இறைத்தூதர்கள் பற்றிய விவாதம்!
October 31, 2006சகோதரர் எழில் அவர்கள் அபூமுஹை அவர்களின் பதிவில் இறைத்தூதர்கள் பற்றி ஒரு கேள்வி கேட்டிருந்தார்.
நீங்கள் இயேசு கிரிஸ்து பிறப்பதற்கு முந்தைய காலத்தில் வாழ்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.
அப்போது உங்கள் சமூகத்தில் 4 மனிதர்கள் (ஒரு சில குறைகளும் ஒரு சில நிறைகளும் கொண்ட மனிதர்கள்) தன்னை உண்மையான இறைதூதர் என்று அழைத்துக்கொண்டு போதிக்கிறார்கள்.
நீங்கள் யாரை உண்மையான இறைதூதர் என்று பின்பற்றுவீர்கள்? எப்படி? ஏன்?
இந்தக் கேள்விக்கு இரண்டே வரியில் இப்படி பதில் சொல்லியிருக்கலாம்..
“இறைவன் தேர்ந்தெடுத்து அனுப்பிய தூதர் குறைகளுடையவராக இருக்க மாட்டார். அதனால் ஒரு சில குறைகளை உடைய அந்த நான்கு பேரும் உண்மையான இறைத்தூதராக இருக்க முடியாது.”
அல்லது, ஒரு நண்பர் சொன்னது போல ‘ரொம்ப ஸிம்பிளான’ ஒரு பதில் இருக்கிறது.
“நால்வரையும் விருந்துக்கு அழைப்பேன். ‘விருந்து’க்கு பின் உயிரோடு உள்ளவரை இறைத்தூதர் என்று ஏற்றுக் கொள்வேன்”
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் அடிப்படையில் அமைந்தது இந்த பதில். ஸல்லாம் இப்னு மிஷ்கம் என்பவனின் மனைவி நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு விருந்து ஏற்பாடு செய்து, அதில் விஷமிடப்பட்ட உணவை பரிமாறினாள். நபியவர்கள் அதிலிருந்து ஒரு இறைச்சித் துண்டை எடுத்து கடித்து விட்டு பின் அதை விழுங்காமல் துப்பி விட்டார்கள். ‘இந்த எலும்பு தன்னில் விஷமேற்றப் பட்டுள்ளது என்று என்னிடம் கூறுகிறது’ என்று அவர்கள் கூறினார்கள். ஆனால் ஒரு இறைச்சித் துண்டை முழுமையாக சாப்பிட்ட நபித்தோழர் ஒருவர் மரணித்து விட்டார். பின்பு அப்பெண்ணை அழைத்து விசாரித்தபோது, அவள் ‘நீங்கள் அரசராக இருந்தால் உங்களைக் கொல்வதில் எங்களுக்கு நிம்மதி கிடைக்கலாம். நீங்கள் இறைத்தூதராக இருந்தால் உங்களுக்கு உண்மை தெரிந்து விடும். அதனால்தான் அவ்வாறு செய்தேன்’ என்று கூறினாள்.
சகோதரர் எழில் அவர்களின் கேள்விக்கு இதுபோல சுருக்கமாக பதிலளிப்பதற்கு பதிலாக, அபூமுஹை, நான், சுவனப்பிரியன், சுல்தான் ஆகியோர் 6-க்கும் மேற்பட்ட பதிவுகளிலும் பின்னூட்டங்களிலும் போதிய விளக்கமளித்திருக்கிறோம். ஆனால், சகோ.எழில் அவர்கள் எதிர்பார்க்கும் பதில் இவற்றில் கிடைக்கவில்லை போலும். இதில் எனக்கு ஆச்சரியம் ஒன்றுமில்லை.
எனது முந்திய பதிவில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்;
“எந்த ஒரு விஷயத்தையும் நீங்கள் ஒரு முன் முடிவோடு அணுகினால், அதன் உண்மை நிலவரம் உங்களுக்கு புரிபடாமலேயே போய் விடும். ‘இறைத்தூதர் என்ற கருத்தே தவறு’ என்ற உங்கள் நிலைப்பாட்டை நீங்கள் ஏற்கனவே வெளிப்படுத்தியிருக்கும் சூழலில், நான் எவ்வளவு அத்தாட்சிகளையும் ஆதாரங்களையும் காட்டினாலும் அதனால் பயனேதும் விளையப் போவதில்லை. என் கருத்தை நீங்கள் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும் என நானும் உங்களை வற்புறுத்தவில்லை. ‘இது முஸ்லிம்களின் நம்பிக்கை’ என்ற அளவில் இக்கருத்துக்களை நீங்கள் அறிந்து கொண்டாலே போதும்.”
சகோ.எழில் அவர்கள் இறைத்தூதர்கள் பற்றிய அவரது கேள்வியை கேட்குமுன்பாகவே, இறைத்தூதர்கள் பற்றிய அவரது கருத்தை முன்வைத்திருந்தார். “இறைதூதர் என்ற கருத்தே தவறு என்பது என் கருத்து. அதுவும் இறுதி இறைதூதர் என்ற கருத்து மிக மிகத்தவறு என்பது என் கருத்து.” என்று சொன்னபிறகே எழில் அவர்கள், இறைத்தூதர்கள் பற்றிய தனது கேள்வியை கேட்டிருந்தார்.
அவரது கேள்விக்கு அளிக்கப்பட்ட பதில்களை இத்தகைய முன்முடிவோடு அவர் அணுகும்போது, அந்த வரிகளுனூடாக தனது கருத்திற்கு சாதகமான அம்சங்களைத்தான் அவர் தேடிக் கொண்டிருப்பார். அப்படி எதுவும் கிடைக்காத பட்சத்தில் மேலும் எதிர் கேள்விகளைக் கேட்டு விவாதத்தை இழுத்தடிக்கவே அவர் மனம் விரும்பும். இது சராசரி மனித இயல்புதானே?
இறைத்தூதர்கள் பற்றிய இந்த விவாதமும் இவ்வாறாக இழுத்தடிக்கப்பட்டு நீர்த்துப் போய் விட்டதாகவே எனக்கு தோன்றுகிறது.
சகோ. எழில் அவர்களின் இந்தக் கேள்வி, இதுவரை அறியாமல் இருந்த பல விஷயங்களை அறியத் தூண்டியது. அதற்காகவும், இதுவரை நாகரீகமான முறையில் விவாதித்ததற்காவும் அவருக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

test.
Comment by இப்னு பஷீர் — October 31, 2006 @ 7:47 am
அருமையான இந்தப்பதிவு தமிழ்மணத்தில் பட்டியலிடப்படவில்லையே. (No title) by இப்னுபஷீர் என்று பின்னூட்டத் தொகுப்பில் பார்த்துத் தான் வந்தேன்.
இந்த விவாதத்தில் சில பின்னணி நிஜங்கள் கவனிக்கத்தக்கன:
1).இறைத்தூதர், இறுதி இறைத்தூதர் பற்றி எழிலும் குழாமும் ஒரு முன்முடிவில் உள்ளனர். அதை மாற்ற முடியாது.
2).இயேசுவுக்கு முந்தைய காலம் பற்றி முஸ்லிம்களிடம் கேட்கவேண்டிய அவசியம் என்ன?
3). ஏன் அவர் தன்னுடைய ‘இறைநம்பிக்கை’ பற்றி இதுவரை அறிவிக்கவில்லை? அதாவது, இறைவன் அற்ப மானுடனாக அவதாரம் எடுத்து வருவான் என்பதை அவர் நம்புகிறாரா?
4). தனக்கென்று இவ்விடயத்தில் ஒரு ‘தீர்மானம்’ ஏற்கனவே உள்ளதாக அவர் ஒத்துக்கொண்டுவிட்ட நிலையில் எழிலுடைய இந்த வி’வாதத்’தின் ‘நோக்கம்’ எது?
Comment by BABU — October 31, 2006 @ 10:31 am
சகோதரர்கள் அபுமுஹை, இப்னுபஷீர், சுவனப்பிரியன், எழில் அவர்களது இறைத்தூதர்கள் பற்றிய விவாதத்தை இணையதளத்தில் தொடர்ந்து படித்து வருகிறோம். நல்ல நாகரீகமான, கருத்துள்ள விவாதங்கள், படிப்பவர்கள் அறிவுக்கு நல்லவிருந்தாக அமைந்துள்ளது. பங்கெடுத்த சகோதரர்களுக்கு பாராட்டுக்கள்.
யாரை உண்மையான இறைதூதர் என்று நீங்கள் பின்பற்றுவீர்கள்? என்பதற்கு சகோ. அபுமுஹை, இப்னுபஷீர், சுவனப்பிரியன் எடுத்துவைக்கும் சான்றுகள் மறுக்க முடியாதது. இறைவனின் வார்த்தைகளில் முரண்பாடுகள் காணமுடியாது இதுதான் அவர்கள் வாதத்தின் கருத்து. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இதனை கொண்டு வந்ததால் அவர்களை உண்மையான தூதர் என்றும், இஸ்லாத்தை உண்மையான மார்க்கம் என்றும் முஸ்லீம்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.
முஹம்மது நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் வாழ்ந்த மக்கள் நபிகளுடைய எந்த தன்மைகளைப்பார்த்து கூட்டம்கூட்டமாக இஸ்லாத்தை தழுவினார்கள் என்பதற்கு ஆதாரமாக அவர்களுடைய தூய்மையான வாழ்க்கையையும், அவர்கள் செய்து காட்டிய அற்புதத்தையும், இன்னும் மற்ற வேதங்களில் முஹம்மது நபி (ஸல்) பற்றிய முன்னறிவுப்புகளையும் சகோ. சுவனப்பிரியன் தெளிவாகவே விளக்கியுள்ளார்கள்.
நீங்கள் கூறியது போன்று இதையெல்லாம் நண்பர் எழில் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கட்டாயமெல்லாம் கிடையாது. நம் நிலைப்பாட்டையை நாம் விளக்கியுள்ளோம். மேற்கொண்டு குர்ஆன், நபி (ஸல்) கூறியதாக சகோ. எழில் எதைக்குறிப்பிட்டாலும் ஆதாரத்தோடு சொன்னால் அவர் வாதத்தில் வலுவிருக்கும். சந்திரனை சாதரணமாக மேஐஸ்ஸியன் பிளந்து காட்ட முடியும் என்றால் அந்த மாதிரி யாரெல்லாம் பிளந்து காட்டியுள்ளார்கள், அதை எந்தந்த பகுதி மக்களெல்லாம் பார்த்திருந்தார்கள் என்று கூறியிறுக்கலாம். பரிணாம வளர்ச்சி தத்துவங்களைப் பொறுத்தவரை இத்தத்துவங்கள் நாளாக, நாளாக பொய்த்து வருவதையே நாம் கண்டு வருகிறோம், சூரியனும் சந்திரனும் உலகத்தை சுற்றி வருகின்றன என்பதை அரிஸ்டாட்டிலின் புத்தகங்களிள் காணப்படுவதைக் சுட்டிக்காட்டிய சகோ. எழில் அதிலுள்ள பூமி ஒரே இடத்தில்தான் உள்ளது என்ற முரண்ப்பாட்டை கண்டு கொள்ளாதது ஏன் என்று விளக்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
மொத்தத்தில் உங்களின் விவாதத்தினால் நாங்கள் அதிகதிகம் புதிய விஷயங்களை அறிந்து கொண்டோம்.
அன்புடன் வளர்பிறை
Comment by வளர்பிறை — October 31, 2006 @ 1:17 pm
இனிய சகோதரர் இப்னுபஷீர் அவர்களுக்கு என் நன்றிகள் பல.
எனக்கு கொடுத்த பதில்கள் எனக்கு திருப்திகரமாக இல்லை என்பது உண்மைதான். அது என்னிடம் உள்ள அறிவுக் குறைபாடாகவும் இருக்கலாம். ஒப்புக்கொள்கிறேன்.
மேலும் நான் முன்னமே என் நிலைப்பாட்டை குறிப்பிட்டுவிட்டதற்கு ஒரு காரணம் உண்டு. ஏனெனில், நான் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறேன் என்பதை தெளிவுபடுத்தி விட விரும்பினேன். அது என் முன் முடிவாக இல்லை. பின் முடிவு. இறைதூதர் என்ற கருத்தில் பிரச்னைகள் இருப்பதாக நான் நினைத்தேன். அதனால்தான் நான் அந்த கருத்தை கொண்டிருந்தேன்.
நான் சமீபத்திய பதிவில் எழுதியிருந்தது போன்று, நீங்கள் குறிப்பிடும் இஸ்லாமிய சரித்திரத்தையும், குரான் வசனங்களையும் தவிர எனக்கு வேறு எதுவும் இஸ்லாமிய வரலாற்றிலோ இறையியலிலோ தெரியாது. அதனை ஒப்புக்கொள்வதிலும் எனக்கு தயக்கமில்லை.
அதனால், நான் என் கருத்தை சொல்லிவிட்டு, என் கருத்தை தவறு நிரூபிக்க கேள்வி கேட்டேன். இந்த இலக்கணங்கள் பொருந்தியவர் இறைதூதர் என்ற இலக்கணம் இருந்தால், அது எல்லா இறைதூதர்களுக்கும் பொருந்தி வந்தால் நான் சொன்னதை தவறு என்று நிரூபித்துவிடும். அதனால்தான் நான் அந்த கேள்வியை கேட்டேன்.
நீங்கள் கூறிய பதில்கள் எனக்கு அப்படிப்பட்ட இலக்கணத்தை காட்டவில்லை. எப்படி நீங்கள் சொல்லும் விளக்கங்கள் பலருக்கும் பொருந்த வாய்ப்பிருக்கிறது என்பதனை காட்டினேன். சமீபத்தில் இறைதூதர் என்பதற்கு சுவனப்பிரியன் இலக்கணம் கொடுத்திருக்கிறார். அதுதான் நான் கேட்ட விளக்கம். அதன் மீது இன்னும் ஒரே ஒரு கேள்வி கேட்டிருக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும், நட்புக்கும், விளக்கங்களுக்கும் என் தாழ்மையான நன்றிகள்
எழில்
Comment by எழில் — October 31, 2006 @ 5:26 pm
சகோதரர் இப்னுபஷீர்,
அந்தக் காலத்தில் சைவர்களுக்கும் சமணர்களுக்கும் இடையிலும், வைணவர்களுக்கும் புத்தர்களுக்கும் இடையிலும் தர்க்க ரீதியாக விவாதங்கள் நடக்கும் என்றும், அதில் விவாதத்திலும் தர்க்கத்திலும், அறிவிலும் மிகச் சிறந்த அடியார்கள் தங்கள் பக்கத்தின் நியாயம் காரணமாகவும், தர்க்க மேன்மை காரணமாகவும் வென்று பெரும் புகழ் பெறுவார்கள் என்று சிலர் எழுதியதைப் பார்த்திருக்கிறேன்.
உங்களது தர்க்கங்கள் நேர்மையானதாகவும், மிகவும் பண்புடனும் , அமைதியாகவும் அதே நேரத்தில் மிகுந்த வலிவுடனும் காணப் படுகிறது. உங்கள் புத்தி சாதுர்யம் மற்றும் தர்க்க சாஸ்திர அறிவும் வியக்க வைக்கிறது.
உங்களின் பதில்களில் நீங்கள் அளிக்கும் நிதானமான விளக்கங்கங்கள் இணையத்தில் பலரும் கற்றுக் கொள்ள வேண்டியவை. உங்களைப் போன்ற அறிஞர்கள் ஈடுபடும் இது போன்ற விவாதங்கள் பயனுள்ளவையாகவும், இஸ்லாத்தினைப் பற்றி அறியாத முஸ்லிமல்லாதவர்களுக்கும், ஏன் சில முஸ்லிம்களுக்கும் பல்வேறு விஷயங்களைத் தெளிவு படுத்துபவையாகவும் உள்ளன.
நீங்கள் குறிப்பிட்ட அந்த முன் முடிவோடு அணுகுபவர் நிச்சயம் இந்த விவாதத்தின் முடிவில் தன்னிடம் / தங்களிடம் உள்ள குறைகளை ஒத்துக் கொண்டு அவை நீக்கப் பட வேண்டும் என்பதை ஒத்துக் கொள்வார் என்று நம்புகிறேன்.
அருமையான விவாதங்கள். இதை நிதான முறையில் எடுத்துச் செல்லும் உங்கள் முயற்சிக்கு எனது பாராட்டுகளும் நன்றியும் உரித்தாகுக.
இது வரை நிகழ்ந்த விவாதங்களில் உங்கள் கருத்துக்களே நியாயமானவையாகவும் பலமானதாகவும் வெற்றி பெற்றூள்ளதாகவும் தெரிகின்றன.
எழில் என்பவர் அவர் கேள்விக்கு அளிக்கும் பதில்களில் அவர் விரும்புவதைத் தேடுவதும் இல்லையென்றால் வேறொன்றுக்குத் தாவுவதும் மிகச் சரியான அவதானிப்பு. சகோதரர் அபூமுஹை அவர்களுடன் விவாதத்தை ஆரம்பிக்கும் போதே எள்ளல் தொனியில் தான் ஆரம்பித்தார்.
இல்லை அவர் காழ்ப்பில் இப்படிச் செய்யவில்லை, தற்போது அவர் தெரிந்து கொள்ளக் கேட்கிறார் என்றால் அவர் புரிந்துகொள்ளலில் கடும் குறைபாடு இருப்பது குறித்து வருத்தம் கொள்கிறேன்.
அவரது குழந்தைத்தனமான அல்லது முட்டாள்தனமான முன்முடிவு எப்படி இருக்கிறது என்றால், இஸ்லாமியர்களாக இருக்கும் மருத்துவர்கள் பரிணாமக் கொள்கையை நம்பினால் மட்டுமே தங்கள் மருத்துவத் தொழிலில் இருக்கமுடியும் என்று சொல்கிறார்.
தான் சார்ந்திருக்கும் மதத்தின் பகுத்தறிவுக்குச் சற்றுகூட ஒத்துப் போகாத பல கருத்துகளை நம்பும் பல மருத்துவ விற்பன்னர்களையும், பொறியாளர்களையும் எனக்குத் தெரியும். (விவாதத்தைத் திரிக்கும் அபாயத்தால் மதத்தின் பெயரைத் தவிர்க்கிறேன்)
முன்முடிவுடன் அணுகும் எந்த விவாதத்திற்கும் பலன் இருக்காது. திரு எழில் அந்த நிலையை அடைந்து விட்டாரோ என அஞ்சுகிறேன்.
உங்களின் அழகிய விவாதத்தினால் நான் தனிப்பட்டமுறையில் நிறையத் தெரிந்து கொண்டேன். அதற்காகவும் நன்றி!
அன்புடன்
பேரெழிலன்.
Comment by பேரெழிலன் — October 31, 2006 @ 6:34 pm
நபி மூஸா வைத்திருந்த கைத்தடியில் எத்தனை கணுக்கள் இருந்தன? என்ற வினாவுக்கு விடை இருக்கின்றது. ஆனால், அந்த விடையால் மனித குலத்துக்கு ஏதும் பயன் உண்டா?
இஸ்லாம் என்பது வாழ்க்கை நெறி; வாழும் வழி. அது, மனித வாழ்வுக்கான எல்லாவற்றுக்கும் வழி சொல்லும். வெற்றுக் கற்பனைகளுக்கும் யூகங்களுக்கும் பதில் சொல்லும் பொறுப்பை இஸ்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை.
Comment by வஹ்ஹாபி — October 31, 2006 @ 9:14 pm
சகோதரர் இப்னுபஷீர்,
அருமையான பதிவு, ஆழ்ந்த கருத்துக்கள்,சிறந்த அனுகு முறை தொடர என் வாழ்த்துக்கள்
Comment by podakkudian — November 1, 2006 @ 4:07 am
appreciate your comments Br.Ibnu Basheer.
Comment by asalamone — November 1, 2006 @ 8:38 am
சகோதரர் இப்னுபஷீர்,
அருமையான பதிவு, ஆழ்ந்த கருத்துக்கள்,சிறந்த அனுகு முறை தொடர என் வாழ்த்துக்கள்
Comment by suvanappiriyan — November 1, 2006 @ 10:19 am
\நீங்கள் கூறியது போன்று இதையெல்லாம் நண்பர் எழில் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கட்டாயமெல்லாம் கிடையாது. நம் நிலைப்பாட்டையை நாம் விளக்கியுள்ளோம். மேற்கொண்டு குர்ஆன், நபி (ஸல்) கூறியதாக சகோ. எழில் எதைக்குறிப்பிட்டாலும் ஆதாரத்தோடு சொன்னால் அவர் வாதத்தில் வலுவிருக்கும். சந்திரனை சாதரணமாக மேஐஸ்ஸியன் பிளந்து காட்ட முடியும் என்றால் அந்த மாதிரி யாரெல்லாம் பிளந்து காட்டியுள்ளார்கள், அதை எந்தந்த பகுதி மக்களெல்லாம் பார்த்திருந்தார்கள் என்று கூறியிறுக்கலாம். பரிணாம வளர்ச்சி தத்துவங்களைப் பொறுத்தவரை இத்தத்துவங்கள் நாளாக, நாளாக பொய்த்து வருவதையே நாம் கண்டு வருகிறோம், சூரியனும் சந்திரனும் உலகத்தை சுற்றி வருகின்றன என்பதை அரிஸ்டாட்டிலின் புத்தகங்களிள் காணப்படுவதைக் சுட்டிக்காட்டிய சகோ. எழில் அதிலுள்ள பூமி ஒரே இடத்தில்தான் உள்ளது என்ற முரண்ப்பாட்டை கண்டு கொள்ளாதது ஏன் என்று விளக்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
மொத்தத்தில் உங்களின் விவாதத்தினால் நாங்கள் அதிகதிகம் புதிய விஷயங்களை அறிந்து கொண்டோம்.
அன்புடன் வளர்பிறை\
மிக நல்ல அறிவார்ந்த கருத்தை கூறியிருக்கிறீர்கள். எடுத்துச் சொல்வது மட்டும் தான் நம் மீது கடமை யாரும் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இஸ்லாத்தில் இல்லை.
யார் அணு அளவு நன்மை செய்தாலும் அதை மறுமை நாளில் கண்டு கொள்வார்கள். யார் தீமை செய்தாலும் அதை மறுமை நாளில் கண்டு கொள்வார்கள். (அல் குரான்).
Comment by Syed Ibramsa — November 1, 2006 @ 11:20 am