கிழக்கு பதிப்பகமும் மதச் சண்டைகளும்!
March 18, 2007கிழக்கு பதிப்பகத்தின் சமீபத்திய வெளியீடு சேவியர் எழுதிய ‘இயேசு என்றொரு மனிதர் இருந்தார்’. இந்நூலைப் பற்றி நூலாசிரியர் சேவியர் தனது வலைப்பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். இந்தப் பதிவில் பின்னூட்டமிட்டிருந்த ஜோ என்ற வலைப்பதிவர் “இயேசு என்றொரு மனிதர் இருந்தார்” ..சக வலைப்பதிவாளர் அரவிந்தன் நீலகண்டன் யேசு ஒரு கற்பனை கதாபாத்திரம் என்று சொல்லி வருகிறார் .அவருக்கு ஒரு இலவச பிரதி அனுப்பி வைக்கலாம்..ஹி..ஹி‘ என்று கருத்து சொல்லியிருக்கிறார்.
மேலே தொடருமுன் இந்த இடத்தில் ஒரு சின்ன பிளாஷ்பேக்!
அக்டோபர் 2004. வலைப்பதிவுகள் பிரபலமாகியிராத காலம். தமிழ் எழுத்தார்வலர்கள் தங்களுக்குள் கருத்து பரிமாற்றங்கள் நிகழ்த்த மடலாற்குழுக்களைச் சார்ந்திருந்தனர். மரத்தடி, ராயர் காப்பி கிளப் போன்ற மடலாற்குழுக்கள் பிரபலமாக இருந்தன. பா.ராகவன், மாலன் போன்ற பிரபல எழுத்தாளர்களும் அந்த விவாதங்களில் பங்கேற்றிருந்தனர்.
அப்போது கிழக்கு பதிப்பகம் துவங்கப் பட்டு ஓராண்டு கூட நிறைவடைந்திருக்கவில்லை. அப்போது அவர்கள் வெளியிட்டிருந்த புத்தகங்களுள் ஒன்று நாகூர் ரூமி எழுதிய “இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்”. இந்தப் புத்தகத்தை அவர்கள் நேசகுமார் என்ற புனைப்பெயருடைய, மடலாற்குழுக்களில் கூட அப்போது பிரபலமாகியிராத, இன்று வரை தன்னை அடையாளப் படுத்திக் கொள்ளாத ஒரு நபருக்கு இலவசமாக அனுப்பினார்களாம். காரணம், இந்த நபர் மரத்தடி யாஹூ குழுமத்தில் இஸ்லாம் பற்றிய விவாதங்களில் ஈடு பட்டிருந்தாராம். அவரது தவறான புரிதல்களை தெளிவிக்கவே இந்தப் புத்தகத்தை இலவசமாக அனுப்பி வைத்தார்களாம்.
(”இந்தப் புத்தகம் எனக்கு கிடைத்ததின் பின்னணி சுவாரசியமானது.மரத்தடி யாஹ¨ குழுமத்தில் இஸ்லாம் பற்றிய விவாதங்களின் போது, நான் நாகூர் ரூமிக்கு சில கேள்விகளை முன்வைக்கவே, இப்புத்தகத்தை பதிப்பித்த கிழக்குப் பதிப்பகத்தின் உரிமையாளர் திரு. சேஷாத்ரி பத்ரி, நாகூர் ரூமி பற்றிய எனது ‘தவறான புரிதல்களை ‘ தெளிவிக்க எனக்கு இப்புத்தகத்தை இலவசமாக அனுப்பிவைத்திருந்தார்.” - நேசகுமார், Thinnai - October 22nd, 2004)
பிளாஷ்பேக்கை இங்கு தற்காலிகமாக நிறுத்திவிட்டு இயேசு பற்றிய புத்தகத்திற்கு வருவோம்.
இஸ்லாம் பற்றிய தவறான புரிதல்களை தெளிவிக்க நேசகுமாருக்கு இலவசமாக புத்தகம் அனுப்பிய கிழக்கு பதிப்பகம், இயேசு பற்றிய அரவிந்தன் நீலகண்டனின் தவறான புரிதல்களை தெளிவிக்க ஏன் இந்தப் புத்தகத்தை அவருக்கு இலவசமாக அனுப்பவில்லை?
‘மகாகவி பாரதியின் பகவத் கீதை உரை’ என்ற நூலை பதிப்பித்திருக்கும் கிழக்கு பதிப்பகம், கீதையை ‘தவறாக’ புரிந்து கொண்டதால் ‘கீதையின் மறுபக்கம்’ எழுதிய கி.வீரமணிக்கு ஏன் இலவசப் பிரதி அனுப்பவில்லை?
‘ஹிந்து மதத்தை புரிந்து கொள்ளுங்கள்’ ‘பக்தி இயக்கம்’ போன்ற அவர்களின் புத்தகங்களை பார்ப்பனீயத்தைச் சாடி எழுதிவரும் விடாது கருப்பு போன்ற பதிவர்களுக்கோ, இந்துமதத்தை ‘தவறாக புரிந்து வைத்திருக்கும்’ முஸ்லிம் பதிவர்களுக்கோ ஏன் அனுப்பவில்லை?
ஏன் இந்தப் பாரபட்சம்?
சரி..பிளாஷ்பேக்கை மீண்டும் தொடருவோம்:
கிழக்கு பதிப்பகம் நேசகுமாருக்கு இலவச புத்தகம் அனுப்பியதால் இரண்டு பின்விளைவுகள் ஏற்பட்டன.
1. குறுகிய காலத்திலேயே அந்தப் புத்தகங்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன. ( பத்ரி சேஷாத்ரி, திண்ணை, நவம்பர் 11 2004).
2. இரண்டாவது பின்விளைவை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். புத்தக விமரிசனம் என்ற பெயரில் நேசகுமார் எழுதிய கட்டுரைக்கு முஸ்லிம்கள் தரப்பிலிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அவர்களுக்கு பதிலளிப்பதற்காகவே நேசகுமார் தொடர்ந்து எழுத நேரிட்டது.
(எதோ நாகூர் ரூமி அவர்களுக்கு பதிலளித்தோம், சரி, இத்துடன் நிறுத்திக் கொண்டு வேறு வேலையைப் பார்ப்போம் என்று நினைத்துக் கொண்டிருந்த என்னை சீண்டிவிட்டது இந்த இரண்டு இஸ்லாமிய சகோதரர்கள் தாம். - நேசகுமார்)
அவர் பிடித்த ‘புலி வாலை’ விடமுடியாத நேசகுமார், இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சார வலைத்தளங்களிலிருந்து சில ஆதாரமற்ற தகவல்களை எடுத்து வைத்து தனது சப்பைக் கட்டுகளை தொடர்ந்தார். இந்த விவாதங்கள் மடலாற்குழுக்களிலிருந்து, திண்ணை, தமிழோவியம் போன்ற இணைய சஞ்சிகைகள், பின் வலைப்பதிவுகள் என தொடர்ந்து கொண்டே சென்றது.
இச்சூழலில், நேசகுமாரைத் பின்தொடர்ந்து அவரைப்போலவே ‘முகம் மறைத்த’ வேறு சில ‘விமர்சகர்களும்’ இணையத்தில் தலை காட்டத் தொடங்கினர். தகுதி, தராதரம் எதுவுமில்லாத அவர்கள் ‘இஸ்லாம் பற்றிய விவாதம்’ என்ற பெயரில் தங்கள் அடாவடித்தனங்களை அரங்கேற்றினர். ‘நக்குற நாய்க்கு செக்கென்ன, சிவலிங்கமென்ன’ என்று ஒரு சொலவடை உண்டு. அதற்கேற்றாற்போல் இந்த ‘திடீர் விமர்சகர்கள்’ முஸ்லிம்கள் உயிரென மதிக்கும் முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றியும் அவர்களின் துணைவியரான முஸ்லிம்களின் அன்னையரைப் பற்றியும் கீழ்த்தரமான வார்த்தைகளில் எழுதினர். நேசகுமார் என்பவரும் இந்த முகமூடிகள் சிலரின் எழுத்துக்களை தனது பதிவுகளில் மேற்கோள் காட்டி எழுதினார். டென்மார்க் நாளிதழில் வெளியான கேலிச்சித்திரங்களை தமது பதிவில் வெளியிட்டும் தமது வெறியை தீர்த்துக் கொண்டார். அதுவரை கண்ணியமான முறையில் அவருடன் விவாதங்கள் புரிந்து வந்த முஸ்லிம் பதிவர்கள் அவரது உண்மை உருவத்தைக் கண்டு அதிர்ந்து நின்றனர். அன்று தொடங்கி இன்றளவும் தமிழ் இணையத்தில் முழு வீச்சில் நடந்துவரும் இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சாரங்களில் மருந்துக்கு கூட நாகரீகம், கண்ணியம், நேர்மை, போன்ற சொற்களுக்கு இடமில்லை. இந்த ‘கலாச்சாரத்தை’ இணையத்தில் தொடங்கி வைத்த பெருமை நேசகுமார் அவர்களையே சாரும்.
இவ்வளவும் நடந்ததன் ஆரம்பப் புள்ளி அந்த ‘இலவசப் புத்தகம்’தான் என்பதை முஸ்லிம்களால் என்றும் மறக்க வியலாது.
ஒரு இலவசப் புத்தகம் அனுப்பியதன் மூலம் ‘இஸ்லாம் ஒரு எளிய அறிமுகம்’ விற்றுத் தீர்ந்ததுபோல, அதே ‘வெற்றி பார்முலா’வைப் பின்பற்றி கிழக்கு பதிப்பகம் தாம் வெளியிடும் மற்ற மதங்கள் தொடர்பான புத்தகங்களையும் விரைவிலேயே விற்று முடித்து நிறைய லாபம் பெறுவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்! பக்க விளைவுகள் பற்றி யாருக்கு என்ன கவலை?
அரசியல்ல இதெல்லாம் சஹஜமப்பா…..
Comment by பங்காளி — March 18, 2007 @ 8:06 am
பிஸினெஸ்லெ இதெல்லாம் சகஜம்பா.
விற்பனைத் தந்திரம்!
Comment by அழகு — March 18, 2007 @ 8:14 am
//அரசியல்ல இதெல்லாம் சஹஜமப்பா….. //
//பிஸினெஸ்லெ இதெல்லாம் சகஜம்பா.//
பங்காளி, அழகு, உங்கள் கருத்துக்களுக்கு நன்றி!
Comment by இப்னு பஷீர் — March 18, 2007 @ 9:13 am
Business Ethics-ஐ பொருட்படுத்தாத கிழக்கு பதிப்பகத்தின் விற்பனைத் தந்திரங்களுக்கு இன்னுமொரு உதாரணம் கொடுக்கலாம்.
‘சமநிலைச் சமுதாயம்’ பிப்ரவரி 2007 இதழில் சென்னை புத்தகக் கண்காட்சி பற்றிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி:
“கிழக்கு பதிப்பகம் மத்திய கிழக்கு நாடுகளின் பிரச்சினைகள் குறித்து பல்வேறு தொகுதிகளாக தனி தலைப்புகளில் நூல்களை வெளியிட்டிருந்தது. அவை முஸ்லிம் உலகின் பிரச்சினைகளை கவனப்படுத்தினாலும், மத்தியக் கிழக்கு நாடுகளில் சுதந்திர வேட்கையோடு போராடிவரும் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாஹ் அமைப்புகள் குறித்த புத்தகங்களுக்கு ‘பயங்கரத்தின் முகவரி’ என்று ‘துணைத் தலைப்பி’ட்டிருப்பது நடுநிலையாளர்கள் மத்தியில் முணுமுணுப்பை ஏற்படுத்தியது. ஹிட்லர், முசோலினி குறித்து வெளியாகியுள்ள நூல்களுக்கு இதுபோன்ற எந்தத் துணைத் தலைப்புகளும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.
இனிவரும் நாட்களிலாவது, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்துத்துவ மதவாத இயக்கங்கள், இந்தியாவின் மிக மோசமான பாசிஸ்டு மோடி குறித்தும் புத்தகங்களை வெளியிட்டு கிழக்குப் பதிப்பகம் தனது நடுவு நிலையைப் பரைசாற்றுமா என்று சிலர் கேட்டனர்.”
Comment by இப்னு பஷீர் — March 18, 2007 @ 9:32 am
//இந்த ‘கலாச்சாரத்தை’ இணையத்தில் தொடங்கி வைத்த பெருமை நேசகுமார் அவர்களையே சாரும். //
சகோதரர் இப்னு பஷீர்,
இஸ்லாம் பற்றிய விவாதங்களும் விமர்சனங்களும் பெருமானார் அதனை மக்கத்துக் காஃபீர்களிடம் எடுத்துச் சென்றதிலிருந்தே தொடர்கிறது. முஹம்மது நபிக்கு எதிராக களமிறங்கியவர்களை அரவணைத்தே இஸ்லாம் அவர்களையும் உலகையும் ஆட்கொண்டுள்ளது.
முஹம்மது நபியின் நபித்துவத்தை விமர்சித்தவர்களும் எதிர்த்தவர்களும், அவரின் சொந்த வாழ்வில் குற்றம் காண முடியாமல் தவித்தனர். சொல்லப்போனால் அவர்களின் எதிர்ப்புகள் மழுங்கி மண்ணாய்ப் போனதற்கு முஹம்மது நபியைப் பற்றி அறிந்தவர்களிடம், எதிர்ப்புப் பிரச்சாரமும் அவதூறுகளும் எடுபடாததே முக்கியக் காரணம்.
நேசகுமாராகட்டும் அல்லது இஸ்லாத்தை விமர்சிக்கும் எவராக இருந்தாலும் இஸ்லாத்தை விடச் சிறந்த ஒன்றைச் சொல்லி அல்லது தாங்களும் பின்பற்றி உலகமக்களை உய்வித்துக் கொண்டிருக்கும் கொள்கைகளைச் சொல்லி ஒப்பிடமுடியாத உயரத்தில்தான் இஸ்லாம் இருக்கிறது. இதனை நன்கு அறிந்தே அவதூறுகளால் தோரணம் கட்டி இஸ்லாத்தைக் கலங்கப் படுத்தலாம் என்ற கனவில் இருக்கிறார்கள்.
அவ்வப்போது எழுதி வந்தாலும் முகமூடிகளைக் கிழிக்க வேண்டும் என்ற கங்கணத்தோடுதான் இருக்கிறீர்கள் போலும்! வாழ்த்துக்கள்!!!
Comment by நல்லடியார் — March 18, 2007 @ 9:54 am
//கிழக்குப் பதிப்பகம் தனது நடுவு நிலையைப் பரைசாற்றுமா//
நேசகுமார் என்ற பெயரில் எழுதிவரும் சொக்கனை எழுதத் தூண்டியதுடன் அவனுக்குப் பின்புலமாக இருந்து வருவது கிழக்குப் பதிப்பகத்தின் பத்ரி என்ற பார்ப்பனர்தான் என்பதை அவர்கள்தான் அறியாமல் இருக்கின்றனர். இணைய தொடர்பில் உள்ள நீங்களும் அறியாமல்தான் இருக்கிறீர்களா?
இது நான் கூறும் குற்றசாசாட்டு அல்ல. ஏற்கனவே ஆப்பு என்பவர் சுமத்திய குற்றச்சாட்டு. இதனை பத்ரி இன்னும் மறுக்கவில்லை என்பதை கவனத்தில் கொள்க.
Comment by அபூசுஹைமா — March 18, 2007 @ 9:58 am
ஆஹா இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? பலே கில்லாடிகள் தான்.
காசு பண்ணுறதுக்கு சிலர் சட்டத்தை ஏமாத்துவாங்க. இவுங்க தங்களோட மன சாட்சியையே ஏமத்திக்கிட்டு இருக்காங்க..
வித்தியாசமான கோணத்தில் சிந்தித்து அருமையான அலசலை வழங்கியுள்ளீர்கள்.
கிழக்குக்குப் பின்னாடி இவ்ளோ பயங்கர மார்கெட்டிங் ஸ்ட்ரேட்டிஜியா? மோடிக்குச் சற்றும் இவர்கள் சளைத்தவ்வர்கள் இல்லை போல….
Comment by சவூதி தமிழன் — March 18, 2007 @ 9:59 am
//நேசகுமாராகட்டும் அல்லது இஸ்லாத்தை விமர்சிக்கும் எவராக இருந்தாலும் இஸ்லாத்தை விடச் சிறந்த ஒன்றைச் சொல்லி அல்லது தாங்களும் பின்பற்றி உலகமக்களை உய்வித்துக் கொண்டிருக்கும் கொள்கைகளைச் சொல்லி ஒப்பிடமுடியாத உயரத்தில்தான் இஸ்லாம் இருக்கிறது. //
யாராலும் மறுக்கவியலாத ஆணித்தரமான உண்மை. கருத்துக்களுக்கு நன்றி நல்லடியார் அவர்களே!
Comment by இப்னு பஷீர் — March 18, 2007 @ 10:11 am
//நேசகுமார் என்ற பெயரில் எழுதிவரும் சொக்கனை எழுதத் தூண்டியதுடன் அவனுக்குப் பின்புலமாக இருந்து வருவது கிழக்குப் பதிப்பகத்தின் பத்ரி என்ற பார்ப்பனர்தான் என்பதை அவர்கள்தான் அறியாமல் இருக்கின்றனர். இணைய தொடர்பில் உள்ள நீங்களும் அறியாமல்தான் இருக்கிறீர்களா?//
கருத்திற்கு நன்றி அபூசுஹைமா அவர்களே! நீங்கள் குறிப்பிடும் வலைப்பதிவை நானும் பார்த்தேன். அது பற்றிய எனது எண்ணங்களையும் இங்கு பதிந்திருக்கிறேன்.
திரையை அகற்றுங்கள் நேசகுமார்!
Comment by இப்னு பஷீர் — March 18, 2007 @ 10:21 am
//காசு பண்ணுறதுக்கு சிலர் சட்டத்தை ஏமாத்துவாங்க. இவுங்க தங்களோட மன சாட்சியையே ஏமத்திக்கிட்டு இருக்காங்க..//
கருத்துக்களுக்கு நன்றி சவூதி தமிழன் அவர்களே!
Comment by இப்னு பஷீர் — March 18, 2007 @ 10:30 am
இப்னு பஷீர் அவர்களே,
அப்போ எல்லாமே உள் கூத்தா?
Comment by அபூ முஹை — March 18, 2007 @ 6:34 pm
சகோ. இப்னு பஷீர்,
பொய் வேடதாரிகளை அழகாக தோலுரித்து காட்டியிருக்கிறீர்கள். ஆனால் கண்ணியம் நேர்மை என்றால் என்ன என்று தெரியாக இந்த தெருப்****** நீங்கள் இன்னும் மரியாதையாக எழுதுவது ஏன் என்று எனக்கு புரியவில்லை. ***** உழன்ரு கொண்டிருக்கும் இவர்களை **** **** என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்றது?
====
சகோ. மரைக்காயர், உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. அதில் சில வார்த்தைகளை நீக்கியிருக்கிறேன். புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
இப்னு பஷீர்
Comment by மரைக்காயர் — March 18, 2007 @ 11:45 pm
என்னத்த சொல்றதண்ணா
முஸ்லிம் ஜால்ரா அதிகாமாப் போச்சுங்கண்ணா
தெருக்கவுண்டன்
Comment by kanmani — March 19, 2007 @ 12:54 am
http://groups.yahoo.com/group/Maraththadi/message/18654
http://groups.yahoo.com/group/Maraththadi/message/18657
one of his earlier mails - http://groups.yahoo.com/group/Maraththadi/message/16336
Pari’s response to Nesakumar’s intro mail for aaNduvizaa -http://groups.yahoo.com/group/Maraththadi/message/18660
இப்ப எல்லாரும் கேள்வி மேல கேள்வி கேட்பதற்கான தொடக்கம் இங்கே - http://groups.yahoo.com/group/Maraththadi/message/19355
Badri offered to send the book to Nesakumar and requested/told him to write a review. I dont know if the book was sent or not. But Nesakumar’s posts continued. Badri’s mail could be read here - http://groups.yahoo.com/group/Maraththadi/message/19360
Further discussions could be read here -
http://groups.yahoo.com/group/Maraththadi/msearch?query=nesa+kumar&pos=60&cnt=10
http://groups.yahoo.com/group/Maraththadi/msearch?query=nesa+kumar&pos=50&cnt=10
http://groups.yahoo.com/group/Maraththadi/msearch?query=nesa+kumar&pos=40&cnt=10
http://groups.yahoo.com/group/Maraththadi/msearch?query=nesa+kumar&pos=30&cnt=10
http://groups.yahoo.com/group/Maraththadi/msearch?query=nesa+kumar&pos=20&cnt=10
http://groups.yahoo.com/group/Maraththadi/msearch?query=nesa+kumar&pos=10&cnt=10
http://groups.yahoo.com/group/Maraththadi/msearch?query=nesa+kumar&pos=0&cnt=10
நேசக்குமார் என்ற சொக்கனைப் பற்றி மேலும் அறிய படியுங்கள்.
நேசக்குமார் என்ற போர்வையில் எழுதும் சொக்கனுக்கு சிங்கப்பூரில் இருந்து எம்கேகுமார் என்பவரும் கட்டுரைகள் எழுதி வழங்கி வருகிறார்!
Comment by ஆப்பு — March 19, 2007 @ 1:13 am
இது என்னங்க காமெடியா இருக்குது. ஒரு நல்லெண்ணத்தோட சிலர் செய்யுற காரியங்கள் இப்படி எதிர்மறை எதிர்விளைவுகளை ஏற்படுத்தலாம். அதுக்காக அந்த நல்லென்ணம் தவறாக ஆகாது. நேசக்குமாருக்கு புத்தகம் அனுப்பினார்கள் என்றால் அவர் முகமூடி இல்லையென்றாகிவிடூகிறதே? அவர் ஏற்கனவே இஸ்லாமைப் பற்றி மோசமான அபிப்ராயம் கொண்டவர். இதுவே அவரின் அடையாளமாகவும் ஆகும் அளவுக்கு செயல்படுகிறவர், என்றால் புத்தகம் வழங்கினாலும் இல்லாவிட்டாலும் அவர் இதை செய்துகொண்டேதான் இருப்பார். என்ன ஒரு வருஷம் கழிச்சு வந்திருப்பாராயிருக்கும். கிழக்கு பதிப்பகத்துக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதையும் தெரிவித்ஹ்துக் கொள்கிறேன்.
Comment by சிறில் அலெக்ஸ் — March 19, 2007 @ 2:55 am
//நேசக்குமாருக்கு புத்தகம் அனுப்பினார்கள் என்றால் அவர் முகமூடி இல்லையென்றாகிவிடூகிறதே?//
அதே தான்! மிகச் சரியாக பாயிண்டை பிடித்துள்ளார் நண்பர் அலெக்ஸ். எவருக்கும் தெரியாத ஒரு நிழல் மனிதரின் வீடுவிலாசம் அத்தனையும் விலாவாரியாக கிழக்கு பதிப்பகத்தாருக்கு எப்படித் தெரிந்தது???
எப்படியோ புத்தக விற்பனை உயர்ந்ததற்கு நன்றி வேறு சொன்னார் இல்லையா?
Comment by சவூதி தமிழன் — March 19, 2007 @ 5:38 am
//அப்போ எல்லாமே உள் கூத்தா?
Comment by அபூ முஹை//
உள்குத்து கேள்விப்பட்டிருக்கிறேன். ‘உள் கூத்து’ என்ற வார்த்தையை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.
புதியதொரு வார்த்தையை தந்ததற்கு நன்றி சகோ. அபூமுஹை. இந்தப் பதிவின் பேசப்படுபொருளுக்கு இது மிகப்பொருத்தமான வார்த்தைதான் என்று நினைக்கிறேன்.!
Comment by இப்னு பஷீர் — March 19, 2007 @ 8:08 am
சகோ. மரைக்காயர்,
உங்கள் கோபம் புரிகிறது. ஆனால் சில வார்த்தைப் பிரயோகங்களை நீங்கள் தவிர்த்துக் கொள்வது நல்லது. அந்த வார்த்தைகளில் இருக்கும் காரத்தை உங்கள் வாக்கியங்களில் ஏற்றுங்கள். சம்பந்தப்பட்டவர்களுக்கு உங்கள் கருத்துக்களை உறைக்குமாறு சொல்லுங்கள். நன்றி.
Comment by இப்னு பஷீர் — March 19, 2007 @ 8:18 am
நேசகுமார் என்ற நபர் பற்றிய பிண்ணனி தகவல்களை தொகுத்துத் தந்த நண்பர் ஆப்பு அவர்களுக்கு நன்றி. அந்தச் சுட்டியில் இருக்கும் தகவல்களை font பிரச்னையால் படிக்க முடியவில்லை. எழுத்துரு மாற்றி கொண்டு அதைப் படிக்க முயல்கிறேன்.
Comment by இப்னு பஷீர் — March 19, 2007 @ 8:21 am
நண்பர் சிறில் அலெக்ஸ் அவர்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!
//இது என்னங்க காமெடியா இருக்குது. ஒரு நல்லெண்ணத்தோட சிலர் செய்யுற காரியங்கள் இப்படி எதிர்மறை எதிர்விளைவுகளை ஏற்படுத்தலாம். அதுக்காக அந்த நல்லென்ணம் தவறாக ஆகாது.//
அப்படித்தான் நானும் பல நாட்கள் நினைத்திருந்தேன்.
//நேசக்குமாருக்கு புத்தகம் அனுப்பினார்கள் என்றால் அவர் முகமூடி இல்லையென்றாகிவிடூகிறதே? //
அவர் இன்றளவும் முகமூடிதான். அவரை நேரில் சந்தித்தவர்கள் (அல்லது சந்தித்ததாக சொன்னவர்கள்) வெகு சிலர். இப்போதே இந்த நிலை என்றால் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு நேசகுமார் ஒரு இணைய அனாமதேயம். அப்படிப்பட்ட ஒரு நபரின் முகவரியை தேடிப்பிடித்து கிழக்கு பதிப்பகம் தனது புத்தகத்தை இலவசமாக அனுப்பி வைக்கிறார்கள். காரணம் என்னவாக இருக்கும்? நீங்கள் சொன்னது போல ஒரு நல்லெண்ண முயற்சி என்று வைத்துக் கொண்டால் கூட, நாமறிந்த வரையில், இந்த ஒரு முயற்சியோடு அந்த ‘நல்லெண்ணம்’ முற்றுப் பெற்று விட்டது போல தோன்றுகிறதே?
கிருஸ்துவத்தை தவறாக புரிந்து கொண்டிருப்பவர்களுக்கு ஒரு நல்லெண்ண முயற்சியாக ஏன் இயேசு பற்றிய புத்தகத்தை அனுப்பவில்லை?
இந்துமதத்தை தவறாக புரிந்து கொண்டிருப்பவர்களுக்கு ஒரு நல்லெண்ண முயற்சியாக ஏன் இந்து மதம் பற்றிய புத்தகத்தை இலவசமாக அனுப்பவில்லை? ‘இந்து மத வேதங்கள் எனக்கு விளங்காத விஷயம்’ என்று சொன்ன இதே நேசகுமாருக்கே இவர்களின் இந்துமதத்தைப் பற்றிய புத்தகங்கள் பயன்படுமே?
//அவர் ஏற்கனவே இஸ்லாமைப் பற்றி மோசமான அபிப்ராயம் கொண்டவர். இதுவே அவரின் அடையாளமாகவும் ஆகும் அளவுக்கு செயல்படுகிறவர், என்றால் புத்தகம் வழங்கினாலும் இல்லாவிட்டாலும் அவர் இதை செய்துகொண்டேதான் இருப்பார். என்ன ஒரு வருஷம் கழிச்சு வந்திருப்பாராயிருக்கும்.//
போட்ட வேடத்தை கலைக்க முடியாத சூழ்நிலை. வேறு வழியில்லாமல் தொடர வேண்டியதாகி விட்டது. இதை நான் கற்பனையாக சொல்லவில்லை. நேசகுமார் சொன்ன வார்த்தைகளையே மேற்கோள் காட்டியிருக்கிறேன்.
“…எதோ நாகூர் ரூமி அவர்களுக்கு பதிலளித்தோம், சரி, இத்துடன் நிறுத்திக் கொண்டு வேறு வேலையைப் பார்ப்போம் என்று நினைத்துக் கொண்டிருந்த என்னை…”
சில நாட்களுக்குமுன் ஒரு மூத்த வலைப்பதிவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவரும் கிட்டத்தட்ட இதே கருத்துக்களை வெளிப்படுத்தினார். அவர் சொன்னது:
“இரண்டு மூன்று வருஷங்களுக்கு முன்பெல்லாம் தமிழ் இணையத்துல முஸ்லிம்கள் அதிகம் பேர் இல்லை. அதை வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு இஸ்லாம் பத்தி ஒரு propoganda பரப்பலாம் என்ற எண்ணத்துல இவரை மாதிரி உள்ளவர்கள் எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தப்புக்கணக்கு போட்டிருக்கிறார்கள் என்பதை போகப்போக புரிந்து கொண்டார்கள்.”
இதையெல்லாம் எடுத்துச் சொல்வதால் இவர்கள் உடனே திருந்தி விடுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இவர்களின் நடவடிக்கைகள் பிறருக்கு புரியாமலில்லை என்பதை சுட்டிக் காட்டுவதற்காகத்தான் நான் புரிந்து கொண்டதை இங்கு பதிவு செய்கிறேன்.
Comment by இப்னு பஷீர் — March 19, 2007 @ 9:04 am
என்ன ஒரு டைம்லியான பதிவு! இயேசு பற்றிய விவாதங்கள் அறிவு ஜீவி போர்வையில் என்னமாய் நடக்கின்றன. அதில் வரும் வார்த்தைகளும் நல்ல விவாதத்தை எடுத்துச் செல்வது போல் அல்லாமல் கிறிஸ்தவர்களின் நம்பிக்கையை குத்திக் கிளறி தேன் தடவிய வார்த்தைகளால், வம்புக்கிழுப்பது போல உள்ளன.
சரியாக அடையாளம் கண்டதற்கு பாராட்டுகள் சகோ. இப்னு பஷீர்!!
(குறிப்பு: இந்தப் பதிவில் குறிப்பிடப்படும் முகமிலி நபரும் அதில் பங்கு கொண்டு பதிவைச் சூடாக வைத்ட்திறிகிறார். எல்லாம் கமிஷன் செய்யற வேலை!)
Comment by அட்றா சக்கை — March 19, 2007 @ 11:28 am
//உள்குத்து கேள்விப்பட்டிருக்கிறேன். ‘உள் கூத்து’ என்ற வார்த்தையை இப்போதுதான் கேள்விப்படுகிறேன். புதியதொரு வார்த்தையை தந்ததற்கு நன்றி சகோ. அபூமுஹை. இந்தப் பதிவின் பேசப்படுபொருளுக்கு இது மிகப்பொருத்தமான வார்த்தைதான் என்று நினைக்கிறேன்.! //
இப்னு பஷீர் அவர்களே!
நீ அடிக்கிற மாதிரி அடி
நான் அழுகிற மாதிரி அழுகிறேன்
இதுதான் உள் கூத்து
Comment by அபூ முஹை — March 19, 2007 @ 3:57 pm
இந்தப் பதிவிற்கு நேசகுமார் எதிர்வினையாற்றியிருப்பதை ஒரு நண்பர் மடலிட்டு சுட்டிக் காட்டினார். மிக நீளமான பதிவு. நேசகுமாரின் டிரேட்மார்க் உத்தி. ஒரு பத்தி எழுதுவதற்கு பத்து பக்கங்கள் எழுதி எதிர் தரப்பை அயர்ச்சியுற வைத்து பிரச்னையை நீர்த்து போகச் செய்யும் உத்தி.
ஆனால், என் பதிவில் நான் சொன்ன கருத்துக்கள் எனது கற்பனையோ யூகமோ அல்ல. நேசகுமார் மற்றும் பத்ரி சொன்னதைத்தான் மேற்கோள் காட்டி, சுட்டிகள் தந்து சொல்லியிருக்கிறேன்.
அன்று இணையத்தில் ஒரு அனாமதேய நபரான நேசகுமாருக்கு கிழக்கு பதிப்பகம் இலவச புத்தகம் அனுப்பியது உண்மை. ஒரு பதிப்பகம் தமது புத்தகம் ஒன்றை இலவசமாக அனுப்புவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் அவர்கள் அப்படி அனுப்புவதற்கு ஒரு காரணம் இருக்கும். புத்தக விமர்சனத்திற்காக ஒரு பத்திரிக்கை ஆசிரியருக்கோ, எழுத்தாளர்களுக்கோ, புத்தக விமர்சகர்களுக்கோ அனுப்புவார்கள். அப்படி அனுப்புவதன் நோக்கம் தங்கள் புத்தகத்திற்கு விளம்பரம் கிடைக்க வேண்டும் என்பதுதான். அல்லது தங்கள் நண்பர்களுக்கோ நன்கு பழக்கமான புத்தக ஆர்வலர்களுக்கோ அனுப்புவார்கள். ஆனால், யாரென்றே தெரியாத ஒரு அனாமதேய நபருக்கு என்ன காரணத்திற்காக அனுப்பியிருப்பார்கள்?
அந்த புத்தக விமர்சனம் எழுதியதோடு தமது ‘வேலை’ முடிந்து விடும் என்று நேசகுமார் நினைத்திருந்ததும் உண்மை. இதற்கு அவரது வாக்குமூலமே சாட்சி. “…எதோ நாகூர் ரூமி அவர்களுக்கு பதிலளித்தோம், சரி, இத்துடன் நிறுத்திக் கொண்டு வேறு வேலையைப் பார்ப்போம் என்று நினைத்துக் கொண்டிருந்த என்னை…”
அவரது கட்டுரைக்கு முஸ்லிம்கள் தரப்பிலிருந்து இவ்வளவு எதிர்ப்பு வரும் என்பதை அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார். ஒரு மூத்த வலைப்பதிவர் சொன்னது போல தப்புக்கணக்கு போட்டு மாட்டிக் கொண்டார் நேசகுமார். முஸ்லிம்களின் அந்த எதிர்ப்புதான் அவரது வேடத்தை கலைக்க விடாமல் செய்தது. தான் பிடித்த முயலுக்கு மூணே கால் என்று இன்றும் வாதிட வைக்கிறது. இன்னொரு வலைப்பதிவர் மிகச்சரியாகவே சொன்னார், நேசகுமார் ஒரு spent force என்று.
ஏதோ நிறைய உழைப்பு, செலவு, தியாகங்கள் செய்து இஸ்லாத்தைப் பற்றி அறிந்துகொண்டுதான் இவர் விமர்சிப்பதுபோல ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயல்கிறார் நேசகுமார். வேடத்தை கலைக்க முடியாமல் தொடர வேண்டிய கட்டாயத்தினால் இவர் இஸ்லாத்தைப் பற்றி படிக்க முயன்றிருக்கலாமே தவிர, அந்த ‘வேலை’யை ஏற்றுக் கொண்ட புதிதில் இவரது இஸ்லாமிய அறிவு வெறும் பூஜ்யம்தான் என்பதையும், anti-islamic இணையத்தளங்களிலிருந்து காப்பி செய்துதான் இவர் ஒப்பேற்றிக் கொண்டிருந்தார் என்பதற்கும் ஒரு ஆதாரம் கிடைத்திருக்கிறது.
சலாஹுத்தீன் என்ற சகோதரர் நேசகுமாருடன் ஆரம்ப காலங்களில் விவாதங்களில் ஈடுபட்டவர். என்ன காரணத்தினாலோ இவர் இப்போதெல்லாம் எழுதுவதில்லை. இவர் தனது பதிவு ஒன்றில் நேசகுமாரின் தில்லுமுல்லுகளை ஆதாரங்களுடன் எழுதியிருக்கிறார்.
ஹதீஸ் - ஒரு சிறு விளக்கம்!
இஸ்லாம் பற்றி என்றுமே நாகரிகமாகத்தான் உரையாடல் நிகழ்த்தி வந்திருப்பதாக சொல்லும் இதே நேசகுமார்தான், நாகரீகமே இல்லாமல் எழுதும் பதிவர்களைக்கூட, அவர்கள் இஸ்லாமை தாக்கி எழுதுகிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக தனது வலைப்பதிவிலேயே எழுதும்படி வேண்டுகோள் விடுத்தார். இதை அவர் மறுக்க முடியுமா?
கோடிக்கணக்கான முஸ்லிம்களின் தலைவரை ஏதோ இவரது பள்ளித்தோழனை குறிப்பிடுவதுபோல ஒருமையில் குறிப்பிடுவது முஸ்லிம்கள் அனைவரையுமே வருத்தமடையச் செய்யும் என்ற உணர்வு கூட இல்லாத இந்த நபர், தான் என்றும் நாகரீகமாக எழுதி வருவதாக சொல்லிக் கொள்கிறார். இதுதான் இவர்களின் நாகரீகம் போலிருக்கிறது!
தீவிர ஆர்.எஸ்.எஸ் தொண்டரான அரவிந்தன் நீலகண்டன், குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களை தரமற்ற முறையில் விமர்சித்த தமது சக இந்துத்துவா பால்தாக்கரேயை மனநிலை பிறழ்ந்தவர் என்று தாக்கியிருக்கிறார். இதற்கு காரணம் அரவிந்தனின் அபிமானத்திற்கும் மரியாதைக்கும் உரிய கலாம் அவர்களை அவர் தரமற்று பேசியதுதான். அரவிந்தனுக்கு இவ்வளவு கோபம் வருவது நியாயமென்றால், முஸ்லிம்கள் தங்கள் உயிருக்கும் மேலாக மதிக்கும் நபி (ஸல்) அவர்களை தராதரம் கெட்ட ஒருவன் ஒருமையில் அழைத்தால் முஸ்லிம்களுக்கு எவ்வளவு வருத்தம் ஏற்படும்? அதையும் மேற்கோள் காட்டி எழுதும் ஒரு நபர் தாம் நாகரீகமாக எழுதுவதாக சொல்லிக் கொள்வது மிக்ப்பெரிய கேலிக்கூத்து அல்லவா?
Comment by இப்னு பஷீர் — March 19, 2007 @ 5:19 pm
நேசகுமாரின் தில்லுமுல்லுகள் பொய் புரட்டுகள் அம்பலப்படுத்தப் படும்போதெல்லாம் அவர் முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றிய அவதூறுகளை பதிவிட்டு தனது வக்கிர உணர்வுகளுக்கு வடிகால் தேட முனைவது வாடிக்கையாக நிகழும் ஒன்று. அது மீண்டும் ஒரு முறை நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நேர்மையாக விவாதம் செய்ய கைச்சரக்கு எதுவும் இல்லாத தனது இயலாமையை ஆதாரமற்ற அவதூற்றுப் பொய்களை அவிழ்த்து விட்டு மறைக்க முயல்கிறார்கள் இவர்கள். இஸ்லாமை கொள்கை ரீதியில் எதிர் கொள்ள இயலாத இவர்களின் கையாலாகாத்தனத்தையே இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
எனது முந்திய பதிவொன்றில் நான் இவரைப் பற்றி குறிப்பிட்டது:
“நேசகுமார் என்ற புனைபெயரில் எழுதி வரும் நபர் தனது எழுத்துக்களின் தரத்தை மட்டுமல்லாது பிறரின் எண்ணத்தில் அவரைப் பற்றிய மதிப்பீட்டையும் தாழ்த்திக் கொண்டு வெகு காலமாகி விட்டது. இப்போதெல்லாம் அவரது வாதங்களை நான் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்பதற்கு காரணம் நம்மிடம் பதில் இல்லை என்று அர்த்தமில்லை. பதில் விளக்கம் அளிப்பதால் ஒரு பயனும் இல்லை என்பதால்தான். ஒரு உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், குடிபோதையில் கலாட்டா செய்யும் ரவுடியிடம் ஒரு கண்ணியமான மனிதர் நின்று வாதாடிக் கொண்டிருந்தால் அதனால் கேவலமடைவது அந்த மனிதர்தான். The rowdy could even enjoy the altercation!”
ஒரு மனம் பிறழ்ந்தவனைப் போல பேசுவதும் எழுதுவதும் கூட ஒரு உத்தியோ என்ற சந்தேகம் எழுகிறது. ஒரு ரவுடியைப் போல நடந்து கொண்டு எதிர் தரப்பினரை விலகி ஓடச்செய்து நேர்மையான கண்ணியமான விவாதத்திற்கான வாய்ப்புகளை இல்லாமலாக்கி விடும் உத்தி! எதிர் தரப்பில் கேள்வி கேட்க யாரும் இல்லையென்றால் தன் மனம் போன போக்கில் பேசிக் கொண்டிருக்கலாம் அல்லவா?
இதுவும் எங்களுக்கு புரியாமல் இல்லை அய்யா! இப்படிச் செய்வதால் நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை ஆகிவிடாது. அப்துல்லா, அபூமுஹை, சலாஹுத்தீன், நல்லடியார், சுவனப்பிரியன், இறைநேசன், இஸ்மாயில், ஹமீது ஜாபர், நண்பன் ஷாஜஹான் போன்ற இன்னும் பல சகோதரர்களால் அம்பலப் படுத்தப் பட்ட உங்கள் பொய்களும் வரலாற்றுப் புரட்டுகளும், திரிப்பு வாதங்களும் இணையமெங்கும் சிதறிக் கிடக்கிறது. உங்களை நோக்கி இந்த சகோதரர்கள் எழுப்பிய எண்ணற்ற கேள்விகள் இன்னும் பதில் சொல்லப்படாமல் இருக்கின்றன. அவற்றுக்கெல்லாம் பதில் சொல்ல இயலாத நீங்கள் ஆதாரமற்ற அவதூற்றுப் பொய்களை டில்லியிலும் கேரளாவிலும் தேடித் திரிந்து கொண்டிருக்கிறீர்கள்.
இஸ்லாமை நேரடியாக எதிர் கொள்ள இயலாத உங்கள் கையாலாகாத் தனத்தைத்தான் சகோதரர் நல்லடியார் இப்படி சொன்னார்:
“நேசகுமாராகட்டும் அல்லது இஸ்லாத்தை விமர்சிக்கும் எவராக இருந்தாலும் இஸ்லாத்தை விடச் சிறந்த ஒன்றைச் சொல்லி அல்லது தாங்களும் பின்பற்றி உலகமக்களை உய்வித்துக் கொண்டிருக்கும் கொள்கைகளைச் சொல்லி ஒப்பிடமுடியாத உயரத்தில்தான் இஸ்லாம் இருக்கிறது. இதனை நன்கு அறிந்தே அவதூறுகளால் தோரணம் கட்டி இஸ்லாத்தைக் கலங்கப் படுத்தலாம் என்ற கனவில் இருக்கிறார்கள். ”
Comment by இப்னு பஷீர் — March 20, 2007 @ 3:10 am
//அப்துல்லா, அபூமுஹை, சலாஹுத்தீன், நல்லடியார், சுவனப்பிரியன், இறைநேசன், இஸ்மாயில், ஹமீது ஜாபர், நண்பன் ஷாஜஹான் போன்ற இன்னும் பல சகோதரர்களால் அம்பலப் படுத்தப் பட்ட உங்கள் பொய்களும் வரலாற்றுப் புரட்டுகளும், திரிப்பு வாதங்களும் இணையமெங்கும் சிதறிக் கிடக்கிறது.//
இந்தப் பட்டியலில் சகோ. வஹ்ஹாபி அவர்களை சேர்க்க மறந்து விட்டேன். அதற்கு பிராயச்சித்தமாக அவரது பதிவுகளில் ஒன்று…
கிச்சன் ஜர்னலிஸம்!
====================
ஜன்னல் ஜர்னலிஸம் கேள்விப் பட்டிருப்பீர்கள். கிச்சன் ஜர்னலிஸம்? அதுதான் கமலா சுரைய்யா விஷயத்தில் நடந்தது. சமையலறையைச் சுத்தம் செய்து விட்டு, கழிவுகளைத் தெருவிலுள்ளக் குப்பைத் தொட்டியில் கொட்ட வந்த சுரைய்யாவின் வீட்டு வேலைக்காரியை இடைமறித்தது ஒரு பரிதாபக் குரல்: “அம்மோய்! இந்தப் பக்கமா போடுங்கம்மோய்” என்று கெஞ்சிக் கூத்தாடிக் கமலா சுரைய்யா வீட்டுக் கழிவுகளை வாங்கிப் போய், அந்தக் கொஞ்சக் கழிவுகளோடு, தன்னிடம் மிகுதியாய் மிஞ்சியிருந்தவற்றைப் போட்டுக் கலக்கி, தானே சமைத்ததுபோல் ‘மடுத்த’ தட்டில் வைத்து ‘மாத்ருபூமி’யில் பரிமாறினார் அதன் ஃபோட்டோகிராஃபர்.
“ஆஹா எவ்வளவு அற்புதமான உணவு! என்னே மணம், என்னே ருசி! மலையாளிகள் மட்டும் இதை உண்பதா? தனியொரு தமிழனுக்கு இவ்வுணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்” என்ற சூளுரையோடு அதற்கு உள்ளூர் மசாலா தூவி, திண்ணைத் தட்டில் வைத்துச் சுடச்சுடப் பரிமாறினார் இரா.முருகன்.
இதெல்லாம் இருபது மாதங்களுக்கு முன்னர் பரிமாறப் பட்டு ஆறிப்போன அவியல்.
உடனடியாக தேஜஸிலும் அண்மையில் விகடனிலும் வெளிவந்த கமலா சுரைய்யாவின் உண்மையான பேட்டிகளையும் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டதிலிருந்து இன்றுவரை மாறாத கமலா சுரைய்யாவின் நிலையையும் அறியாமல் திண்ணையில் உளறி [சுட்டி-1], அபூசுமைய்யா [சுட்டி-2] மற்றும் இப்னு பஷீர் [சுட்டி-3] ஆகியோரின் உறுதியான சான்றுகளுடன் கூடிய, நிதானமான எதிர் வினைகளால் முகமிழந்து நிற்கும் நேசகுமார் என்பவரைப் பற்றி அறிய முற்பட்டபோது சில திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின!
இவருடைய அகநோயின் வீரியம் புரியாமல், ‘நட்புக்கான வழியும் மொழியும்’ என்று நாகூர் ரூமி, இவருக்கு அமிர்தாஞ்சன் தடவி [சுட்டி-4] குணப் படுத்த வீண் முயற்சி செய்துள்ளார்.
இஸ்லாமோஃபோபியா என்ற மன நோயினால் மிகக் கடுமையாகப் பீடிக்கப் பட்டுள்ள இவருக்கு அனுபவமுள்ள சிறந்த மருத்துவர்களான அபூஆதில், அபூமுஹை, அப்துல்லாஹ், சுட்டு விரல், ஸலாஹுத்தீன், அக்பர் பாஷா, நல்லடியார், சுவனப் பிரியன், இப்னு பஷீர் போன்றோரால் தொடர் சிகிச்சை அளிக்கப் பட்டுள்ளது.
மருத்துவர்கள் எழுதிக் கொடுக்கும் மருந்துகளை இவர் ‘உள்வாங்க’ மறுப்பதால் உளறல் நோய் நீங்கிய பாடில்லை. அதனால்தான் ஜிஹாதைப் பற்றி முன்னர் உளறியதையே மீண்டும் மீண்டும் உளறிக் கொட்டுகிறார் [சுட்டி-5].
இவரது தொடர் உளறல்களுக்கு, குறிப்பாக “முஹம்மது விஷம் வைத்துக் கொல்லப் பட்டார்” என்ற உளறலுக்கு, திண்ணை மருத்துவர் ஒருவரும் தம்மால் முடிந்தவரை சிகிச்சை அளித்திருக்கிறார்; [சுட்டி-6] ம்ஹூம், பயனில்லை.
இவருக்கு அளிக்கப் பட்டத் தொடர் சிகிச்சையையும் இவருடைய அத்து மீறிய உளறல்களையும் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருந்த கம்பவுண்டர் இறை நேசன் என்பவர் இவரை ‘மறை கழண்ட கேஸு’ என்று [சுட்டி-7] முடிவுக்கு வந்திருக்கிறார்.
இறை நேசனின் முடிவில் எனக்கு உடன்பாடில்லை. இவர் மறை கழண்ட கேஸல்ல; மாறாக, தேறாத கேஸ் என்பது என் கணிப்பு.
மன நோயாளி என்பதால் இவர் மீது பரிவும் இவருடைய உளறல்களால் சில முஸ்லிம்கள் மருத்துவப் படிப்பைப் படித்து முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் என்ற நன்றியுணர்வும் ஒருபுறமிருந்தாலும் இவர் மேலும் மேலும் உளறிக் கொட்டுவதைப் பார்க்கும்போது - அதுவும் திண்ணை என்ற திறந்த வெளியில் - இவர் மீது பரிதாமே எஞ்சி நிற்கிறது!
ஃஃஃ
சுட்டிகள்:
1- http://www.thinnai.com/?module=displaystory&story_id=80609081&format=html
2- http://www.thinnai.com/?module=displaystory&story_id=20609081&edition_id=20060908&format=html
3- http://www.thinnai.com/?module=displaystory&story_id=20609158&format=html
4- http://www.tamiloviam.com/unicode/11030512.asp
5- http://www.thinnai.com/?module=displaystory&story_id=20609155&format=html
6- http://www.thinnai.com/?module=displaystory&story_id=80501205&format=html
7- http://copymannan.blogspot.com/2006/09/blog-post_05.html
Comment by இப்னு பஷீர் — March 20, 2007 @ 4:04 am
பிடிக்க போனது குரங்கு பிடிச்சது குழந்தை.
இணையத்தில் முஸ்லிம்கள் அதிகமாக ஆனதற்காவது இஸ்லாமோஃபோபிக் நபருக்கு நன்றி சொல்லனும்.
எத்தனை மருத்துவம் செய்தும் கொஞ்சம் கூட முன்னேற்றமில்லாமல் மன நோய் அப்படியே இருக்குன்னு மருத்துவர்கள் சொல்வாங்க. இஸ்லாமோஃபோபிக் நபரும் இந்த ரகம்தான்.
இவருடைய எந்த பதிவை பார்த்தாலும் இப்போ இந்த பதிவுக்கு மறுப்பு எழுதியதை பார்த்தாலும் ஒரே ரகமாத்தான் இருக்கும் ஒன்னு, நபியின் திருமணம் பற்றி புலம்பியிருப்பார். ரெண்டு, ஜிகாதை பற்றி வாந்தியெடுத்திருப்பார். இதை விட்டால் இஸ்லாத்தை எதையாவது சொல்லியெழுத வேறு விஷயம் எதுவும் இவரிடம் இல்லை. இல்லைன்னா வேறு ஒன்னும் இவருக்கு தெரியாது.
ஜிகாதுன்னா என்னான்னு முஸ்லிம்கள் நிறைய விளக்கம் எழுதிட்டாங்க. ஆனா இஸ்லாமோஃபோபியா நபர் இன்னும் ஜிகாதை விடாமல் எழுதரார்னா இவரை என்ன சொல்ல?
அடுத்து ஒரு சேதி- இப்னு சாத் புத்தகம் என்னிடம் இருக்குன்னு இஸ்லாமோஃபோபியாவ நபரும் எமாறாதவனும் ஒன்னா கோரஸ் வாசிக்கிறாங்க இவங்க ரெண்டு பேருக்கும் லிங்க் இருக்குமா? ஆர். எஸ். எஸ்ஸிக்கே வெளிச்சம்.
Comment by முஸ்லிம் — March 20, 2007 @ 4:29 am
பொதுவாக அவதூறு மட்டுமே பேசும் பதிவுகளுக்கு நான் பின்னூட்டம் இடுவதில்லை. ஆனால் பின்னூட்டம் அல்லது எதிர்வினை ஏதும் இல்லாத காரணத்தாலேயே வதந்திகள் உண்மை ஆகிவிடும் என்று வாதாடுவது இணைய வழக்கமாகியுள்ளது. அதனால் மிகச் சுருக்கமாக சில விளக்கங்கள்.
1. நேசகுமாரை நானோ, கிழக்கு பதிப்பகத்தைச் சேர்ந்த வேறு யாருமோ இதுவரை நேரில் பார்த்ததில்லை. நாகூர் ரூமி புத்தகம் ‘இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்’ பிரதி ஒன்றை எந்த உள்ளர்த்தம் இல்லாமல் அவர் வேண்டுமென்றால் அவருக்கு அனுப்புவதாகச் சொன்னேன். முகவரி அனுப்பினார். கூரியர் மூலம் அனுப்பி வைத்தேன். அவரைக் கஷ்டப்பட்டுத் தேடிக் கண்டுபிடிக்கவில்லை.
2. சொக்கன் அனைவருக்கும் தெரிந்த முகமூடி ஏதும் இல்லாத மனிதர். பல பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதிவருகிறார். இணையத்தில் இன்று வலைப்பதிவுகள் வைத்திருக்கும் 40 பேருக்கும் மேலாக அவரை நேரில் பார்த்திருக்கிறார்கள். தற்போது குங்குமம், கல்கி போன்ற இதழ்களில் எழுதி வருகிறார். அவரும் நேசகுமாரும் ஒருவர் கிடையாது என்பதை நான் உறுதியாகச் சொல்லமுடியும். அதனால் உங்கள் கூட்டத்தில் இருக்கும் யாராவது அதை நம்பப் போகிறார்களா என்ன? ஆப்பு என்ற ஒருவர் ஆதாரம் எதுவுமே இல்லாமல் பலவற்றை எழுதுகிறார். அதை நம்புவதுதான் உங்கள் விருப்பம் என்றால் அது உங்கள் இஷ்டம்.
–பத்ரி
Comment by பத்ரி — March 20, 2007 @ 4:42 am
பத்ரி அவர்கள் முன்வந்து விளக்கம் அளித்ததற்காக அவரைப் பாராட்ட வேண்டும்.
//நேசகுமாரை நானோ, கிழக்கு பதிப்பகத்தைச் சேர்ந்த வேறு யாருமோ இதுவரை நேரில் பார்த்ததில்லை//
- இது நீங்கள் முதல் பத்தியில் சொன்னது.
//அவரும் நேசகுமாரும் ஒருவர் கிடையாது என்பதை நான் உறுதியாகச் சொல்லமுடியும்//
- இது நீங்கள் இரண்டாவது பத்தியில் சொன்னது.
நேசகுமாரைப் பார்த்திராத அவர் யாரென்றே தெரியாத உங்களுக்கு முகவரியை அவர் அனுப்பியது, நீங்கள் அவருக்கு “இலவசமாக” அப்புத்தகத்தை அனுப்பியதை நம்பினால், இரண்டாவது பத்தியில் சொன்னதை நம்ப இயலவில்லை.
மேற்படி நபர் யாரென்றே உங்களுக்குத் தெரியாமல் சொக்கன் அவர் இல்லை என்று எப்படி உங்களால் “உறுதியாகக்” கூற முடிகிறது?
ஆப்பு என்பவரின் ஆதாரத்தைப் புறம் தள்ளுவோம்; நீங்கள் சொன்னதன் முரன்பாட்டை விளக்குங்களேன்.
நன்றி.
Comment by சவூதி தமிழன் — March 20, 2007 @ 6:25 am
திரு. பத்ரி அவர்களின் பதிலுக்கு நன்றி.
‘பொதுவாக அவதூறு மட்டுமே பேசும் பதிவுகளுக்கு நான் பின்னூட்டம் இடுவதில்லை’ என்று சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் பிஸியான பணிகளுக்கிடையில் எனது மற்ற பதிவுகளை படிக்க உங்களுக்கு நேரமில்லாமல் இந்த முடிவுக்கு வந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். சுருக்கமாக சொல்வதென்றால், இது அவதூறு பேசும் பதிவல்ல. அதற்கான அவகாசமும் அவசியமும் எனக்கு இல்லை. தான் தோன்றித்தனமாக பிறர் பரப்பும் அவதூறுகளுக்கு பதில் சொல்வதற்காகத்தான் இந்தப் பதிவில் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
நேசகுமார் போன்றவர்களின் பொறுப்பற்ற செயல்களுக்கு கிழக்கு பதிப்பகம் தெரிந்தோ தெரியாமலோ தூண்டுகோலாக இருந்திருக்கிறது என்ற எண்ணம்தான் என்னை இந்தப் பதிவு எழுதத் தூண்டியது.
கிழக்கு பதிப்பகம் நேசகுமாருக்கு இலவசப் புத்தகம் அனுப்பியதும், அவர் அந்தப் புத்தகத்திற்கு விமரிசனம் எழுதியதும், அதற்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்ததும், விவாதத்திலிருந்து பின்வாங்க முடியாமல் அவர் ஆதாரமற்ற அவதூறுகளை பரப்பத் தொடங்கியதும், அவரைப் பின்பற்றி தராதரமற்ற நபர்களும் இணையத்தில் நபிகளாரைப் பற்றி கீழ்த்தரமான வார்த்தைகளால் எழுதுவதும்… இவை அனைத்துமே தொடர் வினைகள்! அதனால்தான் நான் கிழக்கு பதிப்பகத்தின் பெயரை தலைப்பிலிட்டு இந்தப் பதிவை எழுதினேன். தேவையற்ற அவதூறுகளை பரப்ப எனக்கு என்றும் அவசியம் நேர்ந்ததில்லை. என் மார்க்கம் என்னை அப்படிப்பட்ட பண்பற்றவனாக ஆக்கவில்லை!
சொக்கன் தான் நேசகுமாராக எழுதுகிறார் என்று சிலர் நம்புகிறார்கள். அதற்கான சில ஆதாரங்களையும் அவர்கள் காட்டுகிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் அவர்தான் இவரா என்பது எனக்கு தேவையற்ற விஷயம். அதைத் தெரிந்து கொண்டு எனக்கு ஒன்றும் ஆகப் போவதில்லை. நேசகுமார் என்ற பெயரில் எழுதும் நபர் யாராக இருந்தாலும் அவர் நேர்மையற்றவர் என்பதைத்தான் நானும் மற்ற முஸ்லிம் பதிவர்களும் திரும்பத் திரும்ப சொல்லி வருகிறோம். அற்ப லாபத்திற்காகவோ வேறு உள்நோக்கத்திற்காகவோ ஒரு ஒட்டுமொத்த சமுதாயத்தின் மன உணர்வுகளை கிளறுவது பெரும் அநீதி. அச்செயலுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ துணை புரிவதும் அநீதிதான்.
Comment by இப்னு பஷீர் — March 20, 2007 @ 6:51 am
சகோ. இப்னு பஷீர்
//ஏதோ நிறைய உழைப்பு, செலவு, தியாகங்கள் செய்து இஸ்லாத்தைப் பற்றி அறிந்துகொண்டுதான் இவர் விமர்சிப்பதுபோல ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயல்கிறார் நேசகுமார்.//
இப்போது தான் கவனிக்கிறேன், உங்களுக்கு இது புரியவில்லையா Please read between the lines…
அதாவது காசு பத்தலியாம்…..ஏதாச்சும் கொஞ்சம் கூடப் பாத்துப் போட்டுக் குடுங்கன்னு வேண்டுகோள் வைக்கிறார் தன்னுடைய pay master- களிடம்..
Comment by அட்றா சக்கை — March 20, 2007 @ 7:15 am
//நேசகுமாரைப் பார்த்திராத அவர் யாரென்றே தெரியாத உங்களுக்கு முகவரியை அவர் அனுப்பியது, நீங்கள் அவருக்கு “இலவசமாக” அப்புத்தகத்தை அனுப்பியதை நம்பினால், இரண்டாவது பத்தியில் சொன்னதை நம்ப இயலவில்லை.
மேற்படி நபர் யாரென்றே உங்களுக்குத் தெரியாமல் சொக்கன் அவர் இல்லை என்று எப்படி உங்களால் “உறுதியாகக்” கூற முடிகிறது?//
இதற்கு பத்ரியின் பதிலை எதிர் பார்க்கிறேன்.
//பிரதி ஒன்றை எந்த உள்ளர்த்தம் இல்லாமல் அவர் வேண்டுமென்றால் அவருக்கு அனுப்புவதாகச் சொன்னேன். //
நாங்கள் கேட்டால், இது போல் செய்வாரா?
இதற்கும் பத்ரியின் பதிலை எதிர் பார்க்கிறேன்.
சைனா வாலா
Comment by சைனா வாலா — March 20, 2007 @ 7:56 am
இசுலாமியர்களைப் பற்றியும் பெரியாரியவாதிகளையும் வெவ்வேறு பெயர்களில் எழுதிவரும் இந்துத்துவாவாதிகளை சரியாக அடையாளம் கண்டுள்ளீர்கள்.
பெரியாரைப் பற்றி வெவ்வேறு பெயர்களில் எழுதும் நேசகுமாருக்கு நாங்களும் அய்யா வீரமணியாரின் கீதையின் மறுபக்கம் மற்றும் பகுத்தறிவுத் தந்தை பெரியாரின் சீடர் கைவல்ய சாமியார் குடியரசில் எழுதிய உண்மையான இந்து மதம் என்ற நூலையும் அனுப்ப வேண்டும். தயவு செய்து பத்ரி அவர்கள் நேசகுமாரின் முகவரியை arivukkadal@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
Comment by அறிவுடைநம்பி — March 20, 2007 @ 8:26 am
//‘பொதுவாக அவதூறு மட்டுமே பேசும் பதிவுகளுக்கு நான் பின்னூட்டம் இடுவதில்லை’ //
எனில் இப்பதிவில் பின்னூட்டம் இட்டதன் மூலம் பல்வேறு ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு வைக்கும் இப்பதிவில் கூறப்பட்டிருப்பவை அனைத்தும் உண்மை தான் என ஒத்துக் கொள்கின்றீர்கள். அப்படித்தானே சகோதரர் பத்ரி அவர்களே?
இல்லை என்று தாங்கள் மறுப்பு வேறு கூறியுள்ளீர்கள்.
“ஆப்ப”டித்ததும், சகோதரர் இப்னு பஷீர் ஆதாரங்களுடன் நிரூபிக்கும் இப்பதிவும் அவதூறு என்றே வைத்துக் கொள்வோம்.
இங்கு நீங்கள் கூறிய கருத்தை வைத்தே சகோதரர் சவூதி தமிழன் ஒரு கேள்வியை எழுப்பியுள்ளாரே. அதனைக் குறித்து என்ன கூறுகின்றீர்கள்.
உண்மையை மறைக்க முயன்ற உங்களின் கருத்திலேயே வெளிப்படும் உண்மையை சுட்டிக் காட்டும் சகோதரர் சவூதி தமிழனின் கருத்தும் அவதூறு என்றா?
நீங்கள் கூறும்,
//நேசகுமாரை நானோ, கிழக்கு பதிப்பகத்தைச் சேர்ந்த வேறு யாருமோ இதுவரை நேரில் பார்த்ததில்லை// என்பது பொய்யா?
இல்லை. இது தான் உண்மையெனில் அதற்கு அடுத்த வரியிலேயே,
//அவரும் நேசகுமாரும் ஒருவர் கிடையாது என்பதை நான் உறுதியாகச் சொல்லமுடியும்//இது பொய்யா?
உண்மையை வெகுநாள் மூடி மறைக்க இயலாது சகோதரரே!
உங்கள் வாயிலிருந்தே உண்மை வெளிப்பட்டு விட்டது கவனித்தீர்களா?
வாய்மையே வெல்லும்!
அன்புடன்
இறை நேசன்.
Comment by இறை நேசன் — March 20, 2007 @ 8:51 am
நேசக்குமார் என்ற புனைபெயரில் இருந்த நேரில் சென்று சந்தித்ததாக சைபர் பிராமணா நடத்தும் எஸ்கிச்சு முன்பு பதிவு எழுதி இருந்தது.
http://kichu.cyberbrahma.com/?p=129
——–
comment edited..
Comment by மனிதன் — March 20, 2007 @ 9:49 am
நேசகுமாரை சென்று சந்தித்ததாக முன்பு எஸ்கே என்பவர் எழுதி இருந்தார். அவருடைய பதிவு இது
http://kichu.cyberbrahma.com/?p=129
Comment by kumaran — March 20, 2007 @ 9:56 am
மனிதன்,குமரன் நீங்கள் கொடுத்துள்ள சுட்டியில் நேசகுமாரைப் பற்றி காணமுடியாது. கூகிலிட்டதில் http://kichu.cyberbrahma.com/?p=61 என்ற சுட்டியில் கிருஷ்ணமூர்த்தி (எஸ்.கே) நேசகுமாருடன் பேட்டிக் கண்டுள்ளதாகச் சொல்லியுள்ளார்.
//பெரும்பாலும் யாஹூ மூலமாகத்தான் தொடர்பு கொண்டிருக்கிறேன். சில முறை தொலைபேசியில் பேசியிருக்கிறார். பலமுறை வலையுலகில் சந்தித்திருந்த போதிலும், நேரடித் தொடர்பொன்று நிகழும் என்று நான் எண்ணவேயில்லை. ஆனால் அது நிகழ்ந்ததுதான் ஒரு ஆச்சரியம்!
நான் வசிக்கும் நுங்கம்பாக்கம் அருகேதான் அவரது அலுவலகம் இருக்கிறது என்று அவர் கூறியிருந்ததால், அலுவலகம் முடிந்து வீட்டுக்குப் போகும்போது எங்கள் வீட்டுக்கு வாருங்களேன் என்றழைப்பது வழக்கம். ஒரு முறை எதேச்சயாக அப்படி அழைத்து, அவர் வழக்கம்போல வரமாட்டார் என்று நினைத்து விட்டுவிட்டேன். பார்த்தால், வீட்டிலிருந்து போன், “நேசகுமார்” என்று பெயர் சொல்லிக்கொண்டு ஒரு நபர் உங்களைப் பார்க்க வந்துள்ளார் என்று. உடனடியாக விரைந்து வந்தேன்.//
ஆக, நேசகுமாரை அறிந்தவர்கள் பத்ரி மற்றும் கிருஷ்ணமூர்த்தி மட்டுமே. இந்த இருவரும் பத்திரிக்கை தொடர்புடையவர்கள். என் கணிப்புப்படி எஸ்.கேயின் நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் போலீஸ் ரைட் நடத்தினால் அவர்களின் கூட்டுகளவானித்துவம் வெளியாகலாம்.
நேசகுமாருடன் தொடர்பிலுள்ள எஸ்.கே & பத்ரி ஆகியோர் மீது ஏன் பொதுநல வழக்கு தொடரக்கூடாது?
Comment by மரியகுமாரன் — March 20, 2007 @ 11:17 am
எஸ்.கேயின் சொந்த ஊர் திருவாரூருக்கும் நாகைப்பட்டிணத்துக்கும் இடையேயுள்ள கீவளூர் (கீழ்வேளூர்). இது எஸ்.கேயே சொன்னது. http://kichu.cyberbrahma.com/?page_id=64
நாகூருக்கும் கீவளுருக்கும் அதிக தூரமில்லை. முன்பு நாகூர் ரூமி தாக்கப்பட்டதில் எஸ்.கேவுக்கு பங்கிருக்க வாய்ப்பு உள்ளது. எஸ்.கேவுக்கு வளைகுடாவிலுள்ள இசுலாமியர்களுடன் தொடர்பு இருப்பதால் நல்லவன் போல் நடித்து, தொட்டிலையும் ஆட்டிவிட்டு பிள்ளையையும் கிள்ளி வருகிறார். எஸ்.கேயின் நடவடிக்கைகளை கவனித்து வருகிறவன் என்ற முறையில் இதைச் சொல்லிக் கொள்கிறேன்.
செந்தில் பிரபு
திருத்துறைபூண்டி
நாகை மாவட்டம்
Comment by செந்தில் பிரபு — March 20, 2007 @ 11:33 am
அட அப்புரானிங்களா!
நேகுவை கிச்சா பேட்டி கண்ட கதைய நெசம்னே முடிவு பண்ணிட்டீங்களா?
நீங்கள்ளாம் வலையுலகத்துலே … ஹூம்!
Comment by அழகு — March 20, 2007 @ 11:39 am
ஒன்றுமே புரியவில்லை. ஆனால் திரு. பத்ரி அவர்கள் கூறியிருக்கும் பதிலை வைத்து திரு. சவூதி தமிழன் கேட்டிருக்கும் கேள்வி நியாயமானதே.
திரு. நேசகுமார் அவர்களை நேரில் பார்த்தறியாத பத்ரி அவர்களால் திரு. நேசகுமாரும் திரு. சொக்கன் அவர்களும் நிச்சயமாக ஒருவர் அல்ல என எப்படி உறுதியாக கூற இயலும்.
திரு.பத்ரி மற்றும் திரு.நேசகுமார் இணைந்து ஏதோ இலாபத்திற்காக உண்மையை மறைக்கின்றனர் என்ற கருத்தை புறந்தள்ள இயலவில்லை.
திரு.பத்ரி அவர்கள் கண்டிப்பாக விளக்கம் அளிக்க வேண்டும்.
தமிழ் செல்வன்.
Comment by தமிழ் செல்வன் — March 20, 2007 @ 2:04 pm
நாகூருக்கும் கீவளுருக்கும் இடையில் தான் நாகப்பட்டினம் உள்ளது. பத்ரியின் சொந்த ஊர் நாகப்பட்டினம்.
சைனா வாலா
Comment by சைனா வாலா — March 20, 2007 @ 3:00 pm
1. xxx alias Nesa kumar, Pathri and Nagore Rumi are friends or known people. Whatever they did, it is big business strategy and purpose of money making. They are all ********.
Nanban
———-
Comment edited….
Dear Nanban, Thanks for your comments. However, I have to remove a word. Hope you understand.
Ibnu Basheer
Comment by Nanban — March 18, 2007 @ 4:11 pm
இப்னு பஷீர்,
மேற்கண்ட பின்னூட்டம் நான் எழுதியது அல்ல. சில இணைய இழிபிறவிகள் எழுதியவை. இத்தனை கூட விவரம் இல்லாமல் அதை பதிந்து விட்டு, அத்தோடு அதை எடிட் வேறு செய்திருக்கிறேன் என்றா சொல்கிறீர்கள்.? முதலில் அறிந்து கொள்ளுங்கள் - நான் எழுதும் பின்னூட்டங்கள் குறைந்தது ஒரு முழு பதிவின் நீளத்தையும் தாண்டும். இரண்டாவது, இந்த குடுமிப்பிடி சண்டைக்கெல்லாம் நான் உட்கார்ந்து பின்னூட்டம் எழுதிக் கொண்டிருக்க மாட்டேன். பதிவுகள் எழுதவே நேரம் இல்லாத பொழுது, இப்படிப்பட்ட பின்னூட்டங்களில் எல்லாம் என் நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்க மாட்டேன்.
//Dear Nanban, Thanks for your comments. However, I have to remove a word. Hope you understand. - Ibnu Basheer //
Absolute Non-sense!!!
எதிரிக்கு எதிரி நண்பன் என்ற சித்தாந்தத்தை உடனே கைவிடுகிறீர்களா?
உங்கள் நம்பகத் தன்மையை இந்தப் பின்னூட்டத்தின் மூலம் கெடுத்துக் கொண்டீர்கள். உங்கள் பதிவின் நோக்கத்தோடு எனக்கு முழு உடன்பாடு உண்டென்றாலும், அதை இன்று தான் வாசித்தேன்.
இது போன்ற அநாகரீகமான ஒரு பின்னூட்டம் வந்தால், அதை கொஞ்சம் உண்மையானதா என்று பார்த்து விட்டு, போடுங்கள்.
தொடர்ந்து, ஒரு பைத்தியக்காரனுக்கு நீங்கள் கொடுக்கும் ஒரு முக்கியத்துவம் - நேர்மையானவர்களை உங்களிடமிருந்து விலக்கி வைக்கும்.
மற்றபடிக்கு உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
அன்புடன்
நண்பன்.
Comment by Nanbans — March 23, 2007 @ 9:26 pm
அன்பு நண்பன்,
மேற்கண்ட பின்னூட்டம் யாரோ பெயர் சொல்ல விரும்பாத ஒரு நண்பரிடமிருந்து வந்ததாக நான் நினத்ததால்தான் அதை அனுமதித்தேன். அது நண்பன் ஷாஜஹானாகிய உங்களை குறிக்கும் என்று அப்போது நான் உணரவில்லை. தவற்றுக்கு வருந்துகிறேன். அந்தப் பின்னூட்டமும் நீக்கப் பட்டுவிட்டது.
//தொடர்ந்து, ஒரு பைத்தியக்காரனுக்கு நீங்கள் கொடுக்கும் ஒரு முக்கியத்துவம் - நேர்மையானவர்களை உங்களிடமிருந்து விலக்கி வைக்கும். //
இந்தப் பைத்தியக்கார நபருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்றுதான் நானும் ஒதுங்கியே இருந்தேன்.
“இப்போதெல்லாம் அவரது வாதங்களை நான் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்பதற்கு காரணம் நம்மிடம் பதில் இல்லை என்று அர்த்தமில்லை. பதில் விளக்கம் அளிப்பதால் ஒரு பயனும் இல்லை என்பதால்தான். ஒரு உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், குடிபோதையில் கலாட்டா செய்யும் ரவுடியிடம் ஒரு கண்ணியமான மனிதர் நின்று வாதாடிக் கொண்டிருந்தால் அதனால் கேவலமடைவது அந்த மனிதர்தான். The rowdy could even enjoy the altercation! ” - என்று எனது பதிவொன்றில் கூட குறிப்பிட்டிருந்தேன்.
ஆனால், கடிக்கும் நாயை யாராவது கட்டிப் போடத்தானே வேண்டும்?
Comment by இப்னு பஷீர் — March 24, 2007 @ 6:29 am