திரையை அகற்றுங்கள் நேசகுமார்!

November 21, 2006

நேசகுமார் என்ற புனைபெயரில் எழுதி வரும் நபர் தனது எழுத்துக்களின் தரத்தை மட்டுமல்லாது பிறரின் எண்ணத்தில் அவரைப் பற்றிய மதிப்பீட்டையும் தாழ்த்திக் கொண்டு வெகு காலமாகி விட்டது. இப்போதெல்லாம் அவரது வாதங்களை நான் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்பதற்கு காரணம் நம்மிடம் பதில் இல்லை என்று அர்த்தமில்லை. பதில் விளக்கம் அளிப்பதால் ஒரு பயனும் இல்லை என்பதால்தான். ஒரு உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், குடிபோதையில் கலாட்டா செய்யும் ரவுடியிடம் ஒரு கண்ணியமான மனிதர் நின்று வாதாடிக் கொண்டிருந்தால் அதனால் கேவலமடைவது அந்த மனிதர்தான். The rowdy could even enjoy the altercation!

ஆனால், சென்ற வாரம் நான் படிக்க நேர்ந்த சில வலைப்பதிவுகள் என்னை இந்தப் பதிவை எழுதும்படி தூண்டின.

1. ஆப்பு என்பவர், நேசகுமார் என்ற பெயரில் எழுதுபவர் எழுத்தாளர் என்.சொக்கன்தான் என்பதை சில ஆதாரங்களுடன் குறிப்பிட்டிருந்தார்.

2. இறைநேசன் இந்து மதத்திலிருந்து புத்த மதத்திற்கு மாறிச் சென்ற லட்சக்கணக்கான தலித் மக்களைப் பற்றி ‘எங்கிருந்தாலும் வாழ்க’ என்று ஒரு பதிவு எழுதியிருந்தார்.

3. இறைநேசனின் அந்தப் பதிவில் ‘நேசகுமார்’ என்ற பெயரில் வந்த பின்னூட்டம் ஒன்று போலி எனக் குறிப்பிட்டு நேசகுமார் ஒரு பதிவு எழுதியிருந்தார். அதில் எழுதியிருந்த கருத்துக்களும் வெளியிட்டிருந்த பின்னூட்டங்களும் முஸ்லிம்களின் மன உணர்வுகளை அளவுக்கதிகமாக சீண்டிப் பார்ப்பதாகவே இருந்தன. அதைத் தொடர்ந்த இன்னொரு பதிவில் நெதர்லாந்து நாளிதழ் வெளியிட்ட சர்ச்சைக்குறிய கார்ட்டூன்களையும் இவர் வெளியிட்டிருக்கிறார். (இவை ‘ஆரோக்கியம்’ என்ற பெயரில் ஏற்கனவே வெளியிடப்பட்டதுதான்!) எனக்கென்னவோ, இவ்வளவு ஆர்ப்பாட்டங்களும் ஆப்பு வெளிப்படுத்திய தகவல்களிலிருந்து பிறரின் கவனத்தை திசை திருப்புவதற்காகவே அரங்கேற்றப் பட்டதாக இருக்குமோ என்ற சந்தேகத்தை கிளப்புகிறது.

ஆப்பு சொன்னது போல நேசகுமார் என்ற பெயரில் எழுதுபவர் என்.சொக்கனாக இருக்கலாம். அல்லது வேறு யாரோவாகவும் இருக்கலாம். இந்த நபரைப்பற்றி எனக்கும் சில அனுமானங்கள் இருக்கின்றன. அவை சில காலமாகவே இவரது எழுத்துக்களையும் நடவடிக்கைகளையும் அவதானித்து வந்ததால் தோன்றியவை. அவை;

1. நேசகுமார் என்ற புனைபெயரில் எழுதுபவர், ஏற்கனவே வேறொரு பெயரில் (அல்லது ஒரிஜினல் பெயரில்) எழுதிக் கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளர்.

2. சில ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட ஒரு பதிப்பகத்தாருக்கும் இந்த எழுத்தாளருக்கும் சில தொடர்புகள் இருக்கின்றன.

3. இந்த எழுத்தாளரின் பணி கணினித்துறையுடன் சம்பந்தப்பட்டது.

4. இவர் பிராமண சமூகத்தை சார்ந்தவராக இருப்பதற்கு அநேக சாத்தியங்கள் இருக்கிறது.

5. இவருக்கு சில முஸ்லிம் நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு இவர்தான் நேசகுமார் என்ற பெயரில் எழுதுகிறார் என்ற உண்மை தெரியாது.

6. மேலே குறிப்பிட்ட பதிப்பகம் மற்றும் சில இணைய இதழ்களை நடத்துபவர்களுக்கு நேசகுமாரின் உண்மை முகம் தெரியும்.

7. இவர் பெங்களூரில் வசிக்கிறார். அல்லது சில காலத்திற்காவது பெங்களூரில் முன்பு வசித்திருந்திருக்கிறார்.

இந்த அனுமானங்கள் அனைத்துமே திரு. சொக்கனுடன் பொருந்திப் போகின்றன என்பதுதான் ஆச்சரியம். நேசகுமார் என்ற பெயரைப் பயன்படுத்தி ஒரு குழுவே இயங்கிக் கொண்டிருக்கவும் வாய்ப்பிருக்கிறது.

நேசகுமார் சொல்கிறார், ‘சொக்கன் என்பவருக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. அவர் யார், என்ன செய்கிறார் என்று தெரியாது. பார்த்ததோ, பேசியதோ இல்லை. இணையத்தின் மூலமாக ஏற்பட்டுள்ள நண்பர்கள் வட்டத்தில் கூட அப்படி யாருடனும் எனக்கு பழக்கம் கிடையாது’ என்று. நேசகுமார் என்ற பெயரில் ஒளிந்து கொண்டிருப்பவர் சொக்கனாக இல்லாமலிருக்கலாம். ஆனால் அவர் யாரென்றே எனக்கு தெரியாது என்று இவர் சொல்வது நம்பும்படியாக இல்லை.

சரி, இந்த நபரைப் பற்றி இப்போது ஆராய்ச்சி செய்ய என்ன அவசியம் வந்தது என நீங்கள் யோசிக்கலாம். தமிழ் இணையத்தில் மதத் துவேஷத்தை அறிமுகப்படுத்திய முன்னோடியான இந்த நபர் அடிப்படையில் ஒரு பொய்யர் என்பதை தோலுரித்துக் காட்டும் ஒரு முயற்சிதான் இது.

இஸ்லாத்தின் மீதான தனது வெறுப்பை கக்குவதற்காகவும் அதே சமயத்தில் தான் சார்ந்த சமூகம் பற்றிய கேள்விக்கணைகளை தவிர்ப்பதற்காகவும் தான் பிறந்த ஜாதி போன்ற அடையாளங்களை மறைத்து பொய் சொல்லிக் கொண்டிருப்பவர் இந்த நபர். பிறப்பின் மூலமாக அவரது பெற்றோரிடமிருந்து அவர் பெற்ற அந்த ஜாதி, அவர் தனது வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க பெண் தேடிய அந்த ஜாதி, அவரின் மூலமாக அவரது பிள்ளைகளுக்கு சென்று சேரும் அந்த ஜாதி… அவரால் வெளியில் சொல்லிக் கொள்ள முடியாத அளவிற்கு கேவலமான ஜாதியா என்ன?

இவரது பிறப்போடு ஒட்டிப் பிறந்த ஜாதி விஷயத்திலேயே பொய் சொல்லும் இந்த நபருக்கு, இஸ்லாம் பற்றி குறை சொல்ல என்ன அருகதை இருக்கிறது?

ஆங்காங்கு பரிதாபமாக கிழிந்து தொங்கும் உங்கள் முகத்திரையை முற்றாக அகற்றுங்கள் நேசகுமார்! உங்களுக்கு உண்மை சொல்லவும் தெரியும் என்பதை முதலில் நிரூபணம் செய்யுங்கள். பிறகு பேசலாம் இஸ்லாம் பற்றி.

தெரிந்தோ தெரியாமலோ உங்கள் எழுத்துக்களால் நீங்கள் ஒரு பிராமணர் எனக் காட்டி வந்திருக்கிறீர்கள். உங்கள் பதிவுகளில் உங்களுக்கு ஆதரவு அளித்து பின்னூட்டமிடும் உங்கள் பிராமண நண்பர்களை பாருங்கள். ‘இவர் நம்மவர்’ என அவர்கள் நம்புவது அவர்களின் எழுத்துக்களிலேயே தெரிகிறது. ‘உன் நண்பன் யாரென்று சொல்! நான் உன்னைப் பற்றி சொல்கிறேன்’ என்ற பழமொழியை நீங்கள் அறிந்திருக்கவில்லையா? மேலும் ஆப்பு போன்றவர்கள் நீங்கள் சொக்கன்தான் என்று நம்புகிறார்கள். அதை அவர்கள் தங்கள் பதிவுகளில் வெளிப்படையாக எழுதவும் செய்கிறார்கள். நீங்கள் சொக்கனாக இல்லாமலிருந்தால், ஒரு பிராமணராகவும் இல்லாதிருந்தால், உங்களின் வெறுப்பூட்டும் எழுத்துக்களால் சொக்கனுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். அவருக்கும் அவரது முஸ்லிம் நண்பர்களுக்குமிடையில் ஒரு தர்மசங்கடமான சூழ்நிலையை உண்டாக்கியிருக்கிறீர்கள். நீங்கள் உங்கள் முகத்திரையை விலக்கி உங்களை யார் என உண்மையாக அடையாளப் படுத்திக் கொள்வதுதான் சொக்கனுக்கு நீங்கள் செய்த அநீதிக்கு பரிகாரமாக இருக்கும்.

மலர் மன்னன், அரவிந்தன் நீலகண்டன், ஜெயராமன், வஜ்ரா சங்கர், கால்கரி சிவா, டோண்டு ராகவன் இவர்களெல்லாம் தங்களை அடையாளப் படுத்திக் கொண்டு இஸ்லாம் பற்றி விமரிசனம் செய்யவில்லையா? உங்களுக்கு மட்டும் ஏன் முகத்திரை தேவைப்படுகிறது? இருட்டில் மறைந்து நின்று கல்லெறியும் கோழைக்கும் உங்களுக்கும் என்னதான் வித்தியாசம்? வெளியில் வாருங்கள். நீங்கள் இஸ்லாம் பற்றி விவாதம் செய்ய வரும்போது, நீங்கள் சார்ந்த சமூகம் பற்றிய கேள்விகள் எழுந்தால் அதற்கும் பதிலளிக்க தயாராக வாருங்கள்.

அது உங்களால் முடியாதென்றால், பொத்திக் கொண்டு போங்கள்!

26 Comments »

The URI to TrackBack this entry is: http://ibnubasheer.blogsome.com/2006/11/21/p58/trackback/

  1. இப்னு ஐயா,

    நேசகுமார் தான் யாரென்று அறிமுகப்படுத்திக்கொண்டால் நான் மகிழ்வேன். அது அவருடைய பர்ஸனல் விஷயம். அதை நீங்கள் ஒரு கேட்டாக சொல்லும்போது, அதே கருத்தை முகமூடி போட்டுக்கொண்டு எழுதும் மற்ற இஸ்லாமிய பதிவர்களுக்கும் (சுவனப்பிரியன், நல்லடியார், சடையப்பா, இறையடியான், வளர்பிறை, இன்ன பிற..) ஏன் நீங்கள் சொல்லவில்லை.

    இஸ்லாத்தை விமர்சிப்பவர்களை முஸ்லிம்கள் வன்முறையால் அடக்குவதும், பட்வா போடுவதும், ஜிகாத் என்ற பெயரில் அராஜகம் பண்ணுவதும் வாடிக்கையாகிப்போனபோது இதை நீங்கள் எதிர்பார்ப்பது ஒரு வினோதமே.

    நான் நேசக்குமார் ஐயா இல்லை. என் வீட்டிற்கு (இதற்காக) முஸ்லிம் தீவிரவாதிகளை அனுப்பவேண்டாம்… :-) ))

    நன்றி

    Comment by ஜயராமன் — November 21, 2006 @ 6:25 am

  2. நேசக்குமார் யாராக இருந்தால் என்ன. உங்கள் சமுதாயத்தில் இல்லாத எத்தர்களா, பொய்யர்களா.
    http://tmpolitics.blogspot.com
    மூலம் சிலர் பற்றி தெரிகிறது

    உங்கள் சமுதாயத்தில் உள்ள அழுக்குகளை முதலில் கழுவி விட்டு நேசக்குமார் பற்றி பேசுங்கள். இந்துக்கள் தங்கள் சமுதாயத்தில் எல்லாம் சரியாக உள்ளது என்று சொல்வதில்லை. நேசக்குமார்
    தான் ஒரு ஒய்வு பெற்ற அரசு ஊழியர்,பிரமாணர் அல்லாதவர், சிறு தொழில் செய்பவர் என்பதையெல்லாம் கூறியிருக்கிறார்.எனவே முதலில் அவர் பற்றி பொய் சொல்வதை நிறுத்துங்கள்

    Comment by secularindian — November 21, 2006 @ 6:30 am

  3. //இஸ்லாத்தின் மீதான தனது வெறுப்பை கக்குவதற்காகவும் அதே சமயத்தில் தான் சார்ந்த சமூகம் பற்றிய கேள்விக்கணைகளை தவிர்ப்பதற்காகவும் தான் பிறந்த ஜாதி போன்ற அடையாளங்களை மறைத்து பொய் சொல்லிக் கொண்டிருப்பவர் இந்த நபர்//

    சரியாகச் சொன்னீர்கள். நேசகுமார் என்பது ஈழத்தில் பரவலாக இருக்கும் கிறிஸ்தவப் பெயர். இஸ்லாத்தைத் தரம் தாழ்த்தி விமர்சித்தால் வரும் எதிர்க்கணைகளை கிறிஸ்தவத்தின் மீது திருப்பிவிட்டுக் குளிர் காய வைக்கப்பட்ட பெயர் இது. அது நடக்காமல் போகவே வெளிப்படையான கிறிஸ்தவப் பெயரான ஆரோக்கியம் என்ற பெயரில் நரகல் நடையில் ஆக்கங்கள் வந்தன.

    அபூ ஆதில் என்றொரு பதிவர் இதைச் சரியாக அடையாளம் காட்டி இருந்தார்.

    அவ்வப்போது வரும் உள்வாங்குகிறேன் தனிமனிதனாக சிரமப்படுகிறேன் etc டயலாக்கும் மறக்க முடியாது.

    //அது உங்களால் முடியாதென்றால், பொத்திக் கொண்டு போங்கள்!//

    நச்!!!!

    Comment by அட்றா சக்கை — November 21, 2006 @ 6:32 am

  4. ஜெயராமன் சார், உங்கள் கருத்துக்களுக்கு நன்றி!

    //நேசகுமார் தான் யாரென்று அறிமுகப்படுத்திக்கொண்டால் நான் மகிழ்வேன். அது அவருடைய பர்ஸனல் விஷயம்.//

    secularindian என்பவருக்கு எனது பதிலை பாருங்கள்.

    //அதை நீங்கள் ஒரு கேட்டாக சொல்லும்போது, அதே கருத்தை முகமூடி போட்டுக்கொண்டு எழுதும் மற்ற இஸ்லாமிய பதிவர்களுக்கும் (சுவனப்பிரியன், நல்லடியார், சடையப்பா, இறையடியான், வளர்பிறை, இன்ன பிற..) ஏன் நீங்கள் சொல்லவில்லை.//

    நீங்கள் குறிப்பிட்ட அனைவரும் புனைபெயரில் எழுதுகிறார்களே தவிர தாங்கள் முஸ்லிம்கள் என்ற அடையாளத்தை அவர்கள் என்றும் மறைத்ததில்லை. மறுக்கவும் இல்லை. இந்த அடையாளத்தைத்தான் நான் நேசகுமாரிடம் எதிர்பார்க்கிறேன். மற்றபடி அவர் முகத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலெல்லாம் எனக்கு இல்லை!

    //இஸ்லாத்தை விமர்சிப்பவர்களை முஸ்லிம்கள் வன்முறையால் அடக்குவதும், பட்வா போடுவதும், ஜிகாத் என்ற பெயரில் அராஜகம் பண்ணுவதும் வாடிக்கையாகிப்போனபோது இதை நீங்கள் எதிர்பார்ப்பது ஒரு வினோதமே.//

    என்ன சார் இது.. நீலகண்டன், நீங்கள் போன்றவர்கள் சொல்லாததையா நேசகுமார் சொல்லிவிட்டார்? நீங்களெல்லாம் வலைப்பதிவுகளில் புகைப்படத்தையே போட்டுக் கொண்டு எழுதவில்லையா? இவருக்கு மட்டும் ஏன் முகமூடி தேவைப்படுகிறது?

    //நான் நேசக்குமார் ஐயா இல்லை. என் வீட்டிற்கு (இதற்காக) முஸ்லிம் தீவிரவாதிகளை அனுப்பவேண்டாம்… ))//

    ரொம்ம்ம்ம்ம்ப நன்றி அய்யா! இதைச் சொன்னதற்கு பதில் ‘நீ ஒரு தீவிரவாதக் கும்பலின் தலைவன்’ என்று நேரடியாகவே சொல்லியிருக்கலாம்.

    Comment by இப்னு பஷீர் — November 21, 2006 @ 6:49 am

  5. //நேசக்குமார் யாராக இருந்தால் என்ன. உங்கள் சமுதாயத்தில் இல்லாத எத்தர்களா, பொய்யர்களா. http://tmpolitics.blogspot.com மூலம் சிலர் பற்றி தெரிகிறது. உங்கள் சமுதாயத்தில் உள்ள அழுக்குகளை முதலில் கழுவி விட்டு நேசக்குமார் பற்றி பேசுங்கள். இந்துக்கள் தங்கள் சமுதாயத்தில் எல்லாம் சரியாக உள்ளது என்று சொல்வதில்லை. //

    எங்கள் சமுதாயத்தில் எல்லோரும் உத்தமர்கள் என்று முஸ்லிம்களும் சொல்லிக் கொள்வதில்லை. யார் யார் எப்படிப் பட்டவர்கள் என்பதை நாங்களும் தெரிந்துதான் வைத்திருக்கிறோம். இதை எங்களுக்கு நேசகுமார் போன்ற ஒரு முகமூடி நபர் வந்து சொல்லத் தேவையில்லை. இவர் தனது சமுதாயத்தில் உள்ள அழுக்குகளை முதலில் கழுவிவிட்டு பிறகு இஸ்லாம் பற்றி பேச வந்திருப்பாரானால் இவரது நேர்மையை ஒப்புக் கொள்ளலாம். அப்படி நடக்கவில்லை என்பதால்தான் இவர் ஒரு பொய்யர் என்பதை நாங்கள் தோலுரித்து காட்ட வேண்டியிருக்கிறது.

    //நேசக்குமார் தான் ஒரு ஒய்வு பெற்ற அரசு ஊழியர்,பிரமாணர் அல்லாதவர், சிறு தொழில் செய்பவர் என்பதையெல்லாம் கூறியிருக்கிறார்.எனவே முதலில் அவர் பற்றி பொய் சொல்வதை நிறுத்துங்கள்//

    இவர் தன்னைப் பற்றி சொன்னதெல்லாம் உண்மைதான் என்பதை முதலில் நிரூபணம் செய்யட்டும்.

    Comment by இப்னு பஷீர் — November 21, 2006 @ 6:56 am

  6. அட்றா சக்கை, உங்கள் கருத்துக்களுக்கு நன்றி!

    //நேசகுமார் என்பது ஈழத்தில் பரவலாக இருக்கும் கிறிஸ்தவப் பெயர். இஸ்லாத்தைத் தரம் தாழ்த்தி விமர்சித்தால் வரும் எதிர்க்கணைகளை கிறிஸ்தவத்தின் மீது திருப்பிவிட்டுக் குளிர் காய வைக்கப்பட்ட பெயர் இது. அது நடக்காமல் போகவே வெளிப்படையான கிறிஸ்தவப் பெயரான ஆரோக்கியம் என்ற பெயரில் நரகல் நடையில் ஆக்கங்கள் வந்தன.//

    நல்லவேளையாக இவரது இந்த எண்ணம் ஈடேறவில்லை.

    Comment by இப்னு பஷீர் — November 21, 2006 @ 7:00 am

  7. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

    நேசக்குமார் போன்றவர்களுக்கு இது எல்லாம் புறியாது. இவர்கள் முன்கூட்டியே ஒரு தீர்மானத்தை எடுத்து இப்படித்தான் பேச வேண்டுமு் எழுத வேண்டும் என்று எழுதி வருகின்றார்கள். அவர்களுக்கு தான் கூறுவது தவறு என்று நன்றாகவே தெறியும்.

    நேசக்குமார் தான் சொக்கன் இல்லையென்றால் உடனே அதை தகுந்த ஆதாரங்களுடன் மறுத்திருப்பார். ஆனால் அவரோ நீ என்னுடைய போட்டோவை போட்டால் நான் உங்கள் நபியுடைய கேலிச்சித்திரத்தை வெளியிட்டு உங்களை கோபப் படுத்துவேன் என்றும் மற்றும் ஹீஸைன் என்ற ஓவியன் இந்து தெய்வங்களை நிர்வானமாக வரைந்ததால் இவர்கள் நபிமார்களளின் மனைவியரை நிர்வான சித்திரம் வரைந்து அதை வெளியிட வேண்டும் என்றெல்லாம் எழுதி வருகின்றார்கள்.

    இஸ்லாம் ஒரு போதும் சித்தரங்களை அனுமதிப்பதில்லை அதிலும் உருவப் படங்களை வரைபவர்களையோ அல்லது அதை வைத்திருப்பதையோ இஸ்லாம் தடை செய்துள்ளது. இஸ்லாத்தை பற்றி இத்தனை ஆராய்ச்சி செய்து எழுதும் நேசக்குமார் என்ற சொக்கனுக்கு இது தெறியாதா என்ன?

    இவரின் நிலை இப்போது எப்படியென்றால் “எலி தெருவில் அம்மனமாக ஓடிய கதை” அதாவது தனது புகைப்படத்தை ஆப்பு வெளியிட்டு தன்னை அடையாளப்படுத்திவிட்டார் என்பதால் இவர் நபிகளாரின் கேலிச்சித்திரத்தை வெளியிட்டுள்ளார்.

    இவரின் என்னம் முஸ்லிம்களை கோபப்படுத்த வேண்டடும் என்பதல்ல ஆனால் தனது பார்ப்பன மூலையை உபோயோகித்துள்ளார். அதாவது நபிகளாரின் கேலிச்சித்திரத்தை வெளியிட்டால் முஸ்லிம்கள் கொதிப்படைவார்கள் இணையத்தில் கலவரம் நடக்கும் அதன் மூலம் தனது புகைப்பட அடையாளம் மறக்கப்படும் என்ற நோக்கில் மக்களை திசை திரபட்புவதற்காகவே இவர் நபிகளாரின் கேலிச்சித்திரத்தை வெளியிட்டுள்ளார்.

    நேசக்குமாரும் சொக்கனும் ஒருவராக இருப்பதால்தான் இவர் இதுவரை மறுப்பு வெளியிடவில்லை. நேசக்குமார் சொக்கன் இல்லையென்றால் குறைந்தபட்சம் சொக்கனாவது மறுத்திருப்பார் தானே?

    இவர்களின் நோக்கம் தான் நிர்வானப்பட்டாலும் பரவாயில்லை தங்களது காரியமான மததுவேஷத்தை வெறிறிகரமாக பரப்ப வேணடும் என்பதே.

    Comment by முகவைத்தமிழன் — November 21, 2006 @ 7:28 am

  8. நியயமான கேள்விகள்.
    நேசக் குமார் என்ற பெயரில் எழுதுபவரிடம் கொஞ்சமேனும் நேர்மை இருந்தால், ஏதேனும் பதில் கிடைக்கும் என்று எதிர் பார்க்கலாம். இந்த மத துவேஷ முன்னோடியின் முற்போக்கு போர்வையை தன் சமீப பதிவுகளால் அவரே கிழித்துக்கொண்டார்.

    இறை நேசன் என்பவருடைய காட்டமான பதிவுகளை ஆதரிக்காவிட்டாலும், நேச குமார் என்பவரின் முற்போக்கு முகமூடியை அவரைக்கொண்டே கிழிக்க வைத்ததில் இறை நேசன் வெற்றி பெற்று விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இன்னமும் சூத்திரன் என்கிற அனுதாபப் போர்வை தனது மனதின் விஷத்தை மறைத்துக்கொள்வதற்காக நேசக் குமாருக்கு தேவைப்படுகிறதோ?.

    எழுத்தாளர் சொக்கனாக தான் இல்லாதபட்சத்தில் ‘ஆப்பு’ என்பவருடைய அனுமானத்தால் ஷ எழுத்தாளர் சொக்கனுக்கு ஏற்பட்டுவிட்ட அழுத்தத்திற்காகவேனும் நேச குமார் தான் இன்னாரில்லை என்பதை நிரூபிக்கவேண்டும்.

    அடுத்து, ஜயராமனின் வழமையான காமெடியைப் பார்த்து சிரித்து வைத்தேன். குரோதத்தை நகைச்சுவையாகக் கூட வெளிப்படுத்துகிறாரே!

    Comment by Raaja — November 21, 2006 @ 7:34 am

  9. //ஒரு உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், குடிபோதையில் கலாட்டா செய்யும் ரவுடியிடம் ஒரு கண்ணியமான மனிதர் நின்று வாதாடிக் கொண்டிருந்தால் அதனால் கேவலமடைவது அந்த மனிதர்தான். The rowdy could even enjoy the altercation! //

    மீண்டும் ஒரு முயற்சி.
    விளைவு….. enjoying the altercation
    மனம் தளரா முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

    Comment by சுல்தான் — November 21, 2006 @ 7:46 am

  10. முகவைத்தமிழன், உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

    //இவர்களின் நோக்கம் தான் நிர்வானப்பட்டாலும் பரவாயில்லை தங்களது காரியமான மததுவேஷத்தை வெறிறிகரமாக பரப்ப வேணடும் என்பதே.//

    பெருமானார் அவர்கள் காலத்திலிருந்தே இஸ்லாம் பலதரப்பட்ட விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் சந்தித்து, அவற்றை சமாளித்தே வளர்ந்து வந்திருக்கிறது. நே.கு. போன்றவர்களின் பிரச்சாரங்களெல்லாம் சூரியனைப் பார்த்து……!

    தங்களது உண்மை அடையாளத்தை வெளிப்படுத்தும் குறைந்த பட்ச நேர்மை கூட் இல்லாத இவர்கள் இஸ்லாம் பற்றி பேச வந்து விட்டார்கள்.

    Comment by இப்னு பஷீர் — November 21, 2006 @ 8:14 am

  11. Raaja, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    //நேசக் குமார் என்ற பெயரில் எழுதுபவரிடம் கொஞ்சமேனும் நேர்மை இருந்தால், ஏதேனும் பதில் கிடைக்கும் என்று எதிர் பார்க்கலாம். இந்த மத துவேஷ முன்னோடியின் முற்போக்கு போர்வையை தன் சமீப பதிவுகளால் அவரே கிழித்துக்கொண்டார். //

    மதத் துவேஷத்தை வளர்த்து இவர்கள் எதை சாதிக்க நினைக்கிறார்களோ?

    //இறை நேசன் என்பவருடைய காட்டமான பதிவுகளை ஆதரிக்காவிட்டாலும், நேச குமார் என்பவரின் முற்போக்கு முகமூடியை அவரைக்கொண்டே கிழிக்க வைத்ததில் இறை நேசன் வெற்றி பெற்று விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இன்னமும் சூத்திரன் என்கிற அனுதாபப் போர்வை தனது மனதின் விஷத்தை மறைத்துக்கொள்வதற்காக நேசக் குமாருக்கு தேவைப்படுகிறதோ?.//

    இறைநேசனின் பதிவு காட்டமாக இருந்தது உண்மைதான். ஆனால் அவர் அப்படி எழுதினதால்தான் நே.கு என்ற நபரின் உள்மன விகாரங்கள் இன்று வெளிப்பட்டு நிற்கிறது.

    //எழுத்தாளர் சொக்கனாக தான் இல்லாதபட்சத்தில் ‘ஆப்பு’ என்பவருடைய அனுமானத்தால் ஷ எழுத்தாளர் சொக்கனுக்கு ஏற்பட்டுவிட்ட அழுத்தத்திற்காகவேனும் நேச குமார் தான் இன்னாரில்லை என்பதை நிரூபிக்கவேண்டும்.//

    நே.குமார் சொக்கனாக இல்லாதபட்சத்தில் அவருக்காக நான் பரிதாபப் படுகிறேன். ஒரு முகமூடி நபரின் பொறுப்பற்ற செய்கைகளால் அவர் தேவையில்லாத மன அழுத்தத்திற்கு ஆளாகியிருப்பார்.

    //அடுத்து, ஜயராமனின் வழமையான காமெடியைப் பார்த்து சிரித்து வைத்தேன். குரோதத்தை நகைச்சுவையாகக் கூட வெளிப்படுத்துகிறாரே!//

    எனக்கும் சிரிப்புதான் வந்தது.. வேதனையான சிரிப்பு!

    Comment by இப்னு பஷீர் — November 21, 2006 @ 11:29 am

  12. முதலில் உங்கள் மற்றும் இறை நேசன், அட்றா சக்கை, முகவைத் தமிழன் எல்லோரும் அவரவர் படத்தைப் போட்டு பயோகிராஃபியுடன் வலைப்பதிவில் ஏற்றுங்கள். பிறகு நேசகுமார் யார் அவர் முன் புலம், பின் புலம், இடைப்புலம் எல்லாம் கேளுங்கள்.

    Comment by இறை நீசன் — November 21, 2006 @ 12:52 pm

  13. இப்னு பஷீர்,

    நேசகுமார் என்ற பெயரில் எழுதுவது தனி நபரல்ல என்றே எண்ணத் தோன்றுகிறது. தன்னிடம் வைக்கப்படும் கேள்விகளுக்கு வேலைப்பழு, கொலை மிரட்டல் etc என்ற பொய்க்காரணம் சொல்லி நழுவுவது இவரின் வாடிக்கை. உலகில் எங்காவது ஒரு முஸ்லிம் சம்பந்தப்பட்ட செய்தி கிடைத்தால் போதும், அதனை வைத்து திண்ணையிலும், சிஃபியிலும் ஜல்லியடிக்க மட்டும் நேரமிருக்கிறது.

    தமிழோவியத்தில் இவரின் இரவல் தொடருக்கு மறுப்பெழுதியபோது, முஹம்மது நபியைப் பற்றி விமர்சனங்களில் மிகவும் கண்ணியமாகவே வைக்கிறேன் என்றார். போகப்போக மனம் பிறழ்ந்து தன் சுயரூபத்தைக் காட்டினார். தற்போதைய இவரின் ஆவேசநிலையைக் காணும்போது, தன் மீதான பிம்பம் கட்டுடைக்கப் பட்டதால் எழுந்ததுள்ளதை அறியலாம். மனம் பிறழ்நிலை பற்றிய ஆய்வு இவருக்கே பொருந்துகிறது.

    ஜெயராமன் சார்,

    வலைப்பூக்களில் தங்களின் வருகைக்கு முன்பு, நேசகுமாரின் புரட்டல்களுக்கு பதில் கொடுப்பதற்காகவே நான் எழுதத் தொடங்கினேன். முஃமீன் என்பதை தமிழ்படுத்தி நல்லடியார் என்ற பெயரில் எழுதத் தொடங்கினேன். நல்லடியார் என்ற தமிழ் பதம் தங்களுக்கு நீசமொழியாகப் பட்டால் என்னை முஃமீன் என்றே அழைக்கலாம்.

    Comment by நல்லடியார் — November 21, 2006 @ 1:37 pm

  14. IF SOMEBODY SAYING SOMETHING WITH BAD INTENTION (DELIBERATELY OR WILLINGLY) AGAINST ISLAM AND MOHAMED (PBUH) MEANS HE IS THE SON OF B……….., LEAVE HIM. LET HIM TAKE HIS STAKE. ABU JOHRA

    Comment by MOHAMED USMAN — November 21, 2006 @ 3:34 pm

  15. //மீண்டும் ஒரு முயற்சி.
    விளைவு….. enjoying the altercation
    மனம் தளரா முயற்சிக்கு வாழ்த்துக்கள். //

    வாழ்த்துக்களுக்கு நன்றி சுல்தான், :-)

    Comment by இப்னு பஷீர் — November 21, 2006 @ 3:55 pm

  16. //இவரது பிறப்போடு ஒட்டிப் பிறந்த ஜாதி விஷயத்திலேயே பொய் சொல்லும் இந்த நபருக்கு…//

    தலித் அடையாளத்துடன் எழுதினால்தான் முசுலிம்களுக்கு தலித்துகள் மீது கோபம் வரும். தலித் முசுலிம் மோதல் உருவாகும். பார்ப்பனர் நிம்மதியாக இருப்பர். ஊர் ரெண்டுபட்டால் கூத்தடிக்கு கொண்டாட்டம் என்பதை அறியாதவரா நீங்கள்?

    //நீங்கள் சொக்கனாக இல்லாமலிருந்தால், ஒரு பிராமணராகவும் இல்லாதிருந்தால்,//

    இல்லாமலிருந்தால் என்பதற்கு 99 சதவீதம் வாய்ப்புகள் இல்லை என்றே படுகிறது. தான் நேச குமார் என்ற பெயரில் எழுதவில்லை என்பதை நிரூபிக்கும் பொறுப்பு பார்ப்பன சொக்கனுக்கும் உண்டு.

    Comment by வெங்காயம் — November 21, 2006 @ 5:47 pm

  17. //இருட்டில் மறைந்து நின்று கல்லெறியும் கோழைக்கும் உங்களுக்கும் என்னதான் வித்தியாசம்? வெளியில் வாருங்கள். நீங்கள் இஸ்லாம் பற்றி விவாதம் செய்ய வரும்போது, நீங்கள் சார்ந்த சமூகம் பற்றிய கேள்விகள் எழுந்தால் அதற்கும் பதிலளிக்க தயாராக வாருங்கள்.//

    ஏதார்த்தமான அழைப்பு

    இஸ்லாமியர்கள் முஸ்லிம் என்று வெளிப்படையாகவே தெரிவித்து எழுதுகிறார்கள். ஒன்றுக்குத் தலையையும் ஒன்றுக்கு வாலையும் காட்டுவதில்லை நேசகுமார் மாதிரி.

    Comment by முஸ்லிம் — November 21, 2006 @ 6:54 pm

  18. அவசியமான பதிவுக்கு பாராட்டுக்கள்.

    //ஆங்காங்கு பரிதாபமாக கிழிந்து தொங்கும் உங்கள் முகத்திரையை முற்றாக அகற்றுங்கள் நேசகுமார்! உங்களுக்கு உண்மை சொல்லவும் தெரியும் என்பதை முதலில் நிரூபணம் செய்யுங்கள். பிறகு பேசலாம் இஸ்லாம் பற்றி.//

    இந்த வரிகளுக்காவது நேசகுமார் அவர்கள் தன்னிலை விளக்கமளித்து நிரூபிக்க முன்வருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். (நான் மரியாதைக்காக அவர்கள் என்று கூறுவதை யாரும் பன்மையில் எடுத்துக்கொள்ள வேண்டாம்)

    Comment by abusalihaa — November 21, 2006 @ 9:11 pm

  19. //முதலில் உங்கள் மற்றும் இறை நேசன், அட்றா சக்கை, முகவைத் தமிழன் எல்லோரும் அவரவர் படத்தைப் போட்டு பயோகிராஃபியுடன் வலைப்பதிவில் ஏற்றுங்கள். பிறகு நேசகுமார் யார் அவர் முன் புலம், பின் புலம், இடைப்புலம் எல்லாம் கேளுங்கள்.//

    நீசன்,

    ஒரு மாறுதலுக்காகவாவது வேறு கேள்வி எதையும் கேட்கத் தோணவில்லையா உங்களுக்கு? ஏற்கனவே ஜயராமனுக்கும் secularindian-க்கும் பதில் சொல்லிவிட்ட கேள்வியையே கேட்டிருக்கிறீரே? நான் அப்படி என்ன தவறாக சொல்லி விட்டேன்? எங்கள் மார்க்கத்தை தரக்குறைவாக விமரிசனம் செய்யும் இந்த பொய்யரை, உமது கொள்கை என்ன என்பதை விளக்கிவிட்டு பிறகு எங்களிடம் வாரும் என்றேன். இந்த அளவுக்கு குறைந்த பட்ச நேர்மை கூட இல்லாத ஒரு போலி நபருக்கு நீங்களெல்லாம் ஏன் வக்காலத்து வாங்குகிறீர்கள் என்பது எனக்கு புரியவில்லை!

    அந்த நபர் செய்தது போல இந்து மதக்கடவுள்களை அசிங்கமாக சித்தரிக்கும் கேலிப்படங்களை என் வலைப்பதிவில் ஏற்ற எனக்கு எவ்வளவு நேரம் ஆகும் என்று நினைக்கிறீர்கள்? அசிங்கமான போஸில் பெண் கடவுள்கள், கையில் பீர் பாட்டில்களுடன் கடவுள்கள், டாய்லட் இருக்கையில் ஆண் கடவுள் என இணையத்தில் தேடினால் படங்கள் வந்து கொட்டுகிறதே! ஆனால், பயப்படாதீர்கள், நான் செய்ய மாட்டேன். எனது மார்க்கம் ‘பிறர் வணங்கும் கடவுளர்களை ஏசாதே!’ என்று எனக்கு கட்டளையிட்டிருக்கிறது.

    “என்னோட ஜாதியைப் பத்தின உண்மைகளை என்னமா புட்டுப் புட்டு வச்சிட்டீங்க! எனக்கு அப்படியே மெய் சிலிர்த்துப் போச்சு! எங்க ஆட்கள் இதையெல்லாம் எங்ககிட்ட சொல்லாம மறைச்சு வச்சுட்டாங்க. இப்போ உண்மை தெரிஞ்சு போச்சு. என் ….லை அறுத்து எறிஞ்சுட்டேன். என் ….யை மழிச்சுட்டேன்” என்றெல்லாம் வேறு வேறு பெயர்களில் 20, 25 பின்னூட்டங்கள் போட்டுக் கொள்ள எனக்கு எவ்வளவு நேரம் பிடிக்கும் என்று நினைக்கிறீர்கள்? இது போன்ற அல்ப காரியங்களிலெல்லாம் நான் இறங்க மாட்டேன். தவிர ‘பொய் சொல்லாதே!’ என்று என் மார்க்கம் எனக்கு கட்டளையிட்டிருக்கிறது.

    இஸ்லாத்தைப் பற்றி விமரிசனம் செய்யவரும் நேசகுமார் போன்ற நபர்களிடம் நாம் எதிர்பார்ப்பது உண்மை, விவாதத்தில் நேர்மை, நாகரீகமான வார்த்தைகள், கண்ணியம் தவறாமை, இவைதான். இஸ்லாம் பற்றி பேச விரும்புகிறீர்களா? நாம் தயார். ஒரு ஒப்பீட்டு அளவில் விவாதத்தை தொடங்குவோம். உதாரணமாக பெண்ணுரிமை பற்றி பேசுவதென்றால், அது பற்றி உங்கள் மதக் கொள்கைகள் என்ன சொல்கிறது? அந்தக் கொள்கைகள் இஸ்லாத்தை விட எந்த அளவில் உயர்வானது என்பதை நீங்களே முதலில் விளக்குங்கள். பிறகு எங்கள் வாதங்களை வைக்கிறோம். நீங்கள் தயாரா?

    Comment by இப்னு பஷீர் — November 22, 2006 @ 2:25 am

  20. நீசன்,

    நீங்கள் வக்காலத்து வாங்கும் நபரின் புனைபெயரின் பின் இருக்கும் கயமைத் தனமான சிந்தனையை நான் சொல்லியுள்ளேனே அதைப் பார்த்தபின்புமா உங்களுக்கு இப்படிக் கேள்விகள் பிறக்கின்றன?

    அல்லது அது தவறென்று சிறிது கூடப்படவில்லையா உங்களுக்கு? நானே அமல்ராஜ் என்ற பெயரில் இந்துமதத்தை நிந்தித்து பதிவுகள் இட்டால் கிறிஸ்தவத்தை எதிர்த்து தானேய்யா உம்மைப் போன்றோர் வருவீர்கள்? புரிகிறதா இந்த நரித்தனமான குயுக்தி?

    Comment by அட்றா சக்கை — November 22, 2006 @ 5:12 am

  21. நல்லடியார் ஐயா,

    ////ஜெயராமன் சார்,

    வலைப்பூக்களில் தங்களின் வருகைக்கு முன்பு, நேசகுமாரின் புரட்டல்களுக்கு பதில் கொடுப்பதற்காகவே நான் எழுதத் தொடங்கினேன். முஃமீன் என்பதை தமிழ்படுத்தி நல்லடியார் என்ற பெயரில் எழுதத் தொடங்கினேன். நல்லடியார் என்ற தமிழ் பதம் தங்களுக்கு நீசமொழியாகப் பட்டால் என்னை முஃமீன் என்றே அழைக்கலாம். /////

    மன்னிக்கவும். தங்கள் இயற்பெயர் இதுவாக இருந்தால் அதை தெரிந்துகொண்டதற்கு நன்றி. இவ்வாறு நீங்கள் உங்களை அடையாளங்காட்டி பின் எந்த புனைப்பெயரில் பதிந்தாலும் எனக்கு மகிழ்ச்சிதான். அவ்வாறு அடையாளம்காட்டாதவர்களில் சிலரே (எல்லோரும் அல்ல) கயமை பதிவுகளை எழுதுகிறார்கள் என்பது வெளிக்கூடு. இந்த முகமிலிகளில் இஸ்லாமியர்கள், இந்துத்துவா, திராவிடம், ஆரியம் என்று எல்லாமும் அடக்கம். ஒரே கூத்துதான்.

    நன்றி

    Comment by ஜயராமன் — November 22, 2006 @ 6:39 am

  22. warw wa!

    Comment by adiyan — November 22, 2006 @ 6:48 am

  23. ஜயராமன் சார், நேச குமார் போன்றவர்கள் எழுதுவது கயமைத்தனம் என்பதை ஒத்துக்கொண்ட வகையில் பாராட்டலாம்.

    பொதுவாக நானறிந்தவரை, முஸ்லிம்கள், தமது மதம் பற்றியே எழுதினாலும் பிற மதத்தவரைத் தாக்கி எழுதுவதில்லை. (இப்போது தான் யாரோ ஒரு ‘இறையடியான்’ என்பவரைப் பார்க்கிறேன். அதுவும் தூண்டப்பட்ட எதிர்வினை என்று புரிகிறது). ஆனால், (சில) பிராமணர்கள் இஸ்லாத்தை எவ்வகையிலாவது தூற்றி எழுதுவதையே ‘கடமை’யாகக் கொள்வது ஏன்? யாரால் தரப்பட்டதாம் இக்கொள்கை?
    தைரியமாக வெளியிடத்தகுந்ததாக இருந்தால் சொல்லலாமே. ஆனால், தன்னெஞ்சறிய பொய்யற்க. பொய்த்தபின்….

    Comment by கருத்து — November 22, 2006 @ 7:32 am

  24. //அந்த நபர் செய்தது போல இந்து மதக்கடவுள்களை அசிங்கமாக சித்தரிக்கும் கேலிப்படங்களை என் வலைப்பதிவில் ஏற்ற எனக்கு எவ்வளவு நேரம் ஆகும் என்று நினைக்கிறீர்கள்? அசிங்கமான போஸில் பெண் கடவுள்கள், கையில் பீர் பாட்டில்களுடன் கடவுள்கள், டாய்லட் இருக்கையில் ஆண் கடவுள் என இணையத்தில் தேடினால் படங்கள் வந்து கொட்டுகிறதே! ஆனால், பயப்படாதீர்கள், நான் செய்ய மாட்டேன். எனது மார்க்கம் ‘பிறர் வணங்கும் கடவுளர்களை ஏசாதே!’ என்று எனக்கு கட்டளையிட்டிருக்கிறது.//

    நன்றி இப்னு சார்.
    மற்ற மதங்களை தாக்குகிற உள்நோக்கத்தில் முஸ்லிம்கள் இல்லை என்பதை உணர்த்துகிறீர்கள். உங்களுடைய உணர்வுகள் புரிகின்றன. இறையடியான் என்று பெயர் வைத்துக்கொண்டு எழுதுபவருக்கும் நீங்கள் எடுத்துச் சொல்லுங்கள்.அதுபோல, நேச குமார் போன்ற எழுத்துத் திறமை மிக்கவர்களுக்கும் எழுத்தை இனியேனும் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும்படி ஜயராமன் போன்ற சகஜாதியினர்தாம் சொல்ல வேண்டும்.
    இனியாவது, தமிழ்வலையுலகில் கன்ஸ்ட்ரக்டிவ்வாக இயங்கலாம் நண்பர்களே.இன்சா அல்லா.

    தமிழ்

    Comment by தமிழ் — November 22, 2006 @ 7:43 am

  25. நேர்மையான, நிதானமான பதிவு; பாராட்டுகள்!

    Comment by அழகு — November 22, 2006 @ 8:59 pm

  26. அன்பின் இப்னு பஷீர் அவர்களே,
    பிற மதங்களை விமர்சிப்பவர் எவராயிலுந்தாலும் தனது கொள்கை என்ன? என்பதைத் தெளிவாகச் சொல்லி, அல்லது நான் எந்தக் கொள்கையுமற்றவன் என்பதையாவது உண்மையைச் சொல்லியாவது பிறர் கொள்கைகளைப் பற்றி விமர்சிக்க வேண்டும் இதுதான் நேர்மையான விமர்சகனுக்கு அழகு!

    நேச குமார் என்பவரிடம் இந்த எழுத்து நேர்மையென்பது அணுவளவும் கிடையாது, எதிர்வாதம் செய்யும் நேர்மையும் அறவே கிடையாது என்பதுதான் கண்கூடு. மிகச்

    சரியாகத்தான் சொல்லியுள்ளீர்கள் பொய்யென்றத் ‘’திரையை அகற்றுங்கள்'’ என்று நன்றி!

    அன்புடன்,
    அபூ முஹை

    Comment by அபூ முஹை — November 24, 2006 @ 4:31 pm

RSS feed for comments on this post.

Leave a comment

Line and paragraph breaks automatic, e-mail address never displayed, HTML allowed: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <code> <em> <i> <strike> <strong>



Anti-spam measure: please retype the above text into the box provided.