வக்கிர சிந்தனையாளர்களின் வரலாற்றுப் புரட்டுகள் - 1 ஜைனப் (ரலி) திருமணம்!

March 21, 2007

“இஸ்லாத்தை விமர்சிக்கும் எவராக இருந்தாலும் இஸ்லாத்தை விடச் சிறந்த ஒன்றைச் சொல்லி அல்லது தாங்களும் பின்பற்றி உலகமக்களை உய்வித்துக் கொண்டிருக்கும் கொள்கைகளைச் சொல்லி ஒப்பிடமுடியாத உயரத்தில்தான் இஸ்லாம் இருக்கிறது. இதனை நன்கு அறிந்தே அவதூறுகளால் தோரணம் கட்டி இஸ்லாத்தைக் களங்கப் படுத்தலாம் என்ற கனவில் இருக்கிறார்கள்.” - சகோ. நல்லடியார்.

இஸ்லாமை கொள்கை ரீதியில் எதிர் கொள்ள இயலாத இந்த வக்கிர சிந்தனையாளர்கள், அதற்கு மாற்றுக் கொள்கை ஒன்றை சுட்டிக் காட்ட முடியாத இந்த அயோக்கிய சிகாமணிகள் பெரும்பாலும் கையிலெடுக்கும் ஆயுதங்கள் இரண்டு வகையானவை. 1. நபி (ஸல்) அவர்களின் மீது ஆபாச நடையில் அவதூறுகளை சுமத்தி தங்கள் உள்மன வக்கிரங்களை வெளிப்படுத்திக் கொள்வது. 2. முஸ்லிம்கள் சம்பந்தப் படும் வன்முறைச் சம்பவங்களை பூதாகரப் படுத்தி அவற்றிற்கு ஒட்டு மொத்தமாக இஸ்லாம் மார்க்கம் மீதே வன்முறைச் சாயம் பூச முற்படுவது.

இவர்களின் வரலாற்றுப் புரட்டுகள் பல முறை அம்பலப் படுத்தப் பட்டிருக்கும். இவர்களின் அவதூற்றுப் பிரச்சாரங்களுக்கு பல சகோதரர்கள் பல முறை தக்க பதில் கொடுத்திருப்பார்கள். அதையெல்லாம் இவர்கள் வசதியாக மறந்து விட்டு அரைத்த மாவையே மீண்டும் மீண்டும் அரைத்துக் கொண்டிருப்பார்கள். இவர்களின் உளறல்களை மீண்டும் ஒருமுறை இவர்களுக்கு நினைவூட்டுவதற்காக அந்தப் பதிவுகளை இங்கு தொடராக பதிய இருக்கிறேன் இன்ஷா அல்லாஹ்!

முதலில் நபி (ஸல்) அவர்கள் தங்கள் வளர்ப்பு மகனின் மனைவியான ஜைனப் (ரலி) அவர்களை மணமுடித்ததைத் தொடர்ந்து அவர்கள் மீது சுமத்தப்பட்ட அவதூறுகளும் அவற்றிற்கான விளக்கங்களும்.

1. அவதூறு கிளப்பியவர்களிடம் ஆதாரம் வேண்டி..! - சகோ. சலாஹுத்தீனின் திண்ணை கடிதம்

2. மாற்றாரால் காமுகராகச் சித்தரித்த நபி - ஸைனப் திருமணம். - சகோ. அபூமுஹையின் விளக்கப் பதிவு!

3. இந்த வக்கிர சிந்தனையாளர்கள் இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரத் தளங்களிலிருந்துதான் தங்கள் ‘ஆதாரங்களை’ காப்பியடிக்கிறார்கள் என்பதற்கான ஆதாரம்.

4. தபகாத் இப்னு சஅது என்ற நூலில் பதிவு செய்யப் பட்டுள்ளதாக இவர்கள் மேற்கோள் காட்டும் நிகழ்வு ஆதாரமற்ற கட்டுக்கதை என்பதற்கான ஆதாரங்கள்

அன்னை ஜைனப் (ரலி) அவர்களின் திருமணத்தைப் பற்றிப் பேசும் இவர்கள் நேர்மையுடையவர்களாக இருந்தால் மேற்கண்ட பதிவுகளில் தெளிவாக விவரிக்கப் பட்டிருக்கும் ஆதாரங்கள் தவறானவை என்பதை முடிந்தால் நிரூபித்து விட்டு மேற்கொண்டு பேசலாம்!

7 Comments »

The URI to TrackBack this entry is: http://ibnubasheer.blogsome.com/2007/03/21/p63/trackback/

  1. “தபக்காத்” என்ற பெயரில் பலர் வரலாற்று நூல்கள் எழுதியுள்ளனர்.

    அவற்றுள் இபுனு சஅத் எழுதிய தபக்காத் என்பது ஏறத்தாழ முக்கால்வாசி நெல்லோடு கால்வாசி கல்லும் சேர்ந்தது என்பது அந்தக் காலம் முதல் இபுனு சஅதின் தபக்காத்துக்கு ஏற்பட்டிருக்கும் எதிர்ப்பையும் விமரிசனத்தையும் வைத்து விளங்கிக் கொள்ளலாம்.

    இபுனு சஅத் என்பவர் என்னவோ தவறே செய்ய முடியாத மலக்குபோலவும் அவர் இஸ்லாமின் ஏகபோக அத்தாரிட்டி போலவும் எண்ணிக் கொண்டு “ஆஹா அதோ பார் தபக்காத்திலேயே உள்ளது” என்று சிலர் ஆனத்தக் கூத்தாடுவர்.

    இபுனு சஅத் எழுதிக் ‘குவித்த’ தபக்காத்துக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. ரஹீக்கின் பயன்பாட்டுக்கு நெற்கள் கிடைப்பது போலவே ருஷ்டி பயன் படுத்திக் கொள்வதற்கு கற்களும் அதில் தாராளமாகக் கிடைக்கும் என்பதுதான் அச்சிறப்பு.

    Comment by வஹ்ஹாபி — March 21, 2007 @ 5:39 am

  2. நிதானமான To-the point அழைப்பு. உங்களின் நிதானம் பாராட்டுதற்குரியது.

    இதற்கும் சாமியாடி அல்லது நீ……….ண்ட சம்பந்தமில்லாத பதிவு (வழக்கம்போல்) எழுதி பதில் தான் வரும்.

    அந்நபரின் அல்லக்கைகள் அடிக்கும் கொட்டமும் நகைச்சுவையாக இருக்கிறது.

    Comment by அட்றா சக்கை — March 21, 2007 @ 7:23 am

  3. நேர்மையாக விவாதிக்க வந்தால் அழகான முறையில் எடுத்துச் சொல்லலாம்.
    வீணாக இஸ்லாத்துக்கெதிராக அவதூறு பரப்புவதையே நோக்கமாகக் கொண்டவர்களிடம் இத்தகைய நேர்மைத்திறம் எப்படி இருக்கும்?!.

    Comment by சுல்தான் — March 21, 2007 @ 8:54 am

  4. இப்னு பஷீர் அவர்களே,

    நல்ல ஆரம்பம் உங்கள் தொடர் முயற்சிக்குப் பாராட்டுக்கள்!

    வஹ்ஹாபி அவர்களின் பின்னூட்டக் கருத்தும் சுவையானது.

    இப்னு சாத் என்ற நூல், தமக்குக் கிடைத்த செய்திகளைக் கொண்டு ஒரு மனிதர் எழுதிய புத்தகம். அதில் ஆதாரமான செய்திகளும், ஆதாரமற்ற செய்திகளும் சேகரிக்கப்பட்டுத் தொகுப்பட்டிருக்கிறது. என்பதுதான் நிதசர்சனம்.

    இதை விளங்கியோ, அல்லது விளங்காமலோ முஸ்லிம்களிடம் இந்த நூல் இல்லை. முஸ்லிம்கள் யாரும் இந்த நூலைப் பார்க்கவில்லை, முஸ்லிம்களுக்கு இப்னு சாத் என்றால் என்னவென்றே தொரியாது எனும் எண்ணத்தில் ஆளாளுக்கு என்னிடம் இப்னு சாத் இருக்கிறது என்று முஸ்லிம்களிடம் சொல்லிக் கொள்கிறார்கள்.

    அன்புடன்,
    அபூ முஹை

    Comment by அபூ முஹை — March 21, 2007 @ 9:53 am

  5. இபுனு சஅத் எழுதிய தபக்காத் பற்றி மேலதிக விபரங்கள் தந்த சகோதரர்கள் வஹ்ஹாபி, அபூ முஹை ஆகியோருக்கும் பின்னூட்டமிட்டு கருத்துக்களை தெரிவித்த சகோதர்கள் அட்றாசக்கை, சுல்தான் ஆகியோருக்கும் நன்றி.

    இப்ப்திவுகளின் தலைப்பையொட்டி இங்கு குறிப்பிடாத விவாதங்கள் ஏதேனும் சகோதரர்கள் அறிந்திருந்தால் அதன் சுட்டிகளை பின்னூட்டத்தில் இட்டு உதவுங்கள்.

    Comment by இப்னு பஷீர் — March 21, 2007 @ 10:19 am

  6. Good Work Keep it up

    Comment by PeermdRaja — March 21, 2007 @ 3:59 pm

  7. //இபுனு சஅத் எழுதிக் ‘குவித்த’ தபக்காத்துக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. ரஹீக்கின் பயன்பாட்டுக்கு நெற்கள் கிடைப்பது போலவே ருஷ்டி பயன் படுத்திக் கொள்வதற்கு கற்களும் அதில் தாராளமாகக் கிடைக்கும் என்பதுதான் அச்சிறப்பு.//

    அருமையான உதாரணம்.

    Comment by jafar ali — March 21, 2007 @ 8:45 pm

RSS feed for comments on this post.

Leave a comment

Line and paragraph breaks automatic, e-mail address never displayed, HTML allowed: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <code> <em> <i> <strike> <strong>



Anti-spam measure: please retype the above text into the box provided.