்றெல்லாம் பொருள் உண்டு. :-)

    Comment by நல்லடியார் — August 20, 2006 @ 7:51 pm

  14. NICE EXPLANTIONS! KEEP IT UP BROTHER.

    Comment by FATHIMA — August 23, 2006 @ 9:49 am

  15. மண்ணின் விடுதலைக்காக போராடுபவர்கள் தீவிரவாதிகளல்ல என்பது உலக நாடுகளால் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்றுதான்.

    Does this include Hamas, Al Queida, Talibans etc.

    Comment by ravisrinivas — August 23, 2006 @ 10:35 am

  16. இது பற்றி இன்னும் கொஞ்சம் தகவல்கள் தாருங்கள். விசாரித்துப் பார்க்கிறேன்.

    இப்னு,

    இந்த மாதம் (ஆகஸ்ட் 15, 2006) சுதந்திரதின நிகழ்ச்சிகளில் வழக்கமாகிவிட்ட ஒரு பட்டிமண்டபத்தில் திண்டுக்கல் லியோனி நடுவராக இந்த விஷயத்தை சொன்னார். அங்கேயிருந்தவர்கள் பெரும்பாலானோர் ஹிந்துக்கள். எல்லாரும் கைதட்டினார்கள். எனக்கும் கேட்கும்போது ஸந்தோஷமாகவிருந்தது. முழுவிவரம் அறிய உங்களை கேட்கிறேன்.

    Comment by Muse — August 23, 2006 @ 10:57 am

  17. GREat Article.

    Comment by Izzath — August 23, 2006 @ 11:38 am

  18. //இஸ்லாத்தை தவறாக விளங்கிக் கொண்ட சில முஸ்லிம்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவது இஸ்லாத்தின் மீதே களங்கம் சுமத்தப் படுவதற்கு காரணமாக அமைகிறது என்பது கசப்பான ஒரு உண்மையே! அவர்களின் செயல்களுக்கு இஸ்லாம் மார்க்கமோ பிற முஸ்லிம்களோ எவ்விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள் என்றாலும், அவ்வாறு தவறான வழியில் செல்பவர்களை நேர்வழிப் படுத்தும் பொறுப்பு முஸ்லிம் சமுதாயத்திற்கு இருக்கிறதா, இல்லையா? இந்தப் பொறுப்பை அவர்கள் எவ்வழியில் நிறைவேற்ற இயலும்?//

    அழகாய் சொல்லியிருக்கிறீர்கள். ‘Even the devil can quote the bible’ என்று சொல்வார்கள் அதுபோல பல தீவிர வாதிகளும் அமைப்புக்களும் குர் ஆனை தங்கள் வசதிக்கேற்ப திரித்து பொருள்கொள்கின்றன என்பதை விளக்கியிருக்கிறீர்கள். சில நேரங்களில் புனித புத்தகங்களில் சில பகுதிகளை தனித்துப் படிக்கும்போதோ பொருள்கொள்ளும்போதோ அதன் கருத்துக்கள் மிகக் கொடுமையானதாய் தோன்றும் பல நேரங்களில் நம்பிக்கையின் அடிப்படையிலேயே இந்த புத்தகங்களின் வாசகங்களுக்குப் பொருள்கொள்ளமுடியும்.

    தீவிரவாதம் உலகளாவிய ‘அரசியல்’ பிரச்சனை இதன் மூலங்களை அமெரிக்காவின் ‘உலக’ அரசியல் கொள்கைகளில் தேடிக்கொள்ளலாம். இதை தெரிந்திருந்தும் பலரும் தெரியாததுபோல நடிக்கிறார்கள்.

    Comment by சிறில் அலெக்ஸ் — August 23, 2006 @ 2:32 pm

  19. Raaja, Asalam, அட்றாசக்கை, Fathima, Izzath,
    உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி!

    //..உங்களின் ‘இணைய ஜிஹாத்’ தொடரட்டும்..//

    நல்லடியார்! நல்ல வேளையாக அருஞ்சொற்பொருள் கொடுத்து என்னை காப்பாற்றி விட்டீர்கள் :-)
    ‘காஃபீர்’ என்ற சொல்லை தவிர்த்திருக்கலாம். அதன் உண்மையான விளக்கத்தை நீங்கள் சொல்லியிருந்த போதிலும், அச்சொல்லை பல இந்துமத சகோதரர்கள் விரும்புவதில்லை.

    Comment by இப்னு பஷீர் — August 23, 2006 @ 3:22 pm

  20. //மண்ணின் விடுதலைக்காக போராடுபவர்கள் தீவிரவாதிகளல்ல என்பது உலக நாடுகளால் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்றுதான்.

    Does this include Hamas, Al Queida, Talibans etc. //

    திரு. ரவி ஸ்ரினிவாஸ், இது அவரவரின் கண்ணோட்டத்தை பொறுத்தது. ஆங்கிலேயருக்கு எதிராக ஒரு படையை அமைத்து போராடிய சுபாஷ் சந்திர போஸை நீங்கள் எப்படி குறிப்பிடுவீர்கள்? சுதந்திர போராட்ட வீரர் என்றா? பயங்கரவாதி என்றா? வெவ்வேறு கண்ணோட்டங்களில் இந்த இரண்டு பெயரும் அவருக்கு பொருந்துமே!

    Comment by இப்னு பஷீர் — August 23, 2006 @ 3:40 pm

  21. //இந்த மாதம் (ஆகஸ்ட் 15, 2006) சுதந்திரதின நிகழ்ச்சிகளில் வழக்கமாகிவிட்ட ஒரு பட்டிமண்டபத்தில் திண்டுக்கல் லியோனி நடுவராக இந்த விஷயத்தை சொன்னார். //

    ம்யூஸ், நீங்கள் குறிப்பிட்ட நிகழ்ச்சியை பார்க்க எனக்கு கொடுத்து வைக்கவில்லை :-) லியோனி சொன்ன தகவல் உண்மையாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. இஸ்லாம் மார்க்கச் சட்டங்கள் பயங்கரவாதச் செயல்களை வெகுவாக கண்டிக்கிறது என்பதை வலியுறுத்தித்தான் இந்தப் பதிவையே எழுதியிருக்கிறேன். அதனால் மார்க்க அறிஞர்கள் இருவர் இப்படி பஃத்வா கொடுத்திருந்தால் ஆச்சரியப் படுவதற்கில்லை. ஒருவேளை இதற்கு மாற்றமாக யாராவது பஃத்வா கொடுத்திருந்தால்தான் அதைப் பற்றி ஆராய வேண்டியிருந்திருக்கும்.

    Comment by இப்னு பஷீர் — August 23, 2006 @ 3:53 pm

  22. //பல தீவிர வாதிகளும் அமைப்புக்களும் குர் ஆனை தங்கள் வசதிக்கேற்ப திரித்து பொருள்கொள்கின்றன.//

    சிறில் அலெக்ஸ், நான் ஒரு பதிவு முழுக்க விளக்கியதை, ரத்தினச் சுருக்கமாக ஒரே வரியில் சொல்லி விட்டீர்கள். நன்றி.

    //தீவிரவாதம் உலகளாவிய ‘அரசியல்’ பிரச்சனை இதன் மூலங்களை அமெரிக்காவின் ‘உலக’ அரசியல் கொள்கைகளில் தேடிக்கொள்ளலாம். இதை தெரிந்திருந்தும் பலரும் தெரியாததுபோல நடிக்கிறார்கள். //

    உண்மைதான். அரசாங்கங்கள் தீவிரவாத செயல்களின் மீது ‘மதம்’ என்ற போர்வையை போட்டு மறைக்காமல், அதன் உண்மைக் காரணத்தை ஆராய்ந்து செயல்பட்டாலே பல வன்முறைச் சம்பவங்களை தவிர்க்கலாம்.

    Comment by இப்னு பஷீர் — August 23, 2006 @ 4:03 pm

  23. ****Apologies Ibnu for off-topic comment****

    Ravi

    It is no surprise to see such a comment from you. Is it because you suffer from acute Islamophobia?

    You always seem to divert the discussion towards hate speech and sometimes you do succeed. Dont you have any other agenda? Or you are paid to write like this or what?

    Comment by அட்றா சக்கை — August 23, 2006 @ 7:06 pm

  24. //ஜிஹாத் என்றாலே மற்ற மதத்தவர்களைக் கொல்லுதல்; தாக்கி அழித்தல்; அவர்கள் மீது போர் தொடுத்தல் என்கிற ரீதியில் ஒரு தவறான கருத்தோட்டம் நிலை பெற்றிருக்கிறது. இந்த தவறான புரிதலுக்கும், கருத்தாக்கத்துக்கும் பல்வேறு காரணங்களும் பின்னணிகளும் இருக்கின்றன. மேற்கத்திய மீடியாக்களின் சளைக்காத பிரச்சாரமும் இதற்கு ஒரு காரணம். இஸ்லாத்தை முஸ்லிம்களே சரியாக விளங்கிக் கொள்ளாமல் இருப்பதும் ஒரு காரணம்//

    இதற்க்கு மூல காரணமே முஸ்லிமகள்.அமெரிக்கா எதிராக ஜிஹாத் போர் நடத்துங்கள்,இஸ்ரேல் எதிராக ஜிஹாத் போர் நடத்துங்கள் என்று முதலில் சொன்னது முஸ்லிம்கள்தான் ஒழியே மேற்க்கத்திய ஊடங்கள் அல்ல.ஒசாமா பின் லாடன் சொன்னதும் இதேதான்.இப்படி சொன்னவர்களை விட்டுவிட்டீர்கள்.பிறகு மற்றவர்கள் மீது பழி போட்டு என்ன பயன்?

    Comment by agner — August 24, 2006 @ 3:41 am

  25. //திரு. ரவி ஸ்ரினிவாஸ், இது அவரவரின் கண்ணோட்டத்தை பொறுத்தது. ஆங்கிலேயருக்கு எதிராக ஒரு படையை அமைத்து போராடிய சுபாஷ் சந்திர போஸை நீங்கள் எப்படி குறிப்பிடுவீர்கள்? சுதந்திர போராட்ட வீரர் என்றா? பயங்கரவாதி என்றா? வெவ்வேறு கண்ணோட்டங்களில் இந்த இரண்டு பெயரும் அவருக்கு பொருந்தும்//

    சுபாஷ் நிச்சயமாக ஒரு சுதந்திர போரட்ட வீரர்.காரணம் இந்தியாவை அன்னிய சக்திகளிடருந்து காப்பற்ற அவர் போராடினார்.ஒரு வேளை அவர் தீவிரவாதியாக இருந்தால் இந்தியாவை கூறு போட்டுருப்பார்(ஜின்னா போல்)

    Comment by agner — August 24, 2006 @ 3:52 am

  26. இந்தியாவை கூறு போட முதலில் சொன்னது (1937ல்)’வீர’ சவர்க்கார் தான். இந்த விஷயத்தில் ஜின்னாவின் குரு. ஏதோ சொல்லி வைக்கணுமேன்னு சொல்லக்கூடாது. இந்திய முஸ்லிம்கள் (இந்த விஷயத்தில்) இருவரையுமே ஏற்றுக்கொள்வதில்லை.

    Comment by Raaja — August 24, 2006 @ 6:13 am

  27. இது அவரவரின் கண்ணோட்டத்தை பொறுத்தது. ஆங்கிலேயருக்கு எதிராக ஒரு படையை அமைத்து போராடிய சுபாஷ் சந்திர போஸை நீங்கள் எப்படி குறிப்பிடுவீர்கள்? சுதந்திர போராட்ட வீரர் என்றா? பயங்கரவாதி என்றா? வெவ்வேறு கண்ணோட்டங்களில் இந்த இரண்டு பெயரும் அவருக்கு பொருந்துமே!

    He was a nationalist not a religious fundamentalist.You are trying to equate
    both. Indirectly you are justying islamic terrorist movements by branding them as nationalist movements.

    Comment by ravisrinivas — August 24, 2006 @ 10:20 am

  28. //You are trying to equate
    both. Indirectly you are justying islamic terrorist movements by branding them as nationalist movements. //

    ஆமாங்க ஆமாம்..இது தெரியாமயா இவ்ளோ நாள் வலைப்பூவுல குப்ப கொட்றீங்க…

    Comment by superman — August 24, 2006 @ 12:23 pm

  29. In General, Some terrorists movements are posing as Nationalist. (Not only mean R.S.S). And Some Nationalist Movements are branded as terrorists. (Not only mean LTTE, Hamas). Only the time will answer as truth triumphs.

    Comment by T.J.S — August 24, 2006 @ 12:40 pm

  30. //இதற்க்கு மூல காரணமே முஸ்லிமகள்.அமெரிக்கா எதிராக ஜிஹாத் போர் நடத்துங்கள்,இஸ்ரேல் எதிராக ஜிஹாத் போர் நடத்துங்கள் என்று முதலில் சொன்னது முஸ்லிம்கள்தான் ஒழியே மேற்க்கத்திய ஊடங்கள் அல்ல.ஒசாமா பின் லாடன் சொன்னதும் இதேதான்.இப்படி சொன்னவர்களை விட்டுவிட்டீர்கள்.பிறகு மற்றவர்கள் மீது பழி போட்டு என்ன பயன்? //

    திரு. ஆக்னர், இஸ்லாம் பற்றி முஸ்லிம்களே சரியாக விளங்காமல் இருப்பதும் ஒரு காரணம். ஆனால் அது மட்டுமே காரணமல்ல. ஒரு தீவிரவாதி ‘ஜிஹாத் நடத்துங்கள்’ என்று சொன்னால் அதற்குத் தலைப்புச் செய்தியில் இடமளிக்கும் ஊடகங்கள், ‘அவனது செயலுக்கும் இஸ்லாம் மார்க்கத்திற்கும் தொடர்பில்லை’ என்று ஆயிரம் மார்க்க அறிஞர்கள் சேர்ந்து சொன்னாலும் அதை கண்டு கொள்வதில்லை. ஒசாமா பின்லேடன் உலக முஸ்லிம்களுக்கெல்லாம் தலைவரா என்ன? அரசியல் காரணங்களுக்காக அந்தாளை வளர்த்து விட்டவர்களே இப்போது அனுபவிக்கிறார்கள். அதற்கு உலக முஸ்லிம்களையும் இஸ்லாமையும் குறை சொல்வது என்ன நியாயம்?

    Comment by இப்னு பஷீர் — August 24, 2006 @ 3:03 pm

  31. //சுபாஷ் நிச்சயமாக ஒரு சுதந்திர போரட்ட வீரர்.காரணம் இந்தியாவை அன்னிய சக்திகளிடருந்து காப்பற்ற அவர் போராடினார்.//

    //He was a nationalist not a religious fundamentalist.You are trying to equate both. Indirectly you are justying islamic terrorist movements by branding them as nationalist movements.//

    சுபாஷ் சந்திர போஸ் ஒரு சுதந்திர போராட்ட வீரர் என்பதை நானும் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அவர் எதிர்த்து போராடிய ஆங்கிலேயர்களின் கண்ணோட்டத்தில் அவர் ஒரு பயங்கரவாதியே!

    nationalist, religious fundamentalist, islamic terrorist movements, nationalist movements போன்ற வார்த்தைகளுக்கு ரவியின் definition என்ன என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

    Comment by இப்னு பஷீர் — August 24, 2006 @ 3:11 pm

  32. //காஃபீர்’ என்ற சொல்லை தவிர்த்திருக்கலாம். அதன் உண்மையான விளக்கத்தை நீங்கள் சொல்லியிருந்த போதிலும், அச்சொல்லை பல இந்துமத சகோதரர்கள் விரும்புவதில்லை. //

    மாற்றுமத சகோதரர்களை புண்படுத்தும் நோக்கில் நான் அவ்வாறு சொல்லவில்லை. இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன்.

    முஸ்லிம் அல்லாதவர்கள் அனைவரையும் குர்ஆன் வெட்டுங்கள், கொல்லுங்கள் என்று வலியுறுத்துகிறது என்று ஒப்பாரி வைக்கும் பீ.மு.க (பீடி/சுருட்டு பத்தவைப்போர் முன்னேற்றக் கட்சி) நண்பர்களின் புரட்டுவாதத்தை தோலுரித்துக் காட்ட, காஃபீர் என்பதன் விளக்கத்தையும் மாற்றுமத சகோதரர்கள் அறிந்து கொள்ள வேண்டியே அவ்வாறு சுட்டினேன்.

    குர்ஆனில் அல்லாஹ்வையும் ரசூலையும் ஏற்றுக் கொண்டவர்களை முஸ்லிம் என்றும், அவ்வாறு ஏற்காதவர்களைக் காஃபீர் என்றும் வேறுபடுத்தி சொல்லப்படிருப்பதில் வருத்தப்பட ஒன்றுமில்லை என்றே கருதுகிறேன். உதாரணமாக இந்தியக் குடியுரிமை பெறாத ஒருவரை வேறுபடுத்த Foreigner என்று சொல்வதில் எப்படி தப்பில்லையோ; அதே அர்த்தத்தில்தான் இதையும் அணுக வேண்டும்.

    மனிதர்கள் அனைவரும் ஒரே தாய்-தந்தையரிலிருந்து பிறந்தவர்கள்; மனிதனை மற்ற படைப்புகளைவிட உயர்ந்த படைப்பாக படைத்திருக்கிறோம் என்றெல்லாம் சகோதரத்துவத்துவத்தை வலியுறுத்தியதோடு, அதற்கு எதிரான ஆரிய வருணாசிரம சிந்தனைக்கு சாவு மணியடித்த குர்ஆனில், காஃபீர் என்று சொல்லி இருப்பதை மட்டும் வைத்து திசை திருப்புவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனமன்றி வேறில்லை.

    இன்ஷா அல்லாஹ், இதுபற்றி தனிப்பதிவாக பிறகு தெளிவு படுத்துகிறேன்.

    Comment by நல்லடியார் — August 24, 2006 @ 4:18 pm

  33. //Indirectly you are justying islamic terrorist movements by branding them as nationalist movements//

    Mr.Ravi,

    For your kind information, Dr.Zakir Naik give nice explanation for the term “Terrorist”

    Every Muslim should be a terrorist

    Every Muslim should be a terrorist. A terrorist is a person who causes terror. The moment a robber sees a policeman he is terrified. A policeman is a terrorist for the robber. Similarly every Muslim should be a terrorist for the antisocial elements of society, such as thieves, dacoits and rapists. Whenever such an anti-social element sees a Muslim, he should be terrified. It is true that the word ‘terrorist’ is generally used for a person who causes terror among the common people. But a true Muslim should only be a terrorist to selective people i.e. anti-social elements, and not to the common innocent people. In fact a Muslim should be a source of peace for innocent people.

    You are also read full definition of Terrorist/Fundementalism at the following http://www.irf.net/irf/dtp/dawah_tech/mcqnm5.htm

    Comment by நல்லடியார் — August 24, 2006 @ 4:38 pm

  34. நான் கேட்டிருந்த கேள்விக்கு பதில் வரவில்லை.அல் கொய்தாவை தீவிரவாத அமைப்பாக கருதுகிறீர்களா இல்லையா என்றால் அதற்கு பதில் தரவில்லை.தேவையில்லாமல் சுபாஷ் சந்திர
    போஸை உதாரணம் காட்டுகிறீர்கள்.புஷ்ஷிற்கு அது தீவீரவாத அமைப்பாக இருக்கலாம், எங்களுக்கு அது விடுதலைக்காகப் போராடும் அமைப்பு என்று நீங்கள் கருதினால் அதை சொல்லிவிடலாமே.ஏன் இந்தக் கேள்விக்கு பதில் அளிக்க தயங்குகிறீர்கள்.

    Comment by ravisrinivas — August 25, 2006 @ 6:06 am

  35. //நான் கேட்டிருந்த கேள்விக்கு பதில் வரவில்லை.அல் கொய்தாவை தீவிரவாத அமைப்பாக கருதுகிறீர்களா இல்லையா என்றால் அதற்கு பதில் தரவில்லை.தேவையில்லாமல் சுபாஷ் சந்திர
    போஸை உதாரணம் காட்டுகிறீர்கள்.//

    nationalist, religious fundamentalist, islamic terrorist movements, nationalist movements போன்ற வார்த்தைகளுக்கு இவற்றில் சம்பந்தப் பட்டவர்கள் முஸ்லிம்கள் என்றால் ஒரு definition-ம் மற்றவர்கள் என்றால் வேறொரு definition-ம் நீங்கள் வைத்திருப்பதாக நினைக்கிறேன். அதனால்தான் இந்த வார்த்தைகளுக்கு உங்கள் definition என்ன என்று கேட்டேன். உங்களுக்கு புரிகிற மாதிரி பதில் சொல்லலாமே என்றுதான். சுபாஷ் அவர்களை உதாரணம் காட்டியதும் அதற்குத்தான். நான் கேட்டதற்கு பதில் சொல்லாமல், ‘எனக்கு கேட்க மட்டும்தான் தெரியும்’ என்று பின்வாங்குவது விவாதம் புரிபவருக்கு அழகில்லையே!

    மற்றபடி, நீங்கள் கேட்ட கேள்விக்கு எனது பதிவிலேயே ‘பயங்கரவாதத்தைப் பற்றி இன்றைய பெரும்பான்மை முஸ்லிம்களின் கருத்து என்ன?’ தலைப்பின் கீழ் பதில் இருக்கிறது.

    Comment by இப்னு பஷீர் — August 25, 2006 @ 7:22 am

  36. //அல் கொய்தாவை தீவிரவாத அமைப்பாக கருதுகிறீர்களா இல்லையா என்றால் அதற்கு பதில் தரவில்லை//

    ஆர்.எஸ்.எஸ் ஐ பயங்கரவாத அமைப்பாகக் கருதுகிறீர்களா இல்லையா என்று ரவி அவர்கள் கருத்தை அறிய ஆவல். அல்கொய்தாவின் தலைவன் பின்லாடனுக்கும் சீனியர் புஷ்ஷுக்கும் இருந்த குடும்ப உறவைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்? ரஷ்யாவுக்கு எதிராகச் செயல்பட ஆப்கனில் புனிதப்போராளியாகத் தேவைப்பட்ட பின்லாடன், 9/11 க்குபின் தீவிரவாதியானது ஏன்?

    Comment by மனசாட்சி — August 25, 2006 @ 6:06 pm

  37. Nice article. Lively discussion. It is difficult to change people’s perception.
    99% of the hindu brethren are secular and broad-minded and 99% of the
    Muslims are also equally so. It is minicule minority who are causing all
    the major troubles. One drop of poison is enough to contaminate a whole
    pot of milk. Sportsmanship and Gamesmanship are similar sounding words
    but with meanings altogether. Sportsmanship is the need of the hour but people are keen to indulge in gamesmanship. Terrorism, is not the product
    of the minorities but the creation of majorities. Save the money wasted on
    security and spend it to the welfare of down-trodden minorities Terrorism
    will vanish even without leaving a trace. If terrorism comes to an end then
    so many people who make a living out of working FOR and AGAINST
    terrorism will lose their livlihood. So they will continue to harp on this
    irrespective of danger to lives and damage to properties.May God make
    saner counsel to prevail upon them

    Comment by abdul jabbar — August 26, 2006 @ 5:39 am

  38. //நான் கேட்டிருந்த கேள்விக்கு பதில் வரவில்லை.அல் கொய்தாவை தீவிரவாத அமைப்பாக கருதுகிறீர்களா இல்லையா என்றால் அதற்கு பதில் தரவில்லை.//

    ravisrinivas ன் இந்தக் கேள்வி அடிப்படை இல்லாதது. ஒரு இயக்கத்தின் செயல்பாடுகளைக் கொண்டு அதன் கொள்கைகளை இஸ்லாம் ஆதரிக்கிறதா? என்பதை குர்ஆன், சுன்னாவையே உரை கல்லாக மேற்கொள்ள வேண்டும். ‘’அல் கொய்தாவை தீவிரவாத அமைப்பாக நீங்கள் கருதுகிறீர்களா?'’ இதற்கு தனிப்பட்ட இப்னு பஷீரின் கருத்தே தீர்ப்பு ஆகிவிடாது. அவரின் கருத்துக்கு வலுசேர்க்க முன்வைக்கும் இஸ்லாமிய ஆதாரங்களே பரிசீலனைக்குரியது.

    இப்பதிவின் ‘’குர்ஆன் என்ன சொல்கிறது?'’ என்ற சிறு தலைப்பில் திருக்குர்ஆன் 5:32வது வசனத்தை எடுத்து வைத்து மிகத் தெளிவாக விளக்கம் சொல்லப்பட்டிருக்கிறது. எந்தவொரு இயக்கத்தின் செயல்பாடுகளையும் 5:32வது வசனத்துடன் உரசிப் பார்த்து அந்த இயக்கத்தின் கொள்கைகளை இஸ்லாம் ஆதரிக்கிறதா..? அல்லது வன்மையாகக் கண்டிக்கிறதா..? என்பதை தீர்மானித்து விடலாம். இதற்குத் தடையாக இருப்பது எது என்று ரவிசிரினிவாஸ் தெரிவித்தால் தடையை நீக்க நாம் உதவலாம். நன்றி!

    அன்புடன்,
    அபூ முஹை

    Comment by அபூ முஹை — August 26, 2006 @ 7:31 am

  39. //ரஷ்யாவுக்கு எதிராகச் செயல்பட ஆப்கனில் புனிதப்போராளியாகத் தேவைப்பட்ட பின்லாடன், 9/11 க்குபின் தீவிரவாதியானது ஏன்//

    9/11 முன்பே ஒசாமா அமெரிக்காவுக்கு தீவிரவாதியாகிவிட்டான்.இதில் என்ன காமெடியென்றால் சில முஸ்லிம்கள் ஒசாமாவை அமெரிக்காவை அழிக்க வந்த சக்தி என்று நினைத்துக்கொள்வதுதான்.ஆனால் அன்று ஆப்கான் போரில், அமெரிக்கா ஓ.சியில் தந்த பன்னும் காபியும் வாங்கி தின்னவன்தான் இந்த ஒசாமா பின் லாடன் என்று மறந்துவிட்டனர்.அப்பொழுது இந்த ஆளுக்கு அமெரிக்கா பற்றி தெரியாதா?அதன் இஸ்ரேல் ஆதரவு பற்றி தெரியாதா?

    //மனிதர்கள் அனைவரும் ஒரே தாய்-தந்தையரிலிருந்து பிறந்தவர்கள்; மனிதனை மற்ற படைப்புகளைவிட உயர்ந்த படைப்பாக படைத்திருக்கிறோம் என்றெல்லாம் சகோதரத்துவத்துவத்தை வலியுறுத்தியதோடு, அதற்கு எதிரான ஆரிய வருணாசிரம சிந்தனைக்கு சாவு மணியடித்த குர்ஆனில், காஃபீர் என்று சொல்லி இருப்பதை மட்டும் வைத்து திசை திருப்புவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனமன்றி வேறில்லை//

    உங்கள் சகோதரத்துவத்துவத்தைதான் இராக்கில் தினம் தினம் பார்க்கிறோம்மே…ச்ன்னி முஸ்லிம்கள் ஷியா முஸ்லிம்களை சுட்டுகொல்கிறார்கள்.பதிலுக்கு ஷியா முஸ்லிம்கள் சன்னி முஸ்லிம்களை பாம் வைத்து கொல்கிறார்கள்.சில மாதங்களுக்கு முன் கார்பாலா நகரில் ஷியா பள்ளிவாசலை தகர்த்து பலரை கொன்றனர்.ஆனால் இருவரும் ஒரே மதமாம்.நல்ல சகோதரத்துவத்துவம் போங்கள்……

    ஏன் இஸ்லாமியர்கள் சன்னி,ஷியா என்று பிரிந்து இருக்கிறார்கள்?ஏன் சன்னி பள்ளிவாசல்,ஷியா பள்ளிவாசல் என்று இருக்கிறது?அனைவரும் ஒரே பள்ளிவாசலில் போகமுடியாதா?
    அழிந்துவிட்ட வருணாசிரம கொள்கையை பேசும் நீங்கள், உங்கள் மதத்தில் நடக்கும் இந்த கூத்தை முதலில் கவனியுங்கள்…

    Comment by agner — August 26, 2006 @ 6:41 pm

  40. அய்யா அக்னர்,

    விவாதத்தைத் திசை திருப்பாமல் மையக் கருத்துக்கு சம்பந்தமா கருத்து ஏதாச்சும் இருந்தா வைங்க..

    சரி உங்க வழிக்கே வருகிறேன். வருணாசிரமத்தில தலையில, தொடையில காலில எல்லாருக்கும் சகோதரத்துவம் கொடுத்துட்டீங்களோ

    இந்தக் கூத்தைக் கவனிச்சுட்டு வாங்கப்பு

    Comment by வழிப்போக்கன் — August 27, 2006 @ 8:00 am

  41. //9/11 முன்பே ஒசாமா அமெரிக்காவுக்கு தீவிரவாதியாகிவிட்டான்.இதில் என்ன காமெடியென்றால் சில முஸ்லிம்கள் ஒசாமாவை அமெரிக்காவை அழிக்க வந்த சக்தி என்று நினைத்துக்கொள்வதுதான்//

    ‘பன்’லாடனை நினைத்து, பயந்து கதறி, பேயறைந்த மாதிரி பித்துப் பிடித்து ஊளையிட்டு, ஒப்பாரி வைத்து etc….. ‘பன்’ லாடன் பெயரைச் சொல்லி முஸ்லிம் நாடுகளை குறிவைத்து அழிக்கும் ஜார்ஜ் புஷ் கும்பல்தான், ‘பன்’லாடனை அமெரிக்காவை அழிக்க வந்த சக்தி என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஜார்ஜ் புஷ்கேசி என்ன முஸ்லிமா? இதை பின்னூட்ட காமெடியன் ஆஜீரணர் புரிந்து கொள்ளவும்

    // ஏன் இஸ்லாமியர்கள் சன்னி,ஷியா என்று பிரிந்து இருக்கிறார்கள்?ஏன் சன்னி பள்ளிவாசல்,ஷியா பள்ளிவாசல் என்று இருக்கிறது?அனைவரும் ஒரே பள்ளிவாசலில் போகமுடியாதா? அழிந்துவிட்ட வருணாசிரம கொள்கையை பேசும் நீங்கள், உங்கள் மதத்தில் நடக்கும் இந்த கூத்தை முதலில் கவனியுங்கள்… //

    Agner,

    சூத்திரர்கள் மட்டுமே, வருணாசிரமம் ஒழிந்து விட்டது; மநுதர்மம் செத்த பாம்பு என்று சொல்லி வருகிறீர்கள். வருணாசிரமம் அழிந்துவிட்டது என்றால் ஒரு தலித் காஞ்சி மட பீடாதிபதியாக முடியுமா? அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதற்குக் கூட சட்டப்படி தடை வாங்க முடிகிறது. மநுதர்ம வருணாசிரம சிந்தனை இன்னும் இருந்து கொண்டிருக்கிறது என்பதற்கு ‘தின்னியம்’ நிகழ்வுகளே சான்று. அடியாள் வைத்து அடித்துக் கொன்றாலும்,கொலைக் குற்றம் சாட்டப்பட்டாலும் மட பீடாதிபதியாக இருந்து அருளாசி வழங்கும் ஜகத் குருக்களுக்கு மத்தியில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை மறந்து விடாதீர்கள்.

    நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல் இஸ்லாமியர்கள் சன்னி, ஷியா என்று பிரிந்து இருப்பது பிற்கால முஸ்லிம் ஆட்சியாளர்களின் தவறான புரிந்து கொள்ளல்களாலும் வழிநடத்தல்களாலும் ஏற்பட்ட குழப்பமே தவிர சன்னியை விட ஷியா உயர்ந்தவர் என்றோ அல்லது தலையிலிருந்து பிறந்தவர்கள், காலில் பிறந்தவர்கள் என்று சொல்லி கொள்வதில்லை.

    குர்ஆனையும் ஹதீஸையும் பின்பற்றாமல் தன்னிஷ்டம்போல் இஸ்லாமியச் சட்டங்களை வகுத்துக் கொண்டவர்களே இதற்குக் காரணம். எத்தனை பிரிவுகளாக இருந்தாலும் ஒரே இறைவனை வணங்கவும், முஹம்மது நபியை தூதராக ஏற்கவும் செய்கின்றனர்.

    Comment by மனசாட்சி — August 28, 2006 @ 6:01 am

  42. //விவாதத்தைத் திசை திருப்பாமல் மையக் கருத்துக்கு சம்பந்தமா கருத்து ஏதாச்சும் இருந்தா வைங்க..
    சரி உங்க வழிக்கே வருகிறேன். வருணாசிரமத்தில தலையில, தொடையில காலில எல்லாருக்கும் சகோதரத்துவம் கொடுத்துட்டீங்களோ//

    வழிப்போக்கன் அண்ணாச்சி,
    விவாதத்தை யார் திசை திருப்புவது?
    “ஜிஹாத்” என்று தலைப்பை போட்டுவிட்டு பிறகு சைக்கில் கேப்பில் வரணாசிரம பற்றிய பேச்சு ஏதற்கு?இந்துக்கள் எல்லோரும் வருணாசிரமத்தைதான் கடைப்பிடிக்கிறார்களா?

    //சூத்திரர்கள் மட்டுமே, வருணாசிரமம் ஒழிந்து விட்டது; மநுதர்மம் செத்த பாம்பு என்று சொல்லி வருகிறீர்கள். வருணாசிரமம் அழிந்துவிட்டது என்றால் ஒரு தலித் காஞ்சி மட பீடாதிபதியாக முடியுமா? அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதற்குக் கூட சட்டப்படி தடை வாங்க முடிகிறது. மநுதர்ம வருணாசிரம சிந்தனை இன்னும் இருந்து கொண்டிருக்கிறது என்பதற்கு ‘தின்னியம்’ நிகழ்வுகளே சான்று//

    கொஞ்சம் இந்தியாவைவிட்டு வெளியே வாருங்கள்.மலேசியா,சிங்கப்பூர் போன்ற நாடுகளில் யார் வேண்டுமன்றாலும் இங்கே அர்ச்சகர் ஆகலாம்.இதில் சாதி,ஏழை பணக்காரன் போன்ற வேறுபாடுகள் இல்லை.மேலும் இங்கே சாதியை இந்துக்கள் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை.

    சன்னி-ஷியா பிரிவனைகள், குர்ஆனையும் ஹதீஸையும் பின்பற்றாமல் தன்னிஷ்டம்போல் இஸ்லாமியச் சட்டங்களை வகுத்துக் கொண்டவர்களே இதற்குக் காரணம் கூறுகிறீகள்.அதேபோல்தான் வருணாசிரமமும்.
    இந்து மத கொள்கைகளை சரியாக பின்பற்றாமல் தன்னிஷ்டம்போல் கொள்கைகளை வகுத்துக் கொண்டவர்களே இதற்குக் காரணம்.அது சரியென்றால் இதுவும் சரிதான்.

    இராக்கில் “கொலை” நிகழ்வு என்றால் இந்தியாவில் “தின்னியல்” நிகழ்வு.அது சரியென்றால் இதுவும் சரிதான்.

    Comment by agner — August 28, 2006 @ 5:10 pm

  43. //கொஞ்சம் இந்தியாவைவிட்டு வெளியே வாருங்கள்.மலேசியாஇசிங்கப்பூர் போன்ற நாடுகளில் யார் வேண்டுமன்றாலும் இங்கே அர்ச்சகர் ஆகலாம்.இதில் சாதிஇஏழை பணக்காரன் போன்ற வேறுபாடுகள் இல்லை.மேலும் இங்கே சாதியை இந்துக்கள் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை.//

    இதை ஏன் இந்தியாவில் நடைமுறைப்படுத்த முடியவில்லை? அங்கு சரியென்றால் இங்கும் சரியாகத்தானே இருக்க வேண்டும்?

    //அதேபோல்தான் வருணாசிரமமும். இந்து மத கொள்கைகளை சரியாக பின்பற்றாமல் தன்னிஷ்டம்போல் கொள்கைகளை வகுத்துக் கொண்டவர்களே இதற்குக் காரணம்//

    இந்து மத வேதங்களில் மனிதக்கரங்கள் ஊடாடியிருக்கின்றன என்ற முஸ்லிம்களில் கூற்றோடு ஒத்துப்போகிறீர்கள்.

    –அது சரியென்றால் இதுவும் சரிதான்–

    அது சரியென்று யார் சொன்னது?.

    ஷியா-சன்னி ஒரு சிறு விளக்கம்.

    ஷியாக்களின் நிலைப்பாடு: ஆட்சி அதிகாரங்களில் அமர நபிகளாரின் வம்சா வழியினருக்கே தகுதியுள்ளது.

    சன்னிகளின் நிலைப்பாடு: ஆட்சி அதிகாரங்களில் அமர நீதி நேர்மையும் மக்கள் ஆதரவும் பெற்றவர்களுக்கே தகுதியுள்ளது.

    Comment by முத்துவாப்பா — August 29, 2006 @ 6:45 am

  44. //இதை ஏன் இந்தியாவில் நடைமுறைப்படுத்த முடியவில்லை? அங்கு சரியென்றால் இங்கும் சரியாகத்தானே இருக்க வேண்டும்//

    இந்தியாவில் இருக்கும் அன்பர்கள்தான் இதற்க்கு விடை சொல்லவேண்டும்.என்னை தெரிந்தவரை சாதியை வைத்துதான் இந்தியாவில் சகலமும் தீர்மானிக்கப்படுகிறது.

    //இந்து மத வேதங்களில் மனிதக்கரங்கள் ஊடாடியிருக்கின்றன என்ற முஸ்லிம்களில் கூற்றோடு ஒத்துப்போகிறீர்கள்//

    உண்மைதான்.இதை எந்த இந்துவும் மறுக்கமுடியாது.ஒரு சில கேடுக்கெட்ட மிருங்களின் செயலால் இந்து மதம் இன்று அழிந்துக்கொண்டுக்கிறது.அதிலிருந்துதான் நாங்கள் மெல்ல மெல்ல மீண்டுக்கொண்டிக்கிறோம்.

    //ஷியாக்களின் நிலைப்பாடு: ஆட்சி அதிகாரங்களில் அமர நபிகளாரின் வம்சா வழியினருக்கே தகுதியுள்ளது.
    சன்னிகளின் நிலைப்பாடு: ஆட்சி அதிகாரங்களில் அமர நீதி நேர்மையும் மக்கள் ஆதரவும் பெற்றவர்களுக்கே தகுதியுள்ளது//

    கூர்மையாக கவனித்தால் இருவர்களின் நிலைபாடும் ஒன்றுதான்.நபிகளின் வம்சாவளினர் நேர்மையும் மக்கள் ஆதரவும் பெற்றவர்கள்தானே?அதை ஏன் சன்னி பிரிவு மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை?
    வெறும் யார் ஆட்சி அதிகாரங்களில் அமர்வதுக்காகதான் இவர்கள் அடித்துகொண்டு சாவுகிறார்களா?எனக்கு ஒரு சந்தேகம், இந்த ஆட்சி அதிகாரங்களில் அமர்வது இஸ்லாமியர்கள்தானே,காஃபிர்கள் இல்லையே?

    ஒரே புனித நூல்,ஒரே நபி,ஒரே கடவுள் பின்பற்றும் இஸ்லாமியர்களுக்குள் ஏன் இவ்வளவு பிரிவனைகள்? அப்படியென்றால் இஸ்லாமிய மதத்திலும் “மனிதக்கரங்கள்” ஊடாடியிருக்கின்றன என்ற இந்துக்களில் கூற்றோடு ஒத்துப்போகிறீர்கள்.
    நீங்கள் சொன்னது சரியென்றான் நான் சொன்னதும் சரிதான்.

    Comment by agner — August 29, 2006 @ 5:27 pm

RSS feed for comments on this post.

Leave a comment

Line and paragraph breaks automatic, e-mail address never displayed, HTML allowed: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <code> <em> <i> <strike> <strong>



Anti-spam measure: please retype the above text into the box provided.