தினமலர் இணையத் தளத்திற்கு அமீரகத்தில் தடை!

September 10, 2008

Photobucket

Photobucket

கடந்த 01.09.2008 அன்று தினமலரின் வேலூர், திருச்சி, ஈரோடு, சேலம் பதிப்புகளில் இலவச இணைப்பாக வெளியிடப் பட்ட கம்ப்யூட்டர் மலரில், உலக முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கும், அவர்களின் தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் குறித்து டென்மார்க்கின் யூல்லண்ட் போஸ்ட்டன் வெளியிட்டிருந்த கேலிச் சித்திரத்தை வெளியிட்டிருந்தது.

கொதித்தெழுந்த முஸ்லிம்கள், தமிழகத்தின் பல பகுதிகளில் தங்கள் எதிர்ப்புகளைக் காட்டத் தொடங்கினர்.

இது குறித்து விபரமாக இரு தினங்களுக்கு முன்னர் (08.09.2009) சத்தியமார்க்கம்.காம் ஒரு தலையங்கம் வெளியிட்டிருந்தது.

அத்தலையங்கம், “உப்புப் போட்டுச் சோறு தின்னும் ஒவ்வொரு முஸ்லிமும் இனி, தினமலரை ஒழித்துக் கட்டுவதற்குத் தன்னால் எதுவெல்லாம் சாத்தியமோ அதையெல்லாம் செய்வான்” என்று முடிந்திருந்தது.

உப்புப் போட்டுத்தான் முஸ்லிம் சோறு தின்னுகிறான் என்பதை உறுதிப் படுத்தும் விதமாக இன்று தினமலருக்கு முதல் அடி விழுந்திருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகங்களில் தினமலரின் இணைய தளம் இன்று முதல் தடை செய்யப் பட்டுள்ளது. தினமலர் விதைத்த வினைகளின் அறுவடையைத் தான் தடை செய்யப் பட்டப் படத்தில் பார்க்கின்றீர்கள்.

இது தொடக்கம்தான் …

நன்றி: சத்தியமார்க்கம்.காம்

14 Comments »

The URI to TrackBack this entry is: http://ibnubasheer.blogsome.com/2008/09/10/p83/trackback/

  1. ஐயா,
    நீங்கள் எல்லாம் எதிர்ப்பு காட்டினாலே அந்த பொருளை வாங்குவதற்கு ஒரு பெரிய சமூகமே காத்திருக்கிறது என்பதை மறக்க வேண்டாம். இது வரைக்கும் தினமலர் வாங்காதவன் கூட இனிமேல் தான் வாங்க ஆரம்பிப்பான். முதலில் கருத்து சுதந்திரம் வேண்டும். அது இல்லா விட்டால் மனிதனுக்கும் மிருகத்துக்கும் வேறுபாடு இல்லாமல் போய் விடும். உங்களுடைய இந்த குருட்டுத்தனமான நம்பிக்கையை பார்த்த பிறகு சகிப்புத்தன்மை அதிகம் உள்ளவனே அதிகம் ஆத்திரப்படும் அளவுக்கு ஆகி விட்டது.

    உங்க நம்பிக்கையை கேலி செய்வது மிகவும் கண்டிக்கப்படத்தக்க காரியம் தான், ஆனால் உங்கள் ஆள் எம்.எஃப். உசேன் சீதையின் பெண்ணுறுப்பில் அனுமார் வாலை வைத்து தூக்கி வருவது போலவும், அதில் சீதையானவள் மெய்மறந்து காணப்படுவது போலவும் ஓவியம் வரைந்தாரே.. அப்பொது நீங்கள் என்ன செய்தீர்கள்? அதை கண்டித்த அனைவரையும் கலையை அறியாதவர்கள் என்றும், சிறுபான்மை மக்களுக்கு எதிரானவர்கள் என்றும் கூக்குரல் எழுப்பினீர்களே? அப்போ உங்களுக்கு ஒரு நியாயம் அடுத்தவனுக்கு ஒரு நியாயமா?

    ஒரு இணைய தளத்தை தடை செய்து விட்டால் உலகம் ஒன்றும் இருண்டு போகாது. முதலில் உங்கள் முதுகை சொறிந்து கொள்ளுங்கள் பிறகு அடுத்தவர்களதை சொறியுங்கள்.

    நன்றி வணக்கம்.

    Comment by Raja Rajan — September 10, 2008 @ 9:42 am

  2. masha allah !!!!

    Comment by sadik — September 10, 2008 @ 11:02 am

  3. Alhamdulillah… it is very good news.

    Thanks for sharing this news with us.

    அல்லாவுக்கே புகழ் அனைத்தும்.

    Comment by Mastan — September 10, 2008 @ 12:07 pm

  4. //ஐயா, நீங்கள் எல்லாம் எதிர்ப்பு காட்டினாலே அந்த பொருளை வாங்குவதற்கு ஒரு பெரிய சமூகமே காத்திருக்கிறது என்பதை மறக்க வேண்டாம். இது வரைக்கும் தினமலர் வாங்காதவன் கூட இனிமேல் தான் வாங்க ஆரம்பிப்பான். //

    தாராளமாக வாங்குங்களய்யா. மஞ்சள் பத்திரிக்கைகள் கூடத்தான் அதிகமதிகம் விற்பனையாகின்றன.

    //முதலில் கருத்து சுதந்திரம் வேண்டும். அது இல்லா விட்டால் மனிதனுக்கும் மிருகத்துக்கும் வேறுபாடு இல்லாமல் போய் விடும்.//

    எது கருத்து சுதந்திரம்? கட்டுரைக்கு சம்பந்தமேயில்லாத ஒரு கார்ட்டூனை, அது முஸ்லிம்களின் மனதை புண்படுத்தும் என்று நன்றாக தெரிந்து கொண்டே, யூ ட்யூபில் தேடிப் பிடித்து, அதை பாதியிலிருந்து ஓடவிட்டு, குறிப்பிட்ட படம் வந்ததும் நிறுத்தி, ஸ்க்ரீன் ஷாட் எடுத்து, புனித ரமலான் மாதத்தின் முதல் நாளன்று வெளியிட்டது நிச்சயமாக விஷம உள்நோக்கம் கொண்டதாக இருக்குமே தவிர கருத்துச் சுதந்திரம் அல்ல!

    //உங்களுடைய இந்த குருட்டுத்தனமான நம்பிக்கையை பார்த்த பிறகு சகிப்புத்தன்மை அதிகம் உள்ளவனே அதிகம் ஆத்திரப்படும் அளவுக்கு ஆகி விட்டது.//

    அப்பட்டமான சமூக விரோத போக்கை வெளிப்படுத்தும் தினமலர் போன்ற பத்திரிக்கைகளுக்கு வக்காலத்து வாங்குவதுதான் குருட்டுத்தனமான நம்பிக்கை. இவர்களின் இந்த எழுத்து வேசித்தனத்தைப் பார்த்தபிறகுதான் சகிப்புத்தன்மை கொண்ட முஸ்லிம்கள்கூட வீதிக்கு வந்து போராடுகிறார்கள்.

    //உங்க நம்பிக்கையை கேலி செய்வது மிகவும் கண்டிக்கப்படத்தக்க காரியம் தான், ஆனால் உங்கள் ஆள் எம்.எஃப். உசேன் சீதையின் பெண்ணுறுப்பில் அனுமார் வாலை வைத்து தூக்கி வருவது போலவும், அதில் சீதையானவள் மெய்மறந்து காணப்படுவது போலவும் ஓவியம் வரைந்தாரே.. அப்பொது நீங்கள் என்ன செய்தீர்கள்? அதை கண்டித்த அனைவரையும் கலையை அறியாதவர்கள் என்றும், சிறுபான்மை மக்களுக்கு எதிரானவர்கள் என்றும் கூக்குரல் எழுப்பினீர்களே? அப்போ உங்களுக்கு ஒரு நியாயம் அடுத்தவனுக்கு ஒரு நியாயமா?//

    உசைனை ‘எங்காளு’ என்று எனக்குத் தெரிந்து எந்த முஸ்லிமும் எழுதவில்லை. யார் எங்கே கூக்குரல் எழுப்பினார்கள் என்பதை சுட்டிக் காட்டிவிட்டு பிறகு நியாயம் அநியாயம் பற்றி பேசுங்கள்.

    //ஒரு இணைய தளத்தை தடை செய்து விட்டால் உலகம் ஒன்றும் இருண்டு போகாது. //

    உலகம் இருண்டு விடாது என்பது எங்களுக்கும் தெரியும். முஸ்லிம் சமுதாயத்தை கிள்ளுக்கீரையாக நினைத்துக் கொண்டிருக்கும் தினமலருக்கு எங்கள் மனக்காயத்தை வெளிப்படுத்திக் காட்ட இது ஒரு வாய்ப்பு.

    //முதலில் உங்கள் முதுகை சொறிந்து கொள்ளுங்கள் பிறகு அடுத்தவர்களதை சொறியுங்கள்.//

    இந்த அறிவுரையை தினமலர் நிர்வாகத்தினருக்குச் சொல்லுங்கள். அவர்களுக்கு அரிப்பெடுத்தால் முஸ்லிம் சமுதாயத்தின் முதுகைச் சொறிய வேண்டாம் என்று சொல்லுங்கள். நன்றி

    Comment by இப்னு பஷீர் — September 10, 2008 @ 3:12 pm

  5. உசைனை ‘எங்காளு’ என்று எனக்குத் தெரிந்து எந்த முஸ்லிமும் எழுதவில்லை. யார் எங்கே கூக்குரல் எழுப்பினார்கள் என்பதை சுட்டிக் காட்டிவிட்டு பிறகு நியாயம் அநியாயம் பற்றி பேசுங்கள்.

    //

    இந்த கேள்விக்கு கண்டிப்பாக பதில் அவரிடம் இருந்து கிடைக்காது. இருந்தாத்தான சுட்டிக் காட்டுறதுக்கு.

    Comment by அப்துல்லா — September 10, 2008 @ 5:47 pm

  6. தினமலர் பத்திரிகை பல வருடங்களாக முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் மறைமுகமாகவும் நேரடியாகவும் தாக்கி எழுதி வருகிறது. ஏதாவது ஒரு மூலையில் ஒரு சிறு சம்பவம் கிடைத்துவிட்டால் போதும் அதையே பெரிய செய்தியாக்கி தன் வெறித்தனத்தை காண்பித்து விடுவது வாடிக்கை. பத்திரிக்கை சுதந்திரம் தேவை. ஆனால் அதையே சாதகமாக பயன்படுத்தி ஒரு பிரிவினரை ஒழித்துக் கட்டவேண்டும் என்று முயற்சி செய்தால் பாதிக்கப்பட்டவர்கள் விழித்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். தினமலரின் பலம் தென்தமிழகத்தில் உள்ளது. அனைத்து முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் இப்பத்திரிகையை புறக்கணித்தாலே விற்பனை பெருமளவு சரிந்து விடும். தினமலருக்கு பாடம் புகட்ட இதுவே சரியான வழி.

    Comment by Robin — September 11, 2008 @ 4:13 am

  7. பாவம் ஒரு கார்ட்டூனை கூட எதிர்கொள்ள திராணியில்லாமல் வன்முறையையும் மிரட்டலையும் அரசாங்க தடைகளையும் உதவிக்கு கூப்பிடும் ஒரு மதம்…பரிதாபமாகத்தான் இருக்கிறது. இந்த பரிதாபகரமான மதத்தையும் அந்த மதத்தினரால் நபி என நம்பப்படும் முகமது என்கிற நபரையும் தினமலர் கிண்டல் செய்தது தவறுதான். :)

    Comment by அரவிந்தன் நீலகண்டன் — September 11, 2008 @ 5:59 am

  8. தினமலர் வருத்தம் தெரிவித்த பின்னும் நீங்கள் இப்படியெல்லாம் எழுதுவீர்கள், செய்வீர்கள் என்னும் போது இதில் வெளிப்படுவது
    எத்தகைய உணர்ச்சி என்பதை பிறரும் அறிவார்கள். தினமலர் ஏடு மீதான உங்கள் காழ்ப்பினை அந்நிய நாட்டு அரசுகளின் உதவி கொண்டு தீர்க்க உங்களுக்கு வெட்கமாயில்லை. மத வெறியை வளர்க்கவே இது போன்ற செயல்கள் உதவும். ருஷ்டி இன்றும் உயிருடன் இருக்கிறார், தஸ்லீமாவும் இந்தியாவில்தான் இருக்கிறார்.டென்மார்க்கில் அந்த நாளிதழ் இன்னும் வெளிவருகிறது.
    அது போல் தினமலரும் இதையெல்லாம் மீறி வரும்,வளரும்.

    Comment by sarvanan — September 11, 2008 @ 7:45 am

  9. //பாவம் ஒரு கார்ட்டூனை கூட எதிர்கொள்ள திராணியில்லாமல்//

    ராஜ் தாக்கரேயை யாரென்றே தெரியாது என்றதற்காக, அமிதாப் பச்சனின் மனைவி ஜெயாபச்சன் மன்னிப்புக் கேட்டுள்ளார்; ‘தனம்’ சினிமாப்படத்தில் தாசியைப் பிராமணர் திருமனம் செய்வதாகச் சித்தரித்ததற்காக படத்தின் இயக்குனரை இந்து அமைப்புகள் கடுமையாகக் கண்டித்துள்ளனர்.ஓவியர் M.F.ஹுசைன் சரஸ்வதியை ஆபாசமாக வரைந்ததால் சங் பரிவாரங்கள் போடாத ஆட்டமா? சங்கராச்சாரியார் கைவிலங்குடன் இருப்பதாக பேணர் வைத்ததால் தாண்டவம் ஆடியவர்களெல்லாம் ‘திராணி/ சகிப்புத்தன்மை பற்றி பேசுகிறார்கள்.

    தினமலரின் விசமத்தைச் செய்தியாக வெளியிட்டதால் பொது அமைதிக்குப் பங்கம் விளைந்து விட்டதாகச் சொல்லி,சன் டிவியைத் தடை செய்யக்கோரி தினமலர் வழக்குப் போட்டிருப்பதைக் குறித்து திருவாளர் நீலகண்டன் என்ன சொல்லப்போகிறார்?

    எதிர்ப்புகளை ஜனநாயக ரீதியில் பதிவுசெய்வதும் கருத்து சுதந்திரம்தான். இச்சம்பவத்தில் முஸ்லிம்கள் நிலையில் சங்பரிவாரங்கள் இருந்திருந்தால் ‘உணர்ச்சிவசப்பட்ட தேசபக்தர்’களாக்கப் பட்டிருப்பார்கள் அவ்வளவுதான்!

    Comment by நல்லடியார் — September 11, 2008 @ 7:58 am

  10. //பாவம் ஒரு கார்ட்டூனை கூட எதிர்கொள்ள திராணியில்லாமல் வன்முறையையும் மிரட்டலையும் அரசாங்க தடைகளையும் உதவிக்கு கூப்பிடும் ஒரு மதம்…பரிதாபமாகத்தான் இருக்கிறது.//

    இதை நீலகண்டன் சொல்வதுதான் நகைப்புக்குறியதாக இருக்கிறது.

    ஹுசைன் என்ற இஸ்லாமியப் பெயரைக் கொண்ட ஓவியர் ஒருவர் 1970-ல் வரைந்த சில ஓவியங்கள் இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதாக, 26 வருடங்கள் கழித்து 1996-ல் பெரும் சர்ச்சை எழுந்தது.
    - அவர் மீது 8-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் போடப்பட்டன.
    - பஜ்ரங்தள், சிவசேனா போன்ற அமைப்புகளைச் சேர்ந்த தொண்டர்கள் ‘சாத்வீகமான முறையில்’ ஹுசைனின் வீட்டில் புகுந்து தாக்குதல் நடத்தி அவரது ஓவியங்களை உடைத்தெறிந்தார்கள்.
    - ஆர்ப்பாட்டங்களினால் லண்டனில் நடந்துக் கொண்டிருந்த அவரது ஓவியக் கண்காட்சி மூடப்பட்டது.
    - அவருக்கு பல முறை கொலை மிரட்டலும் விடுக்கப் பட்டுள்ளது.
    - ஹுசைனை கொல்பவர்களுக்கு பல கோடிகள் தருவதாக இந்துத்துவ தலைவர் ஒருவர் அறிவித்தார்.
    - அவர் இன்றளவும் இந்தியாவுக்குத் திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் காலத்தை கழித்துக் கொண்டிருக்கிறார்.

    இதுவெல்லாம் எந்த மதத்தை காப்பதற்காக என்று நீலகண்டன் விளக்குவாரா?

    Comment by இப்னு பஷீர் — September 11, 2008 @ 8:16 am

  11. //தினமலர் வருத்தம் தெரிவித்த பின்னும் நீங்கள் இப்படியெல்லாம் எழுதுவீர்கள், செய்வீர்கள் என்னும் போது இதில் வெளிப்படுவது
    எத்தகைய உணர்ச்சி என்பதை பிறரும் அறிவார்கள்.//

    ஏதோ ஓரிரு சம்பவங்களில் தெரியாமல் தவறு நிகழ்ந்தது என்றால் அதை யாரும் பெரிது படுத்த மாட்டார்கள். ஆனால் தெரிந்தே தவறிழைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு அவர்களின் தவறு உணர்த்தப்பட வேண்டுமல்லவா?

    //தினமலர் ஏடு மீதான உங்கள் காழ்ப்பினை அந்நிய நாட்டு அரசுகளின் உதவி கொண்டு தீர்க்க உங்களுக்கு வெட்கமாயில்லை. மத வெறியை வளர்க்கவே இது போன்ற செயல்கள் உதவும்.//

    இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்களும் இந்தியர்கள்தான் என்ற எண்ணம் தினமலருக்கு இருந்தால் மத நல்லிணக்கத்தை குலைக்கும் இது போன்ற செயல்களில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள்.

    //ருஷ்டி இன்றும் உயிருடன் இருக்கிறார், தஸ்லீமாவும் இந்தியாவில்தான் இருக்கிறார்.டென்மார்க்கில் அந்த நாளிதழ் இன்னும் வெளிவருகிறது. அது போல் தினமலரும் இதையெல்லாம் மீறி வரும்,வளரும். //

    இது போன்ற தடைகளெல்லாம் அரசியல் தலைவர்களுக்கு கறுப்புக் கொடி காட்டுவது போன்ற ஒரு அடையாளச் செயல்தான். ‘தினமலரும் இதையெல்லாம் மீறி வரும்,வளரும்’ என்ற உங்கள் வாக்குப்படி அது நன்றாக வளரட்டும், மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்காத வகையில்!

    Comment by இப்னு பஷீர் — September 11, 2008 @ 8:36 am

  12. //பாவம் ஒரு கார்ட்டூனை கூட எதிர்கொள்ள திராணியில்லாமல் வன்முறையையும் மிரட்டலையும் அரசாங்க தடைகளையும் உதவிக்கு கூப்பிடும் ஒரு மதம்…பரிதாபமாகத்தான் இருக்கிறது. இந்த பரிதாபகரமான மதத்தையும் அந்த மதத்தினரால் நபி என நம்பப்படும் முகமது என்கிற நபரையும் தினமலர் கிண்டல் செய்தது தவறுதான்//

    சீரங்கத்தில் பெரியார் சிலை வைத்தால் தீட்டுப்பட்டுவிடும்; ம.க.இ.க.வினர் கருவறைக்குள் நுழைந்தால் தீட்டுப்பட்டுவிடும் என்று அஞ்சும் கடவுளுக்குப் பாதுகாப்பாக வன்முறை குண்டர்களின் காவிப்படையும் காவல்துறையின் காக்கிப்படையும் வந்தபோது அரவிந்து எங்கே ஒளிந்திருந்தது?

    உனக்கொரு நியாயம், அவனுக்கொரு நியாயமா?ஆம்

    Comment by kpkavundar — September 13, 2008 @ 5:36 pm

  13. தினமலர் கார்ட்டூனை வைத்து - தமிழக இஸ்லாமியர்கள் கலவரம் - தீவைப்பு - பத்திரிக்கை ஆசிரியர் முகத்தில் தார் பூசுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள் - என்று எதிர்பார்த்திருந்த ‘நரிகளுக்கு’ - ஏமாற்றமாக அமைந்து விட்டது, முஸ்லிம்களின் ஜனநாயக வழியிலான போராட்டம். அது பொறுக்கவில்லை சிலருக்கு, அதனால், ஏதாவது சொல்லி ’ஏத்தி’ விடலாம் என்று முயற்சிக்கிறார்கள்.

    Comment by பிறைந்திபுரத்தான் — September 17, 2008 @ 2:33 am

  14. தினமலர் கார்ட்டூனை வைத்து - தமிழக இஸ்லாமியர்கள் கலவரம் - தீவைப்பு - பத்திரிக்கை ஆசிரியர் முகத்தில் தார் பூசுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள் - என்று எதிர்பார்த்திருந்த ‘நரிகளுக்கு’ - ஏமாற்றமாக அமைந்து விட்டது, முஸ்லிம்களின் ஜனநாயக வழியிலான போராட்டம். அது பொறுக்கவில்லை சிலருக்கு, அதனால், ஏதாவது சொல்லி ’ஏத்தி’ விடலாம் என்று முயற்சிக்கிறார்கள்.

    Comment by பிறைந்திபுரத்தான் — September 17, 2008 @ 2:34 am

RSS feed for comments on this post.

Leave a comment

Line and paragraph breaks automatic, e-mail address never displayed, HTML allowed: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <code> <em> <i> <strike> <strong>



Anti-spam measure: please retype the above text into the box provided.