வக்கிர சிந்தனையும் வரலாற்றுப் புரட்டுகளும்! - 4. கற்பழிப்புக்கு நான்கு சாட்சி!
March 23, 2007வேதங்களை விளங்கிக் கொள்ள இயலாமல் குர்ஆனுக்கு வியாக்கியானம் சொல்ல வந்த ‘அதிமேதாவி’யைப் பற்றி சென்ற பதிவில் பார்த்தோம். ஷரியா சட்டங்களைப் பற்றி தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்ப முயற்சித்து தனது மூடத்தனத்தை வெளிப்படுத்திக் கொண்டதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்!
இந்த வக்கிர சிந்தனையாளர் எழுதுகிறார்:
சமுதாயத்தில் நிகழும் வன்முறைகள்:
கற்பழிப்புகள் இஸ்லாமிய ஷரியத் சட்டம் அமலில் உள்ள நாடுகளில் பெரும்பாலும் போலீஸாருக்குத் தெரியப் படுத்தப்படுவதில்லை. காரணம், தாம் கற்பழிக்கப் பட்டதை நேரில் பார்த்த நான்கு ஆண் சாட்சிகளை ஒரு பெண் சுட்டிக் காட்டி, அவர்களும் அவ்வாறு பார்த்ததை இஸ்லாமிய நீதிமன்றங்களில் தெரிவித்தால் மட்டுமே கற்பழித்தவனுக்கு தண்டனை. நிரூபிக்க முடியாமல் போனால், அந்தப் பெண்ணை முறைகேடான உறவு வைத்ததற்காக கல்லால் அடித்துக் கொல்ல இஸ்லாமிய ஷரியத் வழிவகை செய்கிறது. இதனாலேயே, இஸ்லாமிய நாடுகளில் கற்பழிப்பு பற்றிய புகார்கள் மிகவும் குறைவாகவும், அமெரிக்கா போன்ற முன்னேறிய நாடுகளில் அதிக எண்ணிக்கையிலும் காணப்படுகிறது.
இந்த நபரின் மூடத்தனத்தை சகோ. அப்துல்லா வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார்:
ஒரு பெண்ணைப் பற்றி யாரேனும் அவதூறு சொன்னால், தான் சொன்ன குற்றத்தை அவதூறு சொன்னவர் நான்கு சாட்சிகளைக் கொண்டு நிரூபிக்க வேண்டும். அப்படி அவரால் தனது குற்றச்சாட்டை நான்கு சாட்சிகளைக் கொண்டு நிரூபிக்க இயலாத பட்சத்தில் அவதூறு சொன்னவருக்கு பொது இடத்தில் மற்றவர்களுக்கும் பாடமாக அமையும் வகையில் 80 கசையடிகளை கொடுக்க வேண்டும், மேலும் அந்த மனிதனது சாட்சிகளை இனி ஒருபோதும் ஏற்றுக் கொள்ளக்கூடது என்று இஸ்லாம் சொல்கிறது. இது அவதூறு தொடர்பான ஷரீஅத் சொல்லும் குற்றவியல் சட்டம். இதனைத்தான் கற்பழிப்பு சட்டத்துடன் முடிச்சுப்போட்டு, கற்பழிக்கப்பட்ட பெண் நான்கு சாட்சியத்துடன் வரவேண்டும் என்று சொல்கிறார்.
இதே நபர் தனது இன்னொரு கட்டுரையில் மேலே உள்ள கூற்றுக்கு மாற்றமாக எழுதியிருப்பதையும் சகோ. அப்துல்லா சுட்டியுள்ளார்.
இந்நிலையிலேயே, தகுந்த ஆதாரமில்லாமல் பழி சொல்வது தவறு என்றும், அதற்கு நான்கு சாட்சிகள் வேண்டுமெனவும், அப்படி பொய்யாக குற்றம் சுமத்துபவர்களுக்கு, மற்றவர்கள் பார்க்கும் படியாக என்பது கசையடிகள் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் இறைவசனங்கள் அருளப் பட்டன:
24:4 “எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள். பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள்.”
இந்த வக்கிர சிந்தனையாளரை நோக்கி சகோ. அப்துல்லா தொடுத்த கேள்வி:
இவர் சொன்ன “தாம் கற்பழிக்கப் பட்டதை நேரில் பார்த்த நான்கு ஆண் சாட்சிகளை ஒரு பெண் சுட்டிக் காட்டி, அவர்களும் அவ்வாறு பார்த்ததை இஸ்லாமிய நீதிமன்றங்களில் தெரிவித்தால் மட்டுமே கற்பழித்தவனுக்கு தண்டனை” என்ற வாதத்திற்கு ஆதாரம் தரவேண்டும்.
எந்த ஷரீஅத் சட்டம் அல்லது எந்த திருக் குர்ஆன் வசனம் அல்லது எந்த நபிமொழியில் இப்படி பதியப்பட்டுள்ளது என்ற ஆதாரமும் விளக்கமும் வேண்டும்.
கேள்விகளின் பட்டியல் வளர்ந்து கொண்டே போகிறது. பதில்கள்தான் வந்த பாடில்லை!

சகோ இப்னு பஷீர்,
நான்கு விரிவான பதிவுகள் இட்டு அந்த செலக்டிவ் அம்னீசியா நபரின் உண்மை ‘லெட்சணத்தை’த் தோலுரித்து விட்டீர்கள்..
வழக்கமாக உள்வாங்க ஓடிப்போகும் அவர் இப்போது வசதியாக இன்னொரு விவாதத்தை நைனாமுஹம்மது எனும் சகோதரருடன் தொடக்க முயல்கிறார்.
கோயபல்ஸ் கூட இவரிடம் பாடம் படிக்க வேண்டும்..
Comment by அட்றா சக்கை — March 24, 2007 @ 4:16 pm