திரையை அகற்றுங்கள் நேசகுமார்!
November 21, 2006நேசகுமார் என்ற புனைபெயரில் எழுதி வரும் நபர் தனது எழுத்துக்களின் தரத்தை மட்டுமல்லாது பிறரின் எண்ணத்தில் அவரைப் பற்றிய மதிப்பீட்டையும் தாழ்த்திக் கொண்டு வெகு காலமாகி விட்டது. இப்போதெல்லாம் அவரது வாதங்களை நான் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்பதற்கு காரணம் நம்மிடம் பதில் இல்லை என்று அர்த்தமில்லை. பதில் விளக்கம் அளிப்பதால் ஒரு பயனும் இல்லை என்பதால்தான். ஒரு உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், குடிபோதையில் கலாட்டா செய்யும் ரவுடியிடம் ஒரு கண்ணியமான மனிதர் நின்று வாதாடிக் கொண்டிருந்தால் அதனால் கேவலமடைவது அந்த மனிதர்தான். The rowdy could even enjoy the altercation!
ஆனால், சென்ற வாரம் நான் படிக்க நேர்ந்த சில வலைப்பதிவுகள் என்னை இந்தப் பதிவை எழுதும்படி தூண்டின.
1. ஆப்பு என்பவர், நேசகுமார் என்ற பெயரில் எழுதுபவர் எழுத்தாளர் என்.சொக்கன்தான் என்பதை சில ஆதாரங்களுடன் குறிப்பிட்டிருந்தார்.
2. இறைநேசன் இந்து மதத்திலிருந்து புத்த மதத்திற்கு மாறிச் சென்ற லட்சக்கணக்கான தலித் மக்களைப் பற்றி ‘எங்கிருந்தாலும் வாழ்க’ என்று ஒரு பதிவு எழுதியிருந்தார்.
3. இறைநேசனின் அந்தப் பதிவில் ‘நேசகுமார்’ என்ற பெயரில் வந்த பின்னூட்டம் ஒன்று போலி எனக் குறிப்பிட்டு நேசகுமார் ஒரு பதிவு எழுதியிருந்தார். அதில் எழுதியிருந்த கருத்துக்களும் வெளியிட்டிருந்த பின்னூட்டங்களும் முஸ்லிம்களின் மன உணர்வுகளை அளவுக்கதிகமாக சீண்டிப் பார்ப்பதாகவே இருந்தன. அதைத் தொடர்ந்த இன்னொரு பதிவில் நெதர்லாந்து நாளிதழ் வெளியிட்ட சர்ச்சைக்குறிய கார்ட்டூன்களையும் இவர் வெளியிட்டிருக்கிறார். (இவை ‘ஆரோக்கியம்’ என்ற பெயரில் ஏற்கனவே வெளியிடப்பட்டதுதான்!) எனக்கென்னவோ, இவ்வளவு ஆர்ப்பாட்டங்களும் ஆப்பு வெளிப்படுத்திய தகவல்களிலிருந்து பிறரின் கவனத்தை திசை திருப்புவதற்காகவே அரங்கேற்றப் பட்டதாக இருக்குமோ என்ற சந்தேகத்தை கிளப்புகிறது.
ஆப்பு சொன்னது போல நேசகுமார் என்ற பெயரில் எழுதுபவர் என்.சொக்கனாக இருக்கலாம். அல்லது வேறு யாரோவாகவும் இருக்கலாம். இந்த நபரைப்பற்றி எனக்கும் சில அனுமானங்கள் இருக்கின்றன. அவை சில காலமாகவே இவரது எழுத்துக்களையும் நடவடிக்கைகளையும் அவதானித்து வந்ததால் தோன்றியவை. அவை;
1. நேசகுமார் என்ற புனைபெயரில் எழுதுபவர், ஏற்கனவே வேறொரு பெயரில் (அல்லது ஒரிஜினல் பெயரில்) எழுதிக் கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளர்.
2. சில ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட ஒரு பதிப்பகத்தாருக்கும் இந்த எழுத்தாளருக்கும் சில தொடர்புகள் இருக்கின்றன.
3. இந்த எழுத்தாளரின் பணி கணினித்துறையுடன் சம்பந்தப்பட்டது.
4. இவர் பிராமண சமூகத்தை சார்ந்தவராக இருப்பதற்கு அநேக சாத்தியங்கள் இருக்கிறது.
5. இவருக்கு சில முஸ்லிம் நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு இவர்தான் நேசகுமார் என்ற பெயரில் எழுதுகிறார் என்ற உண்மை தெரியாது.
6. மேலே குறிப்பிட்ட பதிப்பகம் மற்றும் சில இணைய இதழ்களை நடத்துபவர்களுக்கு நேசகுமாரின் உண்மை முகம் தெரியும்.
7. இவர் பெங்களூரில் வசிக்கிறார். அல்லது சில காலத்திற்காவது பெங்களூரில் முன்பு வசித்திருந்திருக்கிறார்.
இந்த அனுமானங்கள் அனைத்துமே திரு. சொக்கனுடன் பொருந்திப் போகின்றன என்பதுதான் ஆச்சரியம். நேசகுமார் என்ற பெயரைப் பயன்படுத்தி ஒரு குழுவே இயங்கிக் கொண்டிருக்கவும் வாய்ப்பிருக்கிறது.
நேசகுமார் சொல்கிறார், ‘சொக்கன் என்பவருக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. அவர் யார், என்ன செய்கிறார் என்று தெரியாது. பார்த்ததோ, பேசியதோ இல்லை. இணையத்தின் மூலமாக ஏற்பட்டுள்ள நண்பர்கள் வட்டத்தில் கூட அப்படி யாருடனும் எனக்கு பழக்கம் கிடையாது’ என்று. நேசகுமார் என்ற பெயரில் ஒளிந்து கொண்டிருப்பவர் சொக்கனாக இல்லாமலிருக்கலாம். ஆனால் அவர் யாரென்றே எனக்கு தெரியாது என்று இவர் சொல்வது நம்பும்படியாக இல்லை.
சரி, இந்த நபரைப் பற்றி இப்போது ஆராய்ச்சி செய்ய என்ன அவசியம் வந்தது என நீங்கள் யோசிக்கலாம். தமிழ் இணையத்தில் மதத் துவேஷத்தை அறிமுகப்படுத்திய முன்னோடியான இந்த நபர் அடிப்படையில் ஒரு பொய்யர் என்பதை தோலுரித்துக் காட்டும் ஒரு முயற்சிதான் இது.
இஸ்லாத்தின் மீதான தனது வெறுப்பை கக்குவதற்காகவும் அதே சமயத்தில் தான் சார்ந்த சமூகம் பற்றிய கேள்விக்கணைகளை தவிர்ப்பதற்காகவும் தான் பிறந்த ஜாதி போன்ற அடையாளங்களை மறைத்து பொய் சொல்லிக் கொண்டிருப்பவர் இந்த நபர். பிறப்பின் மூலமாக அவரது பெற்றோரிடமிருந்து அவர் பெற்ற அந்த ஜாதி, அவர் தனது வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க பெண் தேடிய அந்த ஜாதி, அவரின் மூலமாக அவரது பிள்ளைகளுக்கு சென்று சேரும் அந்த ஜாதி… அவரால் வெளியில் சொல்லிக் கொள்ள முடியாத அளவிற்கு கேவலமான ஜாதியா என்ன?
இவரது பிறப்போடு ஒட்டிப் பிறந்த ஜாதி விஷயத்திலேயே பொய் சொல்லும் இந்த நபருக்கு, இஸ்லாம் பற்றி குறை சொல்ல என்ன அருகதை இருக்கிறது?
ஆங்காங்கு பரிதாபமாக கிழிந்து தொங்கும் உங்கள் முகத்திரையை முற்றாக அகற்றுங்கள் நேசகுமார்! உங்களுக்கு உண்மை சொல்லவும் தெரியும் என்பதை முதலில் நிரூபணம் செய்யுங்கள். பிறகு பேசலாம் இஸ்லாம் பற்றி.
தெரிந்தோ தெரியாமலோ உங்கள் எழுத்துக்களால் நீங்கள் ஒரு பிராமணர் எனக் காட்டி வந்திருக்கிறீர்கள். உங்கள் பதிவுகளில் உங்களுக்கு ஆதரவு அளித்து பின்னூட்டமிடும் உங்கள் பிராமண நண்பர்களை பாருங்கள். ‘இவர் நம்மவர்’ என அவர்கள் நம்புவது அவர்களின் எழுத்துக்களிலேயே தெரிகிறது. ‘உன் நண்பன் யாரென்று சொல்! நான் உன்னைப் பற்றி சொல்கிறேன்’ என்ற பழமொழியை நீங்கள் அறிந்திருக்கவில்லையா? மேலும் ஆப்பு போன்றவர்கள் நீங்கள் சொக்கன்தான் என்று நம்புகிறார்கள். அதை அவர்கள் தங்கள் பதிவுகளில் வெளிப்படையாக எழுதவும் செய்கிறார்கள். நீங்கள் சொக்கனாக இல்லாமலிருந்தால், ஒரு பிராமணராகவும் இல்லாதிருந்தால், உங்களின் வெறுப்பூட்டும் எழுத்துக்களால் சொக்கனுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். அவருக்கும் அவரது முஸ்லிம் நண்பர்களுக்குமிடையில் ஒரு தர்மசங்கடமான சூழ்நிலையை உண்டாக்கியிருக்கிறீர்கள். நீங்கள் உங்கள் முகத்திரையை விலக்கி உங்களை யார் என உண்மையாக அடையாளப் படுத்திக் கொள்வதுதான் சொக்கனுக்கு நீங்கள் செய்த அநீதிக்கு பரிகாரமாக இருக்கும்.
மலர் மன்னன், அரவிந்தன் நீலகண்டன், ஜெயராமன், வஜ்ரா சங்கர், கால்கரி சிவா, டோண்டு ராகவன் இவர்களெல்லாம் தங்களை அடையாளப் படுத்திக் கொண்டு இஸ்லாம் பற்றி விமரிசனம் செய்யவில்லையா? உங்களுக்கு மட்டும் ஏன் முகத்திரை தேவைப்படுகிறது? இருட்டில் மறைந்து நின்று கல்லெறியும் கோழைக்கும் உங்களுக்கும் என்னதான் வித்தியாசம்? வெளியில் வாருங்கள். நீங்கள் இஸ்லாம் பற்றி விவாதம் செய்ய வரும்போது, நீங்கள் சார்ந்த சமூகம் பற்றிய கேள்விகள் எழுந்தால் அதற்கும் பதிலளிக்க தயாராக வாருங்கள்.
அது உங்களால் முடியாதென்றால், பொத்திக் கொண்டு போங்கள்!
