தருமியிடம் சில கேள்விகள்!

March 2, 2009

அதிரை பாரூக் என்பவரிடமிருந்து வந்த தொடர் மின்னஞ்சல்களால் எரிச்சலடைந்த பதிவர் தருமி, அதைப் பற்றி ஒரு பதிவெழுதியிருக்கிறார். அவருக்கு மின்னஞ்சல்கள் அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட பின்னரும் பாரூக் அவற்றைத் தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருந்தது தவறுதான். இடம், பொருள், ஏவலை பாருக் அனுசரிக்க வேண்டும்.

ஆனால் பாருக் செய்ததை விட பெரும் தவறு ஒன்றை தருமி தொடர்ந்து செய்துக் கொண்டிருக்கிறார். அவர் அறியாமலேயே அவ்வாறு செய்கிறாரா அல்லது தெரிந்தே செய்கிறாரா என்பதை நான் அறியேன். அவரிடம் சில கேள்விகளை நான் முன்வைக்க விரும்புகிறேன்.

தருமி அவரது பதிவில் எழுதியது:

//ஒவ்வொரு மதத்தினரும் தங்கள் கடவுள்களைக் காக்க பிறந்த பிறவிகளாகத் தங்களை நினைத்துக் கொண்டு, தங்கள் மதக் கருத்துக்களே உன்னதமானவை என்ற நினைப்பில் இருக்கும்போது எந்த வித மாற்றுச் சிந்தனையும் அவர்களிடையே எப்படி ஏற்படப் போகிறது? ஒவ்வொரு மதத்தைப் பற்றியும் அடுத்த மதத்தினர் அல்லது என்னைப் போன்ற மத மறுப்பாளன் ஆயிரத்தெட்டு குறைகளையோ, கேள்விகளையோ எழுப்ப முடியும். ஆனால் வெறும் நம்பிக்கையை மட்டும் வைத்திருப்பவர்களுக்கு அந்தக் கேள்விகளுக்குப் பதில் கூற முடியாது என்பதும் தெரியும்; ஆனால் அதை நம்பிக்கையாளர்கள் ஒத்துக் கொள்வதுமில்லை. எங்கள் மதத்தில் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் உண்டு என்ற கூற்று மட்டுமே உண்டு. ஒரு வேத புத்தகம் எப்படி வந்தது; யார்மூலம் வந்தது; எப்படி மாறாமல் இருந்தது என்று சொல்லப்படுவதெல்லாம் முக்கியமல்ல; அதன் content தான் முக்கியம் என்னைப் பொறுத்தவரை. இந்தப் பொருளடக்கங்கள் எல்லா மதத்திலேயும் குறைபாடு கொண்டதாகவே நான் உறுதியாகக் கருதுகிறேன்; ஓரளவு அதை நிரூபித்துமிருக்கிறேன்.//

தருமி, தாம் பிறந்த மதமாகிய கிருஸ்துவத்திலிருந்து வெளியேற நேர்ந்ததைப் பற்றி சில பதிவுகள் எழுதியிருக்கிறார். அப்பதிவுகளில் அவர் கிருஸ்துவம், இந்து மதம் ஆகியவற்றிலுள்ள சில குறைபாடுகளை எடுத்துச் சொல்லி விட்டு, இஸ்லாம் பற்றிப் பல கேள்விகளை முன்வைத்தார். அவற்றைப் படிப்பவர்களுக்கு, “கிருஸ்துவத்திலிருந்து இவர் வெளியேறியதற்கு இஸ்லாம் எவ்வகையில் காரணமாகும்?” என்ற நியாயமான கேள்வி எழும். ஒருவேளை கிருஸ்துவத்திலிருக்கும் குறைபாடுகள் பிடிக்காமல் அதிலிருந்து வெளியேறி வேறு ஒரு மதத்தில் இணையும் எண்ணத்தில் இவர் இருந்திருக்கலாம். அந்த நோக்கத்தில் அவர் இந்து மதம், இஸ்லாம் ஆகியனவற்றைப் பற்றி அறிய முற்பட்டிருக்கலாம். அந்த முயற்சியில் அவருக்குப் பல கேள்விகள் தோன்றியிருக்கலாம். இதுவரை எல்லாம் சரிதான். ஆனால், அவரது கேள்விகள் அவரைப் பொருத்த மட்டில் வெறும் கேள்விகளாகவே இருக்கையில், ‘எல்லா மதங்களும் குறைபாடு உடையவை’ என்ற உறுதியான(?) முடிவிற்கு அவர் எப்படி வந்தார்?

//மூன்று ‘புத்தகங்களை’ வாசித்துப் பார்க்கச் சொல்லியுள்ளீர்கள். நல்லது; நன்றி. நீங்கள் சொல்லியுள்ளவைகளை ஏதோ கொஞ்சமேனும் வாசித்திருக்கிறேன்.அந்த வாசிப்பிலேயே போதுமென்ற அளவிற்கு எதிர்மறைக் கருத்துக்கள் உருவாகிவிட்டன// - தருமி

அதிரை பாரூக் என்பவர், தாம் உறுதியாக நம்பிக்கைக் கொண்டு தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கும் அவரது மார்க்கத்தைப் பற்றி மற்றவர்களும் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் மின்னஞ்சல்கள் அனுப்புகிறார். அது தவறு என்றால், அரைகுறையாக மட்டுமே அறிந்திருக்கும் ஒரு கொள்கையைப் பற்றி உறுதியான(?) முடிவெடுத்து அதை எல்லோரும் பார்க்கும் வகையில் தனது வலைப்பதிவில் பதிவர் தருமி பதிந்து வைத்திருப்பது பெரும் தவறல்லவா? உதாரணமாக, ரஷ்ய மொழியின் ஒரு சில எழுத்துக்களை மட்டுமே அறிந்திருக்கும் ஒருவர் ‘அம்மொழியின் இலக்கியங்கள் குறைபாடுடையவை’ என உறுதியாக நம்புவதாக அறிவித்தால் அவரது மனநிலை சந்தேகத்திற்குரியது அல்லது அவருக்கு வேறு ஏதோ உள்நோக்கம் இருக்கிறது என்ற முடிவிற்கு வருவதுதான் நியாயம்.

நாம் அறிந்திராத விஷயங்களில் சந்தேகங்கள், கேள்விகள் எழுவது மனித இயல்பு. அது நமக்கு ஆர்வமுடைய துறையாக இருந்தால் அதற்கான பதில்களைத் தேடிப்பெற முனைவோம். இல்லையேல் அவற்றை மறந்து விட்டு வேறு வேலைகளில் ஈடுபடுவோம். இஸ்லாம் பற்றி இத்தனை கேள்விகளை முன்வைத்த தருமி, அதற்கான பதில்கள் பல சகோதரர்களால் விளக்கமாகச் சொல்லப்பட்ட போது, அவற்றைப் படித்திருப்பாரா என்பதுகூடச் சந்தேகம்தான். அவர் தன் கேள்விகளுக்கு பதில் தேடுபவராக இருந்து, சொல்லப்பட்ட பதில்களில் திருப்தி அடையாமலிருந்தால் அதைச் சுட்டிக் காட்டியிருக்கலாம். அதை விடுத்து, பதில் விளக்கங்கள் அளிக்கப் பட்ட போதெல்லாம் அதைப் பற்றி விவாதிக்காமல் மவுனமாக இருந்து விட்டு, சில மாதங்கள் கழித்து மீண்டும் அதே கேள்விகளைத் தூசு தட்டிக் கடை பரப்பினால் அவரது நோக்கம் என்னவாக இருக்கும்? கேள்விகள் வெறும் கேள்விகளாகவே சுற்றிக் கொண்டிருக்கட்டும் என்ற எண்ணமா? வெறும் கேள்விகளை மட்டுமே வைத்து அவர் எதை நிரூபித்தார்?

தருமி கேட்ட கேள்விகளுள் பலவற்றிற்கு பதிவர்கள் அபூமுஹை, நல்லடியார், சுல்தான் மற்றும் சிலர் தெளிவாகவே ஆதாரங்களுடன் பதிலளித்திருக்கின்றனர்.

அபூமுஹையின் பதிவுகள்:

மதமாற்றம் ஏன்? - 1

மதமாற்றம் ஏன்? - 2

மதமாற்றம் ஏன்? - 3

மதமாற்றம் ஏன்? - 4

மதமாற்றம் ஏன்? - 5

நல்லடியாரின் பதிவுகள்:

ஒரு பயணியின் குழப்பம்

தட்டுங்கள் திறக்கப்படும்

யாகாவா ராயினும் நாகாக்க - 1

எண்ணங்கள்

தருமி வாங்கிய Nokia போன்

ஒற்றைச்சாளர வீடும், வீடில்லாத சாளரங்களும்.

மதங்களும் பெண்ணியமும்.

சுல்தானின் பதிவுகள்:

தருமி ஐயாவின் வினாக்களுக்கு என் விளக்கங்கள் (பகுதி-1)

தருமி ஐயாவின் வினாக்களுக்கு என் விளக்கங்கள் (பகுதி-2)

தருமி ஐயாவின் வினாக்களுக்கு என் விளக்கங்கள் கடைசி பகுதி

இவ்வளவு நடந்த பிறகும் தருமி, “வெறும் நம்பிக்கையை மட்டும் வைத்திருப்பவர்களுக்கு அந்தக் கேள்விகளுக்குப் பதில் கூற முடியாது என்பதும் தெரியும்; ஆனால் அதை நம்பிக்கையாளர்கள் ஒத்துக் கொள்வதுமில்லை. எங்கள் மதத்தில் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் உண்டு என்ற கூற்று மட்டுமே உண்டு” என்று சொல்வது நகைப்பிற்குரியதல்லவா? கண்ணை மூடிக் கொண்டிருந்தால் எல்லாமே இருட்டாகத்தானே அய்யா தெரியும்?

தான் இருந்த மதத்தை விட்டு வெளியேறுவதோ புதியதொரு மதத்தைத் தழுவுவதோ, ஒருவரது வாழ்வின் திருப்புமுனை என்று சொல்லத்தக்க அதி முக்கியத்துவம் வாய்ந்ததொரு நிகழ்வு. ஆனால் வெறும் கேள்விகளை மட்டுமே வைத்து தருமி தனது மதத்தை விட்டு வெளியேறியதாகச் சொல்வது பொருத்தமாகத் தெரியவில்லை. கிருஸ்துவத்தைப் பற்றிக்கூட அவர் முழுமையாக தெரிந்து வைத்திருக்கவில்லை போலும். கிருஸ்துவம் தொடர்பாக பகுத்தறிவாளர் என்ற பதிவர் கேட்ட ஒரே ஒரு கேள்விக்குக்கூட முறையாக பதிலளிக்காமல் தருமி நழுவுவதிலிருந்து இது தெளிவாகிறது.

எனினும் தருமி அவர் சார்ந்திருந்த மதத்தை விட்டு வெளியேறுவது என்பது அவரது சொந்த முடிவு. அவர் எந்த உண்மையான காரணத்திற்காக வெளியேறினார் என்பதும் நமக்குத் தேவையில்லாத ஒன்று. அதேபோல், தான் அரைகுறையாக மட்டுமே அறிந்திருக்கும் ஒரு கொள்கையைப் பற்றி நக்கலாகப் பதிவெழுதுவது நிச்சயமாக அவருக்குத் தேவையில்லாத ஒன்று! இதை நாம் உறுதியாகச் சொல்ல முடியும். அப்படி ஒரு தவறைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் தருமி, அதிரை பாருக்கின் தொடர் மின்னஞ்சல் படையெடுப்பைக் குற்றம் சொல்லும் தகுதியையும் இழந்து விடுகிறார்.

“இது ஓர் எரிதம்” என்ற சிறிய அடையாளச் சொடுக்களைப் புரிந்து கொள்ளும் மின்னஞ்சல்களின் எளிய வசதியைப் பயன் படுத்திக் கொள்ளாமல் பாரூக்கின் படையெடுப்புக்காக ஒரு பதிவெழுதி அவருக்கு இலவச விளம்பரம் செய்து கொடுத்திருக்கிறார் பதிவர் தருமி.

கல்லூரி மாணவர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு பதில் விளக்கம் அளித்து அவர்களின் அறிவுக்கண்ணை திறந்துவிடும் ஒரு பேராசிரியராகப் பணி புரிந்ததாகச் சொல்லிக் கொள்பவர், தான் எழுப்பிய கேள்விகளுக்கு பதில்கள் வரும்போது தன் மனக்கதவுகளை பூட்டி வைத்துக் கொள்வது விந்தையிலும் விந்தைதான். இந்த நிலையில் அவர் இருக்கும்வரை எந்த வித மாற்றுச் சிந்தனையும் அவரிடம் எப்படி ஏற்படப் போகிறது?

63 Comments »

The URI to TrackBack this entry is: http://ibnubasheer.blogsome.com/2009/03/02/p85/trackback/

  1. தருமியின் பதிவில் ஓட்டாண்டி என்ற பெயரில் பின்னூட்டமிட்டிருக்கும் நபர், இந்தப் பதிவிற்கு வந்தபோது அவரது அந்த அடையாளத்தைக்கூட தொலைத்து விட்டார் போலும். இவரைப் போன்றவர்கள் மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லுமுன் முதலில் தங்கள் அடையாளங்களை மீட்டுக் கொள்ளட்டும். அந்த முதிர்ச்சி வந்து விட்டால் உங்கள் கேள்விகளுக்கான பதில்களும் தானாகவே கிடைத்து விடும்.

    Comment by இப்னு பஷீர் — March 3, 2009 @ 1:56 am

  2. நறுக்குத் தெறித்தாற்போல் சுருக்கமான, அதேவேளை விளக்கமான பதிவு!

    நீங்கள் கொடுத்த சுட்டிகளில் உள்ள விளக்கங்களும் கண்ணியத்துடன் எழுதப் பட்டிருக்கின்றன; நன்றி!

    எல்லாம் சரி; ஓட்டாண்டி என்பவர் என்ன சொன்னார்?

    Comment by ஜமீல் — March 3, 2009 @ 4:58 am

  3. கருத்துக்களுக்கு நன்றி சகோ. ஜமீல்.

    தருமி தன் பதிவில் அனுமதித்து வெளியிட்டிருக்கும் அதே கேள்விகளைத்தான் ஓட்டாண்டி என்ற நபர் இந்த பதிவிலும் கேட்டிருக்கிறார். அவற்றில் சற்றே நாகரீகமான சில பின்னூட்டங்கள்:

    1) Hello ponga poi pullaingalai padikka vaingappa.Ippadi onnukkum udavada islama kattikittu azuvadinga.

    2) “If god is strong and powerful and created this world, Can he create a stone which he himself cannot move”??

    அப்படி அந்த கல்ல செய்ய முடிஞ்சா அப்பறம் அவரால ஒரு கல்லை நகர்த்த முடியாது. so powerful taga remove பண்ணிடலாம்.

    அப்படி அந்த கல்ல செய்ய முடியலன ஒரு கல்லை கூட செய்ய முடில இவர் எங்கேந்து
    sun;earth;solar system;milkway galaxy;andromeda galaxy(நம்ப பக்கத்துக்கு galaxy);comet;stars;asteroids;metor;metorites இதெல்லாம் create பண்ணி இருப்பார்?

    இந்த ஜுஜூபி கேள்விக்கு பதில் எல்லாம் எந்த booklayum இருக்காது..
    ஏன்னா கீதை, பைபிள், குரான், வேதம், இத எல்லாம் எழுதுனவங்களுக்கு galileova கல்ல உட்டு அடிக்கவும், darwina விரட்டி விரட்டி அடிக்கவும் தான் தெரியும்.

    இந்த “holy book”(என்ன எழவோ!) எல்லாம் படிக்கிறதுக்கு முன்னாடி கொஞ்சம் உங்க எதிர்த்த வீடு பையனோட 8th அறிவியல் booka வாங்கி படிங்க அப்பு!!
    அதுக்கு அப்பறம் விலாவாரியா உக்காந்து பேசுவோம்

    200 பெரியார் இல்லை 400 பெரியார் வந்தாலும் முடியாதுடா!!!!

    3) ஒரு “கடவுளுக்கு” அல்லது ‘கடவுளின் தூதுவருக்கு’ எப்படி இசையின் மீது இப்படிப்பட்ட வெறுப்பும், ஒரு பக்க சார்பும் இருக்க முடியும் என்றே யோசிக்காதவரிடம் இது போன்ற தத்துவார்த்தக் கேள்விகளைக் கேட்கணும் அப்டின்றது உங்களுக்கு டூ மச் அப்டின்னு தோணலை?!

    4) /குளிக்கும்போதுகூட ஆம்பிள இப்படியிப்படிதான் குளிக்கணும்
    இந்த விஷயதுலேந்து ஒண்ணு மட்டும் புரியது. நம்ப அம்மணமா இருக்குறது கடவுளுக்கு பிடிக்கில போல இருக்கு. பிறக்கும்போது ஒரு வேளை அந்த காலத்துல ஜெட்டி போட்டுகிட்டே பிறந்தாங்களோ என்னவோ!!
    நிக்கவும் முடியாம உக்காரவும் முடியாம படுக்கைலையே ஒண்ணுக்கு போறவங்க எல்லாரும் (6 மாச குழந்தை மற்றும் சில பாவப்பட்ட நோயாளிகள்) நரகத்துக்கு டிக்கெட் எடுக்க வேண்டி தானா ?
    உடலுறவு போது எதாவது “code of conduct” & “dress code”la இருக்கணும்னு கடவுள் எதாவது சொல்லிருகாரா ? அந்த samayathula சாமிக்கு வெக்கமா இருக்காதா ?
    (இந்த கடவுள நெனைச்சாலே பாவமா இருக்கு.. எந்த எந்த matteruku எல்லாம் “code of conduct” solli kuduka vendiyadha இருக்கு பாருங்க!!!)

    Comment by இப்னு பஷீர் — March 3, 2009 @ 5:13 am

  4. ஃஃஅவரது மனநிலை சந்தேகத்திற்குரியது ஃஃ

    இதே தான் எனக்கும் தோன்றியது. அவருடைய கருத்துக்கள் எல்லாம் அடிப்படை அற்றது. அவரைச் சேர்ந்தவர்களை மகிழ்விக்கவும், தன்னுடைய வலைதளத்திற்கு பின்னூட்டங்கள் வருவது குறைய ஆரம்பித்தாலும் மக்களின் மறதியைப் பயனபடுத்தி இப்படிப்பட்ட ரெடிமேடு கேள்விகளைத் திரும்பத் திரும்ப கேட்பதே வாடிக்கையாகிவிட்டது.

    எதாவது ஒரு பள்ளிக்கூடம் அல்லது கல்லூரிகளுக்குச் சென்றால் இஸ்லாமியர்கள் மீது வெறுப்படைந்த ஒரு ஆசிரியரையோ அல்லது பேராசிரியரையோ காணலாம், அப்படிப்ப ஒருவரில் இவரும் ஒருவர் போலும். வேறு என்னத்தைச் சொல்வது.

    இவர்களுக்கு விளக்க முடியாது, ஏனென்றால் இவர்கள் பெற்ற பயிற்சி அப்படி.

    Comment by அப்துல் குத்தூஸ் — March 3, 2009 @ 6:11 am

  5. கருத்துகளுக்கு நன்றி சகோ. அப்துல் குத்தூஸ். கேள்விகள் கேட்பதில் தவறில்லை. ஆனால் அந்தக் கேள்விகளுக்கு பலமுறை பதில் சொல்லப் பட்ட பின்னரும் “வெறும் நம்பிக்கையை மட்டும் வைத்திருப்பவர்களுக்கு அந்தக் கேள்விகளுக்குப் பதில் கூற முடியாது என்பதும் தெரியும்” என்று பொய்யாகப் பெருமை பேசிக் கொண்டிருப்பது முறையில்லாதது. அதையும் ஒரு பேராசிரியராக பணியாற்றியதாகச் சொல்லிக் கொள்பவர் செய்வது வியப்பாக இருக்கிறது.

    Comment by இப்னு பஷீர் — March 3, 2009 @ 6:29 am

  6. **அதை விடுத்து, பதில் விளக்கங்கள் அளிக்கப் பட்ட போதெல்லாம் அதைப் பற்றி விவாதிக்காமல் மவுனமாக இருந்து விட்டு, சில மாதங்கள் கழித்து மீண்டும் அதே கேள்விகளைத் தூசு தட்டிக் கடை பரப்பினால் அவரது நோக்கம் என்னவாக இருக்கும்?**

    நியாயமான கேள்வி தம்பி.

    நண்பர் தருமி நிச்சயமாக இதற்கு பதில் அளிப்பார்.

    கேள்விகள் அதிகம் எழுப்பப்படுவதே தெளிவான விளக்கங்கள் பிறக்க வழிவகுக்கும்.

    கேள்விகள் எங்கும் பிறக்கட்டும்!

    வாழ்த்துக்கள்!

    - ஹாஜியார்

    Comment by ஹாஜியார் — March 3, 2009 @ 6:46 am

  7. கருத்துகளுக்கு நன்றி சகோ. ஹாஜியார் அவர்களே. நண்பர் தருமி நிச்சயமாக இதற்குப் பதிலளிப்பார் என்றுதான் நானும் எதிர்பார்க்கிறேன்.

    Comment by இப்னு பஷீர் — March 3, 2009 @ 6:49 am

  8. இத்தனை விளக்கங்கள் அளிக்கப்பட்ட பின்னரும் அவற்றில் எதையுமே தருமி அவர்கள் கண்டுகொள்ளாமல் மீண்டும் மீண்டும் தனது கேள்விகளை மேலெழுப்பிக் கொண்டிருக்கிறார் எனில், நிச்சயம் அவரின் நோக்கம் சந்தேகத்திற்கிடமானது தான்.

    Comment by சந்திரன் — March 3, 2009 @ 6:55 am

  9. நன்றி சகோ. சந்திரன். முன்பொருமுறை தருமிக்கு அபூமுஹை ஒரு விளக்கப் பதிவு எழுதியிருந்தபோது அங்கு சிலர் பின்னூட்டமிட்டிருப்பதால் அவருக்கு அந்தக் ‘களம்’ பிடிக்கவில்லை என்ற நொண்டிச் சாக்குச் சொல்லி, அதனால் அதைப் பற்றி ஒன்றும் சொல்ல விரும்பவில்லை என்றும் சொன்னவர்தான் தருமி. அதையெல்லாம் மறந்து விட்டுத்தான் ‘என் கேள்விகளுக்கு அவர்களால் பதில் கூற முடியாது என்பது எனக்குத் தெரியும்’ என தன் முதுகில் தானே தட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் அவர்.

    Comment by இப்னு பஷீர் — March 3, 2009 @ 7:05 am

  10. தருமி அய்யாவின் பதிவுகளைப் படித்துள்ளேன். அனைத்தும் அற்புதமானவை. மதத்தைக் குறித்து அவர் எழுப்பும் கேள்விகள் என்னை வியப்பில் ஆழ்த்தியுள்ளன. அவருடைய கேள்விகளுக்கு யாருமே இதுவரை பதிலளித்தது கிடையாது என்று தான் நினைத்திருந்தேன். இப்பதிவு பல புதியத் தகவல்களைத் தருகிறது. இங்கே தந்திருக்கும் அனைத்து இணைப்புகளையும் படிக்க வேன்டும்.

    படித்தப்பின் வருகிறேன்.

    Comment by நாஞ்சில் ராஜ் — March 3, 2009 @ 7:30 am

  11. //நன்றி சகோ. சந்திரன்.//

    நண்பர் இப்னுபசீர் அவர்களுக்கு

    நான் கம்யூனிஸ்டு அல்ல. எனக்கு அரசியல் கட்சிகளே பிடிக்காது.

    Comment by சந்திரன் — March 3, 2009 @ 7:32 am

  12. நன்றி நாஞ்சில் ராஜ் அவர்களே. இணைப்புகளைப் படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

    Comment by இப்னு பஷீர் — March 3, 2009 @ 7:33 am

  13. சகோ. சந்திரன். நானும் கம்யூனிஸ்ட் அல்ல :) உங்களை சகோ என்று விளித்திருப்பதால் இந்த சந்தேகம் எழுந்திருக்கிறது என்று நினைக்கிறேன். கம்யூனிஸ்டுகள் ஒருவரை ஒருவர் ‘தோழர்’ என அழைக்கும் வழக்கமுடையவர்களாக கண்டிருக்கிறேன். சக மனிதர்களை சகோதரர்களாக பாவிக்கும் பண்பை இஸ்லாம் எனக்குக் கற்றுத் தந்திருக்கிறது.

    Comment by இப்னு பஷீர் — March 3, 2009 @ 7:38 am

  14. ஓ மன்னிக்க சகோ. இப்னுபசீர்.

    இப்பதிவில் எங்குமே நீங்கள் அவ்வாறு உபயோகிக்காததால் நான் தவறாக விளங்கிக் கொண்டேன்.

    சக மனிதர்களைச் சகோதரர்களாக பாவிக்க இஸ்லாம் கற்றுத் தந்ததாக கூறுகிறீர்களே? அவ்வாறெனில் நண்பர் தருமியும் உங்களுக்குச் சகோதரர் தானே? நீங்கள் ஏன் அவரை அவ்வாறு அழைக்கவில்லை?

    Comment by சந்திரன் — March 3, 2009 @ 7:44 am

  15. இரண்டு விஷயங்கள்:

    1). நம்பிக்கையற்ற ஒருவர் அது எனக்குப் பொருந்திவரவில்லை என்று ‘கதை’ப்பது. இது தருமி போன்றவர்களுக்குத் தேவையற்றது. நம்பிக்கையற்றுவிட்ட பிறகு பொருந்தவில்லை என்ற கவலை உண்மையாயிருக்க முடியாது.

    2). ‘பிடி’ வாதம் செய்பவர்கள் ஒத்துக்கொள்வது மாதிரியான விடைகளை யாரும் தர இயலாது.

    Comment by நன்மனம் — March 3, 2009 @ 7:44 am

  16. சகோ. சந்திரன். பதிவு கட்டுரை வடிவில் இருப்பதால் படிக்கும் இலகுவிற்காக சகோ என்ற விளிச்சொல்லை தவிர்த்திருக்கிறேன். பின்னூட்டங்கள் உரையாடலாக இருப்பதால் அவற்றில் சகோ என்று பயன்படுத்தியிருக்கிறேன். தருமியையும் சகோ என்று அழைப்பதில் எனக்கு ஆட்சேபணை எதுவுமில்லை

    Comment by இப்னு பஷீர் — March 3, 2009 @ 8:09 am

  17. “நம்பிக்கையற்றுவிட்ட பிறகு பொருந்தவில்லை என்ற கவலை உண்மையாயிருக்க முடியாது.” எனக் கருத்திட்ட சகோ நன்மனம் அவர்களுக்கு நன்றி.

    முஸ்லிம்களாகிய நாங்கள் ‘குர்ஆனும் இறைத்தூதரின் போதனைகளும் உண்மை’ என நம்புகிறோம். தருமி போன்றவர்கள் ‘அவை உண்மையாக இருக்காது’ என்று நம்புகிறார்கள். இந்த இரண்டு நம்பிக்கைகளுக்கும் இடையில் உள்ள வேறுபாடு, அவற்றிற்கான ஆதார அடிப்படைகள்.

    நேர்மையான விவாதம் எனில், ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டு தெளிவாக விளக்கப்பட வேண்டும். வெறும் கேள்விகளை மட்டும் கேட்டுவிட்டு ‘நான் ஜெயிச்சுட்டேன்’ என்று அறிவிப்புச் செய்து கொள்வது அறிவுடைமை ஆகாது.

    Comment by இப்னு பஷீர் — March 3, 2009 @ 8:17 am

  18. சகோ. இப்னுபஷீர், நான் தவறாக எதுவும் கேட்டுவிடவில்லையே?

    பேராசிரியர் தருமி அவர்கள் நல்லதொரு சிந்தனைவாதி. அவரின் கேள்விகள் மற்றவர்களுக்கு உறக்கம் கெடுக்கவல்லவை என்று ஓரிடத்தில் படித்த நினைவு.

    அவருடனான சகோதர உரையாடல் நல்ல கருத்துப்பரிமாற்றத்திற்கு வழிவகுக்குமே என்ற நல்லெண்ணத்திலேயே அவ்வாறு கேட்டிருந்தேன்.

    எப்படியாயினும் உங்களின் கேள்விகளுக்கு பேராசிரியர் தருமி அவர்கள் பதிலளிக்க எல்லாம் வல்ல அல்லாவை நானும் வேண்டிக் கொள்கிறேன். :-)

    Comment by சந்திரன் — March 3, 2009 @ 8:18 am

  19. சகோ. சந்திரன். நீங்கள் கேட்டதில் தவறேதுமில்லை. //பேராசிரியர் தருமி அவர்கள் நல்லதொரு சிந்தனைவாதி.// அதனால்தான் ஒரு பேராசிரியராக இருந்தவர், வெறும் கேள்விகளை மட்டும் வைத்து எப்படி உறுதியான முடிவுகளுக்கு வந்தார் என்று வியப்படைகிறேன்.

    //எப்படியாயினும் உங்களின் கேள்விகளுக்கு பேராசிரியர் தருமி அவர்கள் பதிலளிக்க எல்லாம் வல்ல அல்லாவை நானும் வேண்டிக் கொள்கிறேன். //

    உங்கள் வேண்டுதலுக்கு நன்றி. நானும் அவ்வாறே வேண்டிக் கொள்கிறேன்.

    Comment by இப்னு பஷீர் — March 3, 2009 @ 8:25 am

  20. //எந்த வித மாற்றுச் சிந்தனையும் அவர்களிடையே எப்படி ஏற்படப் போகிறது?//

    மாற்றுச் சிந்தனை?!

    கஅபாவைச் சுற்றிலும் வீற்றிருந்த கற்சிலைகளே தங்களை ஈடேற்றும் கடவுளர்களென, கல்லையும் மண்ணையும் கவிபாடி பூசித்து, ஜென்மப்பகை தீர்ப்பதே பிறவிப்பயனென்றும்,குலப்பெருமைபேசியும் குறைக்கூறியும் திரிந்த அரபுப் பாகன்கள் முதல் இன்றைய அறிவுஜீவிகள்வரை - மாற்றுகச் சிந்தனையாக முன்வைக்கப்பட்டதே இஸ்லாம்!

    முஸ்லிம் என்றால் தீவிரவாதி. இஸ்லாம் என்றால் உலக அமைதிக்கு அச்சுருத்தல் என்ற மாற்றுச் சிந்தனையை மறுகேள்வியின்றி ஏற்ற இவர்கள் “எந்த வித மாற்றுச் சிந்தனையும் அவர்களிடையே எப்படி ஏற்படப் போகிறது?” என்று அப்பாவியாகக் கேட்பது வேடிக்கையாக உள்ளது!

    //ஒவ்வொரு மதத்தைப் பற்றியும் அடுத்த மதத்தினர் அல்லது என்னைப் போன்ற மத மறுப்பாளன் ஆயிரத்தெட்டு குறைகளையோ, கேள்விகளையோ எழுப்ப முடியும். ஆனால் வெறும் நம்பிக்கையை மட்டும் வைத்திருப்பவர்களுக்கு அந்தக் கேள்விகளுக்குப் பதில் கூற முடியாது என்பதும் தெரியும்;ஆனால் அதை நம்பிக்கையாளர்கள் ஒத்துக் கொள்வதுமில்லை.//

    தன்னை மதமறுப்பாளன் என்று காட்டிக்கொள்வதற்காக கிறிஸ்துவத்தைப் பற்றிக் கேட்டதில், தன்னுடைய மகன் (!?) யூதர்களால் சிலுவையிலேற்றிக் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த முடியாதக் கடவுள் எப்படி omnipotent ஆக இருக்க முடியும் என்று இவர் கிறிஸ்தவர்களை நோக்கிக் கேட்டதற்கு, இயேசுவுக்கு தந்தையில்லை; அவர் கடவுளின் மகனுமல்ல, இயேசு கொல்லப்படவுமில்லை என்று குர்ஆன் கூறும் ‘மாற்றுக் கருத்தை’ தருமி ஏற்கத் தயாரா?

    Should I not convinced with your explanation? என்றோ அல்லது அலுப்பாக இருக்கிறது என்றோ ஒதுங்குபவர் “மாற்றுக்கருத்தை” மற்றவர்கள் அதுவும் முஸ்ளிம்கள் ஏற்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது நகைப்பிற்குறியது.

    Comment by நல்லடியார் — March 3, 2009 @ 8:54 am

  21. //தான் அரைகுறையாக மட்டுமே அறிந்திருக்கும் ஒரு கொள்கையைப் பற்றி நக்கலாகப் பதிவெழுதுவது நிச்சயமாக அவருக்குத் தேவையில்லாத ஒன்று!//

    இஸ்லாத்தின் எதிரிகள் காலம் காலமாய் செய்து கொண்டிருக்கும் செயலில் ஒன்று தான் இது.

    அவர் நேர்மையாளராக இருந்தால் அவருடைய கேள்விகளுக்கு அளிக்கப்பட்டிருக்கும் பதில்களுக்கான அவரின் நிலைபாடுகளையும் அவரை நோக்கிவைக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கும் தக்க பதில்களை அளிக்க வேண்டும்.

    இல்லையேல், மனதில் வன்மத்துடன் இஸ்லாத்தை வசைபாடும் கூட்டத்தில் ஒருவராகவே தருமியும் கணிக்கப்படுவார்.

    அபூ ஃபாத்திமா

    Comment by அபூ ஃபாத்திமா — March 3, 2009 @ 8:58 am

  22. தருமிக்கு சகோதரர் அதிரை பாரூக் ஏதாவது பதில் கொடுத்துள்ளாரா? இருந்தால் அறியத்தரவும்.

    Comment by Nasar — March 3, 2009 @ 9:19 am

  23. நியாயமான கேள்விகள். தருமி அய்யா பதிலளிப்பது அவரின் மீதான மரியாதையை தக்கவைக்கும்.

    Comment by Siva — March 3, 2009 @ 9:28 am

  24. எனக்கென்னவோ தருமிக்கு ஆதிரையின் எரிதங்கள்தான் பிரச்சினையல்ல. இசுலாம் மார்க்கத்தைப்பற்றி விரட்டி விரட்டி அனுப்பியதே பிரச்சினையாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

    தருமியின் கேள்விகள் ஒருபக்கசார்புடையவையாகவே இருந்தாலும் பதில் சொல்லப்பட வேண்டியவைதான் என்பதும். அதேபோல்,கேள்வி மட்டும்தான் கேட்பேன் என்பது தன்னிடம் அறிவுப்பூர்வமான மாற்றுச் சிந்தனையில்லை என்று ஒத்துக்கொண்டதாகிவிடும். இதை பரஸ்பரம் உணர்ந்து கொண்டால் மதச்சண்டைகள் எழாது.

    இசுலாமியப் பதிவர்களின் மென்மையான எதிர்வினைகள் நல்ல பதிலடிகள். வெல்க தமிழ்.

    ஜெயகமல்

    Comment by ஜெயகமல் — March 3, 2009 @ 9:58 am

  25. மதத்தைக் குறித்த உரையாடல்கள் எங்கெல்லாம் எழுகிறதோ அங்கெல்லாம் மனிதர்களிடையே பகமைகள் உருவாகின்றது. இங்கும் அது தான் நடக்கிறது.

    மதத்தை விட்டு மனிதம் பேச ஒவ்வொருவரும் தயாரானாலே பிரச்சனைகளுக்கு வழிபிறக்கும்.

    மதத்தைத் துறந்து மதமின்மை குறித்துப் பேச வந்த தருமி அய்யா அவர்களும் ஏதோ ஒரு விதத்தில் மத நம்பிக்கையாளர்களைப் போன்று மற்றவர்களைச் சாடுவதிலேயே குறியாக இருக்கிறார். அது சரியான நிலைபாடல்ல.

    அவர் முதலில் மதங்களைக் குறித்து விமர்சனம் புரிய ஆரம்பித்தது முதல் தவறு. மனிதத்தைக் குறித்து மட்டுமே பேசியிருக்க வேண்டும்.

    மதத்தைக் குறித்துப் பேச ஆரம்பித்தப்பின், ஒருபக்கம் கேள்விகள் மட்டுமே கேட்பேன், என்ன விளக்கம் தந்தாலும் கண்டுகொள்ளவே மாட்டேன் என இருப்பது அதனை விட மிகப்பெரிய தவறு.

    தருமி அய்யா அவர்கள் போன்ற நல்ல சிந்தனையாளர்களிடமிருந்து இத்தகைய நேர்மையற்ற நிலைபாடுகள் எதிர்பாராதது. மாற்றிக் கொள்வார் என நம்புகிறேன்

    Comment by மதிவாணன் — March 3, 2009 @ 10:24 am

  26. எனது கருத்தை நீங்கள் ஏன் வெளியிடவில்லை என்று தெரிந்துக் கொள்ளலாமா?

    Comment by மதிவாணன் — March 3, 2009 @ 10:46 am

  27. உங்களின் பதிவைப் பார்த்தவுடன், தருமி அவர்களின் அற்புதமான பதிவுகளுக்குப் பதிலளிக்க முடியாமல் நீங்கள் ஏதோ பிதற்றுகின்றீர்கள் என்றே நினைத்தேன். ஆனால் நீங்கள் தந்துள்ள இணைப்புகளைப் படிக்கும் பொழுது, உங்களின் இந்தப் பதிவின் மீதான நான் வைத்த தவறான எண்ணம் விலகுகிறது.

    தருமி அவர்களின் பதிவுகளை அற்புதமானவை என்று கருதியிருந்த என் எண்ணங்களையும் அந்த இணைப்புகளில் காணப்படும் தகவல்கள் தகர்க்கின்றன.

    அபூமுஹை அவர்களின் மதமாற்றம் ஏன் - 1 பதிவில் திரு. அழகப்பன் என்றொரு நண்பர் போட்டிருக்கும் கீழ்கண்ட கருத்து என்னை அதிர்ச்சியடைய வைத்தது.

    //”நான் ஏன் மதம் மாறினேன்” என்று தலைப்பிட்டு அவர் எழுதியவை அவருடைய தலைப்புக்குச் சம்பந்தமில்லாமல், அவரும் அப்பதிவில் பின்னூட்டமிட்டவர்களும் இஸ்லாமிய எதிர்ப்பு ஒன்றையே குறிக்கோளாக் கொண்டு எழுதி வந்தனர். என்னுடைய இந்த பின்னூட்டத்திற்குப் பிறகுதான் அவர் பின்னூட்டத்தை மூடினார் என்பதை அறியத் தருகிறேன்.
    http://dharumi.weblogs.us/2005/09/15/68#comment-570

    //இஸ்லாம் மட்டும்தான் ஓரளவு அறிவுபூர்மான மார்க்கமாக இருக்கிறது என்று நீங்கள் கருதினால், முஸ்லிம்களுடன் மட்டுமே விவாதம் செய்ய விரும்பினால், நாங்கள் தயாராகவே இருக்கிறோம். அப்படி ஒரு நிலை வரும்போது, விவாதத்தை திசை திருப்பும்படியாக வரும் மற்றவர்களின் பின்னூட்டங்களை நீக்கிவிடுங்கள். நீங்கள் கிருத்துவத்தை வெளியேறிவிட்டீர்கள் என்பதை வெளிப்படையாக அறிவித்துவிடுங்கள். இப்படி செய்யும்போதுதான் விவாதம் சரியான கோனத்தில் செல்லும். கருத்துச் சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக மற்றவர்களையும் அனுமதிக்கும்போது, அவர்கள் இந்த வாதத்திற்கு சம்பந்தமில்லாத விஷயங்களைக் கூறி விவாதம் திசை திரும்ப வாய்ப்பு அதிகம் உண்டு என்பதை நீங்கள் மறுக்கமாட்டீர்கள் என நம்புகிறேன்.//

    இப்போது முஸ்லிம்களிடமிருந்து மட்டும் பதிலை எதிர் நோக்கியிருப்பதால், இஸ்லாம் மட்டுமே அறிவுப்பூர்வமான மார்க்கம் என்றோ அல்லது முஸ்லிம்களால் மட்டுமே இம்மாதிரியான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியும் என்று அவர் ஒத்துக் கொண்டிருப்பதாகவே நான் கருதுகிறேன். பல்வேறு வேலைப்பளு காரணமாக என்னால் எழுத முடியவில்லை. தொடருங்கள்… இன்ஷா அல்லாஹ் தருமி மீண்டும் மதம் மாறுவார்.//

    இவர் கூறுவது உண்மை எனில், தருமி நேர்மையற்ற அயோக்கியர் என்பது சத்தியம்.

    எடுத்த உடன் அவரை நேர்மையற்றவர் என நான் கூற விரும்பவில்லை. இன்னும் அனைத்துப் பதிவுகளையும் முழுதாகப் படிக்க வேண்டியுள்ளது. இன்னும் படித்தப்ப்பின் என் கருத்துகளைக் கூறுகிறேன்.

    Comment by நாஞ்சில் ராஜ் — March 3, 2009 @ 11:04 am

  28. கருத்துக்களுக்கு நன்றி சகோ. நல்லடியார்.

    //முஸ்லிம் என்றால் தீவிரவாதி. இஸ்லாம் என்றால் உலக அமைதிக்கு அச்சுருத்தல் என்ற மாற்றுச் சிந்தனையை மறுகேள்வியின்றி ஏற்ற இவர்கள் “எந்த வித மாற்றுச் சிந்தனையும் அவர்களிடையே எப்படி ஏற்படப் போகிறது?” என்று அப்பாவியாகக் கேட்பது வேடிக்கையாக உள்ளது! //

    இஸ்லாம் பற்றி மட்டுமல்ல, அவர் சார்ந்திருந்த கிருஸ்துவ மதத்தைப் பற்றிக்கூட முழுமையாக அறிந்திராமல், மேம்போக்காக காதில் விழுந்த சில பிழையான தகவல்களை மட்டுமே அடிப்படையாக வைத்து, ‘எல்லா மதங்களுமே குறைபாடு உடையவை’ என்ற முடிவிற்கு வந்திருக்கும் தருமி, பிறரிடம் மாற்றுச் சிந்தனை எப்படி ஏற்படும் என்று குறைப் பட்டுக் கொள்வது வேடிக்கையானதுதான்.

    Comment by இப்னு பஷீர் — March 3, 2009 @ 12:19 pm

  29. சகோ. அபூ பாத்திமா, தங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

    //அவர் நேர்மையாளராக இருந்தால் அவருடைய கேள்விகளுக்கு அளிக்கப்பட்டிருக்கும் பதில்களுக்கான அவரின் நிலைபாடுகளையும் அவரை நோக்கிவைக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கும் தக்க பதில்களை அளிக்க வேண்டும்.//
    இந்த நேர்மையைத்தான் நாம் தருமியிடம் எதிர்பார்க்கிறோம். பதில் சொல்கிறாரா என்று பார்ப்போம்.

    Comment by இப்னு பஷீர் — March 3, 2009 @ 12:36 pm

  30. சகோதரர்கள் நாசர், சிவா மற்றும் ஜெயகமல், உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. அதிரை பாருக் வலைப்பதிவு எதுவும் வைத்திருக்காததால் அவர் தருமிக்கு பதிலளித்துள்ளாரா என்பது தெரியவில்லை.

    Comment by இப்னு பஷீர் — March 3, 2009 @ 12:45 pm

  31. உங்கள் கருத்துக்களுக்கு நன்றி சகோ. மதிவாணன். கொஞ்சம் வேலையாக இருந்ததால் உங்கள் பின்னூட்டத்தை உடனடியாக வெளியிட இயலவில்லை.

    //அவர் முதலில் மதங்களைக் குறித்து விமர்சனம் புரிய ஆரம்பித்தது முதல் தவறு. மனிதத்தைக் குறித்து மட்டுமே பேசியிருக்க வேண்டும்.//

    பொதுவாக, மதங்களைப் பற்றி கேள்விகள் கேட்பதில் தவறு எதுவுமில்லை. ஆனால், நாம் அறிந்திராத விஷயங்கள் எந்தத் தரப்பினரிடமிருந்து வந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் அவசியம் தேவை.

    Comment by இப்னு பஷீர் — March 3, 2009 @ 12:51 pm

  32. What is Dharumi’s questions to you?
    And What is your questions to him?

    Pls put a collective article

    Comment by Indian — March 3, 2009 @ 12:52 pm

  33. சகோ. நாஞ்சில் ராஜ், தங்கள் மீள்வருகைக்கும் திரு. அழகப்பனின் கருத்துக்களை எடுத்துக்காட்டியமைக்கும் நன்றி. மற்றப் பதிவுகளையும் படித்து விட்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்

    Comment by இப்னு பஷீர் — March 3, 2009 @ 1:03 pm

  34. நீங்கள் வழக்கம் போல எழுதும் அதே அமைதி அதே தெளிவு!

    நன்றிகள் பல சகோ இப்னு பஷீர்

    //Should I not convinced with your explanation? //

    இதே கேள்வியைத் திருப்பி அவரிடமே கேட்க முடியுமே!

    Should we not be convinced by his explanation?

    ஒன்று தெரிகிறது; அவர் ஒரு பகுத்தறிவு வேடம் போடும் இஸ்லாமிய எதிரி.

    Comment by சவூதி தமிழன் — March 3, 2009 @ 2:09 pm

  35. ஏன்யா உங்களுக்கெல்லாம் வேறு வேலையே இல்லையா?

    Comment by வெற்றி — March 3, 2009 @ 2:39 pm

  36. உங்களைக் குறித்து யார் கேள்வி எழுப்பினாலும் அவர் மீது தனிமனித தாக்குதல் செய்வதிலேயே குறியாக இருக்குறீர்களே ஏன்? இது தான் உங்களுக்கு இஸ்லாம் கற்றுத் தந்துள்ளதா?

    Comment by வெற்றி — March 3, 2009 @ 2:42 pm

  37. இஸ்லாத்தைக் குறித்து யார் கேள்வி கேட்டாலும் அவரை இஸ்லாமிய எதிரி என பட்டம் சூட்டி ஒதுக்குவதனால் யாருக்கும் எந்த நஷ்டமும் இல்லை. உங்கள் மீதான கடுமையான பார்வைக்கு நீங்கள் ஊக்கம் கூட்டுகின்றீர்கள் அவ்வளவே. முடிந்தால் தருமி அவர்களின் கேள்விகளுக்கு சவூதி தமிழன் பதிலளியுங்களேன்.

    Comment by வெற்றி — March 3, 2009 @ 2:45 pm

  38. //ஒரு வேத புத்தகம் எப்படி வந்தது; யார்மூலம் வந்தது; எப்படி மாறாமல் இருந்தது என்று சொல்லப்படுவதெல்லாம் முக்கியமல்ல; அதன் content தான் முக்கியம் என்னைப் பொறுத்தவரை. இந்தப் பொருளடக்கங்கள் எல்லா மதத்திலேயும் குறைபாடு கொண்டதாகவே நான் உறுதியாகக் கருதுகிறேன்; ஓரளவு அதை நிரூபித்துமிருக்கிறேன்.//

    எவ்வளவு உண்மையான வாசகம்! வெல்டன் தருமி சார்.

    Comment by வெற்றி — March 3, 2009 @ 2:48 pm

  39. தருமி சார் முட்டாள்தனமான, சுவிசேச குட்டங்கள் என்ற பெயரில் மக்களைப் பைத்தியக்காரர்களாக்கும் கிறித்தவ நம்பிக்கைகளிலிருந்து வெளியேறியவர். அதனை அவர் தெளிவாக கூறியும் உள்ளார்.

    அவரை எந்த ஒரு கிறித்தவரும் எதிர்க்காதது மட்டுமின்றி, ஜோ போன்ற கிறித்தவர்கள் அவரை ஆதரிக்கவும் செய்கின்றனர்.

    ஆனால் முச்லிம்கள் மட்டும் அவரை எதிர்க்க வேண்டிய அவசியம் என்ன?

    Comment by வெற்றி — March 3, 2009 @ 2:51 pm

  40. சகோ. சவூதி தமிழன், உங்கல் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

    //ஒன்று தெரிகிறது; அவர் ஒரு பகுத்தறிவு வேடம் போடும் இஸ்லாமிய எதிரி. // எது உண்மை எது பொய் என பகுத்து, ஆராய்ந்து அறிவதுதான் பகுத்தறிவு. மாற்றுக் கருத்துகளுக்கு மனதில் இடம் கொடாமல் பூட்டி வைத்துக் கொள்பவர்கள் பகுத்தறிவு வேடம் போடுகிறார்கள் என்பது சரிதான்.

    Comment by இப்னு பஷீர் — March 4, 2009 @ 2:07 am

  41. உங்கள் கருத்துக்களுக்கு நன்றி சகோ. வெற்றி.
    //ஏன்யா உங்களுக்கெல்லாம் வேறு வேலையே இல்லையா?// நிறைய வேலை இருக்கிறது. அவற்றுக்கிடையில் தருமி போன்றவர்களுக்கு பதில் சொல்ல வேண்டியதும் அவசியமாக இருக்கிறது. உங்கள் கேள்விகளுக்கு பிறகு ஒவ்வொன்றாக பதிலளிக்கிறேன்.

    Comment by இப்னு பஷீர் — March 4, 2009 @ 2:11 am

  42. //உங்களைக் குறித்து யார் கேள்வி எழுப்பினாலும் அவர் மீது தனிமனித தாக்குதல் செய்வதிலேயே குறியாக இருக்குறீர்களே ஏன்? இது தான் உங்களுக்கு இஸ்லாம் கற்றுத் தந்துள்ளதா?
    Comment by வெற்றி //

    சகோ. வெற்றி, எதை வைத்து தனிமனித தாக்குதல் என்ற முடிவிற்கு வந்தீர்கள் என்று சொல்ல முடியுமா?

    Comment by இப்னு பஷீர் — March 4, 2009 @ 4:06 am

  43. தருமி வேண்டாம் வேண்டாமென்று கேட்டுக்கொண்ட பிறகும் அவற்றைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து மடலிட்டது அநாகரிகம். இஸ்லாம் குறித்த தன்னுடைய புரிதல்களை அனுப்பிய பாவத்திற்காக! அதிரை பாரூக்கையும் சம்பந்தமேயில்லாமல் இஸ்லாத்தையும் எள்ளியது பாரூக் செய்ததைவிட மோசமானதும் அநாகரிகமும் ஆகும்.

    தன்னையும் தன் வழிகெட்ட அல்லது நல்ல கொள்கையையும் பிறர் எள்ளி பதிவிட்டதை விரும்பாதவர் தானும் ஊருக்கு உபதேசப் பேர்வழிதானென்று தன்னுடைய பதிவில் நிரூபித்துள்ளார்.

    மட்டற்ற கொள்ளளவுள்ள ஜீமெலுக்கு,அதிரை பாரூக்கின் மின்மடல்களால் தருமிக்கு நிச்சயம் எவ்வித இழப்புமில்லை.SPAM FILTER வசதியும் இருப்பதால் அரைநிமிடம் மெனக்கெட்டால் இனிவரும் மடல்களெல்லாம் தானாகவே குப்பைக்கு அனுப்பப்பட்டு அழிக்கப்படும். அதையும் மீறி தருமிக்கு மடல்கள் வந்ததாகச் சொல்வது நம்பக்கூடியதல்ல.

    ஆண்குறி என்லார்ஜ்மெண்ட், மலிவு விலை வயாகரா,முடக்கப்பட்டிருக்கும் மில்லியன் டாலரை வங்கிக்கணக்கிற்கு மாற்ற உதவினால் 30% கமிஷன் போன்ற மடல் எரிதங்களுக்கு எதிரான SPAM FIGHTING உலகளவில் நடந்து கொண்டிருக்கிறது.எனினும் அத்தகைய எதிரங்களை யாரும் சீரியசாக எடுத்துக்கொள்வதில்லைகாரணம் UNLIMITED STORAGE,SPAM FILTER போன்ற வசதிகளும் சேர்த்தே ஓசியில் கிடைக்கிறது.

    அதிரை ஃபாரூக்கின் மின்மடல்களால் தருமிக்கு எரிச்சல் ஏற்பட்டிருக்கும் என்பதைவிட, இஸ்லாமிய வெறுப்பை அவ்வப்போது நாத்திக போர்வையில் ஒளிந்துகொண்டு எழுதும் தருமிக்கு, பாரூக் அனுப்பிய மடல்கள் இஸ்லாம் குறித்தவையாக இருந்தன என்பதே உண்மையான காரணம். இதை அவரின் பதிவிலிருந்தும், அனுமதித்துள்ள அனானி பின்னூட்டங்களில் இருந்தும் தெளிவாகத் தெரிகிறது.

    பாம்பு சட்டையைக் கழட்டுவது இருக்கட்டும் தருமி சார்! நீங்கள் எப்போது நாத்திகப் போர்வையைக் கழட்டபோகிறீர்கள்? என்பதே எஞ்சியிருக்கும் கேள்வி!

    Comment by அதிரைக்காரன் — March 5, 2009 @ 8:49 am

  44. I appreciate your perseverence in religious conversion, even if you know yourself that you are believing something that is claimed to be the word of God by mohamed.

    I invite all of you to come towards the broader piloshophy called Hinduism.
    Please remember that this is the piloshophy that let other faith to along side in harmony allowed them for open debates. What else could be beautiful than such ideal.

    If you want, I can spend my money to take you to conventions by Sri Sri Ravishankar

    PARAMS

    Comment by PARAMA PITHA — March 5, 2009 @ 5:24 pm

  45. வாருங்கள் சகோதரர் பரமபிதா,

    தங்களின் அழைப்புக்கு மிக்க நன்றி,

    தங்களின் ஆஸ்தான குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களும் IRF இன் Dr. Zakir Naik ஆகிய இருவருக்குமிடையில் நடந்த பெங்களுரு விவாதம் அனைவரும் “கண்டு களித்ததே”

    தாம் கொண்டுள்ள இந்து மத கொள்கையை வலிமையாக பிரச்சாரம் செய்திட மிக அருமையான வாய்ப்பான, பல்லாயிரகணக்கான முஸ்லிம் இந்து சகோதரர்களிடையே பிரச்சாரம் செய்யாமல் மென்று, முழுப்பி, குழைத்து, சொல்லவேண்டிய விஷயத்தை விட்டு “வாழும் கலை” ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் “பேசும் கலை” இழந்தாரே (அவருக்கு கொடுத்த நிமிடங்களுக்கு கூட பேசுவதற்கு விஷயம் இல்லையா என்ன ?)அதற்குள் மறந்துவிட்டால் எப்படி ? விவாதம் முழுவதும் பார்த்துவிட்டு பிறகு அழைப்பு பனி செய்யுங்கள் பரமபிதா !

    Comment by அபு நஸீஹா — March 6, 2009 @ 10:37 am

  46. அடுத்துள்ள துணைக்கோளான நிலவுக்குச் சென்றதே இதுவரை மனிதனின் அதிகபட்ச சாதனை.

    கோடிக்கணக்கான ஒளிஆண்டுகள் தொலைவில் பல்வேறு பிரபஞ்சங்களைப் படைத்து அவை சிக்கலின்றி இயங்க வழிவகுத்த இறைவனை - வரம்புகளுக்குட்பட்ட மனித அறிவால் - புரிந்துகொள்ள மனிதனுக்குச் சக்தியில்லை. இதைத்தான் ஐன்ஸ்டீன் கூட சொன்னார். நம்பிக்கை, உணர்வுகள் என்ற துணைக்கோல்களைக்கொண்டே கொஞ்சமேனும் தான் யார் என்பதையும் இப்பரந்த பேரண்டத்தில் இவ்வுலகம் ஒரு கொசுவின் இறக்கையின் அற்பமானதே என்பதையும் அவன் விளங்க முடியும்.
    அளிக்கப்பட்ட சிறிய அறிவு பிரம்மாண்டப்படுத்தும் நாத்திகவாதத்தை நம்பிக்கையால் வெல்வதற்கு இறை அத்தாட்சியை உணர்ந்தவர்களாலேயே முடியும்.

    Comment by நன்மனம் — March 14, 2009 @ 9:20 am

  47. உன் நண்பனைக் காட்டு உன்னைப் பற்றிச் சொல்கிறேன் என்பார்கள். தருமியால் ஊக்கமூட்டப்பட்டு அவரது பதிவில் தொடர்ந்து பின்னூட்டமிடும் அவரது சகாக்கள் சிலர், தருமி யார் என்பதைப் பற்றி நாம் மேலும் புரிந்துக் கொள்ளச் செய்கிறார்கள். அந்தச் சகாக்களில் சிலர் உணர்ச்சிப் பெருக்கெடுத்தவர்களாக இந்தப் பதிவிலும் பின்னூட்டமிட்டு வருகிறார்கள்.

    இஸ்லாம் பற்றி மட்டுமின்றி கிருஸ்தவம் பற்றிக் கூட அரைகுறையாக மட்டுமே புரிந்து வைத்திருப்பவர் தருமி என்பதையும், வெறுமனே நுனிப்புல் மேய்ந்துவிட்டு இஸ்லாமிய கொள்கைகளைப் பற்றி விமரிசனம் செய்ய வந்தவர் அவர் என்பதையும் முஸ்லிம் பதிவர்கள் பலர் ஆதாரங்களுடனே தோலுரித்துக் காட்டியுள்ளனர். ‘குர்ஆன் போன்ற நூல்களை ஏதோ கொஞ்சமே வாசித்திருக்கிறேன்’ என்ற அவரது ஒப்புதல் வாக்குமூலத்தையும் என் பதிவில் சுட்டிக் காட்டியிருக்கிறேன்.

    கல்லூரிப் பேராசிரியர் என்று சொல்லிக்கொள்ளும் தருமிக்கே புரிந்துக் கொள்ள சிரமமான விஷயங்கள் அவரது சில்லுண்டிச் சகாக்களுக்கு புரியாமல் போனதில் வியப்பேதுமில்லை. கைப்புள்ள, லூஸ்மோகன், குமரிமுத்து வகையறா நகைச்சுவைகளைத் தாண்டி நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ இருக்கிறது நண்பர்களே! கண்களைத் திறந்து பாருங்கள்.

    Comment by இப்னு பஷீர் — March 14, 2009 @ 4:01 pm

  48. \இஸ்லாம் பற்றி மட்டுமின்றி கிருஸ்தவம் பற்றிக் கூட அரைகுறையாக மட்டுமே புரிந்து வைத்திருப்பவர் தருமி என்பதையும், வெறுமனே நுனிப்புல் மேய்ந்துவிட்டு இஸ்லாமிய கொள்கைகளைப் பற்றி விமரிசனம் செய்ய வந்தவர் அவர் என்பதையும் முஸ்லிம் பதிவர்கள் பலர் ஆதாரங்களுடனே தோலுரித்துக் காட்டியுள்ளனர். \

    ஆம் சகோதரர் இப்னு பஷீர் அவர்களே. இஸ்லாமிய மார்க்கத்தில் முதல் பெண்ணுக்குப் பெயரேயில்லை என்று அரைகுறையாக உளரிக் கொட்டினார்.இஸ்லாமியர்களுக்கு மட்டுமில்லாது கிறிஸ்தவர்களுக்கும் ஏவால்தான் முதல் பெண்மனி என்பது தெரியாத இவரெல்லாம் இஸ்லாத்தைக் கேள்வி கேட்க கிளம்பியிருப்பதை நினைத்து எதனால் சிரிப்பத் என்று தெரியவில்லை.

    உங்களைப் போன்றவர்கள் தொடர்ந்து பதில் கொடுப்பதோடு தருமி மாதிரியான 1/2குறை வேக்காடுகளுக்குப் புரியும்படி எளிய நடையில் இஸ்லாத்தின் உன்னதக் கருத்துக்களைச் சொல்ல வேண்டும்.

    Comment by ஷேக் பரீத் — March 14, 2009 @ 7:10 pm

  49. // தாம் கொண்டுள்ள இந்து மத கொள்கையை வலிமையாக பிரச்சாரம் செய்திட மிக அருமையான வாய்ப்பான, பல்லாயிரகணக்கான முஸ்லிம் இந்து சகோதரர்களிடையே பிரச்சாரம் செய்யாமல் மென்று, முழுப்பி, குழைத்து, சொல்லவேண்டிய விஷயத்தை விட்டு “வாழும் கலை” ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் “பேசும் கலை” இழந்தாரே (அவருக்கு கொடுத்த நிமிடங்களுக்கு கூட பேசுவதற்கு விஷயம் இல்லையா என்ன ?) ///

    Mr. Ibnu Bashir,

    It is very interesting to note that you guys make your own conclusions and think that that is the public opinion.
    As for the Bangalore debate, the leading tamil media printed the following verdict:
    Zakir Naik - Literate
    Sri Sri Ravishankar ji -
    Man of adorable character

    When Zakir was hell bent on typical islamic propoganda dialogues, Ravi ji delivered a message that was well appropriate for the situation and communal harmony.

    Moreover, while zakir relied on his rhetoric to market islam, Ravi ji walked the talk by his behavior by expressing his love and invitation of all mankind especially the narrow band muslims towards broadmindedness, love, and harmony. What else could be the fundamental principles of Hinduism?

    And to everbody’s delight, more muslims are turning up for Ravi ji’s sermons nowadays (which he himself declared in Nasik convention in Aug 2008)

    Also, I would like to remind Mr. Zakir Naik that why he is running away from the invitation by well known arabic acholar Dr.Alisina on a public debate on Islam and Stupidity

    Mr. Ibnu Bashir, I humbly request you to listen to Ravi ji’s speeches before commenting.

    Recently in a speech in chennai in ECR, Mr. zaik naik revealed his inability to reach out to the disciples of certain sections of Indians for marketing. I am sure Ravi ji’s foundation is one among them

    PARAMS

    Comment by PARAMA PITHA — March 15, 2009 @ 6:28 am

  50. //கோடிக்கணக்கான ஒளிஆண்டுகள் தொலைவில் பல்வேறு பிரபஞ்சங்களைப் படைத்து அவை சிக்கலின்றி இயங்க வழிவகுத்த இறைவனை - வரம்புகளுக்குட்பட்ட மனித அறிவால் - புரிந்துகொள்ள மனிதனுக்குச் சக்தியில்லை. //

    கருத்துக்களுக்கு நன்றி சகோ. நன்மனம். ஒரு சிறு திருத்தம்… வரம்புகளுக்குட்பட்ட புலன்களைக் கொண்டு இறைவனை அறிய மனிதர்களுக்கு சக்தியில்லை. ஆனால் மனிதர்களுக்கு மட்டுமே இருக்கும் சிந்திக்கும் ஆற்றலைப் பயன்படுத்தி இறைவனின் இருப்பை உணர முடியும் என்பதே சரியாக இருக்கும்.

    Comment by இப்னு பஷீர் — March 16, 2009 @ 12:22 pm

  51. சகோ. பரமபிதா. உங்கள் கருத்துக்களுக்கும் அழைப்பிற்கும் நன்றி.
    //I appreciate your perseverence in religious conversion..// என்று குறிப்பிட்டிருந்தீர்கள். நீங்கள் இந்தப் பதிவை சரியாகப் படிக்கவில்லை என்று நினைக்கிறேன். religious conversion எனது நோக்கமல்ல. தருமி போன்றவர்கள் அரைகுறையாக மட்டுமே தெரிந்த ஒரு கொள்கையப் பற்றி தான்தோன்றித்தனமாக விமரிசனங்களை முன்வைப்பதையும், அவ்வாறு விமரிசிப்பதற்கான தகுதியையும் பக்குவத்தையும் அவர்கள் இன்னும் அடையவில்லை என்பதையுமே நான் சுட்டிக் காட்டியிருக்கிறேன். திரு.ரவிசங்கர் பெங்களூர் விவாதத்தின்போது இவ்வாறு குறிப்பிட்டார். “மற்றவர்களின் செயல்பாடுகளை நாம் குறைசொல்லக்கூடாது. அவர்கள் நம்மிடம் கல்வியை நாடி வரும்போது மட்டுமே நாம் விமர்சனங்களை செய்யலாம். ” தருமி போன்ற பதிவர்களுக்கு இந்த அறிவுரை மிகவும் பயன்படும்.

    ஒன்று தெரியுமா உங்களுக்கு? குர்ஆனில் எந்த ஒரு இடத்திலும் ‘கன்வர்ட்’ (Convert) - மதம் மாற்றுதல் எனும் சொல்லே இல்லை. ஆனால் ‘கன்வே’ (Convey) - எடுத்துரைத்தல் - அறிவித்தல் எனும் சொல் பல இடங்களில் உள்ளது. இஸ்லாத்தின் கொள்கைகளைப் பிறருக்கு எடுத்துரைக்கலாம்; ஆனால் மதம் மாறும்படி வற்புறுத்தும் உரிமை யாருக்கும் இல்லை. தருமி போன்றவர்கள் இஸ்லாம் பற்றிய தவறான கருத்துக்களை பரப்பும்போது, அவர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டி, உண்மையைத் தெளிவு படுத்துவது முஸ்லிம்களின் கடமையாகிறது. அதைத்தான் நான் பட்டியலிட்டிருக்கும் முஸ்லிம் பதிவர்கள் செய்துக் கொண்டிருக்கிறார்கள்.

    சகோதரரே, “I invite all of you to come towards the broader piloshophy called Hinduism” என்று பெருமையுடன் அழைக்கும் ஒரு ஹிந்துவாகிய நீங்கள், ‘பரமபிதா’ என கிருஸ்துவர்கள் கர்த்தரை அழைக்க பயன்படுத்தும் பெயரை புனைப்பெயராக வைத்துக் கொண்ட காரணம் என்ன? இது கிருஸ்துவ சகோதரர்களின் மனதைப் புண்படுத்தும் என்பதை நீங்கள் உணரவில்லையா? இதற்கான வழிகாட்டல்கள் உங்கள் கொள்கையில் இல்லையா? அல்லது அவ்வாறு இருந்தும் நீங்கள் அதை பொருட்படுத்தவில்லையா?

    ‘பிறர் கடவுளாக வணங்கும் ஒன்றை கண்ணியக் குறைவாக குறிப்பிட்டு அவர்கள் மனதை நோகடிக்க யாருக்கும் உரிமையில்லை’ என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது. இது போன்று முஸ்லிம்கள் தம் வாழ்விற்குத் தேவையான வழிகாட்டல்கள் அனைத்தையும் இஸ்லாமிலிருந்தே பெற்றுக் கொள்ள முடிகிறது என்பதால் இன்னொரு கொள்கையைத் தேடிப்போக வேண்டிய தேவை முஸ்லிம்களுக்கு ஏற்படுவதில்லை.

    ஒரு தகவலுக்காகவாவது இஸ்லாமிய கொள்கைகளை புரிந்துக் கொள்ள முயலுங்கள் சகோதரரே.

    Comment by இப்னு பஷீர் — March 16, 2009 @ 1:09 pm

  52. Mr. Ibnu Bashir,

    Thanks for the reply !

    /// ஒரு ஹிந்துவாகிய நீங்கள், ‘பரமபிதா’ என கிருஸ்துவர்கள் கர்த்தரை அழைக்க பயன்படுத்தும் பெயரை புனைப்பெயராக வைத்துக் கொண்ட காரணம் என்ன? ///

    The origin of the name “PARAMA PITHA” goes back to hindu theologies. The word “PARAM” itself refers to the core of this universe in its utmost truthfulness. As handled by Viyasaka rishi and Ridharma Pani in their narration of the 5th Manifestation 17th Volume, CHIEFTAIN OF PARAM denotes the core power that has been ingrained in every human.

    Ironically, as it happened in both mogul and christian occupation of Hinduthan, early missionaries researched the hindu scriptures and admired this concept, and stole this phrase/name for their translation. Well known historian Harrud Rathoor provides proof for this incident in his book “Abundant Wealth known as Eastern Theologies”.
    And I as a Hindu intentionally go by this name as a way reminding you guys the richness of Hindu religion.
    Well…, the lack of theological insights in these imported religions is another topic.

    What about my questions on Zakir Naik Vs Alisina, and Presence of more muslims lately in Ravishankar Ji’s meetings?

    PARAMS

    Comment by PARAMA PITHA — March 16, 2009 @ 2:43 pm

  53. நண்பரே. ‘பரம்பொருள்’ ‘பராபரம்’ போன்ற சொற்கள் இந்து கலாச்சாரத்துடன் தொடர்புடையனவாக இருந்தாலும், கிருஸ்துவ சகோதரர்கள் தங்கள் கடவுளைக் குறிப்பிடப் பயன்படுத்தும் ‘பரமபிதா’ என்ற பெயரை நீங்கள் புனைப்பெயராக வைத்திருப்பதற்கு சொல்லும் காரணங்கள் ஏற்புடையதாக இல்லை.

    “And I as a Hindu intentionally go by this name as a way reminding you guys the richness of Hindu religion.” என்று சொல்லும் நீங்களே, ‘this is the piloshophy that let other faith to along side in harmony, communal harmony, broadmindedness, love, and harmony’ என்றெல்லாம் பேசுவது ஒன்றுக்கொன்று முரண்படுவதாகவே இருக்கிறது. உங்களின் தவறான இச்செயலைச் சுட்டிக்காட்டிய பிறகும் அதை நியாயப் படுத்த முனைவது communal harmony-க்கு நேர் மாற்றமானது. communal harmony, broadmindedness, love என்றெல்லாம் மற்றவர்களுக்கு போதிப்பதற்கு முன் உங்களை திருத்திக்கொள்ளுங்கள் நண்பரே.

    அலிசினா என்பவர் யாரென்று எனக்குத் தெரியாது. Dr. ஜாகிர் நாயக் போன்ற Intellectual-களிடம் ஏதோ ஒரு கேள்வி கேட்டுவிட்டு, அதன் மூலம் பிரபலமடையலாம் என்ற நப்பாசை சிலருக்கு இருப்பது இயல்பானதுதான். Dr. ஜாகிர் நாயக் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அவரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கும் தயங்காமல் ஆதாரப்பூர்வமான விளக்கங்களை அளித்து வருகிறார். உங்கள் நண்பரை அதுபோன்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து அவரது கேள்விகளை கேட்கச் சொல்லுங்களேன்.

    திரு.ரவிசங்கரின் நிகழ்ச்சிகளுக்கு நிறைய முஸ்லிம்கள் வருவதாக அவரே சொல்லிக் கொள்வதாகச் சொல்கிறீர்கள். அவர் தாராளமாகச் சொல்லிக் கொள்ளட்டுமே? அதனால் என்ன?

    Comment by இப்னு பஷீர் — March 16, 2009 @ 4:34 pm

  54. அய்யா பரம பிதா,

    தருமி என்ற ஹிந்துப் புனைபெயரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு கிறிஸ்தவத்திலிருந்து வெளியேறியதாகச் சொல்லிக் கொண்டிருக்கும் சாம் ஜார்ஜ் என்பவரிடம் நீங்கள் முயன்றால் ஒருவேளை அவரை ஹிந்துவாக மாற்ற முடியலாம். முயற்சி செய்து பாருங்கள்.

    பிராமணராக மாற்றச் சம்மதம் என்றால் நானும் ரெடி!

    Comment by சவூதி தமிழன் — March 16, 2009 @ 5:47 pm

  55. //பிராமணராக மாற்றச் சம்மதம் என்றால் நானும் ரெடி! - சவூதி தமிழன்//

    இதெல்லாம் ரொம்ப டூ-மச்ங்ணா! :) ஆரிய சமாஜத்துல ஒரு ஐயாயிரமோ பத்தாயிரமோ கொடுத்தீங்கன்னா ‘ஹிந்து’ன்னு ஒரு சர்டிபிகேட் கொடுத்து ‘ஆரியசமாஜி’ன்ற ஜாதியில உங்களை சேர்த்துடுவாங்க. அதுக்கு மேல எதிர்பார்த்தீங்கன்னா.. ஆச.. தோச..!

    Comment by மரைக்காயர் — March 17, 2009 @ 5:01 am

  56. அய்யா பரம்ஸ் அலிசினா என்பவரைப் பற்றி சொல்லியிருக்கிறார். அலிசினாவைப் பார்த்து டாக்டர் ஜாகிர் நாயக் ஓடி ஒளிவதாக பரம்ஸ் சொல்கிறார். யாரு இந்த அலிசினா என்று இணையத்தில் தேடிப்பார்த்தால், பின்னங்கால் பிடரியில் அடிக்க தலைதெறிக்க ஓடி ஓடி ஓளிவது…… வேற யாருமல்ல… அதே அலிசினாவேதான்..!

    Ali Sina of FaithFreedom.org caught RED HANDED:

    Ali Sina RUNS away from Challenge to debate Islam! New!

    Another TEST for Ali Sina

    ALI SINA GONE WILD: caught in another terrible lie !

    Ali Sina caught LYING again!!

    Ali Sina caught in a atrocious LIE! Promised to shut down his site… !

    மனுசன அநியாயத்துக்கு உசுப்பேத்தி உசுப்பேத்தி ரணகளப் படுத்திருக்கானுங்க அவரோட கைத்தடிகள். அய்யோ பாவம்னு இதோட விடாம ஜாகிர் நாயக் கையாலயும் அவர் மூக்கு உடைக்கப்படனும் என்று பரம்ஸ் போன்றவர்கள் இன்னும் கொம்பு சீவிட்டிருக்காங்க போல. பாவம்..விடுங்கையா அந்தாளை.

    Comment by மரைக்காயர் — March 17, 2009 @ 8:58 am

  57. Now there is more muslim crowd here. I could never understand why you guys get emotional for every trivial thing. Though it looks like utter waste of time, i will try to make you realize your one sightedness.

    Aren’t guys seeing around the world to see the mess you have already created in the name of the religion. Is there any peace in the parts of the world where muslim lives? Is there a model state where your so called islamic principles have proven their claims?

    PARAMS

    Comment by PARAMA PITHA — March 17, 2009 @ 2:01 pm

  58. நண்பர் பரம்ஸ். நீங்கள் சொன்ன கருத்துக்களுக்கு எதிர் கருத்துகள் வந்தால் ஏன் இப்படி பதட்டப்படுகிறீர்கள்? உங்கள் அபிமானத்திற்குறிய அலிசினா ஒரு பொய்யர் என்ற உண்மை வெளிப்பட்டு விட்டதாலா?

    கிருஸ்துவ சகோதரர்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் புனைப்பெயர் வைத்திருக்கும் நீங்கள், ‘எங்கள் மதத்தில்தான் communal harmony, broadmindedness, love எல்லாம் இருக்கிறது’ என்று, சொல் ஒன்றும் செயல் வேறுமாக முரண்பட்டு நிற்பதை சுட்டிக் காட்டியிருந்தேன். அதைப் பற்றி நீங்கள் எதுவும் சொல்லவில்லையே?

    Comment by இப்னு பஷீர் — March 18, 2009 @ 3:15 am

  59. paரமபிதா என்பது கிறித்தவர்களைச் சங்கடப்படுத்தும் பெயர் என்பது சரியே.
    ஆனால் thamilislam.blogspot.com என்ரு இஸலாம் பெயரில் வலைப்பக்கம் வைத்திருக்கும் ஒரு கிறிஸ்தவரும் இருக்கிறார். இவர்கள் ஏன் மதம் அழைக்க சொந்தப் பெயரைப் பயன்படுத்துவதில்லை?

    இதற்கு முன்பும் ஒரு முஸ்லில் பெண் பெயரால் கீழ்த்தரமாகவும், இஸ்லாமைத் தாக்கும் நோக்கத்துடனும் ஒரு படித்த பிராமணார் எழுதி மாட்டிக்கொண்டிருக்கிறாராம்.

    என்ன பிரசினை இவர்களுக்கு?

    Comment by நன்மனம் — March 18, 2009 @ 11:13 am

  60. பரமபிதா என்பது கிறித்தவர்களைச் சங்கடப்படுத்தும் பெயர் என்பது சரியே.
    ஆனால் thamilislam.blogspot.com என்ரு இஸலாம் பெயரில் வலைப்பக்கம் மோசமான நொக்கத்தில் வைத்திருக்கும் ஒரு கிறிஸ்தவரும் இருக்கிறார். இவர்கள் ஏன் மதம் அழைக்க சொந்தப் பெயரைப் பயன்படுத்துவதில்லை?

    இதற்கு முன்பும் ஒரு முஸ்லில் பெண் பெயரால் கீழ்த்தரமாகவும், இஸ்லாமைத் தாக்கும் நோக்கத்துடனும் ஒரு படித்த பிராமணார் எழுதி மாட்டிக்கொண்டிருக்கிறாராம்.

    என்ன பிரசினை இவர்களுக்கு?

    Comment by நன்மனம் — March 18, 2009 @ 11:15 am

  61. //இவர்களுக்கு விளக்க முடியாது, ஏனென்றால் இவர்கள் பெற்ற பயிற்சி அப்படி. //

    இதை நீங்க சொல்றிங்க விழங்குனா மாதிரி தான்!
    நீங்க உங்க மதத்தையும் கடவுளையும் கட்டுகிட்டு என்னமோ பண்ணுங்க!
    எங்களுக்கு ஏன் அதை அனுப்புறிங்க! அதை நிறுத்த சொல்லி ரிப்ளை அனுப்பியும் திரும்பவும் அனுப்புனா பதிவு எழுதி தான் கேள்வி கேட்க முடியும். ஹிட்ஸு வரல பட்ஸு வரலைன்னு நீங்களா முடிவு பண்ணிக்கிறீங்க!

    இப்பவும் explain islaam னு எனக்கு ஒரு மெயில் வந்துருக்கு!
    அதனால எனக்கும் அத கிழிச்சு தொங்க விட உரிமை இருக்குன்னு சொல்லிகிறேன்!

    Comment by வால்பையன் — March 19, 2009 @ 5:10 pm

  62. //Now there is more muslim crowd here.//
    நாலு பேர் முஸ்லிம் சேர்ந்து நின்னாலே உங்களுக்குக் கை சூலத்தைத் தூக்கணும்னு துறுதுறுங்குதா? ஒங்களுக்குப் போதனை அப்படியோ?

    //I could never understand why you guys get emotional for every trivial thing. Though it looks like utter waste of time//

    எது ட்ரிவியல்னு சொல்லிருங்க பாப்போம்.

    சரி என்னை பிராமணனா மாத்தச் சொல்லிக் கேட்டேனே அத விட்டுட்டு இங்கிலிபீசுல டென்சன் ஆகாம வெவரத்த சொல்லிடுங்க.

    Comment by சவூதி தமிழன் — March 19, 2009 @ 7:54 pm

  63. //நீங்க உங்க மதத்தையும் கடவுளையும் கட்டுகிட்டு என்னமோ பண்ணுங்க! எங்களுக்கு ஏன் அதை அனுப்புறிங்க! அதை நிறுத்த சொல்லி ரிப்ளை அனுப்பியும் திரும்பவும் அனுப்புனா பதிவு எழுதி தான் கேள்வி கேட்க முடியும். //

    வால்பையன் தவறான முகவரிக்கு வந்திருக்கிறார் என்று நினைக்கிறேன். அதிரைபாருக் அனுப்பிய இமெயில்தான் உங்களுக்கு பிரச்னை என்றால், இந்தப் பதிவின் முதல் பத்தியை மீண்டும் ஒருமுறை படித்துப் பார்க்கவும்.

    இந்தப் பதிவின் நோக்கம் வேறு.. //தான் அரைகுறையாக மட்டுமே அறிந்திருக்கும் ஒரு கொள்கையைப் பற்றி நக்கலாகப் பதிவெழுதுவது நிச்சயமாக தருமிக்குத் தேவையில்லாத ஒன்று! இதை நாம் உறுதியாகச் சொல்ல முடியும். அப்படி ஒரு தவறைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் தருமி, அதிரை பாருக்கின் தொடர் மின்னஞ்சல் படையெடுப்பைக் குற்றம் சொல்லும் தகுதியையும் இழந்து விடுகிறார். // இதுதான் நான் சொல்ல வருவது.

    Comment by இப்னு பஷீர் — March 20, 2009 @ 2:43 am

RSS feed for comments on this post.

Leave a comment

Line and paragraph breaks automatic, e-mail address never displayed, HTML allowed: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <code> <em> <i> <strike> <strong>



Anti-spam measure: please retype the above text into the box provided.